27. வித்தக அடமானம்.

 

வித்தக அடமானம்.

 

ஒருவருக்கு வாய்க்கும் சுத்த வித்துவத் திறமை என்பது ஒரு அரும் பெரும் சொத்து. இதை வைத்திருப்பவர்கள் பரிசுத்தத்திற்கு உரியவர்கள்.

அரசியல், கணக்கியல், பேச்சு, மருத்துவம், ஆசிரியத்துவம், கலைகள் பலவென பல்வகைத் திறமையாளர்கள் அவற்றை உத்தமமாகப் பேண வேண்டியவர்களாகிறார்கள். இந்த உத்தமத் திறமையாளர்கள் நாற்றமெடுக்கும் வகையில் தம் அசுர குணங்கள் தலை விரித்தாட அனுமதி கொடுத்துத் தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர்.

இவர்கள் சிறிதே தமது பாதையைத் திரும்பிப் பார்த்துச் சரி செய்வார்களேயானால் இவர்கள் பாதையில் கதிரொளி பல வண்ணங்களில் பிரகாசித்திட மாட்டாதோ!

இந்தியாவில் சரபோஜி மன்னர் காலத்தில் நரசய்யர் எனும் சங்கீத வித்துவான் சங்கராபரண இராகத்தைப் பாடும் பெரும் வல்லமை கொண்டவராயிருந்தார். இதனால் இவர் மன்னரால் பரிசு பெற்று ”சங்கராபரண நரசய்யர்”  என்றும் அழைக்கப் பட்டார். ஒரு தடவை இவருக்கப் பண நெருக்கடி வந்த போது, இராமபத்திர மூப்பனார் என்ற பெருநிதி படைத்த சங்கீத ரசிகரிடம் பணம் கடனாகக் கேட்டார்.

மூப்பனார் கடன் பணத்திற்கு அடமானம் கேட்டார். சங்கராபரணம் எனும் இராகமான ஆபரணம் தான் தன்னிடம் அடமானம் வைக்க உள்ளது என்றாராம்.
”பணம் திருப்பிக் கொடுக்கும் வரை சங்கராபரணத்தை எங்கும் பாடுவதில்லை” யென்று கடன் பத்திரம் எழுதப் பட்டது.

சங்கராபரணம் அடமானமானது.

அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த வாலெஸ் அப்புராயர் என்பவர் கும்பகோணத்தில் ரெட்டியார் என்ற தன் நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றார்.
2-3 நாட்கள் விசேடமாக நடக்கும் செல்வந்தர் வீட்டுத் திருமணமாதலால் பல வித்துவான்களிற்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.

சங்கராபரணம் நரசய்யரும் அழைக்கப்பட்டிருந்தார்.

வாலெஸ் அப்புராயர் நரசய்யருடைய சங்கராபரண இசையைக் கேட்க விரும்பிப் பாடும்படி கேட்டார். அதைப்பாட இயலாது என்றார் நரசய்யர். காரணம் கேட்ட போது, நரசய்யர் விவரத்தைக் கூறினாராம்.

வாலெஸ் அப்புராயர் கடன் பணத்தையும், அதன் வட்டியையும் இராமபத்திர மூப்பனாரிடம் சேரச் செய்தார். மூப்பனார் இத்தனை நாள் சங்கராபரணத்தைத் தடை செய்ததற்கீடான பணத்தை வாலெஸ் அப்புராயரிடம் கொடுத்து நரசய்யரிடம் சேர்க்கும் படி வேண்டினாராம் இராமாத்திர மூப்பனார்.

என்னிடம் பணமாகக் கேட்காது, கடனாகக் கேட்டதாலேயே அடமானப்பத்திரம் எழுதி வாங்கினேன் என்றாராம்
நரசய்யரின் நேர்மையை நல்ல குணத்தை மெச்சினாராம்.

அடுத்த நாள் திருமண மண்டபத்தில் விடுதலை பெற்ற சங்கராபரண இராக மழை  பொழிந்து அனைவரும் மெய் மறந்தனராம். அதோடு அப்புராயரின் ஆஸ்தான வித்தவானாக நரசய்யர் ஆக்கப் பட்டாராம்.

இது அந்தக் காலம். நேர்மை, நாணயம், மதிக்கப்பட்டது.

இன்று ஒரு வித்தகன் குறிப்பிட்ட வட்டத்துள் மட்டும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட மேடைகளில் தான் ஏறவேண்டும் குறித்தபடி சிஞ்சிஞ்சா போட வேண்டுமென எத்தனை கண்ணுக்குத்  தெரியாத பல நூல் வேலிகள்!

அங்கீகார எல்லைகள் தான் எத்தனை!

வித்தகனுக்குச் சுதந்திர நில எல்லையே அல்லாத இந்த நிலை! வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2007.
(இது முன்னைய ஒரு அனுபவம் காரணமாக –  இலண்டன் தமிழ் வானொலி இலக்கிய நேரத்திற்காக எழுதப்பட்ட ஆக்கம் – 2007ல்.)

                                         

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  ஜூன் 05, 2012 @ 01:49:39

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. Niranjanaa
  ஜூன் 05, 2012 @ 02:02:53

  கட்டுரை அருமையா இருக்குக்கா. தான் விரும்பிப் பாடும், பெயர் பெற்ற ராகத்தையே அடமானம் வைக்கிறதுன்றது எவ்வளவு கஷ்டம்! அதுலயும் நேர்மையா நடந்ததை பாராட்டத்தான் வேணும். (இப்ப ஃப்ரொபைல் மேட்டரை சரி பண்ணிட்டேனே….)

  மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  ஜூன் 05, 2012 @ 02:12:47

  //வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.//

  அதுதான் உண்மை. பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. athisaya
  ஜூன் 05, 2012 @ 02:41:05

  வித்தகனுக்குச் சுதந்திர நில எல்லையே அல்லாத இந்த நிலை! வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது……..
  அதென்னவோ உணமை தான்.வாழ்த்துக்கள் சொந்தமே.சந்திப்போம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 16, 2012 @ 08:14:28

   இது முன்பு சில பேருக்கு சில ஆதிக்கங்கள் சொந்த மென்ற ஒரு காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் எழுந்த உணர்வில் எழுதிய கவிதை.
   மிக நன்றி உறவே கருத்திடலிற்கு.
   மகிழ்ச்சி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூன் 05, 2012 @ 05:10:34

  அற்புதமான படைப்பு ஒன்று!! வாழ்த்துக்கள் அம்மா!!
  ஆமா… வித்துவம் இருக்கலாம்… ஆனால்..வித்துவச் செருக்கு கூடாது… இல்லையா?? எந்த கலைஞனுக்கும் இது வரக கூடாது!! மிகவும் நன்றி அம்மா!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 05, 2012 @ 20:47:52

   சகோதரா நிறையப்போருக்கு இது மறைமுகமாக இருக்கிறதே நூல் வேலி போல.
   இது என் கருத்து மட்டுமே. விவாதத்திற்கு அல்ல.
   தங்கள் கருத்திற்கு மிக நன்றி
   ஆண்டன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. abdulkadersyedali
  ஜூன் 05, 2012 @ 05:58:53

  நல் கட்டுரை தோழி

  மறுமொழி

 7. sasikala
  ஜூன் 05, 2012 @ 06:19:22

  சிறப்பான விளக்கம் .பகிர்வுக்கு நன்றி .

  மறுமொழி

 8. Tharsini Kanagasabai
  ஜூன் 05, 2012 @ 06:54:17

  அழகானதொரு படைப்பு
  அறியாத பல விடயங்களை அழகாக தருகின்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 05, 2012 @ 21:05:28

   சகோதரி தர்சினி உமது கருத்திற்கு மிகுந்த நன்றியும், மகிழ்வும். உமது வலைக்கு சென்ற போது மிகப் பழைய ஆக்கமே இருந்தது. மற்றைய வலைஇணைப்பையும் இன்போஃ வில் போட்டால் உதவியாக இருக்கும் கருத்திட என்பது எனது கருத்து.
   இறையாசி நிறையட்டும்..

   மறுமொழி

 9. மகேந்திரன்
  ஜூன் 05, 2012 @ 09:08:30

  வின்னேற கிடைக்கப்பெற்ற
  வித்தகத்தை
  விழலில் வீழ்த்தலாமோ..
  என உச்சரித்த படைப்பு
  நெஞ்சில் நின்றது சகோதரி..

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூன் 05, 2012 @ 12:30:02

  “இது அந்தக் காலம். நேர்மை, நாணயம், மதிக்கப்பட்டது.
  வித்தகனுக்குச் சுதந்திர நில எல்லையே அல்லாத இந்த நிலை! வித்தகமும் இன்று அடமானப் பொருளாகி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.”

  உண்மையை உவமையுடன் சொன்னீர்கள்.
  சிறந்த பதிவு…

  மறுமொழி

 11. ரெவெரி
  ஜூன் 05, 2012 @ 13:40:23

  வித்தக அடமானம்…//

  அழகான படைப்பு சகோதரி…வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூன் 05, 2012 @ 21:34:46

  வாழ்த்திற்கு நன்றி சகோதரா.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  ஜூன் 06, 2012 @ 02:03:58

  அந்நாளைய வித்துவான்களிடத்தில் இருந்த நேர்மையும் நியாயமும் இன்றைய கலைஞர்களிடத்தில் காணப்படுவது வெகு அபூர்வமே. விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே இன்னும் விலைபோகாமல் கலையை வாழவைத்து தாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அருமையான பகிர்வுக்கு நன்றி தோழி.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூன் 06, 2012 @ 07:00:04

  Sakthi Sakthithasan :-
  அன்பினிய சகோதரி வேதா,
  அருமையான கருத்துடன் கூடிய அழகான கட்டுரை. வாழ்த்துக்க்கள்
  அன்புடன்
  சக்திYesterday at 7:36am 5-6-2912.· in FB.
  Vetha ELangathilakam :-
  mikka nanry sako…..God bless you all….

  Ganesalingam Arumugam likes this..in கனவு விழிகள் (FB)

  Ganesalingam Arumugam:-
  Nice lines. …..about an hour ago · in FB – கனவு விழிகள்.
  Vetha ELangathilakam:-
  Thank you…and god bless you….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: