20. வேதாவின் மொழிகள்.

20. வேதாவின் மொழிகள்.

 

என் திறமை, என் தனித்துவம், என் வழி சிறப்பானது. பிறரோடு என்னை ஒப்பிட்டு என்னை நானே இகழ்வதில்லை.

 

குணம் காண முடிந்தவைகளே பிரச்சனைகள். குழம்பித் திரட்டுவது, திணறுவது நாம் தான். அதாவது இடையில் நானெனும் அகம்பாவம், யார் முதலில் குனிவது என்று பலவற்றைப் போட்டுக் குழப்புவது நாமே தான்.

 

 சிடுசிடுக்கும் வாழ்விலும் புன்னகை செய்யும் வாழ்வு புதையலைத் தரும்.

 

 அன்பு, அமைதி, இன்பமாய் வாழும் வாழ்வினால் வாழ்விற்கு மரியாதை, மதிப்புக் கிடைக்கிறது.

 

 எதிர்பார்ப்பு நிறைறோவிடில், ஏமாற்றம் நிறைவதால் நேசிப்பவரையும் வெறுக்கும் நிலை வருமோ!

 

 26-9-2004
நாணயமாக வாழ்வதை விட, இன்று நாணய மதிப்பு வாழ்வில் நயமாக பலரின் மதிப்பில் உயர்ந்துள்ளது.

 

 ஆர்ப்பரித்துப் புரளும் அலை மீது,
ஊர் எதிர்த்துக் கல்லெறிந்தாலும்
நேர் நின்று தானாகப் புரண்டு
பார் மீது மோதும் தன்னம்பிக்கை அலையாக நில்!

 23-2-2004
முறையற்ற தொடர்பு கறை பட வைக்கும்.
முறைகேடு தொடர்வது நிறைவற்ற மனதின்
குறைவான நிலைப்பாடாகும்..

23-2-2004
ஆயுள் பரியந்தம் பரிவு, பாசம், நேசத்தைப் பரிவர்த்தனை செய்து பரிசோதித்தலை
பரிச்சயமாக்கி வாழ்தல் ஒரு பரிசுத்தமான பரிபக்குவ நிலையாகிறது.
இதில் பரிபூரணத்தால் பரிமளித்தலும், பரிதாபமோ, பரிகாச நிலை பெறுதலுமோ அவரவருக்கு அளந்த பரிமாணப்படி நடக்கிறது.

6-12-2003.
மனம் நிறைந்து நகைக்கும் போது உடலில் தினம் பல நரம்புகள் இயங்கி ஒளி தரும்.
நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                         
 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. abdulkadersyedali
  ஜூன் 09, 2012 @ 04:40:56

  நீ உன்னை மற்றவருடன் ஒப்பிடாதே
  அப்படி நீ உன்னை மற்றுவருடன் ஒப்பிடுகையில்
  உன்னையே நீ இழிவாக்குகிறாய்

  கண்டிப்பா சகோ இதில் உண்மையுண்டு இதையே நானும் கடைபிடிக்கிறேன்

  உங்கள் மொழிகள்
  சிந்தனைத் துளிகள் அருமை பாராட்டுக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 09, 2012 @ 08:43:00

   தங்கள் முதல் வருகை சகோதரா. மிக்க நன்றி கருத்திடலிற்கு..மிக மகிழ்வும் தான்.
   என் மனதில் தோன்றும் உண்மைக் கருத்துகளே இவை. இப்படியாக இது 20வது தொகுப்பு.
   முன்பு ” சிந்தனைச் சிதறல்”… என்று தான் ஆரம்பித்தேன்.
   ஆனால் இவை எனது என்பதால்
   – வேதாவின் மொழிகள் – என்று பின் மாற்றித் திருத்தம் செய்துள்ளேன்.
   தெய்வக் கிருபை நிறையட்டும் சகோதரா.

   மறுமொழி

 2. b.ganesh
  ஜூன் 09, 2012 @ 04:51:44

  குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்கு வேதா மொழிகள் எல்லாமே வசீகரிக்கின்றன. வாழ்க்கைக்கும் பயன்படக் கூடியவை அவை. அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 09, 2012 @ 10:36:41

   மிக்க நன்றி சகோதாரா தங்கள் முன்னதான கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ச்சியுமே.
   வாழ்க்கை அனுபவங்கள் தான் அனுபவ மொழிகளைத் தருகிறது. மிக மிக நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. rathnavelnatarajan
  ஜூன் 09, 2012 @ 07:48:23

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. sasikala
  ஜூன் 09, 2012 @ 08:00:48

  வாழ்வியலுக்கு தேவையான அனைத்துமே தங்கள் மொழிகளில் அருமை .

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  ஜூன் 10, 2012 @ 02:12:58

  இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/06/7.html

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 10, 2012 @ 08:44:37

   மிக்க நன்றி முரளி அறிமுகத்திற்கு.
   வலைச்சரத்திலும் கருத்திட்டேன்.
   முகநூலிலும் வலைச்சரப் பக்கம் படம் எடுத்துப் போட்டுள்ளேன் .நன்றி…நன்றி. இறையாசி நிறையட்டும்.

   IN FB –
   Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
   வாழ்த்துக்கள்.·.
   Vetha ELangathilakam:-
   Nanry ..sir….God bless you all…

   மறுமொழி

 6. ரிஷபன்
  ஜூன் 10, 2012 @ 05:29:59

  அத்தனை மொழிகளும் தேவையானவை..

  என் திறமை, என் தனித்துவம், என் வழி சிறப்பானது. பிறரோடு
  என்னை ஒப்பிட்டு என்னை நானே இகழ்வதில்லை

  மறுமொழி

 7. மகேந்திரன்
  ஜூன் 10, 2012 @ 15:54:47

  அத்தனையும் வேத மொழிகள் சகோதரி…

  மறுமொழி

 8. விச்சு
  ஜூன் 11, 2012 @ 00:37:11

  அழகான வரிகள். புன்னகை நமக்கு என்றைக்குமே நல்லது.

  மறுமொழி

 9. Tharsini Kanagasabai
  ஜூன் 11, 2012 @ 07:40:34

  நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.அழகான வரிகள் வேதாவின் மொழிகள் வாழ்விற்குவேண்டிய
  மொழிகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 11, 2012 @ 20:15:20

   அத்தனையும் அனுபவ மொழிகள் தான் தர்சினி.
   மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் தர்சினி உமது கருத்திடலிற்கு. தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 10. SUJATHA
  ஜூன் 11, 2012 @ 14:09:48

  மனம் நிறைந்து நகைக்கும் போது உடலில் தினம் பல நரம்புகள் இயங்கி ஒளி தரும்.
  நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.
  பிடித்தமானது…அருமை!!!! தத்துவமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.!!!!

  மறுமொழி

 11. பழனிவேல்
  ஜூன் 18, 2012 @ 06:08:04

  அனைத்து மொழிகளும் அற்புதம்.
  அதிலும், இவ்விரு மொழிகளும் மிகவும் பிடித்துள்ளது.

  “எதிர்பார்ப்பு நிறைறோவிடில், ஏமாற்றம் நிறைவதால் நேசிப்பவரையும் வெறுக்கும் நிலை வருமோ!”

  “நாணயமாக வாழ்வதை விட, இன்று நாணய மதிப்பு வாழ்வில் நயமாக பலரின் மதிப்பில் உயர்ந்துள்ளது.”
  அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 20, 2012 @ 17:21:10

   மிகப் பிந்தி விட்டது சகோதரா தங்கள் கருத்திடலிற்கு பதிலிட. மிக மிக நன்றி. மகிழ்ச்சியும் கூட.
   மிகக் கருத்தாகப் பதிலிட்டீர்கள் நன்றி நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 12. கோமதிஅரசு
  ஜூலை 04, 2012 @ 06:09:48

  மனம் நிறைந்து நகைக்கும் போது உடலில் தினம் பல நரம்புகள் இயங்கி ஒளி தரும்.
  நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.//

  வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் .
  நீங்கள் சொல்வது போல் புன்னகை ஒரு புதையல் தான் புதையலை அடைந்தவர்கள் பாக்கியசாலிகளதான்.

  மறுமொழி

 13. manal manal
  டிசம்பர் 24, 2015 @ 00:46:39

  வேதாவின் மொழிகள்
  வேதமொழிபோல் அர்த்தம்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: