25. இணையில்லாத் தமிழின் பாடு…

??????????????¸???????

இணையில்லாத் தமிழின் பாடு…

 

உயிரெழுத்து மெய்யோடு ஊடாடி
உயிர்மெய்யாய்ப் புணர்ந்து மொழியின்
உயிர் நாணாகிச் செங்கோலோச்சுகிறது.
தாய்மொழியே கலாச்சார வேர்மொழி.
மொழியும் மரபுமொன்றாய்ப் பிணைந்தும்
மொழியழியின் மரபழியும் விதியாம்.

கலாச்சாரத்தில் வாழ்வுச் சாரமிணைப்பு.
மூலாதாரப் பழைமை உதாரணங்கள்
சீலாச்சாரத் தாய்மொழிக் கொல்லையின்
மூதாதையர் அடிச்சுவட்டில் தொடர்கிறது.
புத்தகவனங்களில் வழமைகள் மேய்ந்து
புத்துருவான அடிப்படை எல்லையாகிறது.

இன்னுயிர்த் தமிழின் படற்கை,
தன்மை, முன்னிலையிலில்லை மாறுகை.
நெடில், குறிலாய்க் கூடித்தமிழ்
நெடுங்காலம் வாழுது பரவசமாய்.
பனை ஓலைச் சுவடியிலன்று
மின் கணனிச் சுவடியிலின்று.

இணையத்தில் தமிழணையுடைத்தும்
இணையிலாச் செந்தமிழ் இன்றியும்
நாட்டு வழக்கும், நளினமும்
கொட்டி நடைமுறைத் தமிழும்
பேச்சுத் தமிழென இணையம்
அச்சச்சோ!..அதன்…பாடு!….

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-3-2012.

 

Swirl divider v2

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  மே 17, 2012 @ 22:40:37

  இன்னுயிர்த் தமிழின் படற்கை,
  தன்மை, முன்னிலையிலில்லை மாறுகை.
  நெடில், குறிலாய்க் கூடித்தமிழ்
  நெடுங்காலம் வாழுது பரவசமாய்.
  பனை ஓலைச் சுவடியிலன்று
  மின் கணனிச் சுவடியிலின்று.//

  தமிழின் சீர் இளமைத் திறம் அதனை
  தங்கள் பாணியில் தாங்கள் சொல்லிப் போனது
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. விச்சு
  மே 18, 2012 @ 00:45:02

  தமிழின் சிறப்பினை அழகாகக் கூறியுள்ளீர்கள்.ஆனால் நடைமுறைத்தமிழ் நிறைய மாற்றம் கொண்டுள்ளது. பிறமொழி கலப்புகள் அதிகம்தான். கால மாற்றத்தில் இதனைத் தவிர்க்க இயலாது. எப்படியிருந்தாலும் தாய்மொழியை மறக்கக் கூடாது. வாழ்த்துக்கள் அம்மா.

  மறுமொழி

 3. b.ganesh
  மே 18, 2012 @ 01:04:42

  அன்னைத் தமிழ், அழகுத் தமிழை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் உங்களுக்கே உரிய வரிகளில். பேச்சுத் தமிழ் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதம். ஆனால் இணையத்தில் பயன்படும் தமிழோ… அம்மம்மா! தனித் தமிழாகவன்றோ உள்ளது. ஹும்!

  மறுமொழி

 4. ரெவெரி
  மே 18, 2012 @ 12:11:29

  அழகுத்தமிழின் சிறப்பினை அழகுற கூறியுள்ளீர்கள் சகோதரி…
  நமக்கு எல்லாம் தந்த தமிழுக்கு நாம் செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன் நம் பிள்ளைகளைத் தமிழ் பயில வைப்பது மட்டுமே!…

  மறுமொழி

 5. sasikala
  மே 18, 2012 @ 13:28:51

  தாய்மொழியே கலாச்சார வேர்மொழி.// வேரை மறவாமல் நம் சந்ததிகள் இருக்க வேண்டும் .

  மறுமொழி

 6. rathnavelnatarajan
  மே 18, 2012 @ 15:20:11

  அருமை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. வே.நடனசபாபதி
  மே 19, 2012 @ 07:03:28

  தங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்!
  பனையோலைத் தமிழானாலும் இணையத் தமிழானாலும் அதன் இனிமையை யாராலும் மாற்ற இயலாது. எத்தனை மொழிகள் படையெடுத்தாலும் தமிழ் நீர்த்துப்போகாது. எனவே கவலை வேண்டாம்.

  மறுமொழி

 8. மகேந்திரன்
  மே 22, 2012 @ 17:52:05

  வணக்கம் சகோதரி..
  இன்றிருக்கும் தமிழ் மொழி பேச்சு நடைக்கு
  அறிவுறைத்தார் போல்
  அழகிய கவிநடை…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   மே 22, 2012 @ 18:24:12

   எங்கே சகோதரா தங்கள் ஆக்கம் ஒன்றையும் காணோம். ஓ! விடுமுறை என்றீர்கள் அல்லவா!.
   மிக மிக நன்றி கருத்திடலிற்கு.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. பழனிவேல்
  மே 23, 2012 @ 03:25:54

  “உயிரெழுத்து மெய்யோடு ஊடாடி
  உயிர்மெய்யாய்ப் புணர்ந்து மொழியின்
  உயிர் நாணாகிச் செங்கோலோச்சுகிறது.”

  முதல் மூன்று வரிகளிலே தமிழ் முத்திரை பதித்துவிட்டது.
  பலமுறை படித்து பரவசம் அடைந்தேன்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 12, 2020 @ 10:29:35

  இளம்கவி செந்தில்குமார்:- தாய்மொழியின் அருமையை
  உணர்த்தி இன்று தமிழ் படும்
  அவஸ்தைகளையும் உணர்த்திய
  வரிகளாய்……. அருமையான பதிவு
  12-1-2020
  Vetha Langathilakam :- பழைய கோப்புகள் பார்த்த போது
  கண்டதும் பலர் பார்க்கட்டும் என்று பதிந்தேன் .
  அன்புடன் மிக மகிழ்ச்சி உறவே..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: