விருந்துபசரிப்பு. 27.

 

விருந்துபசரிப்பு. 27.

 

பெருந்தன்மையான மனிதனின் பண்பு  சமூகத்தில்
விருந்தினர் உபசரிப்பு வளமை.

இன்முகமாய், இதமாய் உபசரிக்கும் கலையே
அன்பான விருந்தினர் பராமரிப்பு.

மனையிலிருந்து விருந்து உபசரித்தனர் அன்று.
வினையோடு இதுவுமொன்று இன்று.

உபசரித்துச் சேர்ந்து உறவாடி உண்ணலில்
உறவு நன்கு விருத்தியுறும்.

முகம் கோணும் உபசரிப்பு உடனே
இனம் கண்டு விலகும்.

கொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்
எடுப்பதான மனநிறைவுடைத்து.

ஆலயப் பூசையின் பின்னர் தரும்
அன்னதானமும்  விருந்து உபசரிப்பே.

இஸ்லாமியரும் பள்ளிவாசலில் கந்தூரி
சோற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு
இணைத்தனர் திண்ணையை முன்னோர்.

தண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே
திண்ணையில் வைத்தனராம் முன்னோர்.
 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-5-2012.

 

                           

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கலைநிலா
  மே 27, 2012 @ 00:13:07

  பெருந்தன்மையான மனிதனின் பண்பு சமூகத்தில்
  விருந்தினர் உபசரிப்பு வளமை.
  ஆலயப் பூசையின் பின்னர் தரும்
  அன்னதானமும் விருந்து உபசரிப்பே.

  இஸ்லாமியரும் பள்ளிவாசலில் கந்தூரி
  சோற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
  உண்மைகளை உங்களுக்கே உரித்தானே வகையில் சொன்னதும் ,பழைய மரபுகளை கவியாய் முழங்கிய வேதாவுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. rathnavelnatarajan
  மே 27, 2012 @ 00:27:55

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. மகேந்திரன்
  மே 27, 2012 @ 01:53:47

  வணக்கம் சகோதரி,

  இல்லறம் வருவோரை
  இன்முகம் காட்டி
  இன்சொல் பேசி
  நம் கலாச்சாரமும் பண்பாடும்
  நமக்கு அளித்திட்ட
  விருந்தளிக்கும் பழக்கம் பற்றிய
  குறட் பாக்கள்
  மிக நன்று..

  மறுமொழி

 4. b.ganesh
  மே 27, 2012 @ 06:00:52

  விருந்துபசரிப்பு பற்றிப் பேசிய பதிவு அருமை. தண்ணீர் நிரம்பிய குடத்தை வீட்டுத் திண்ணையில் வைத்தனர் முன்னோர என்பதைப் படித்திடவும் பெருமூச்சு- இன்று விருந்தோம்பல் பண்பின் நிலையை எண்ணி.

  மறுமொழி

 5. sasikala
  மே 27, 2012 @ 06:07:28

  இப்போது திண்ணை வீடுகளும் இல்லை . கிழே படம் பார்த்த பிறகு எங்காவது ஹோடேல்களிலே விருந்து முடிந்து விடுவது கண்டும் இப்போதெல்லாம் விருந்தோம்பல் என்றால் என்ன வென்று கேட்கும் சந்ததிகளுக்கு உங்கள் கவியே உதாரணம் .

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 27, 2012 @ 07:48:35

  Yashotha Kanth likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன். (FB)

  Yashotha Kanth;-
  இளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு
  இணைத்தனர் திண்ணையை முன்னோர்.

  தண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே
  திண்ணையில் வைத்தனராம் முன்னோர்.
  ….அருமை சகோ4 minutes ago ·
  Vetha ELangathilakam :_
  எனக்கும் இத்தகவல் ஆச்சரியமாக இருந்தது. இதனாலேயே எல்லோரும் அறிய தொகுத்தேன். மிக நன்றி யசோதா தங்கள் கருத்திற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்….

  மறுமொழி

 7. SUJATHA
  மே 27, 2012 @ 20:46:22

  கொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்
  எடுப்பதான மனநிறைவுடைத்து.

  ஒருவருடைய உபசரிப்பில் அவரது மதிப்பும் அன்பையும் பெறமுடியும். வாழ்வியலில் எடுத்துக்காட்டியமை அருமை. வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 27, 2012 @ 21:15:45

   மிக்க மிக்க நன்றி சுஜா கருத்திடலிற்கு..
   இப்போது காலமாற்றத்தில் இவைகள் எல்லாம் மறைந்து வருகிறது அல்லவோ!.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. செய்தாலி
  மே 28, 2012 @ 07:20:24

  விருந்துபசரிப்பு
  ம்ம்ம் …. அருமை
  அழகான கவிதை தோழி

  மறுமொழி

 9. rishaban
  மே 28, 2012 @ 07:40:23

  இளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு
  இணைத்தனர் திண்ணையை முன்னோர்.

  தண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே
  திண்ணையில் வைத்தனராம் முன்னோர்.

  திண்ணைகளே இல்லாமல் போய் விட்டது இப்போது.

  மறுமொழி

 10. malathi
  மே 28, 2012 @ 09:43:40

  மிகசிறந்த பதிவு பாராட்டுகள் தமிழரின் பண்பாடு விருந்தோம்பல் இது சிலருக்கே உரித்தனதாகிவிட்டது … பதிவிற்கு பாராட்டுகள்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 28, 2012 @ 11:56:02

   மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் பின்னூட்டத்திற்கு.
   காலம் மாறி பழக்கங்களும் மாறுகிறது.
   பதிந்து வைப்போம் ஒருவராவது பார்த்து அறிவு பெறட்டுமே!
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. பழனிவேல்
  மே 29, 2012 @ 04:15:48

  தமிழரின் பண்பாடாம் விருந்தோம்பலை விரிவாய் சொன்னிர்கள்.

  “கொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்
  எடுப்பதான மனநிறைவுடைத்து.”

  அழகு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: