33. சொற்களிற்கு நோகுமோ!…

 

சொற்களிற்கு நோகுமோ!..

 

னாக்காணும் இரவிலே
நானா உன் கனவிலே!
ஏனோ பதில் தராமலே
வீணே மௌனம் அன்பே

நான் மட்டுமா நெஞ்சில்!
பொன் நிலா ஒளியில்
உன் பதில் வராமல்
தேன் பொழியுமா மனதில்!

து என்ன தேடலோ
புதுப் போதை நாடலோ!
பொதுக் காதல் ஆடலோ
மதுக் காதல் ஊடலோ!

ற்றெடுக்கும் காதல்
காற்றடைத்த பந்தாயென்னை
மாற்றுகிறது சுக சுகமாய்
ஏற்றுகிறது எங்கோ எங்கோ…

துளிர்க்கும் அன்பு நிலை
வெளிச்சக் காதல் நிலை.
கட்டிப் போடும் வலை
வெட்ட முடியாக் கலை.

யிர்ச் சக்தி தருவதால்
பெரும் சக்தி காதல்
அணுசக்தியாய்த் துளைத்தால்
என் சக்தி என்னாவதோ!

ற்களிலே பாதம் நோகும்
சொற்களிற்கு நோகுமென்றோ
நிற்கின்றாய் பதிலின்றி!
அற்புதக் காதல் மாயமிதோ!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-6-2010.

 

 

                                                   
 

 

29 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. வே.நடனசபாபதி
    ஜூன் 12, 2012 @ 02:03:45

    //சொற்களிற்கு நோகுமென்றோ
    நிற்கின்றாய் பதிலின்றி!
    அற்புதக் காதல் மாயமிதோ//

    பொருத்தமான சொற்பிரயோகம்! வாழ்த்துக்கள்

    மறுமொழி

  2. மகேந்திரன்
    ஜூன் 12, 2012 @ 02:16:32

    எதுகைச் சொல்லாட்சியில்
    ஏற்றமாய் படைத்திட்ட
    தேன்மதுரக் கவிதை சகோதரி…

    மறுமொழி

  3. விச்சு
    ஜூன் 12, 2012 @ 03:10:23

    அழகான எதுகை மோனை வரிகள். சினிமா பாடல் போன்று மெட்டமைத்தால் சூப்பராக இருக்கும்.

    மறுமொழி

  4. b.ganesh
    ஜூன் 12, 2012 @ 05:02:55

    அட… வேதாவின் வலையில் என்னவொரு அழகான காதல் கவிதை. சொல்லாடல் மனதை மயக்குகிறது சகோதரி. பிரமாதம். மிக ரசித்தேன்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 12, 2012 @ 06:51:01

      சகோதரா! காதல் கவிதைகள் தலைப்பின் கீழே இது 36வது காதல் கவிதை.
      முழுவதும் 36ஐயும் வாசித்தால் இன்னொரு திருமணம் செய்வீர்கள் அல்லது காதலிப்பீர்கள்.
      எனது கருத்தின் படி காதல் ரசம் சொட்டும் கவிதைகள்.
      (காதலித்துப்பார் என்ற பாடல் வரி போல வாசித்துப்பார்!)
      கருத்திடலிற்கு மிக மிக நன்றி .
      சிரிப்பு வந்தது. வாசிக்க.
      இறையாசி கிட்டட்டும்.

      மறுமொழி

  5. செய்தாலி
    ஜூன் 12, 2012 @ 05:58:26

    ம்ம்ம் அருமை

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 12, 2012 @ 18:25:43

      உள்ளே நிறைய காதல் கவிதை உள்ளது. நேரமிருக்கும் போது வாசிக்கலாம்.
      தங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி.
      இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  6. niranjanaa
    ஜூன் 12, 2012 @ 08:48:32

    துளிர்க்கும் அன்பு நிலை. வெளிச்சக் காதல் நிலை. கட்டிப் போடும் வலை. வெட்ட முடியாக் கலை -இந்த வரிகளை ரொம்பவே ரசிச்சேன். கவிதை அருமைக்கா.

    மறுமொழி

  7. govi
    ஜூன் 12, 2012 @ 14:20:03

    அருமையான கவிதை..

    மறுமொழி

  8. AROUNA SELVAME
    ஜூன் 12, 2012 @ 15:56:01

    “சொற்களுக்கு நோகுமோ“ – சுகமான கவிதைங்க வேதா. இலங்காதிலகம்.

    மறுமொழி

  9. கோவை கவி
    ஜூன் 12, 2012 @ 16:36:20

    In FB – Lavi Langa, மகேந்திரன் பன்னீர்செல்வம் and C.R. Selvakumar like this..

    C.R. Selvakumar:-
    அருமையான பாடல்!!
    மகேந்திரன் பன்னீர்செல்வம்:-
    எதுகைச் சொல்லாட்சியில்
    ஏற்றமாய் படைத்திட்ட
    தேன்மதுரக் கவிதை சகோதரி…
    .Vetha ELangathilakam:-
    கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரர்களே திரு செல்வகுமார், திரு.மகேந்திரன். ஆண்டவன் ஆசி நிறையட்டும்…..

    Churchill Fernando likes this..in Kavithai sangamam என்கிற kavithai club (FB)

    மறுமொழி

  10. கோவை கவி
    ஜூன் 12, 2012 @ 17:02:42

    Yashotha Kanth likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)
    Yashotha Kanth :- அருமை …
    .Vetha ELangathilakam :-
    நன்றி யசோ தங்கள் கருத்திற்கு. மகிழ்வும் கூட. ஆண்டவன் ஆசி நிறையட்டும்….

    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in கவித்தென்றல் (FB)
    Selvaganesh Jagadeesan.. SentMageswari Periasamy TMGS Taiping likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam (FB)
    Mageswari Periasamy:-
    வார்த்தைகளால் ஜாலம் புரிந்து, வானவில்லையே வென்று விட்டாய். உன் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
    Vetha ELangathilakam:-
    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி மகேஸ்வரி இனிய கருத்திற்கு. இப்படி ஆர்வம் உள்ள நீங்கள் என் வலையில் நிறைய இருக்கிறது வாசிக்கலாம் கருத்திடலாம் சகோதரி. தெய்வக் கிருபை நிறையட்டும்.(உங்கள் கருத்தை அங்கு ஒட்டி விடுகிறேன்.)
    ….

    மறுமொழி

  11. SUJATHA
    ஜூன் 12, 2012 @ 19:56:26

    வார்த்தைகளே இல்லை. காதலில் உருகும் மனோநிலை வெளிப்பாடுகள் தத்ரூபமாக கவிநயத்தில் வெளிப்படுத்தியமை அருமை. வாழ்த்துக்கள்!!!!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 13, 2012 @ 07:07:40

      மிக நன்றி சுஜாதா. நெடுகலும் உலகப் பிரச்சனையை எழுதுவதா. காதலையும் இடையிடை தொடலாமே என்று எழுதினேன் கருத்திடலிற்கு நன்றி.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  12. rathnavelnatarajan
    ஜூன் 13, 2012 @ 09:38:56

    கற்களிலே பாதம் நோகும்
    சொற்களிற்கு நோகுமென்றோ
    நிற்கின்றாய் பதிலின்றி!
    அற்புதக் காதல் மாயமிதோ!

    அழகு வரிகள். வாழ்த்துகள்.

    மறுமொழி

  13. Dr.M.K.Muruganandan
    ஜூன் 14, 2012 @ 00:34:14

    சொல்லின் வேதனை
    வில் ஏவிக் கொல்லும்
    அம்பின் வேதனையை விட
    வலியது.

    மறுமொழி

  14. ramani
    ஜூன் 14, 2012 @ 04:07:31

    கற்களிலே பாதம் நோகும்
    சொற்களிற்கு நோகுமென்றோ
    நிற்கின்றாய் பதிலின்றி!
    அற்புதக் காதல் மாயமிதோ!

    காதலியின் மௌனத்தின் அழகை
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    சொற்கள் படிக்க படிக்க
    இன்பத் தேனாய் இருந்ததால்
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

  15. கோவை கவி
    ஜூன் 14, 2012 @ 16:36:05

    Vino Pathmanathan and ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா like this..in FB

    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
    கற்களிலே பாதம் நோகும்
    சொற்களிற்கு நோகுமென்றோ
    நிற்கின்றாய் பதிலின்றி!
    அற்புதக் காதல் மாயமிதோ!

    மிகவும் அற்புதமான அணிகள கவிதைக்கு ஏழில் கூட்டுகின்றன.!!
    வாழ்த்துக்கள் அம்மா!!
    Vetha ELangathilakam :-
    Thank you Vino. God bless you all…..
    Vetha ELangathilakam:-
    மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் ஸ்ரீ தங்கள் கருத்திற்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்….

    மறுமொழி

  16. பழனிவேல்
    ஜூன் 18, 2012 @ 06:09:52

    “இது என்ன தேடலோ
    புதுப் போதை நாடலோ!
    பொதுக் காதல் ஆடலோ
    மதுக் காதல் ஊடலோ!”

    அருமையான கையாடல்…

    அழகு…

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 20, 2012 @ 17:22:50

      மிகப் பிந்தி விட்டது சகோதரா தங்கள் கருத்திடலிற்கு பதிலிட. மிக மிக நன்றி. மகிழ்ச்சியும் கூட.
      மிகக் கருத்தாகப் பதிலிட்டீர்கள் நன்றி நன்றி.
      ஆண்டவன் அருள் கிட்டட்டும்

      மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி