235. போர்த்திய கற்பனை….

 

போர்த்திய கற்பனை….

( கிழமையில் ஒரு நாள் அதிகாலை 6.30 மணிக்குப் பாலர் நிலையம் திறக்கும் நாளின் காட்சி, – கருவாக.)

திகாலை அழகு, இனிய மோனத்தில்
குதிநடையோடு வரும் தளிர் வதனங்கள்.
வெள்ளைநிறத் தளிரொன்று நீல விழிகளில்
கொள்ளையிடு மொன்று பசிய விழிகளில்.
கருமை நிறத் தளிரொன்று கரிய விழிகளில்
மஞ்சள் நிறத் தளிரொன்று மண்ணிற விழிகளில்

விழிகளின் அழகிற் பல வேறுபாடு
மொழிகளிலும் எத்தனை பல மாறுபாடு.
நிறங்களிலும் கூட இல்லை ஒருமைப்பாடு
குணங்களிலோ எல்லோரும் ஒன்று – பிள்ளைகள்
பிணங்கிப் பெற்றவரைப் பிரிகிறார் – தாக்கம்
இணங்கியும் பிரியாவிடையிறுக்கிறார் ஊக்கம்.

கோல விழிகளாற் கற்பனையிலென் கேள்விகள்
நீலவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
நீலவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
மண்ணிறவிழிகளிற்கு வனப்பு மண்ணிற மையிலா!

குற்றால அருவியாகக் காலையிசை முன்னணியில்
கற்பனை வளர்ந்தது வனப்பு விழிகளால்.
வெள்ளை நுதலின் புருவ இடையில்
வெண்ணிலாத் திலகம் ஒன்று இட்டு
வட்ட விழிகளிற்கு வடிவாக மையிட்டுக்
கத்தரித்த கூந்தலிணைத்துக் கருநாகப் பின்னலிடலாம்.

பின்னலிற்குப் பூச்சூடி இடையில் ஒரு
வண்ணச் சேலை அணிந்திட்டால் அவள்
பண்டைத் தமிழ் வாலைக் குமரியே!
ஈர்க்கும் வெள்ளைப் பெண்களை முன்பு
போர்த்திக் கற்பனையால் அலங்கரித்து ரசித்தேன்.
பொற்சிலையாய்! அச்சாயொரு  தமிழ்ப் பெண்ணாய்!

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-10-1999.

(லண்டன் தமிழ் வானொலியில் 3-11-1999ல் அறிவிப்பாளர் ஜீவா சுகந்தன் இதை வாசித்தார்.)

In Pthivukal web site  this poem .—–http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=852:-2&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

                                 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 11, 2012 @ 02:17:39

  தங்கள் சொல்லோவியம் என்னுள் சித்திரமாய் விரிந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. அன்பு தோழி
  மே 11, 2012 @ 06:27:17

  மிக அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் எண்ணங்கள்.தொடரட்டும் உங்கள் பணி….வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கோவை கவி
  மே 11, 2012 @ 16:09:08

  In கவிதை குழுமம் – Kavithai Kulumam – FB
  சிங்கம்,
  Thileepan Umarani Velan – Payroll Executive at Talent maximus.
  ..Vrp Balakrishnan – Madurai, India – likes this.

  Abul Hasan likes this..- in – கவித்தென்றல் FB.
  N.Rathna Vel likes this..in FB.( my wall)

  ….

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 11, 2012 @ 16:12:33

  In ஒன்றே குலம் ஒருவனே தேவன்- FB:_

  Yashotha Kanth கோல விழிகளாற் கற்பனையிலென் கேள்விகள்
  நீலவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
  நீலவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
  கருவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
  கருவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
  மண்ணிறவிழிகளிற்கு வனப்பு மண்ணிற மையிலா!……அழகு வரிகள் சகோதரியே..
  Vetha ELangathilakam:_
  மிக நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு. தெய்வக் கிருபை நிறையட்டும்..

  .2.Vetha ELangathilakam :_
  Sree Dhandapani – PSG Arts College
  Sundrakumar Kanagasundram – Works at Retired!!…. likes this.
  Vetha:-
  …மிகவும் நன்றி. இறையாசி கிட்டட்டும்…

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 12, 2012 @ 09:07:59

  Vijayalakshmi Viji:-
  மிக்க நன்றி அன்பு சகோதரி… தங்களின் வலை தளம் பார்த்தேன்…அருமை

  மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  மே 12, 2012 @ 12:26:57

  அந்த கள்ளமில்லா சிரிப்பும் வண்ணச் சேலையில் இருக்கும் அழகும், தாங்கள் கூறுவதுபோல் இவள் ஒரு பண்டைத் தமிழச்சியே!.
  போர்த்திய கற்பனையை இரசித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 12, 2012 @ 13:09:25

   மிக்க நன்றி சகோதரா. உண்மையில் கருநாகப் பின்னலே தேவை. படம் கிடைக்கவில்லை.
   மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. rathnavelnatarajan
  மே 12, 2012 @ 14:56:32

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. மாலதி
  மே 13, 2012 @ 04:15:34

  ஈர்க்கும் வெள்ளைப் பெண்களை முன்பு
  போர்த்திக் கற்பனையால் அலங்கரித்து ரசித்தேன்.
  பொற்சிலையாய்! அச்சாயொரு தமிழ்ப் பெண்ணாய்!// நேர்த்தியாக தமிழை வானொலியில் தவழ விட்டு இருக்கிறீர்கள் பண்பாட்டை பதிய மிட்டு இருக்கிறீர்கள் சிறப்பு

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2012 @ 08:12:11

   இங்கு வந்த ஆரம்பத்தில் எல்லாமே தலை கீழ் தானே சகோதரி. (கலாச்சாரம்.)
   முன்பு தொலைக்காட்சியைத் திறந்தால் எல்லாம் நிர்வாணமாகக் கிடக்கே எதைப் பார்ர்ப்பது என்பேன்.
   இப்போது இந்த நீச்சல் ஆடை வடிவா? இவளுக்கு இது பொருந்தவில்லையே என சிந்திக்கிறேன்.
   அப்போ நியாயப்படி இந்த எனது கற்பனையிலே எல்லா வெள்ளைச் சுந்தரிகளையும் பார்த்தேன்.
   இணைவாக்கம் ஆகிவிட்டோம் இப்போது. (26வது வருடத்தில் டென்மார்க்கில்.)
   நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. Rajarajeswari
  மே 13, 2012 @ 15:11:24

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !

  மறுமொழி

 10. பழனிவேல்
  மே 14, 2012 @ 11:23:40

  “பின்னலிற்குப் பூச்சூடி இடையில் ஒரு
  வண்ணச் சேலை அணிந்திட்டால் அவள்
  பண்டைத் தமிழ் வாலைக் குமரியே!”

  இக்காலத்தில் பூச்சூடிய பெண்களைக் காண்பதே அரிது.
  அழகின் மீது போர்த்திய கற்பனை அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   மே 15, 2012 @ 17:17:30

   சகோதரா கருநாகப் பின்னலிட்ட படம் கிடைக்கவில்லை. பின்பு மாற்றுவேன்.
   மிக நன்றி உமது கருத்திற்கு.
   ஆண்டவனருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: