வேதாவின் மொழிகள். 19.

வேதாவின் மொழிகள். 19.

மனம் – ஊனம் – மனிதம்.  5-6-2006.

மனித மனம் ஊனமடைவது
மனிதநேயம் இழக்கும் போது.
உடல் ஊனம் போன்று இதயத்
திடலும் நிலையற்றுப் போதல்.
வெல்லும் பகுத்தறிவு மனமும்
நல்ல பரம்பரை மனதாலுமே
நோய் குணப்பட முடியும்.

நேர்மை –வாய்மை –பாவம். 22-5-2006

வாய்மை தாய்மை போன்றது.
நேர்மையாக வாய்மை பேசல் சொர்க்கம்.
ஆயினும் அது இலைமறை காயானது.
நிலைமை இலைகளை விலக்கிப் பார்ப்பது போலவே இருக்கும்.

பொய்மை பாவமின்றித் துருத்திக் கொண்டு முன்னே நிற்கும்.

நேர்மையாக வாய்மை பேசுபவனுக்கு உலகில் சொற்ப இடம் இருப்பது போலவே தெரியும்.

தனிமை.

இனிதான ஒரு வழியில் மனம் ஒன்றிடில் தனிமையும் ஒரு வித இனிமையே. இன்ப இசை,
அமைதி வாசிப்பு,
ஓவியம் வரைதல்,
கவி புனைவும் இனிமையே.

கொடுமை.
விரக்தி மனதிற்குத் தனிமை கொடுமை.
விசன மனதிற்குத் தனிமை கொடுமை.
விரோத மனதிற்குத் தனிமை கொடுமை.
விளைவு வில்லங்கம் தந்திடும் உண்மை.

அமைதிக்கேடு.   26-9.2004.

அகம் நிறை தாய்நாடு
அகம்பாவத்தால் கேடு.
அடிவானத்தில் அமைதிக்கோடு
அந்தகாரத்தில் ஆனந்தமேடு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-5-2012.

                               

 

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வே.நடனசபாபதி
  மே 07, 2012 @ 07:22:21

  வேதாவின் மொழிகள் அல்ல.வேத மொழிகள்!! நல்ல கருத்து செறிந்த சொல்லாடல். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 2. b.ganesh
  மே 07, 2012 @ 07:36:48

  அனைத்து மொழிகளும் அருமை. நண்பர் நடனசபாபதி சொன்ன கருத்துக்களை வழிமொழிகிறேன்,

  மறுமொழி

 3. valaiyakam
  மே 07, 2012 @ 08:50:03

  வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  மறுமொழி

 4. Vetha ELangathilakam
  மே 07, 2012 @ 12:55:51

  Sundrakumar Kanagasundram likes this..– in (.ஒன்றே குலம் ஒருவனே தேவன்)
  Ganesalingam Arumugam and Abi Abira like this..likes this..- in (கனவு விழிகள்)
  Prakash Ash likes this..- in (:::..♥மாமோய் இது நம்ம ஏரியா உள்ளே வாங்கடா…)
  ஆதி பார்த்தீபன் likes this..- in (யாழ் இலக்கிய குவியம்)

  Ganeshanathan Murugesu likes this..–in Tamilsk velfærds forening, AATO (FB)
  Vetha ELangathilakam mikka nanry….sakothara…..

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  மே 07, 2012 @ 15:41:44

  அருமையான கருத்துக்கள்
  “..இனிதான ஒரு வழியில் மனம் ஒன்றிடில்
  தனிமையும் ஒரு வித இனிமையே. ..”
  தனிமை பற்றியதை மிகவும் அனுபவித்தேன்.

  மறுமொழி

 6. Vetha ELangathilakam
  மே 07, 2012 @ 16:43:16

  Yashotha Kanth and Sundrakumar Kanagasundram like this..in (ஒன்றே குலம் ஒருவனே தேவன்.FB)

  Yashotha Kanth:_
  கொடுமை.
  விரக்தி மனதிற்குத் தனிமை கொடுமை.
  விசன மனதிற்குத் தனிமை கொடுமை.
  விரோத மனதிற்குத் தனிமை கொடுமை.
  விளைவு வில்லங்கம் தந்திடும் உண்மை….அருமை அக்கா …ஒவ்வொன்றிக்கும் …மிகவும் அருமை.· .

  Vetha ELangathilakam :-
  தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி யசோ. இவை என்னை ஊக்குவிக்கும் உயிர்ச்சத்து அல்லவா! தெய்வக் கிருபை நிறையட்டும்….

  மறுமொழி

 7. பழனிவேல்
  மே 08, 2012 @ 03:13:35

  இனிதான ஒரு வழியில் மனம் ஒன்றிடில் தனிமையும் ஒரு வித இனிமையே.

  அழகாக சொன்னீர்கள்.
  வேதாவின் வேத மொழிகள் அருமை.

  மறுமொழி

 8. SUJATHA
  மே 10, 2012 @ 19:54:16

  நேர்மையாக வாய்மை பேசுபவனிற்கு உலகில் சொற்ப இடம் போன்று இருப்பது போலாகும். உண்மை அழகான மொழிகள்!!!!!

  மறுமொழி

 9. rathnavelnatarajan
  மே 12, 2012 @ 23:59:52

  அருமையான கருத்துகள்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  மே 13, 2012 @ 16:21:28

  முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்:-

  ”..மனித மனம் ஊனமடைவது
  மனிதநேயம் இழக்கும் போது…”
  அனுபவப் பூர்வமான வரிகள்.

  மறுமொழி

 11. கோவை கவி
  மே 13, 2012 @ 16:22:34

  மிக்க நன்றி சகோதரா.
  இறையருள் நிறையட்டும்.

  மறுமொழி

 12. aruleesan
  அக் 13, 2018 @ 19:21:37

  கொடுமையான தனிமை கூட
  மனதை சிறகடிக்கவிடு வோர்களுக்கு
  இனிமை தரும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: