237. செய்தித்தாள்.

 

செய்தித்தாள்.

 

எழுச்சித் தகவல் இணைத்து
ஏற்ற களமாய்ப் பத்திரிகை
மாற்றுச் சிந்தனைகளும் தந்து
வெற்றி உலகு நோக்க
கற்றை மனவிருள் அகற்றுவது.

கூர்மைக் கருத்துக் கூறி
பார் ஒற்றுமை பேணி
யார் என்றாலும் பேதமற்று
வேர் போலெமைப் பிணைப்பது
நேர்மைச் செய்தித்தாள்.

குறிக்கோளுடை செய்தித்தாள்
செறிவுடை அறிவொளி ஏற்றும்.
அறிஞர்கள் அறிவு நீரில்
அமிழ்ந்து துளாவி உணர்தல்,
அறிதல், பெரும் பேறுலகில்.

உலகினொரு மூலை நிகழ்வைச்
சிலாகித்து மக்கள் நெஞ்சைச்
சிந்தி என்று தட்டுகை
சிறப்பான தகவற் சேவை.
சீரானது எமக்குத் தேவை.

விறகு வெட்டுவோர், வியாபாரி,
வீடு கூட்டும் மாந்தரும,;
நாடு காக்கும் கனவாரும்
கூடியிருந்து படித்திட
நாடி வாங்கும் செய்தித்தாள்.

கதை, நகைச்சுவை, ஓவியம்,
கட்டுரை, அறிவியல்,சிற்பம்,
கவிதை, சித்திரக்கதை, சரித்திரம்,
சிந்தனை, காலநிலை யோகமென
பந்தங்கள் பெருக்கி அறிவூட்டும்.

இணையப் பத்திரிகைகள் பெருகி
இணைத்து மக்களை ஊக்கும்
இணையிலாச் சேவை இது.
இயற்கை நிலை மாற்றும்
செயற்கை வேக உலகிது.

 

‘பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-5-2012

 

(ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில் 29-5-2012 செவ்வாய் மாலை 19.00- 20.00 கவிதை பாடுவோம் நிகழ்வில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.) 

 

                                 

 

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  மே 29, 2012 @ 01:07:25

  அருமையான கவிதை.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. Niranjanaa
  மே 29, 2012 @ 01:26:20

  குறிக்கோளுடை செய்தித்தாள் செறிவுடை அ‌றிவொளி ஏற்றும்! -இந்த வரிகள் என்னை அசர வெச்சிடிச்சு. அருமையான பா. நல்ல செய்தித் தாள் நிச்சயம் நமக்கு துணைதான்க்கா.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 29, 2012 @ 19:31:39

   ஓ! நிரஞ்சனா..மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சியும் வந்து கருத்திட்டமைக்கு.
   வாசிக்க வாசிக்க கவிதை எழுத வரும்.
   இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. மகேந்திரன்
  மே 29, 2012 @ 01:58:49

  தகவல் தொடர்பில்
  மனிதனின் ஒரு அரிய சாதனை
  இது என்றே சொல்லலாம்…
  அன்றைய நிகழ்வுகளை
  அலசி ஆராய்ந்து
  செய்திகளாய் நமக்குச் சொல்லும்
  செய்தித் தாள்
  நமக்கு ஒரு பொக்கிஷமே…

  அருமையான கவிதை சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 29, 2012 @ 19:37:12

   ஆமாம் சகோதரா.கருத்துப் பொக்கிசம், அறிவுப் பொக்கிசம் தான். இனிய கருத்திடலிற்கு மிக மிக மகிழ்வும், நன்றியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. பழனிவேல்
  மே 29, 2012 @ 04:19:23

  “எழுச்சித் தகவல் இணைத்து
  ஏற்ற களமாய்ப் பத்திரிகை
  மாற்றுச் சிந்தனைகளும் தந்து
  வெற்றி உலகு நோக்க
  கற்றை மனவிருள் அகற்றுவது.”
  உண்மை…

  செய்திகள் நிறைந்த செய்தித்தாள் மிக அருமை.
  வாசித்து ரசித்தேன்…

  மறுமொழி

 5. செய்தாலி
  மே 29, 2012 @ 05:09:25

  ம் (:
  தகவல் களஞ்சியம் அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   மே 29, 2012 @ 19:55:52

   ஒரு வரியில் கருத்து. உண்மை தான் களஞ்சியமே தான்.
   மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. கோவை கவி
  மே 29, 2012 @ 06:33:22

  சிங்கம்:-
  Super- 49 minutes ago via mobile ·
  .Vetha ELangathilakam :-
  Thank you sakothara…God bless you

  அன்பு தோழி likes this in முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)

  மறுமொழி

 7. sasikala
  மே 29, 2012 @ 07:11:17

  இணையிலாச் சேவை இது.
  இயற்கை நிலை மாற்றும்
  செயற்கை வேக உலகிது.// சிறப்பான சிந்திக்க வைக்கும் வரிகள் அற்புதம் .

  மறுமொழி

 8. SUJATHA
  மே 29, 2012 @ 20:48:55

  கூர்மைக் கருத்துக் கூறி
  பார் ஒற்றுமை பேணி
  யார் என்றாலும் பேதமற்று
  வேர் போலெமைப் பிணைப்பது
  நேர்மைச் செய்தித்தாள்.

  தகவல் தொடர்புகள் இல்லையேல் மனிதன் இன்று தொலைதூர செய்திகளை அறிந்திருக்கமாட்டான். கவித்துவமாக இதன் செய்திகளை வர்ணித்துள்ளமை அருமை. வாழ்த்துக்கள் !!!!!!

  மறுமொழி

 9. Mano Saminathan
  மே 30, 2012 @ 03:34:56

  //கூர்மைக் கருத்துக் கூறி
  பார் ஒற்றுமை பேணி
  யார் என்றாலும் பேதமற்று
  வேர் போலெமைப் பிணைப்பது
  நேர்மைச் செய்தித்தாள்.//

  செய்தித்தாளுக்கு இருக்க வேன்டிய கடமையையும் நேர்மையையும் அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய பத்திரிகை தர்மத்தில் குறைந்து போன விஷயங்கள் இவை!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 30, 2012 @ 05:30:09

   ஓ!…மிக மகிழ்ச்சி சகோதரி. நீண்ட நாட்களிற்கு அப்புறம் தங்கள் கருத்து.
   அன்பு நன்றி. மீண்டும் மீண்டும் வாருங்கள்
   கருத்துத் தாருங்கள்.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Kavialagan
  மே 30, 2012 @ 06:03:55

  Kuurnthu vaasithen ovvoru varikalaiyum

  மறுமொழி

  • கோவை கவி
   மே 30, 2012 @ 21:14:39

   மிக சந்தோசம் கவி அழகன் உமது கூர்ந்த வாசிப்பிற்கு. கருத்திடலிற்கு மிக நன்றி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 11. ரெவெரி
  மே 30, 2012 @ 13:25:48

  நலமா?

  செய்தித்தாள்…அருமையான கவிதை சகோதரி…

  மறுமொழி

 12. Tharsini Kanagasabai
  ஜூன் 05, 2012 @ 07:04:04

  அழகான கவிதைகளோடு அதற்கேற்ற படங்களைம் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான்
  செய்தித்தாள் அழகான சேதி சொல்லுது…
  நன்றிகளும் வாழ்த்துக்களும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 20:41:42

   ஆனால் படங்கள் தேடுவது மிக மிகச் சிரமம். முயற்சி தான் எல்லாம்.
   மிக நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி கருத்திற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: