236. துணிவு.

துணிவு.

உலக முன்னேற்றம் துணிவில் பிறப்பது.
மனித வரலாறு துணிவிற் பிறந்தது.
மனித வாழ்வின் மகிழ்வூற்று துணிவு.
மனித தராதர ஏற்றம் துணிவு.
துணிவு நிலைத்திட இலக்கு ஏற்றது.
துணிவு ஒரு பரிமாணமும் அற்றது.

வாயாடுவோன் அகிலத்தில் துணிவாளன் அல்லன்.
வலிய உருவுடையோனும் துணிவாளன் அல்லன்.
துணிவுப் பலம் – ஓயா முயற்சி சிகரத்தினூர்.
துணிவின் எதிரி – பலவீனம், தயக்கம்.
துணிவின் விலங்கு – கோழை, அடிமைத்தனம்,
துணிவுடை வலியோன் தலைவன் ஆகிறான்.

துணிவின் ஏணி – சுயஆற்றல், சுயசக்தி.
துணிவாளன் – சுயகருத்தாளன், சுயமுடிவாளன்.
பெண்களை மதித்து மரியாதை செய்தல்,
மென்மையாய் குழந்தைகளை மதித்து நடத்தல்;
நொந்தவருக் குதவுதல், நேர்மையாளரை நேசித்தல்,
நேரான துணிவாளனின் நல்லிலக்கணம்.

நீதிக்குப் போராடல், நெருக்கடியில் நின்றுபிடித்தல்
நீதியாக நடத்தல், வாய்மை பேசுதல்,
நல்லதைப் பின்பற்றல், கெட்டதை எதிர்த்தல்,
நெறியான கொள்கைக்காய்ப் போராடல் துணிவு.

ஆக்க மனத்துணிவு வழி – ஒழுக்கம், நீதி.
ஆளுமை அபிவிருத்திக்குரியது – உடற்துணிவு.
அச்சம் தொலைக்க – நம்பிக்கை வளர்!
அச்சம் வென்ற உச்ச நிலையே துணிவு!
இச்சையுடைய  உடற் பயிற்சியாலும் துணிவு.
அஞ்சமாட்டான் வாய்மை, நேர்மையாளன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-4-2004.

samme heading  – துணிவு.  another poem by me :  

https://kovaikkavi.wordpress.com/2014/02/03/308-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/

 

                                     
 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  மே 23, 2012 @ 23:29:40

  நெஞ்சில் துணிவும்
  செயலில் பணிவும்
  இருந்திட்டால்
  எங்கும் தலைகுனிவு இல்லை என
  அருமையாக உரைத்திடும்
  அழகுக் கவிதை சகோதரி…

  மறுமொழி

 2. விச்சு
  மே 24, 2012 @ 00:10:13

  இதுதான் துணிந்தவனுக்கு தூகுமேடையும் பஞ்சுமெத்தையா?

  மறுமொழி

 3. b.ganesh
  மே 24, 2012 @ 02:08:22

  துணிவே துணை! நல்லதற்குப் போராடல், கெட்டவற்றை எதிர்த்தல் இவற்றுக்கு அசுரத் துணிவு கொண்டாலும் தவறில்லைதானே. அருமையான கருத்து!

  மறுமொழி

 4. அன்பு தோழி
  மே 24, 2012 @ 05:08:15

  துணிவு இருந்தால் போதும் தூர வானம் தொடு தூரம்…….
  மனசில் கனிவு இருந்தால் போதும் துயரம் யாவும் பறந்தோடும்….

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 24, 2012 @ 07:29:19

  Lavi Langa and Pushpalatha Kanthasamy like this..

  Lavi Langa :-
  Good one Amma xxx20 minutes ago via mobile · 9.00am-24-5-12
  .Vetha ELangathilakam:-
  Thanksda……chellam.!….

  மறுமொழி

 6. SUJATHA
  மே 24, 2012 @ 10:57:49

  நீதிக்குப் போராடல், நெருக்கடியில் நின்றுபிடித்தல்
  நீதியாக நடத்தல், வாய்மை பேசுதல்,
  நல்லதைப் பின்பற்றல், கெட்டதை எதிர்த்தல்,
  நெறியான கொள்கைக்காய்ப் போராடல் துணிவு.

  துணிவை துணிவாக எடுத்துவடித்த கவி அருமை. வாழ்த்துக்கள்.!!

  மறுமொழி

 7. ரெவெரி
  மே 24, 2012 @ 12:52:38

  அச்சம் வென்ற உச்ச நிலையே துணிவு!
  //
  துணிவில் இவ்வளவா?

  துணிச்சல் கவிதை அருமை… வாழ்த்துக்கள் சகோதரி..

  மறுமொழி

 8. கோமதிஅரசு
  மே 25, 2012 @ 02:40:45

  அச்சம் வென்ற உச்ச நிலையே துணிவு!
  இச்சையுடைய உடற் பயிற்சியாலும் துணிவு.
  அஞ்சமாட்டான் வாய்மை, நேர்மையாளன்.//

  ஆம் அச்சத்தை வென்றால் வாழ்வில் நலம் பெறலாம்.
  உங்கள் அன்பு நலம் விசாரித்தலுக்கு நன்றி.
  நான் நேற்று தான் ஊரிலிருந்து வந்தேன்..இ,

  கேதார்நாத, பத்ரிநாத, கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய iஇடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்தோம்.
  மகள் , பேரன், பேத்தி வந்து இருக்கிறார்கள் ஊரிலிருந்து.அவர்களுடன் நேரம் சரியாகி விடுகிறது பதிவுகளை படிக்க நேரமே இல்லை.
  உங்கள் அன்பான கோமதி.

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 25, 2012 @ 05:39:59

  ஓ!…எவ்வளவு ஆனந்தம் குடும்ப சங்கமம். மிக மகிழ்ச்சி. .அனுபவித்து சந்தோசப் படுங்கள்.
  மிக நன்றி கருத்திடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 10. sasikala
  மே 25, 2012 @ 07:57:02

  துணிவே துணை என்பதை சொல்லிச் செல்லும் விதம் அருமை .

  மறுமொழி

 11. rathnavelnatarajan
  மே 26, 2012 @ 02:08:42

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 12. கோவை கவி
  மே 27, 2012 @ 07:36:12

  Umah Thevi likes this..in FB.
  Yuvaraj Jayakumar
  Shree Niketan Matriculation higher secondary school -in கவிதை குழுமம் – Kavithai Kulumam likes this.
  Sindhya Ragunathan
  Jayarani Girls Higher Secondary School – in கவிதை குழுமம் – Kavithai Kulumam – likes this.

  Chandrakesan Dakshinamurthy – Madras Institute of Technology, Anna University
  Ashok Kumar – Proprietor at SA SYSTEMS&sOLUTION, Hosur
  அன்பு தோழி – Chennai, Tamil Nadu likes in முப்பொழுதும் உன் நினைவுகள்.

  Mani Kandan likes this..in :::..♥மாமோய் இது நம்ம ஏரியா உள்ளே வாங்கடா…(FB)
  ..
  ..
  ….
  ..
  ….

  மறுமொழி

 13. கோவை கவி
  மே 27, 2012 @ 07:36:53

  Yashotha Kanth likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)

  Yashotha Kanth:_
  துணிவின் ஏணி – சுயஆற்றல், சுயசக்தி.
  துணிவாளன் – சுயகருத்தாளன், சுயமுடிவாளன்.
  பெண்களை மதித்து மரியாதை செய்தல்,
  மென்மையாய் குழந்தைகளை மதித்து நடத்தல்;
  நொந்தவருக் குதவுதல், நேர்மையாளரை நேசித்தல்,
  நேரான துணிவாளனின் நல்லிலக்கணம்…..அழகிய வரிகள் அக்கா …அருமை அக்காThursday at 6:09pm ·
  Vetha ELangathilakam :-
  Mikka …mikka..nanry. God bless you all sis….

  மறுமொழி

 14. பழனிவேல்
  மே 29, 2012 @ 04:23:44

  துணிவே துணை எனக் கொள்வோம்
  துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம் என்போம்.
  துணிவு – அழகு

  மறுமொழி

 15. கோவை கவி
  நவ் 01, 2018 @ 17:19:08

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: