44. மயிலே! ஒயிலே!

 

மயிலே! ஒயிலே!

 

யிலாத கலைஞன் ஒயிலாக வரைந்தான்
ஒயிலே ஓயிலே மயிலின் தோகை!
துயிலும் மறக்கும் மயிலின் ஆடலில்.

ழுதிலா ஓவியம் எழுதாத காவியம்!
அழுதிடும் பாலனும் எழுந்தே பார்ப்பான்.
வழுவின்றி வரைந்தோன் உலகில் உள்ளானா!

கோலத் தோகையின் மாயக் கண்களழகு!
நீலக் கண்ணனை, நீலக் கடலை
நீல வானழகை ஏளனம் செய்யுமோ!

ங்கமுருக்கிய மரகதப் பொட்டோ!
மங்கா நீலம், பாதி நிலாவென
எங்களை இழுக்கும் இதமான தோகை.

குட்டிச் செண்டு தலைக் கிரீடமாய்
ஓட்டிய அழகு விநோதம்! – பறவைகளின்
கோட்டை அரசனோ மயிலே நீயும்!

பெண்ணைக் கவரப் பண்ணும் மன்மதம்
என்னமாய் விரிக்கும் தோகையும் நடனமும்!
கண்கள் மயங்கிப் பேடையும் சாயும்!

னந்த மழை வந்தாலும் நடனம்!
பேரானந்தக் கவர்ச்சித் தோகையின் காலம்
ஆண்டுக் கொருமுறை களன்று வீழுமாம்!

ந்தியத்தேசியப் பறவை மயிலை
மறந்தும் வேட்டை ஆடுதல் தவறு!
தண்டனைக் குரிய மகா குற்றமாம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-5-2010.

 

                                            

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Niranjana
  May 15, 2012 @ 00:58:51

  தங்கமுருக்கிய மரகதப் பொட்டோ! -சூப்பரா இருக்குக்கா. மயி‌ல் ஆடறதை நான் பார்த்திரு்கேன், வியந்து ரசிச்சிருக்கேன். வழுவழுன்னு கலர்ஃபுல்லா அதோட இறக்கையும் அழகுதான். மயிலைத் துன்புறுத்தறதே பாவம்கறது என் எண்ணம். கொல்றது…? இந்தக் கவிதை மனதைக் கவர்ந்தது.

  மறுமொழி

  • கோவை கவி
   May 15, 2012 @ 07:42:56

   மிக்க நன்றி நிரஞ்சனா. நேரில் கதைப்பது போல உமது கருத்து வாசிக்கும் போது உள்ளது.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  May 15, 2012 @ 05:05:45

  Umah Thevi likes this….in..வித்யாசாகர்.(.FB)

  Umah Thevi :-
  அற்புதம்..
  Vetha ELangathilakam :_
  mikka nanry Umah. God bless you….

  Renuka Sree, Selvi Mano Selvi, Yuvaraj Jayakumar-Shree Niketan Matriculation higher secondary school
  ..likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam (FB)

  மறுமொழி

 3. அன்பு தோழி
  May 15, 2012 @ 05:55:07

  இந்தியத்தேசியப் பறவை மயிலை
  மறந்தும் வேட்டை ஆடுதல் தவறு!
  தண்டனைக் குரிய மகா குற்றமாம்!

  ஆஹா ..! அழகாக சொல்லி இருகிறீர்கள்

  மறுமொழி

 4. Dr.M.K.Muruganandan
  May 15, 2012 @ 10:05:34

  “..பயிலாத கலைஞன் ஒயிலாக வரைந்தான்..” கவிஞர் இனிதான மனமுவக்கும் கவியாக எமக்கு அளித்தார்.

  மறுமொழி

 5. ரெவெரி
  May 16, 2012 @ 15:08:49

  அழகாக சொல்லி இருகிறீர்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   May 16, 2012 @ 17:52:18

   மிக்க நன்றி ரெவெரி. தங்கள் வலைக்கு வந்தேன் பிரெஞ்சுப் பாடம் தான் இருந்தது. சென்றுவிட்டேன்.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. SUJATHA
  May 17, 2012 @ 05:49:27

  கோலத் தோகையின் மாயக் கண்களழகு!
  நீலக் கண்ணனை, நீலக் கடலை
  நீல வானழகை ஏளனம் செய்யுமோ!

  தங்கமுருக்கிய மரகதப் பொட்டோ!
  மங்கா நீலம், பாதி நிலாவென
  எங்களை இழுக்கும் இதமான தோகை
  மயிலின் அழகை என்னவாக கவிநயத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன. இன்னுமாக மயிலின் அழகை ரசிக்கத்தோன்றுகின்றது. வாழ்த்துக்கள்!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   May 17, 2012 @ 07:42:38

   அழகு!…எப்போதும் ரசிக்கலாம்….
   சுஜாதாவின் ரசனைக்கு சபாஷ்!…
   மிக மிக நன்றி கருத்திடலிற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  May 17, 2012 @ 14:40:43

  வணக்கம் சகோதரி..
  விடுமுறையில் இந்தியாவில் இருப்பதால் சரியாக
  வலைப்பக்கம் வரமுடியவில்லை பொறுத்தருள்க…

  அழகிய கலாபத்திற்கு இன்புற
  ஓர் கவியமைத்தமை அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   May 17, 2012 @ 15:46:06

   ஓ! விடுமுறையா!!!!
   உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கவும்.
   இனிய விடுமுறை அமையட்டும்.
   கருத்திடலிற்கு நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. rathnavelnatarajan
  May 17, 2012 @ 15:03:55

  உங்கள் தமிழ் அழகு.
  எனது முகநூல் பக்கத்தில் இந்த அழகு கவிதையை பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   May 17, 2012 @ 15:31:30

   மிக மிக மகிழ்வும், நன்றியும் ஐயா முகநூலில் பகிர்ந்தமைக்கும், கருத்திட்டமைக்கும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  May 17, 2012 @ 15:37:31

  Madasamy Shanmugaswami – Government Arts College, Coimbatore
  Tamizh Selvi
  Chellamani Packirisamy – Bangalore, India
  Ravi Nag – C.E.O. at Insight Global Group
  செந்தில் குமார் – Works at Bussiness.
  N.Rathna Vel – G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. likes this in FB.
  ..

  ..
  ..
  ..

  மறுமொழி

 10. பழனிவேல்
  May 23, 2012 @ 03:21:44

  “கோலத் தோகையின் மாயக் கண்களழகு!
  நீலக் கண்ணனை, நீலக் கடலை
  நீல வானழகை ஏளனம் செய்யுமோ!”

  என்ன ஒரு கற்பனை!!!

  அழகு மயில் அழகு

  மறுமொழி

 11. rishaban
  May 23, 2012 @ 10:47:02

  கோலத் தோகையின் மாயக் கண்களழகு!
  நீலக் கண்ணனை, நீலக் கடலை
  நீல வானழகை ஏளனம் செய்யுமோ!

  மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள். அருமை. பாராட்டுகள் !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 85 other followers

%d bloggers like this: