28. தொட்டிற் பாடல்

 

தொட்டிற் பாடல்

 

சாய்ந்தாடய்யா சாய்ந்தாடு!
சாதனை வீரனாய்ச் சாய்ந்தாடு!

சாதுரிய சீலனே சாய்ந்தாடு!
சாந்த ரூபனே சாய்ந்தாடு!

கட்டித் தங்கமே சாய்ந்தாடு!
பெட்டி வைரமே சாய்ந்தாடு!

கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு!
கருணை ஒளியே சாய்ந்தாடு!

தாமரை மொட்டே சாய்ந்தாடு!
தாவிக் குதிக்கச் சாய்ந்தாடு!

சின்னப் புறாவே சாய்ந்தாடு!
சிணுங்காது சிரித்துச் சாய்ந்தாடு!

                 —— வேதா……..

வண்ணங்களின் கீழ் வருகிறது இப் பாடல். தமிழில் 1000 வண்ணங்கள் உள்ளதாம். இப் பால்களின் ஓசை நயம் குழந்தைகள் செவிப் புலன் சீரடைய வழி வகுக்கும். இது பிள்ளைகளின் பிற்கால இசை வளர்ச்சியை, பாடல் (செய்யுள்) இயற்றலையும் வெகு இலகுவாகக் கற்க உதவிடும்.

மிகவும் முயற்சியுறாது கேட்டுணரும் இவை பிற்காலத் தமிழ் இசை, இலக்கிய வளத்திற்குப் பெரிதும் உதவியாற்றும்.

3 முதல் ஏழு வயதுப் பிள்ளைகளிற்கு இது நல்ல கருத்துணர்வைத் தட்டியெழுப்பும். சிந்திக்கும் திறனை உருவாக்கும்.

இவர்கள் இந்த இசையின் கவர்ச்சியால் சொல்லின் கருத்தறிவார்கள். சொற் கருத்தால் பொருளின் அறிவு பெறுவார்கள். அறிந்த பொருளுடன் அறியாத பொருள் பற்றியும் ஆராய முயற்சிப்பார்கள்.

வியப்பு, நேசம், பாசமிகு அன்புப் பாடல்களை இவர்கள் மிக விரும்புவார்கள்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தன் பாட்டி இலக்குமிப்பிள்ளை ஒரு பிள்ளையைத் தூக்கி வைத்துப் பாடிய பாடல் என்று

”…சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
   தாமரைப் பூவே சாய்ந்தாடு…”

எனும் பாடலை எழுதியுள்ளார். இவை மழலைப் பருவ இலக்கியங்கள் என்கிறார்.

பாடசாலைப் பருவ இலக்கியத் தமிழ் கற்க ‘ அழகியலுணர்வு ‘ பெற இப்பாடல்கள் அடிப்படையைத் தருவது என்கிறார். ஓசை நயம் கலந்த இந்தப் பாடல்களை இடைவெளியின்றித்  திரும்பத் திரும்பக் குழந்தைகள் கேட்கலாம். நாமும் பாடலாம். அவர்கள் அறியாது இவைகளை அறிவார்கள்.

மனம் முயற்சியின்றிப் படித்தலெனும் இத்திறனை அகநூலார் ”அசாக்கிரப் படிப்பு” என்பார் என்கிறார் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
”குழவிப் பருவ இலக்கியப் பாடல்கள் எல்லாம் அசாக்கிரமயுருப்படுவனவாதலின் அவை செவ்விய ஓசை வளமுடையனவாக இருத்தல் வேண்டும்” என்கிறார் சோமசுந்தரப் புலவர்.

1955ம் ஆண்டுப் பதிப்பு நூலில் 35 ஆண்டுகளிற்கு முன்னர் இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வழக்கிலிருந்தது என்கிறார்.
இதை நாம் இன்று கூறுவதானால் 92 வருடங்களிற்கு  முன் இவை யாழ்ப்பாணத்தில் சொல் வழக்கிலிருந்தது என்று கூறமுடியும்.

பிறநாட்டு மொழிகள், நாகரீகம் வந்து புக எமது பழைமைப் பாடல்கள் அழிந்துபட்டன. ஆயினும் எனது பாட்டிமார் இதைப் பாட நான் கேட்டுள்ளேன். இதை எம் பேரனுக்காக நான் எழுதினேன். அவர் சிறிது வளர, பாடிக் காட்டுவேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2012.

இதோடு சேரும் ஒரு இடுகை. வாசித்துப் பாருங்களேன்!  மிக்க நன்றி.

https://kovaikkavi.wordpress.com/2010/12/12/179-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

 

                             

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  மே 22, 2012 @ 22:49:35

  வணக்கம் சகோதரி…
  நாவை ஆட்டி ராகத்துடன் பாடும்
  தாலாட்டு பாடல் பற்றிய தெளிவான
  விளக்கம் நன்று…
  எமக்கான பாட்டன் சொத்து என்று
  நாம் மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு
  நமக்குக் கிடைத்த மாபெரும் சொத்து இந்த
  தாலாட்டு…

  அருமையானதொரு தாலாட்டுப் பாடலுக்கு
  நன்றிகள் பல…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   மே 23, 2012 @ 04:48:20

   சகோதரா தாங்கள் பல நல்ல ஆக்கங்கள் பழைய பாடல்கள் பற்றி எழுதியுள்ளீர்கள். அது நினைவுக்கு வந்தது.
   கருத்திடலிற்கு மிக நன்றி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. ramani
  மே 23, 2012 @ 00:02:17

  மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
  சந்தமும் பொருளும் அருமை
  பாடலும் அதற்கான விளக்கமும் மிகச் சிறப்பு
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  மறுமொழி

 3. Niranjana
  மே 23, 2012 @ 01:28:30

  தாமரைப் பூவாய் சாய்ந்தாடு என்னாமல் சாதனை வீரனாய் சாய்ந்தாடு என்று பேரனுக்காகப் பாடுகிறீர்களே… இப்படி பாட்டி கிடைக்க கொடுத்து வைத்த பேரன்! மிகச் சிறப்பாய் வருவான். நமது மூதாதையர் விட்டுச் சென்ற செல்வங்கள் இதுபோன்ற அழகுத் தமிழ்ப் பாடல்கள்தான் இல்லையாக்கா…!

  மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  மே 23, 2012 @ 01:44:29

  ”அசாக்கிரப் படிப்பு” என்று தெரியாமலேயே, நாங்கள் கேட்டு சுவைத்து மனதில் இருத்திய பாடல்கள் பற்றிய, அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி! தங்கள் பாட்டியார் பாடிய இந்த பழமைப் பாடல், தங்கள் மூலம் தங்கள் பேரனுக்கும் அவர் மூலம் வரும் சந்ததியருக்கும் சென்றடையட்டும்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   மே 23, 2012 @ 04:53:57

   பாட்டியார் பாடியது இந்த வகைப் பாடல் தான், இந்தப் பாடல் அல்ல
   சகோதரா. மிக்க நன்றி தங்கள் வரிகளிற்கு.
   ஆண்டன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. பழனிவேல்
  மே 23, 2012 @ 03:34:27

  தாலாட்டே அருமை.
  அதற்கு தாங்கள் தந்த விளக்கம் மிக அருமை.

  மறுமொழி

 6. b.ganesh
  மே 23, 2012 @ 04:55:02

  இசையின் கவர்ச்சியால் சொல்லின் பொருளறிவார்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை சகோ. தாலாட்டுப் பாடல்களின் மூலம் பிஞ்சு மனங்களில் நல்லிசையையும் நற்கருத்துகளையும் விதைத்த நம் முன்னோர்களுக்கும். அன்னைத் தமிழுக்கும் இணை ஏது? உங்கள் பேரனுக்கு சிறந்த பாட்டி கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

  மறுமொழி

 7. ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 23, 2012 @ 05:07:23

  1955ம் ஆண்டுப் பதிப்பு நூலில் 35 ஆண்டுகளிற்கு முன்னர் இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வழக்கிலிருந்தது என்கிறார்.
  இதை நாம் இன்று கூறுவதானால் 92 வருடங்களிற்கு முன் இவை யாழ்ப்பாணத்தில் சொல் வழக்கிலிருந்தது என்று கூறமுடியும்.

  மறுமொழி

 8. ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 23, 2012 @ 05:11:30

  வாழ்த்துக்கள் அம்மா!!
  அற்புதமான பதிவு ஒன்று!!

  கைவீசம்மா! கைவீசு!!
  கடைக்குப் போகலாம் கைவீசு!!

  இதுவும் அவருடைய பாடல் என்றே நினைக்கிறேன்..

  இருந்தும் குழந்தை இலலக்கியங்கள் இன்னும் அரிதாகவே காணப்படுகின்றன..

  தங்களின் முயற்சிகள் ஆறுதல் தருகின்றன..

  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 9. Vetha.Elangathilakam.
  மே 23, 2012 @ 06:12:29

  Umah Thevi and Gunavathi Pachayapan likes this..in வித்யாசாகர் (FB)

  Umah Thevi :-
  nice..
  Vetha ELangathilakam:-
  Thank you Umah. God bless you!….

  N.Rathna Vel likes this..in FB
  Ganeshanathan Murugesu likes this..in Tamilsk velfærds forening, AATO (FB)
  Yashotha Kanth likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  Viduthalai R. Regina likes this..

  மறுமொழி

 10. AROUNA SELVAME
  மே 23, 2012 @ 08:37:31

  வண்ணங்கள் வாசிப்பதற்கு இனிமையானது.
  மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதபட்டிருக்கும்.
  கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் நிறைய வண்ணங்கள் தான் என்பார் என் ஆசிரியர்.
  ஆனால் பழைய கால வண்ணப்பாடல்கள் கிடைப்பது அரியவையாகத் தான் இருக்கிறது.
  நீங்கள் அதற்கான அழகிய பாடலுடன் விளக்கமும் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

  மறுமொழி

 11. sangaranayar ramachandran
  மே 23, 2012 @ 13:35:59

  OLD IS GOLD

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  மே 23, 2012 @ 15:17:15

  எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல்.

  மறுமொழி

 13. ரெவெரி
  மே 23, 2012 @ 15:24:00

  அருமையான தாலாட்டு…வண்ண விளக்கமும் அருமை..வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 14. Dr.M.K.Muruganandan
  மே 23, 2012 @ 16:23:24

  அருமையான குழந்தைப் பாடல்.
  எதிர் காத்தில் பேரன் மகிழ்வான்
  நாம் இன்றே மகிழ்கிறோம்.

  மறுமொழி

 15. கோவை கவி
  மே 24, 2012 @ 18:09:35

  In FB….
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  read in your blog. Nice.
  .Vetha ELangathilakam:-
  Thank you sir. God bless you all…..

  மறுமொழி

 16. rathnavelnatarajan
  மே 26, 2012 @ 01:58:19

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 17. sangaranayar ramachandran
  மே 27, 2012 @ 12:29:26

  பாட்டிமார்கள் இக்கால எமக்கு தமிழ்ழில் உயிர் ஊட்டூகிறார்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: