240. காலம்.

 

காலம்.

 

சுற்றும் பூமி தன்னைச் சுற்றிட
ஓற்றை நாட் கணக்குக் கண்டார்.
சுற்றல் சூரியனையும் சேர்த்து என்றாகிட
முற்றுப் பெறுவது ஒரு வருடமென்றார்.
கற்ற உலகறிவாற் கணக்கிட்டாரன்று
நிற்காத காலப் புலர்வு மலர்ந்தது.

கலவன் ஒளி நிரந்தரக் கதிர்.
பாரிய பூமிச் சுற்றலால் இராப்பகல்.
மாரி, கோடை, இலையுதிர் வசந்தம்
பெயரானது அன்று பருவ காலங்களாய்.
இறந்த, நிகழ், எதிர் காலமாய்க்
காலக் கோலப் பாலம் கட்டினர்.

ழலை, இளமை, முதுமை யென்ற
மனித வாழ்வுப் பருவ காலங்கள்.
போர், புயல், அமைதிக் காலம்
தேர், திருவிழா, விரத காலம்
கோளாம் சனி, ராகு, கேதுவென
நாளும் சுளன்று மாறும் காலம்.

காலம் செய்வது கருத்தானவர் செய்யார்.
கால நேரக் கனிவிற்குக் காத்திருத்தல்
காலமறிந்த செயற்பாடு பொன்.
காலத்து மாற்றங்கள் தேவையின் அவசியம்.
இலக்கியம், சரித்திர விவரண எழுத்துகள்
துலக்கமாய் விளங்கும் காலப் பதிவாக.

லி காலம், களிப்புக் காலம்
ஆமாவாசை, பௌர்ணமி, ஆரம்பம், முடிவென
காலம் கணிக்கக் காரணங்கள் பல.
மூலமானது பிறப்பு, இறப்புக் கணிப்பு.
காலத்தே பயிர் செய்து பயனாக்கி
ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-6-2012.

(19-6-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் மாலை (19.00-20.00) கவிதை பாடும் நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

 

                                       

 

 

 

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூன் 15, 2012 @ 04:59:05

  கலி காலம், களிப்புக் காலம்
  ஆமாவாசை, பௌர்ணமி, ஆரம்பம், முடிவென
  காலம் கணிக்கக் காரணங்கள் பல.
  மூலமானது பிறப்பு, இறப்புக் கணிப்பு.
  காலத்தே பயிர் செய்து பயனாக்கி
  ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம்.

  அழகான படிமங்கள்!! வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 15, 2012 @ 19:46:49

   மிக்க நன்றி சகோதரா தங்கள் முதல் வருகைக்கு.
   (காலையில் கண்டேன் ஆனால் உடன் கருத்தெழுத முடியவில்லை. சில நாட்களில் முடிகிறது. சில நாட்களில் முடிவதில்லை. மாலையிலும் பேரனிடம் போய் வரும் போது பிந்தி விடுகிறது.)மிக மகிழ்வும் விரிவான கருத்திடுதலிற்கு நன்றியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. b.ganesh
  ஜூன் 15, 2012 @ 05:18:56

  காலத்தே பயிர் செய்து பயனாக்கி ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம். -அருமை. காலத்தின் பல பரிமாணங்களை அறிந்து கொண்டேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 16, 2012 @ 07:36:50

   காலத்துப் பயிரின் பல பரிமாணங்களை அடைந்து வெற்றி பெறுவோம்.
   இனிய கருத்திற்கு மிக மிக மகிழ்வும், நன்றியும்.
   தெய்வ கிருபை கிட்டட்டும்.

   மறுமொழி

 3. niranjanaa
  ஜூன் 15, 2012 @ 06:55:02

  காலமறிந்த செயற் பாடு பொன் – இந்த ஒரு வரியை அப்படியே எடுத்துக்கிட்டு செயல்படுத்த முயல்கிறேன். அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 16, 2012 @ 07:40:37

   முயற்சியோடு சிறப்பு சேரட்டும் நிரஞ்சனா.
   வாழ்க! வளர்க!
   கருத்திடலிற்கு மிக மிக நன்றி. மகிழ்ச்சி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. rathnavelnatarajan
  ஜூன் 16, 2012 @ 01:26:19

  அழகு கவிதை. வாழ்த்துகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  மறுமொழி

 5. மகேந்திரன்
  ஜூன் 16, 2012 @ 01:57:43

  பொன்னான காலமதை
  உன்னதமான அதன் மதிப்புதனை
  அழகிய கவியாக்கியமை
  நன்று சகோதரி..

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 16, 2012 @ 07:26:11

  அன்பு தோழி, Nelai Selvin – Anna University of Technology,Coimbatore,
  KR Sabari – Software Engineer at Andro Software Corp Pvt Ltd like this..in முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)

  Thiyagaraja Mohan – அழகப்பா கல்லூரி
  Mohan Kumar
  Ayya Nadar Janaki Ammal College
  Radhakrishnan Mahalingam
  Franchisee at Reliance Securities Ltd.
  Parimelazhakan Maanav
  University of Life
  ….all likes this in (FB ) – N.Rathnavel’s wall)
  Vetha ELangathilakam:-
  Thank you all so much. GOd bless you all..

  மறுமொழி

 7. ramani
  ஜூன் 16, 2012 @ 09:18:02

  எவருக்கும் பிடிபடாத புரியாத காலத்தை
  நேர்த்தியாய் கவிதையாய்
  கொடுத்திருப்பது அருமை.வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. விச்சு
  ஜூன் 16, 2012 @ 11:39:43

  காலம் கடந்து நான் வந்தாலும் காலம் பற்றி அழகான கவிதை.

  மறுமொழி

 9. SUJATHA
  ஜூன் 16, 2012 @ 20:25:59

  காலக்கணக்கீடு வாழ்க்கைச்சக்கரத்தை ஆழும் அளவீடுகள். மனிதன் தனக்குள் ஒரு வட்டம் அமைப்பது போல் பூமியில் நடப்பவைகளின் காலங்களை அழகாக வர்ணித்து கவித்துவமாக எடுத்துக்கூறியமை அருமை!!! வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 17, 2012 @ 07:44:27

   ஒரு வட்டம் அமைத்துக் காலம் எம்மை ஆழ்கிறதா, நாம் காலத்தை ஆழ்கிறோமா! ஆழ்ந்த ஒரு கேள்வி!
   சுஜாதாவின் நல்ல கருத்திற்கு மிக்க மிக்க நன்றி.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. மாலதி
  ஜூன் 17, 2012 @ 04:29:57

  காலத்தை மிகவும் சிறப்பாக வடித்தெடுத்து இருக்கிறீர்கள் சிறந்த இடுகை பாராட்டுகள் மாலதி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 17, 2012 @ 07:41:28

   காலத்தை வடித்தெடுத்த பாணியைப் பாராட்டிய உங்கள் இனிய கருத்திற்கு மிக மிக நன்றியும் மகிழ்வும் மாலதி.
   எல்லாம் வல்ல இறையருள் தங்களிற்குக் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 11. பழனிவேல்
  ஜூன் 18, 2012 @ 06:15:02

  “சுற்றும் பூமி தன்னைச் சுற்றிட
  ஓற்றை நாட் கணக்குக் கண்டார்.
  சுற்றல் சூரியனையும் சேர்த்து என்றாகிட
  முற்றுப் பெறுவது ஒரு வருடமென்றார்.”

  முதல் வரிகளே முத்திரை பதித்து விட்டீர்கள்.
  காலத்தை கவிதை படைத்த கவித்துவம் அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 18, 2012 @ 07:00:07

   அன்பின் சகோதரா பழனி உமது இனிய வரவு கண்டு மிக மகிழ்வு. கருத்திடலிற்கு மிக்க நன்றி. உமது வலைக்குச் சென்றேன் . புதிதாக இல்லை. திரும்பிவிட்டேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  ஜூன் 18, 2012 @ 07:25:06

  // காலத்தே பயிர் செய்து பயனாக்கி
  ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம்.//

  வழிமொழிகின்றேன்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 20, 2012 @ 17:16:00

   மிகப் பிந்தி விட்டது சகோதரா தங்கள் கருத்திடலிற்கு பதிலிட.
   மிக மிக நன்றி. மகிழ்ச்சியும் கூட.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 13. தனபாலன்
  ஜூன் 18, 2012 @ 08:13:02

  மறுமொழி

 14. தனபாலன்
  ஜூன் 18, 2012 @ 08:13:36

  மறுமொழி

 15. தனபாலன்
  ஜூன் 18, 2012 @ 08:14:50

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: