230. ஆத்மா

ஆத்மா.

த்மா – ஆன்மா – உள் சக்தி
மகாத்மாவாகிறது நன்னடைத்தையோடு.
இந்திரியங்களிற்கு அப்பாற்பட்டு
உயிர், ஆவி ஊக்கமென்பார்.

நான், எனது, என்னுடையது
என்றவுணர்வு ஆத்மாவின் குணம்.
பெண்ணல்ல, ஆணல்ல, ஆத்மா
கண்ணாற் காணற்றது.

தம் கடந்து, வயதற்று,
ஏழை, பணக்காரனற்று,
நிறமற்ற நித்தியம் ஆனது.
தனித்துவம், சூட்சுமமானது.

டல் இயக்கக் காரணி.
உடைமை, ஊர், பெயர்,
உருவம்,குணம் அற்றது.
ஓரு வரையறையற்றது.

யிரின் தத்துவம் ஆத்மா.
அறிய முடியாதது. எவரும்
அறியப் போதுமில்லை. யோசனை
அறிவென்பார். ஓன்றையும் பற்றாதது.

த்ம பலம் – சிந்தனை
ஆத்ம ஞானம் – நேசம்- திருப்தி
ஆத்மார்த்த உறவென இணைப்பார்.
ஆத்மாவின்றேல் மனிதன் மரித்தான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப் பல்விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி, எல்லாப்
பிறப்பும் பிறப்பதுவோ ஆத்மா!
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-4-2012.

இதே மாதிரியில் எனது இன்னொரு ஆக்கம்.
இணைப்பு இதோ!….https://kovaikkavi.wordpress.com/2015/03/25/367-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/

  

                                       

 

 

Next Newer Entries