17. சிறிது நேரம் தூங்கிடு!

  

 

சிறிது நேரம் தூங்கிடு!

 

கண்மூடய்யா கண்மூடு! என்
கன்னற் தமிழே கண்மூடு!
கட்டிக் கரும்பே கண்மூடு!
களைத்து விட்டாய் கண்மூடு!                              (கண்மூடய்யா)

மித்திரர் தொல்லை, சத்துரு தொல்லை,
புத்திமானாக உன் நித்திரை தொலையும்!
சித்திரத் தேரே நித்திரை கொள்ளு!
சிறிது நேரம் சித்திரை கொள்ளு!                     (கண்மூடய்யா)

அன்னையாகுதல் ஒரு சிறு கடனல்ல
உன்னை மறந்து அமைதியாய்த் தூங்கு!
பின்னைக் கடன்கள் பெரிதாய்க் காத்திருக்கு
உன்னைப் பலமாக்க இந்நேரம் தூங்கு!           (கண்மூடய்யா)

வரையற்ற கடமைகள் சுமையாய்த் தொங்கும்.
அரைகுறையாகிடும் தூக்கப் பொழுதுகள்.
அப்பப்பா தூங்கிடு! விரைவாகத் தூங்கிடு!
பொன்னய்யா காலங்கள் பொழுதோடு தூங்கிடு!  (கண்மூடய்யா)
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
(20-5-2004  – 19-7.2006 ரி.ஆர்.ரி வானொலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பானது.)

 

 

                               

 
 

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூன் 06, 2012 @ 23:56:20

  காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
  காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை கண்ணே

  என்கிற கண்ணதாசனின் பாடலைப் போல
  மிக அழகான கருத்துடன் கூடிய கவிதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:11:59

   2004-ல் எழுதியது. ஒருவேளை காலமிது பாடலால் தான் இது எழுதினேனோ தெரியவில்லை. ஆனால் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.
   மிக்க நன்றி உங்கள் நீண்ட கருத்திற்கு.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கலைநிலா
  ஜூன் 07, 2012 @ 00:08:09

  தாலாட்டு கண்டு மனதுக்கு உறக்கம் இந்த பரப்பான சூழ்நிலையில்

  மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  ஜூன் 07, 2012 @ 01:53:29

  திரு இரமணி அவர்கள் சொன்னதுபோல் அழகிய கருத்துடன் கூடிய கவிதை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:17:54

   மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   2004ல் எழுதியது இக்கவிதை.
   இரண்டு வானொலிகளிற்கு விழுந்து விழுந்து எழுதி வாசித்த நேரங்கள் அது. மறக்க முடியாதவை.
   தங்களிற்கு ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  ஜூன் 07, 2012 @ 02:08:41

  ஆஹா..
  எனது சிறுபிராயத்தில் என்
  தகப்பனார் தனது மார்பினில் எனைக் கிடத்தி
  பாடிய தாலாட்டு நினைவுக்கு வந்தது..
  இந்த இசைக்கு எதிர் இசை உண்டோ?!!

  அருமையான ஆக்கம் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:20:11

   மிக நன்றியும், மகிழ்ச்சியும் மகேந்திரன் கருத்திடலிற்கு.
   தாலாட்டு யாராலும் மறக்க முடியாதது.
   தெய்வக் கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 5. b.ganesh
  ஜூன் 07, 2012 @ 03:08:28

  அடாடா… கவிதையைப் படித்து ரசிக்கையில் என் மனதில் தோன்றிய கருத்தை அப்படியே ரமணி ஸார் எழுதிட்டாரே… அந்த வரிகளையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள் சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:37:34

   அப்போ அவருக்கு எழுதிய பதிலும் உங்களுக்காகட்டுமா!….கவிதை…நீண்ட காலங்களிற்கு முன்னர் எழுதியது….
   தாங்களும் நீண்ட இடைவெளியோடு வருகை
   மகிழ்ச்சி.
   கருத்திடலிற்கு நன்றி, நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. abdulkadersyedali
  ஜூன் 07, 2012 @ 04:53:43

  தாலாட்டு

  பால்யத்தை தட்டி உணர்த்துகிறது தோழி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:40:03

   ஆமாம் பால்யம் திரும்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா!….
   மிக்க நன்றி கருத்திடலிற்கு.
   தெய்வக்கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. sasikala
  ஜூன் 07, 2012 @ 07:14:07

  அன்னையாகுதல் ஒரு சிறு கடனல்ல
  உன்னை மறந்து அமைதியாய்த் தூங்கு!
  பின்னைக் கடன்கள் பெரிதாய்க் காத்திருக்கு
  உன்னைப் பலமாக்க இந்நேரம் தூங்கு! //
  நவீன கால தாலாட்டு அருமை .

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 19:52:02

   அன்னையாகுதல் எத்தனை பெரிய கடமை.
   எனது மகனும், மருமகளும் பார்த்துப் பார்த்து வளர்ப்பதை ரசிக்கிறேன் இப்போது.
   மிக்க நன்றி சசிகலா ரசனைக் கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Tharsini Kanagasabai
  ஜூன் 07, 2012 @ 10:45:41

  அழகான தாலாட்டு
  அமைதியாய் கண்ணுறங்கு சிறிது நேரம்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. மணிக்கன்னையன்
  ஜூன் 07, 2012 @ 14:18:37

  தாலாட்டுக் கேட்டு, தாயாய் நினைந்து, உறங்கித்தான் போனேன்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 20:21:34

   எவ்வளவு நல்லது. சிறு தூக்கம்!….தூங்குங்கள்…
   அதற்கிடையில் நான் பதிலை எழுதிவிடுகிறேன் மணிக்கன்னையன் அவர்களே!
   கருத்திடலிற்கு மிக நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  ஜூன் 07, 2012 @ 14:33:12

  அழகான தாலாட்டு/கவிதை…வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 07, 2012 @ 15:53:01

  Umah Thevi likes this..in வித்யாசாகர்- ( FB)
  Yashotha Kanth and நீலா தீராத விளையாட்டுப் பூனை like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)
  Mohammed Irfan likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்- (FB
  )நீலா தீராத விளையாட்டுப் பூனை likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙ also.-(FB)

  மறுமொழி

 12. SUJATHA
  ஜூன் 07, 2012 @ 19:05:45

  அன்னையாகுதல் ஒரு சிறு கடனல்ல
  உன்னை மறந்து அமைதியாய்த் தூங்கு!
  பின்னைக் கடன்கள் பெரிதாய்க் காத்திருக்கு
  உன்னைப் பலமாக்க இந்நேரம் தூங்கு!
  அருமை…தூங்கும் மழலையின் அழகு. துக்கம் கொடுக்கும் சுகம் அதுவோர் அழகு!!!! அழகாக கவி வடித்தமை அதைவிட அழகு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 07, 2012 @ 20:26:39

   மிக மிக நன்றி சுஜாதா!
   மிக்க மிக்க நன்றி கருத்திடலிற்கு.
   எப்போதோ எழுதி வானொலியில் வாசித்த கவிதை தான்.
   உமக்கு இறையாசி கிட்டட்டும்

   மறுமொழி

 13. malathi
  ஜூன் 08, 2012 @ 09:31:14

  உழைத்துக் களைத்தவர்கள் கண்ணுறங்க லாம் உழைக்காமலே எப்படி கண்ணுறங்குவது குழந்தைகள் எனின் சொல்லத் தேவையில்லைசிறப்பான பதிவு பாராட்டுகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 08, 2012 @ 15:44:35

   ”…குழந்தைகள் எனின் சொல்லத் தேவையில்லை…”
   அவர்கள் (குழந்தைகள்) வளர்ச்சியே தூக்கத்திலும் தானே. எப்போ போனாலும் பேரன் தூங்கியபடி இருப்பார். சிறிது நேரத்தில் விழித்து விளையாடுவார்.
   மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 14. Venkat
  ஜூன் 08, 2012 @ 13:11:30

  இனிய பாடல்…..

  மறுமொழி

 15. அப்பாதுரை
  ஜூன் 08, 2012 @ 15:43:19

  மெட்டோடு பாடலாம் போலிருக்கிறதே? நன்று.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 08, 2012 @ 15:53:41

   ஆமாம் இசையோடு பாடலாமே!
   மிக்க நன்றி ஐயா தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   மிக மிக மகிழ்ச்சியும் கூட.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 16. rathnavelnatarajan
  ஜூன் 09, 2012 @ 01:24:47

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 17. Dr.M.K.Muruganandan
  ஜூன் 11, 2012 @ 09:34:40

  “பின்னைக் கடன்கள் பெரிதாய்க் காத்திருக்கு
  உன்னைப் பலமாக்க இந்நேரம் தூங்கு! ..”

  கிடைக்கும் நேரத்தில் தூங்கி
  மீதி வேளையில் செயலாற்றின்
  சோம்பலி்ல்லை
  சுறுசுறுப்பே கணம்தோறும்..

  மறுமொழி

 18. பழனிவேல்
  ஜூன் 18, 2012 @ 06:05:41

  “வரையற்ற கடமைகள் சுமையாய்த் தொங்கும்.
  அரைகுறையாகிடும் தூக்கப் பொழுதுகள்.
  அப்பப்பா தூங்கிடு! விரைவாகத் தூங்கிடு!
  பொன்னய்யா காலங்கள் பொழுதோடு தூங்கிடு!”

  அழகான தாலாட்டு.
  அர்த்தமுள்ள தாலாட்டு.

  மறுமொழி

 19. கோவை கவி
  ஜூன் 19, 2012 @ 19:50:36

  IN kavithai sangamam 2.0 – FB.

  Arul Mozhi:-
  இன்று கிடைத்த பொழுது என்றும் கிடைக்காது அழகாய் சொல்லி உள்ளீர்கள்.
  .Vetha ELangathilakam:-
  mikka nanry sis..God bless you…..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: