27. மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில் மயங்காதார் யார்!…..

 

”ஹாய்!…எனக்கு உன்னைப் பார்க்க முடிகிறது. உன் குரலைக் கேட்க முடிகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்.  உன்னோடு சேர்ந்து இருப்பது மிக இன்பமயமானது…”

பச்சிளம் பாலகன் வள்ளுவன் இந்த உலகத்திற்கு வந்து நான்கு கிழமைகள் தான் ஆகிறது. சிறு புன்னகை மூலம் தான் அவனால் செய்தி தெரிவிக்க முடியும். மேலே கூறிய தகவலை அவன் அப்படித்தான் தெரிவித்தான்.

அந்த மின்னல் கீற்று முறுவலைப் பார்த்து மனமிளகி மறுபடியும் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.

ஆரம்பத்தில் அந்த மோகன முறுவல் ஒரு ஓட்டமானதாகத்,  தாயானவளுக்கு நிச்சயமில்லாததாக,  பிள்ளை சிரிக்கிறானா இல்லையா என்று உறுதியின்றி இருக்கும்.
திடீரென எந்தவிதத் தடுமாற்றமுமின்றி உங்களைப் பார்த்துத் தான் அவன் சிரித்தான் என உணர்வீர்கள்.

குழந்தையின் முதற் சிரிப்பு சிறு சத்தங்களை உருவாக்கி இது ஒரு விளையாட்டுப் போன்று தோன்றும்.

உங்கள் கரத்தில் பிள்ளையைச் சாய்வாகத் தூக்கி நிமிர்த்திக் கண்களோடு கண்களின் தொடர்பைக் கொள்ளுங்கள். மிக இன்பமாக நிறையச் சிரிப்புகள் தொடரும். ஒரு மாதத்தினுள் குழந்தையின் சிரிப்பு மிக வளர்ச்சியடையும். இச்சிரிப்பு மிக நீளும். குழந்தையின் முகத்தையும் ஒளியடையச் செய்யும்.

அன்றாட வாழ்க்கைக் கடன்களால் நீங்கள் அமுங்கி, ஒளியிழந்து இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அந்தக் குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.

மறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.

ஒரு மாதக் குழந்தையான கைக்குழந்தை நீங்கள் தான், தன் பெற்றோர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை.

மற்றைய பெரியவர்களையும்,  தன் கண்பரப்பில் விரிபவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது.

ஏனெனில் அது ஒரு வகையான பேசப்படும் குரல். தொடர்பாடல் முறை.

தன்னைப் பற்றிய கவனத்தை உங்களிடம் எழுப்பி, தன்னைப் பார்க்கச் செய்கிறது.
உங்களுக்கே உங்களுக்காக பிள்ளை சிரிக்க நீங்கள் நான்கிலிருந்து ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

சிரிப்பெனும் தூண்டிலால் ஒரு குழந்தை ஆறு மாதத்திற்குள் யாராயிருந்தாலும் எல்லோரையும் தன் பரப்பினுள் இழுக்கிறது.

ஏழு மாதத்தின் பின்னரே நெருங்கியவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என்று அடையாளம் கண்டு சிரிக்கிறது.
வெளியார் யார், தனது நெருங்கியவர் யார் என அடையாளம் புரிகிறது.

நன்கு சிரித்து விளையாடிய பிள்ளை ஏன் திடீரென தெரியாதவர்களைப் பார்த்து ஒரு வித்தியாசமான நிலையில் ஓதுங்குகிறது என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிலையிலான உங்கள் பிள்ளையின் முன்னேற்றமே.
நீங்கள் இதையிட்டு மகிழ வேண்டும். அதை மதிக்கப் பழக வேண்டும்.
பிள்ளை ஒரு படி முன்னேறியுள்ளான், வளர்ந்துள்ளான் என்று நீங்கள் மகிழ வேண்டும்.

 

ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2004.

( இது யெர்மனிய இந்து மகேஷ் ன் ”பூவரசு” இனிய தமிழ் ஏடு- கார்த்திகை, மார்கழி 2004 இதழில் பிரசுரமானது.)

  

 

                                  

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  ஏப் 28, 2012 @ 01:55:11

  குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.//

  கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்புக்கு ஈடு இணை ஏது!
  பேரன் வள்ளுவன் வாழ்க! வளர்க!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 28, 2012 @ 07:57:13

   நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
   எமது பேரன் பெயர் – வெற்றி.
   இது பொதுவான ஒரு ஆக்கம். அனைவருக்கும் உதவட்டுமே என்று…
   ஆனால் அவரின் புன்னகைப் படம் ஒன்றைப் போடலாம் என்று முயற்சித்தேன். அவர் சரியான தூக்கம். குளப்பாது விட்டு விட்டேன்.
   இவை கூகிள் படங்கள்.
   அழகியவை கண்டால் சேகரித்து வைத்து தேவைக்குப் பாவிப்பேன்.
   தங்களிற்கு இறையாசி நிறையட்டும் சகோதரி..

   மறுமொழி

 2. b.ganesh
  ஏப் 28, 2012 @ 01:55:32

  ஆஹா… அந்த மோகனப் புன்னகைதான் என்னே அழகு! பச்சிளம் குழந்தைகள் நம்மையும் குழந்தைகளாக்கி விடும் என்ற வாக்கியம்தான் எவ்வளவு உண்மை! அந்த சந்தோஷமும் புன்னகையு்ம் என்னையும் பற்றிக் கொண்டதே! ரசிக்க வைத்த பகிர்வுக்கு நன்றி சகோதரி!

  மறுமொழி

 3. பிரபுவின்
  ஏப் 28, 2012 @ 07:01:17

  அருமையான விளக்கம்.கடவுளின் படைப்பின் ரகசியம் பிரமிக்க வைக்கிறது.கடவுள் மிகப் பெரியவர்.
  தம்பதியர் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு.படிக்கும் போதே மகிழ்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 28, 2012 @ 08:19:39

   மிக நன்றி பிரபு. பலர் பிள்ளையுடன் கண் தொடர்பு வைக்காது இருப்பர். இது பிள்ளையைத் தூண்டி அதன் வளர்ச்சிக்கு உதவுவது. பேச ஆரம்பிக்க உதவுவது. இப்போது எங்கள் பேரனுடன்(வெற்றி) இதையே செய்கிறோம் எனவே நல்லது என்று வலையேற்றினேன் .
   ஆனால் இது எழுதியது 2004ம் ஆண்டு எழுதியது.

   பேரனின் பெயர் பற்றி கடந்த கருத்து இருந்தது. வைத்தியசாலைக்கு போய் பேரனைப் பார்க்க காத்திருந்தோம். தாயுக்கு தாய்ப்பால் கொடுக்க பயிற்சிக்காக அழைத்து சென்று விட்டனர். மகன் எங்களோடு இருந்து பேசினார்.
   ”..வெற்றி என்று பெயர் வைத்துள்ளோம்…எப்படிப் பெயர்?..” என்றார் மகன்.
   எனக்கு ஒரு பெரிய குடம் பாலை அப்படியே இதயத்தில் ஊற்றியது போல இருந்தது. மகிழ்வு பொங்கியது. மிக நல்ல பெயர் என்று ஆனந்தப் பட்டேன். எல்வோருமே தான்(அம்மம்மா ,அம்மப்பா, நானும் இவரும்)
   நான் எதிர் பார்த்தது தத்துப் பித்தென்று ஏதாவது ஆங்கில, டெனிஸ் பெயர் வைப்பார்கள் என்று.(ஏனென்றால் மகனும், மருமகளும் கொஞ்சம் மொடேர்ன்) ஏதோ நல்லது நடந்தது.ஆண்டவனிற்கு நன்றி.
   பிரபு இறையாசி நிறையட்டும் உமக்கும், எல்லோருக்கும்.

   மறுமொழி

   • பிரபுவின்
    மே 02, 2012 @ 01:06:36

    மிக்க நன்றி சகோதரி.வெற்றி என்பது மிகச் சிறப்பான பெயர்.வெற்றி என்ற சொல்லை உச்சரிக்காத நபர்களே உலகத்தில் இல்லை.எல்லோரும் அதை நோக்கியே செல்கின்றார்கள்.உங்கள் வெற்றி (பேரன்) வெற்றிகளைக் குவிக்க நல்வாழ்த்துக்கள்.

 4. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஏப் 28, 2012 @ 07:47:15

  தனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.

  மறுமொழி

 5. Vetha ELangathilakam
  ஏப் 28, 2012 @ 08:27:13

  Yashotha Kanth likes this..

  Yashotha Kanth:_
  சூப்பர்!….
  Vetha ELangathilakam:_
  மிக நன்றி சகோதரி.
  ஆண்டவன் அருள் நிறையட்டும்.. (.Inஒன்றே குலம் ஒருவனே தேவன்.FB)
  அன்பு தோழி like this..(முப்பொழுதும் உன் நினைவுகள் FB)
  Pushpalatha Kanthasamy and Madhu Mathi likes this..
  Mohamed Musathik likes this..(:::..♥மாமோய் இது நம்ம ஏரியா உள்ளே வாங்கடா…in FB)
  Ganesalingam Arumugam and Subea Rasanayagam likes this..( in கனவு விழிகள் FB)
  Murugavel Swaminathan(in கவிதை குழுமம் – Kavithai Kulumam):-
  நன்று!
  Vetha:-
  Mikka nanry. God bless you.
  Vrp Balakrishnan likes this…(கவிதை குழுமம்)

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  ஏப் 28, 2012 @ 11:31:51

  நன்கு அவதானித்து எழுதுகிறீர்கள். குழந்தைகள் ஒலி கேட்கும்போது தன்னிச்சையின்றித் திரும்புகின்றன. பின்பு உணர்ந்து திரும்புகின்றன. ஒளியை ஆரம்பத்தில் உணரும். உருவங்களை பிரித்தறியும் ஆற்றல் பின்னர் கிட்டும்.
  ஆம் குழந்தைகளில் லயிப்பதைத் தவிர இன்பம் அளிக்கக் கூடியது வேறென்ன இருக்க முடியும்.?

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 28, 2012 @ 11:43:09

   டெனிஸ்ல் 3 வருடம் (செமினாரியத்தில்) குழந்தைகள் பராமரிப்பு படித்து 14 வருடங்கள் 3லிருந்து 10-11 வயதுப் பிள்ளைகளோடு தான் வேலை செய்தேன்..
   அது சம்பந்தமான மகசீன்ஸ் வாசிப்பேன். சமூகத்தில் பெட்டகோ (pædagog) என்று அழைப்பர்.
   மிக்க நன்றி ஐயா. இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. rathnavelnatarajan
  ஏப் 28, 2012 @ 13:44:00

  மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. SUJATHA
  ஏப் 29, 2012 @ 07:08:05

  ஒரு குழந்தையின் புன்சிரிப்பு, குறும்புத்தனங்களை பார்த்து மகிழும் நாட்களைப்போல் வரப்போவதில்லை. பெற்றவர்களிற்கு
  இது ஒரு அடையாளம். எடுத்துரைத்த ஆக்கம் அருமை.

  மறுமொழி

 9. மாலதி
  ஏப் 30, 2012 @ 09:56:35

  குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்பர் வள்ளுவர் சிறந்த பதிவு பாராட்டுகள் .

  மறுமொழி

 10. ரெவெரி
  ஏப் 30, 2012 @ 13:11:30

  God’s gift to mankind சகோதரி…

  மறுமொழி

 11. Rajarajeswari
  மே 01, 2012 @ 07:59:51

  மறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.

  இனிய மோகன முறுவல் தவழும் ஆக்கத்திற்குப் பாராட்ட்டுக்கள்..

  மறுமொழி

 12. Vetha ELangathilakam
  மே 01, 2012 @ 19:30:57

  மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: