233. மலர் தியாகம் செய்வதில்லையே!

 

மலர் தியாகம் செய்வதில்லையே!

வாழ்க்கை உடன்படிக்கை உயிர்ப் பிரிவால் அறுகிறது.
தாழ்விது வல்லவென்று மனமேற்க மறுக்கிறது.
பிரிவு – நிச்சயமது தெரிந்து வருவதல்ல.
சரிவென்றதை வரித்தல் வாழ்விற்கு முறையல்ல.
துணைவன் மறைவோடு தன் வாழ்வே முடிவென்று
துணைவி தன் இன்பம் தொலைப்பது முறையன்று.

ஞ்சி நீ மங்கலமாய்க் கணவன் நெஞ்சிலிருந்தாய்!
கொஞ்சியவுன் முகப்பொலிவு குறைய விரும்புவானா!
மஞ்சுக்குள்ளேயவன் உனை நோக்கானென்றுணர்ந்து
நெஞ்சோடணைத்த  பூ – பொட்டு – மஞ்சளதை
மிஞ்சும் தியாகமென தூரத் தள்ளுவது
விஞ்சும் அநியாயம்! மணவாளத் துரோகமது!

பூ விரிந்தது உன் வீட்டுத் தோட்டத்திலன்று
பூமாலையாக்கி கூந்தலில் இட்டாய்  அழகென்று.
மலரும் பெண்ணுமோரினமாம்! கணவனையிழந்திடினும்
மலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே!
மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!

விதவை என்றொரு பெண்பால் வழக்கு
விதவனென்று ஆண்பால் கொள்ளா வழக்கு.
கணவனிழந்தவளுக்கு துறவு நிலை வாழ்வு!
மனைவி இழந்தவனுக்கு உல்லாச வாழ்வு!
அன்றைய சமூகத்தின் அடிமை வழக்கிது.
நன்றல்லதைப் பகுத்தறிவால் விலக்கல் அழகு!.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-7.2004.

(யெர்மனிய மண் சஞ்சிகை ”மண்” 107ம் இதழ் 2004 புரட்டாதி-ஐப்பசி இதழில் பிரசுரமானது.)

                                 
 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  ஏப் 25, 2012 @ 00:38:43

  மிகச் சரி… பெண்ணின் மனநிலையை உணராமல், ஆணாதிக்க மனப்பாங்கோடு முன்னோர் வகுத்த தவறான பழக்கங்கள் இன்று மாற வேண்டியது காலத்தின் கட்டாயமே. பளிச்சென்று நிஜம் பேசிய உங்களின் இந்தக் கவிதை வரிகளில் பாரதியின் சாயலைக் காண்கிறேன் நான்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 25, 2012 @ 05:00:49

   இக்கவிதை இலண்டன் தமிழ் வானொலி
   ரி ஆர்ரி தமழ் அலையிலும் ஒலி பரப்பானது.

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்ச்சி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  ஏப் 25, 2012 @ 03:41:32

  “மலரும் பெண்ணுமோரினமாம்! கணவனையிழந்திடினும்
  மலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே!
  மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
  மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!”

  அருமையான வரிகள்.
  தலைப்பே தனி கவிதை…

  மறுமொழி

 3. Vetha ELangathilakam
  ஏப் 25, 2012 @ 04:46:16

  Rajacholan Shanmuganathan and Grastley Jeya like this..
  Umah Thevi likes this..
  Murali Krishnan likes this..
  Muru Gan Air Defence Section at Royal Malaysian Air Force and Sasi Krish likes this..
  Ithaya Sakeelan Harrow, – Arul Mozhi likes this..
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா, Ganesalingam Arumugam and Dhileepan Mayavel like this..
  Yashotha Kanth and Arul Mozhi like this..

  Yashotha Kanth:_
  அருமை சகோதரி.
  Vetha ELangathilakam:-
  Nanry Yashotha..God bless you.

  மறுமொழி

 4. sasikala
  ஏப் 25, 2012 @ 06:19:02

  “மலரும் பெண்ணுமோரினமாம்! கணவனையிழந்திடினும்
  மலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே!
  மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
  மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!”சிறப்பான வரிகள் சிந்திக்கும் விதம சொன்னது அருமைங்க .

  மறுமொழி

 5. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஏப் 25, 2012 @ 07:03:49

  விதவை என்றொரு பெண்பால் வழக்கு
  விதவனென்று ஆண்பால் கொள்ளா வழக்கு.

  ஆணாதிக்கம் மிகவும் நுட்பமாக வரையறுக்கப்பட்டுள்ளது..

  இந்த வழக்கை நீங்கள் தொல்காப்பியரிடம் அல்லது அகத்தியரிடம் சமர்பபிக்க வேண்டும்!!

  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 25, 2012 @ 07:37:31

   அவர்கள் குத்திய முத்திரையால் அதை மீறுவதே ஆபத்து என்று எண்ணும் பெண்களிருக்கும் போது எந்த நீதிமன்று ஏறினும் வழக்கு வெல்லாது பெண்களே தம்மை விடுவிக்கும் வரை.
   உதாரணத்திற்கு:-
   தங்களை இந்தக் காலத்துப் பிறவிகளெனும் 2 பெண்களிடம் (married) பேசினேன் உங்கள் அம்மா பொட்டு வைத்து அழகாக இருக்கலாமே என்று.
   அவர்கள் என்னை 4 கண்களால் பார்த்து அம்மா செய்தாலும் தாங்கள் விடமாட்டினம் என்பது போல என்னைப் பார்த்தார்கள்.
   இப்படிப் பட்டவர்களை எப்படி மாற்றுவது?.
   நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு
   இறையாசி நிறைக!

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  ஏப் 25, 2012 @ 12:27:23

  ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்’ என்பதை அழகாய் கவிதையில் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. ரெவெரி
  ஏப் 25, 2012 @ 12:35:03

  மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
  மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை//

  அருமையான வரிகள் சகோதரி….

  மறுமொழி

 8. AROUNA SELVAME
  ஏப் 25, 2012 @ 13:07:30

  நெஞ்சோடணைத்த பூ – பொட்டு – மஞ்சளதை
  மிஞ்சும் தியாகமென தூரத் தள்ளுவது
  விஞ்சும் அநியாயம்! மணவாளத் துரோகமது!

  அருமையான கருத்துங்க வேதா. இலங்காதிலகம். ரசித்துப் படித்தேன். நன்றிங்க.

  மறுமொழி

 9. Rajarajeswari
  ஏப் 26, 2012 @ 16:41:06

  மலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே!
  மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
  மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!
  மலராய் மலர்ந்து மணம் பரப்பும் அருமையான வரிகள்!

  மறுமொழி

 10. ramani
  ஏப் 26, 2012 @ 23:45:32

  அருமையான சிந்தனை அழகான பதிவு
  கணவனுக்கு முன்பே வந்தது
  அது கணவனுடன் ஏன் செல்ல வேண்டும்
  ஆண்களின் வக்ர மனோபாவத்தால்
  துணையற்ற பெண்களை சிதைத்து ம்கிழும்
  சிறுமை குணத்தால் நேர்ந்து வந்த அவலம் இது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 11. கோமதிஅரசு
  ஏப் 27, 2012 @ 02:52:59

  மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
  மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!//

  அருமையானவரிகள். கவிதை அருமை.

  மறுமொழி

 12. SUJATHA
  ஏப் 27, 2012 @ 12:52:39

  விதவை அவள் முகம் மலரவைக்கின்றது உங்கள் கவி.

  விதவை என்றொரு பெண்பால் வழக்கு
  விதவனென்று ஆண்பால் கொள்ளா வழக்கு.
  கணவனிழந்தவளுக்கு துறவு நிலை வாழ்வு!
  மனைவி இழந்தவனுக்கு உல்லாச வாழ்வு!
  அன்றைய சமூகத்தின் அடிமை வழக்கிது.
  நன்றல்லதைப் பகுத்தறிவால் விலக்கல் அழகு!.

  சமுதாயப்பார்வையில் விலக்கிவைப்பது அழகு அல்ல….. அற்புதம். தொடரட்டும் உங்கள் பணி!!!!

  மறுமொழி

 13. rathnavelnatarajan
  ஏப் 29, 2012 @ 09:53:07

  அருமையான கவிதை.
  அருமையான கருத்துகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: