37.அன்னைக்காக….

 

 

அன்னைக்காக….

 

மேகத்தில் மின்னும் நட்சத்திரம் – என்
தேகத்தை ஆக்கிய உயிர்ச்சித்திரம் -என்
தாகத்தில் பாலீந்த தாய்ச் சித்திரம்.
ஈகத்தில் நீயொரு உயர் சித்திரம்.

தேவையைக் குறிப்பால் உணர்ந்து
சேவையினை உவந்து செய்து
பூரண சேவையில் தினமும்
பூவுலகில் என்னைப் பாவையாக்கினாய்.

ன்னையென்ற பெயரோடு நீயே
தென்னையாய் உயர்ந்த தாயே
என்னைக் கண்ணாக நீயேந்தி
வண்ணமாய் வாழவைத்தாய் நன்றி.

பூரண உன் சேவைச் சிறப்பிற்கு
பூரிப்பான ஒரு சமர்ப்பணமிது.
பூவை உன் மகளின் கவிப்பூவிது.
சேவை உன் தாய்மைக்குச் சிறப்பிது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2005.

 

 
 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  மே 13, 2012 @ 23:42:49

  தேகத்தை ஆக்கிய .உயிர்ச்சித்திரம்! அருமை! அன்னையை நினைவுகூர்ந்த பா பிரமாதம். அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 2. விச்சு
  மே 14, 2012 @ 00:19:56

  அன்னையர்தின வாழ்த்துக்கள்.நல்ல தமிழ் வரிகளோடு அழகான கவிதை.

  மறுமொழி

 3. sasikala
  மே 14, 2012 @ 01:45:00

  அன்னையர் தின வாழ்த்துக்கள் .
  மன்னிக்கவும் எதோ அவசரம் தங்கள் வலைப்பக்கம் வர நேரமின்மைக்கு . வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  மறுமொழி

 4. சா இராமாநுசம்
  மே 14, 2012 @ 02:33:00

  அன்னைக்கு அணிவித்த அழகிய கவி மாலை
  அருமை!

  மறுமொழி

 5. கலைநிலா
  மே 14, 2012 @ 04:25:28

  பூரண உன் சேவைச் சிறப்பிற்கு
  பூரிப்பான ஒரு சமர்ப்பணமிது.
  பூவை உன் மகளின் கவிப்பூவிது.
  சேவை உன் தாய்மைக்குச் சிறப்பிது.

  தாய்மை போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 14, 2012 @ 05:11:47

  பூரண உன் சேவைச் சிறப்பிற்கு
  பூரிப்பான ஒரு சமர்ப்பணமிது.
  பூவை உன் மகளின் கவிப்பூவிது.
  சேவை உன் தாய்மைக்குச் சிறப்பிது.

  அம்மாவுக்கு ஒரு அற்புதமான பதிவு இது!!

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 14, 2012 @ 07:25:36

  Umah Thevi, காயத்ரி வைத்தியநாதன் and Gunavathi Pachayapan – Maktab Perguruan Ipoh Perak.. like this..in FB – வித்யாசாகர்.
  Umah Thevi;-
  nice…
  Vetha ELangathilakam:-
  Mikka nanry Umah. God bless you..
  Vetha ELangathilakam :-
  Thank you Gayathri.V.God bless you.

  Yuvaraj Jayakumar likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam -(FB)
  Selva Venkat likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)
  தெய்வேந்திரம் அசோக், Arul Mozhi and Adithya Vishakha like this..in kavithai sangamam 2.0(FB)
  கலை நிலா likes this.. in my FB wall.
  Kdnl Thangal Dammam, Saudi Arabia likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)
  Sree Dhandapani, PSG Arts College likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)
  சிவ மேனகை likes this..in..Kavithai sangamam என்கிற kavithai club (FB)

  Yashotha Kanth – Nurse at Nursing, Kdnl Thangal- Dammam, Saudi Arabi, Sree Dhandapani – PSG Arts College likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)
  ….
  ..
  ….

  மறுமொழி

 8. அன்பு தோழி
  மே 14, 2012 @ 07:28:13

  அன்னையென்ற பெயரோடு நீயே
  தென்னையாய் உயர்ந்த தாயே

  அழகு அழகு …!!

  மறுமொழி

 9. பழனிவேல்
  மே 14, 2012 @ 11:15:16

  “மேகத்தில் மின்னும் நட்சத்திரம் – என்
  தேகத்தை ஆக்கிய உயிர்ச்சித்திரம்”
  இந்த ஒரு வரி போதும்.

  “அம்மா”-உலகின் உன்னதம்.
  வயிற்றில் பத்து மாதம் கருவாகவும்,
  கையில் பத்து வருடம் திருவாகவும்
  காத்தவள் அம்மா.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 14, 2012 @ 16:21:50

   ஆமாம் சகோதரா. எத்தனை கூறினும் தாய்க்கு ஈடு செய்ய யாரால் தான் முடியும்.
   தங்கள் கருத்திற்கு மிக நன்றி.
   ஆண்டவராசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. rathnavelnatarajan
  மே 14, 2012 @ 15:12:21

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 11. SUJATHA
  மே 14, 2012 @ 20:35:07

  அன்னையென்ற பெயரோடு நீயே
  தென்னையாய் உயர்ந்த தாயே
  என்னைக் கண்ணாக நீயேந்தி
  வண்ணமாய் வாழவைத்தாய் அன்னைக்கு வடித்தகவி
  அருமை!!!! வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: