234. பூவாய் மலரும் நாள்!

பூவாய் மலரும் நாள்!

பூவாய் மலருமொரு நாள்
பூமியில் இந்த நாள்
பூவாசனை வீசட்டும் செயலில்.
பூரிப்பை அள்ளித் தரட்டும்.

புது அனுபவம் காத்திருக்கும்
புதுச் சரித்திரம் தொடங்கலாம்.
பூத்திடும் பல முயற்சிகள்
பூரணத்துவம் ஆகலாம் நிதம்.

நீவிடும் பூபாளமாய் விரியும்
நாள் எம்மை ஆள்கிறதா!
நாளை நாம் ஆள்கிறோமா!
கோள்களின் வெற்றி வினையா!

புதிய உயிர் பிறக்கும்.
புன்னகை, புளகாங்கித நாளாகும்.
புகழுடை உயிர் மறையும்
புதிராகித் துயில் துறக்கும்.

வமானம் அள்ளி வராத
சுயமானம் காக்கும் ஒரு
வெகுமானம் நிறையும் நாளாகிக்
கவலைகள் தெரியாத நாளாகட்டும்.

ருவியென அறிவுச் சாரலான
அரும் வாசிப்பில் மூழ்கும்
ஒரு விவரத்திரட்டான
பெரும் அறிவு நாளாகட்டும்.

நுரை பொங்கி அருவருப்பூட்டி
திரையிடும் பல வினைகளிற்கு
இரையாகும் நாளாகவின்றி
இரையாகாத நன் நாளாகட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2012.

அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்.

(8-5-2012 ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலியில் இக்கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.vaarppu.com/view/2641/

                                

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 01, 2012 @ 01:11:23

  மேதினக் கவிதை அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  மேதின நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. b.ganesh
  மே 01, 2012 @ 01:34:14

  இந்த நாள் இனிய நாள்! மே தின்ததில் நான் படித்த ஒரு நல்ல கவிதை! அந்த வாய்ப்பைத் தந்ததற்கு நன்றிகள் பல!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   மே 01, 2012 @ 04:00:01

   OH! so swweei of you! Ganesh sir!
   வலைச்சர வேலையிலும் எனக்குக் கருத்திட வந்ததற்கு மிக மிக நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  மே 01, 2012 @ 01:51:01

  ‘மே தின’ நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. rathnavelnatarajan
  மே 01, 2012 @ 02:32:27

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. கோமதி அரசு
  மே 01, 2012 @ 05:34:43

  அருவியென அறிவுச் சாரலான
  அரும் வாசிப்பில் மூழ்கும்
  ஒரு விவரத்திரட்டான
  பெரும் அறிவு நாளாகட்டும்.

  ’மே தின ’நல்வாழ்த்துக்கள்.அறிவு சாரால் கவிதையில் இன்று நனைந்தேன்.

  மறுமொழி

 6. Vetha ELangathilakam
  மே 01, 2012 @ 06:26:06

  Ganesh Ramachandran likes this..
  Mari Kumar likes this..

  Vetha ELangathilakam :_
  அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள்
  .கேபிள் ராஜா:-
  இனிய மே தின வாழ்த்துகள்….
  .Vetha ELangathilakam:-
  Nanry sakothara…
  Murugavel Swaminathan likes this..

  Vetha ELangathilakam :-
  அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள்
  .Murugavel Swaminathan:-
  நன்று!

  இனிய காலை வணக்கத்துடன்
  தொழிலாளர் நாள் நல் வாழ்த்துக்கள்!
  .Vetha ELangathilakam:-
  Nanry! ungalukkum athu pola….

  மறுமொழி

 7. Vetha ELangathilakam
  மே 01, 2012 @ 07:27:24

  Grastley Jeya likes this..

  Vetha ELangathilakam :-
  அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்…..·
  .Lavi Langa:-
  To you too mum xxx
  Umah Thevi likes this..
  Ganesalingam Arumugam and Nandhu SoulofPower like this..

  Vetha ELangathilakam:-
  அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள்…
  .Ganesalingam Arumugam:-
  இனிய தொழிலாளர்தின நல்வாழ்த்துக்கள். ….
  N.Rathna Vel likes this..in யாழ் இலக்கிய குவியம்.

  மறுமொழி

 8. Rajarajeswari
  மே 01, 2012 @ 07:58:04

  அருவியென அறிவுச் சாரலான
  அரும் வாசிப்பில் மூழ்கும்
  ஒரு விவரத்திரட்டான
  பெரும் அறிவு நாளாகட்டும்

  மேதின நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. krishy
  மே 01, 2012 @ 17:10:40

  அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  மறுமொழி

 10. பழனிவேல்
  மே 02, 2012 @ 03:33:19

  “அருவியென அறிவுச் சாரலான
  அரும் வாசிப்பில் மூழ்கும்
  ஒரு விவரத்திரட்டான
  பெரும் அறிவு நாளாகட்டும்.”

  அழகு… மிகவும் ரசித்தேன்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   மே 02, 2012 @ 07:37:48

   அன்பின் பழனிவேல் மிக மிக நன்றி, மகிழ்ச்சி தங்கள் இனிய வரவு கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. sasikala
  மே 02, 2012 @ 07:29:47

  அருவியென அறிவுச் சாரலான
  அரும் வாசிப்பில் மூழ்கும்
  ஒரு விவரத்திரட்டான
  பெரும் அறிவு நாளாகட்டும்.//
  அருவியென வரிகள் அழகு . படம் கண்ணைக் கவர்ந்தது .

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   மே 02, 2012 @ 07:38:48

   சகோதரி சசிகலா மிக மிக நன்றி, மகிழ்ச்சி தங்கள் இனிய வரவு கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. SUJATHA
  மே 02, 2012 @ 18:43:42

  உழைக்கும் கரங்களிற்கு விடுதலை கொடுப்போம். பொங்கி எழுந்த
  கவி அருமை.!!!!

  புதிய உயிர் பிறக்கும்.
  புன்னகை, புளகாங்கித நாளாகும்.
  புகழுடை உயிர் மறையும்
  புதிராகித் துயில் துறக்கும்.

  அருமை!!!! வாழ்த்துக்கள்!!!!!!

  மறுமொழி

 13. sasikala
  மே 15, 2012 @ 11:33:22

  தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  மறுமொழி

  • கோவை கவி
   மே 15, 2012 @ 17:21:15

   மிகுந்த நன்றி சகோதரி. பதிவைப் படமெடுத்து எனது முகநூல் பக்கத்திலும் இட்டுள்ளேன். தங்களிற்கு – பதிலிட்டுள்ளேன் மறுபடியும் நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: