238. ஒவ்வாமையும், உவப்பும்…..

 

ஒவ்வாமையும், உவப்பும்…..

 

தவறென்று கருதுவதைத்
தவறென்று கூறாது
தடையிடும் மௌனம்
குடை விரித்து
எடை கூட்டுவது
பொய்மையினைத் தானே!

கருத்தில் தவறிருப்பின்
உருத்தாகாது மௌனம்!
உருத்தை உதறிடாது
விருப்பொடு எடுத்தாளுதல்
வருத்தம் ஆகாது.
பொருத்தமுடை தீர்மானமே!

உண்மையன்றி இதில்
உயர்ந்தோர், தாழ்ந்தோர்
பயந்தோர் பாகுபாடு,
ஐயப்பாடு தேவையில்லை.
மயக்கம் கொள்ளலோ
தயக்கமோ தேவையில்லை.

சாமரம் வீசுதல்,
சாய்ந்து ஆடுதல்,
சாவாகசமாய் எண்ணெயிடல்,
சரியாய்ப் பந்தமேந்தல்
உரிய புரிந்துணர்வல்ல.
அரிய தீர்மானமுமல்ல.

ஒவ்வொரு நிகழ்விலும்
ஒவ்வொரு  நிறமாகும்.
எவ்வளவோ காட்சியாகும்!
அவ்வளவும் நன்மைக்கே!
ஒவ்வாததும் புரியலாம்,
உவப்பதும் அறியலாம்.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-5-2012.

(26-6-2012 செவ்வாய்க்கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி மாலை 19.00-20.00 மணி நேரக் கவிதை பாடுவோம் நிகழ்வில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது)

 

 

                                        

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  மே 31, 2012 @ 01:18:46

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. பழனிவேல்
  மே 31, 2012 @ 03:39:51

  “ஒவ்வொரு நிகழ்விலும்
  ஒவ்வொரு நிறமாகும்.
  எவ்வளவோ காட்சியாகும்!
  அவ்வளவும் நன்மைக்கே!”

  அழகாய் சொன்னீர்கள்…
  படங்கள் இரண்டும் நல்ல பொருத்தம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 31, 2012 @ 06:42:02

   சகோதரா படங்கள் தேட பெரும் பாடு பட்டேன். உமது கருத்து ஆறுதல் தருகிறது. 3 படம் எடுத்து 2ஐ – பாவித்தேன்.
   மிக நன்றியும், மகிழ்வும் உமது வரவு கருத்திற்கு.
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   மே 31, 2012 @ 16:05:22

   உண்மை தானே! ஒவ்வொன்றும் நிகழும் போது தான் ஒவ்வோருவர் குணாதிசயங்கள் வெளியே தெரிய வருகிறது. மௌனமாக மூடிக்கொண்டு இருந்தால் எதுவுமே அறிய வராது….அல்லவா!
   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்ச்சி. இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. niranjanaa
  மே 31, 2012 @ 05:08:34

  கருத்தில் தவறிருப்பின் உருத்தாகாது மௌனம். நல்லாச் சொன்னீங்க, வழக்கம் போல எனக்கு உடனே புரிஞ்சிடலை இந்தக் கவிதை. சற்று மெனக்கிட்டுதான் புரிஞ்சுக்கிட்டேன். நல்லா இருக்குக்கா…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 31, 2012 @ 16:08:09

   நிரஞ்சனா சில விடயத்தை மனதில் கொண்டு எழுதிய கவிதை. விளங்காத போது 2-3 தடவை வாசிக்க புரிந்து விடும்.
   முயற்சிக்கு நன்றியடா.
   கருத்திடலிற்கும் நன்றி.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  மே 31, 2012 @ 05:39:27

  Syedbabu Sbd Likes likes this.. in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
  Pushpalatha Kanthasamy likes this.. in FB.
  Umah Thevi likes this..in வித்யாசாகர் FB.
  Nirosh Nagarasa likes this..in கவித்தென்றல் FB.
  Ganesalingam Arumugam likes this..in – கனவு விழிகள்

  மறுமொழி

 5. sasikala
  மே 31, 2012 @ 06:54:21

  ஒவ்வொரு நிகழ்விலும்
  ஒவ்வொரு நிறமாகும்.
  எவ்வளவோ காட்சியாகும்!
  அவ்வளவும் நன்மைக்கே!
  ஒவ்வாததும் புரியலாம்,
  உவப்பதும் அறியலாம்.// உன்னதமான வரிகள் .

  மறுமொழி

  • கோவை கவி
   மே 31, 2012 @ 17:18:13

   ஒவ்வாததும் புரியலாம்,
   உவப்பதும் அறியலாம்.-
   நிகழ்வுகள் தரும் பரிசு இது தானே சகோதரி.
   மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும் சகோதரி.

   மறுமொழி

 6. abdulkadersyedali
  மே 31, 2012 @ 08:28:39

  ம் (: அருமை தோழி

  மறுமொழி

 7. சத்ரியன்
  மே 31, 2012 @ 10:15:15

  எப்போதும் போல் சமூக அக்கறையின்பால் உங்களின் ஆக்கம் உயர்ந்தே நிற்கிறது.

  மறுமொழி

 8. SUJATHA
  மே 31, 2012 @ 19:45:14

  கருத்தில் தவறிருப்பின்
  உருத்தாகாது மௌனம்!
  உருத்தை உதறிடாது
  விருப்பொடு எடுத்தாளுதல்
  வருத்தம் ஆகாது.
  பொருத்தமுடை தீர்மானமே!

  அருமை…கவிதையில் கருத்தாடல் அழகாய் வர்ணிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2012 @ 07:40:48

   சுஜாதா உண்மைக் கருத்து எப்பவுமே கசக்கும் அவரவருக்குக் சாதகமாக இல்லாவிடில். அதில் தூப தீபம் ஏற்றுவோர் ஒரு புறம்!
   நேரம் வர அறுப்பவர் ஒரு புறம்! .
   இப்படிப் பல வகைகளல்லவா!
   மிக நன்றி சுஜா கருத்திற்கு
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. மகேந்திரன்
  ஜூன் 01, 2012 @ 01:41:22

  உவமைகளுடன் கைகோர்த்து
  உவப்புடன் அமைந்த
  உன்னதக் கவிதை சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2012 @ 07:07:01

   சகோதரா மனதின் எண்ணங்களை வடித்துள்ளேன். தங்கள் புரிதலிற்கு, கருத்திடலிற்கு மிக மிக நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Tharsini Kanagasabai
  ஜூன் 01, 2012 @ 04:59:22

  ஒவ்வொரு நிறமாகும்.
  எவ்வளவோ காட்சியாகும்!
  அவ்வளவும் நன்மைக்கே!
  ஒவ்வாததும் புரியலாம்
  உவப்பதும் அறியலாம்.

  அருமையான வரிகளில் அழகானகவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2012 @ 18:25:01

   அன்பின் தர்சினி நீண்ட நாட்களின் பின்பு மிக மகிழ்வாக உள்ளது. கருத்திடலிற்கு நன்றி.
   பல நலங்கள் பெருகட்டும்.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. வே.நடனசபாபதி
  ஜூன் 01, 2012 @ 06:51:05

  // தவறென்று கருதுவதைத்
  தவறென்று கூறாது
  தடையிடும் மௌனம்
  குடை விரித்து
  எடை கூட்டுவது
  பொய்மையினைத் தானே!//

  // அவ்வளவும் நன்மைக்கே!
  ஒவ்வாததும் புரியலாம்,
  உவப்பதும் அறியலாம்.//

  சரியாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூன் 01, 2012 @ 16:46:52

  Lavi Langa, Sujatha Anton and Pushpalatha Kanthasamy like this..in FB

  Lavi Langa :_
  I like it Amma. Very good poem!! Xxx
  Vetha:-
  Thank youdaaa…..Have a nice evening..Both of you ……makal….

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 02, 2012 @ 08:07:28

  In FB- kavithai sangamam 2.0
  Arul Mozhi:-
  சாமரம் வீசுதல்,
  சாய்ந்து ஆடுதல்,
  சாவாகசமாய் எண்ணெயிடல்,
  சரியாய்ப் பந்தமேந்தல்
  உரிய புரிந்துணர்வல்ல.
  அரிய தீர்மானமுமல்ல.///சாமரம்,சாவாகசமாய்,பந்தமேந்தல்,வார்த்தை தேர்ந்தெடுப்பும் கோர்த்த விதமும் அழகு.
  .Vetha ELangathilakam :-
  ஆம் சகோதரி மென்மையாக ஆனால் வன்மையாகக் கூறவேண்டுமல்லோ! அதை எடுத்துக் காடடீயதற்கு மிக மிக நன்றி அருள் மொழி. இறையாசி நிறையட்டும்…

  மறுமொழி

 14. கீதமஞ்சரி
  ஜூன் 06, 2012 @ 02:07:54

  மிகவும் தெளிந்த சிந்தனையைக் காட்டும் வரிகள். நேரிய வழியென்றால் என்றுமே பிரச்சனை இருக்காது. பொய்மை பூசிய வார்த்தைகள் என்றுமே நிலைத்திருக்காது. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: