29. உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

படுக்கையில் நித்திரை கொள்வதும், அழுவதும், பால் குடிப்பதுமாக இருந்த பிறந்த குழந்தை, தனது தொடர்புக் கணையாக அழுகையைப் பாவித்த குழந்தை, முதன் முதலில் தனது முகத்துத் தசை நார்கள் விரிந்து,

 

சிரிக்க ஆரம்பிக்கிறது.

இரண்டாவது தொடர் கணையாகச் சிரிப்பது, புன்முறுவல் பூப்பது அதன் வளர்ச்சியின் ஒரு முன்னேற்றம்.

நீங்களும் கண் தொடர்பை நன்கு பேணிக் கொண்டு குழந்தையுடன் பேசுங்கள். அம்மா அப்பாவாகிய நீங்கள் சிரிக்கச் சிரிக்கக் குழந்தையும் சிரித்துத் தன் திறனை வளர்க்கும்.

மிகச் சிறு குழச்தைக்கு இது பொருந்தும்.

” உம் ” என்று முகத்தைத் தூக்கி வைத்துத் திரிவது பிள்ளைகளைப் பாதிக்கும். சிரியுங்கள். புன்னகையுங்கள் இது வீணாகி விடாது.

பெற்றவரை மாதிரியாக வைத்தே பிள்ளைகள் வளருகிறார்கள். ஆகவே உங்கள் சிரிப்பு என்றுமே வீணாகாது.

சிரிப்பு முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அந்தச் சிரிப்புக் கொடுக்கும் செய்தியாவது, நானும் நீயும் ஒன்று, எனக்கு நீ உனக்கு நானனெனும் செய்தியே, நாம் நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது.

அது போலவே தான் அழுகையும் அமைகிறது. மனிதர்களின் கவனிப்பை  அழுகையும் இழுக்கிறது.

அதுவே குழந்தைக்குத் தேவையானதுமாகிறது.

பல விடயங்களில் மனிதரைக் குரங்குடன் ஒப்பிடுவோம். ஆனால் இந்தச் சிரிப்பில் மட்டும் அது ஒத்து வருவதில்லை. பிறந்த குழந்தையும் சிரிக்கிறது.

அம்மா அப்பாவின் தொடர்பு நழுவுகிறதோ! அதைத் தெரிவிப்பதும் சிரிப்புத் தான்.
ஒரு மாய மந்திரக் கயிறாக மழலைச் சிரிப்பு எம்மை இழுக்கிறது.

எத்தனை கோடியையும் அச் சிரிப்பிற்கு ஈடாகக் கொடுக்கலாம். பிள்ளையை விட்டு விலக மனமின்றி அணைக்கிறோம்.
இந்த அணைப்பையே குழந்தை கேட்கிறது.

ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.

உங்கள் குழந்தையை விளங்கிக் கொள்கிறீர்களா!

சிரியுங்கள்! பல சிறப்பு உருவாகும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2004.

HERE also ABOUT LAGH:—-

https://kovaikkothai.wordpress.com/2017/06/18/5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-500-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/

 

                                     

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  ஜூன் 19, 2012 @ 00:24:12

  அருமை.
  எனது பக்க்த்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 19, 2012 @ 07:05:41

   மிக மிக நன்றி ஐயா தங்கள் கருத்திடலிற்கும், தங்கள் பக்கத்தில் எனது ஆக்கத்தைப் பதிந்ததற்கும்.
   மிக மகிழ்வடைந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. Venkat
  ஜூன் 19, 2012 @ 01:46:32

  //ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.//

  குழந்தையின் சிரிப்புக்காக நாமும் சிரிக்கணும்….

  நல்ல பகிர்வு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 19, 2012 @ 18:23:51

   சகோதரா மிக மகிழ்வும் நன்றியும் உங்கள் பதிலிற்கு.
   தங்கள் வலை சென்று பார்த்தேன் நிறைந்த ஆக்கங்கள். நல்வாழ்த்து.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 3. தனபாலன்
  ஜூன் 19, 2012 @ 01:51:01

  சிரிப்பு … சிறந்த மருந்து ! சிறந்த பதிவிற்கு நன்றி !

  மறுமொழி

 4. மகேந்திரன்
  ஜூன் 19, 2012 @ 02:10:14

  சிரிப்பு நமக்கு கிடைத்த வரம்
  கடவுள் நமக்கு அருளிய மாபெரும்
  எதிர்ப்புசக்தி..
  அழகிய ஆக்கம் சகோதரி..

  மறுமொழி

 5. பழனிவேல்
  ஜூன் 19, 2012 @ 04:37:46

  “புன்னகையுங்கள் இது வீணாகி விடாது.”

  அழகாக சொன்னீர்கள்.
  அருமையான பதிவு…

  மறுமொழி

 6. b.ganesh
  ஜூன் 19, 2012 @ 05:58:36

  மனித இனத்துக்கே உரிய தனிப்பெரும் சொத்து சிரிப்புதான். மனம்விட்டுச் சிரிப்பதால் நன்மைகள் பல. குழந்தையின் சிரிப்புக்கு நீங்கள் என்னுடனேயே இருங்கள் என்ற பொருள் சொன்னது அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 19, 2012 @ 19:04:47

   ”..குழந்தையின் சிரிப்புக்கு நீங்கள் என்னுடனேயே இருங்கள் என்ற பொருள்..”
   உண்மையானது தானே. சிறிது விலகினாலும் சிணுங்குவார்களே…
   மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. ramani
  ஜூன் 19, 2012 @ 15:28:02

  மனிதனின் சிறப்பே சிரிப்புதான்
  அதன் சிறப்பு குறித்து மிகச்
  சிறப்பாகச் சொல்லிச் செல்லும் பதிவு
  குறிப்பாக குழந்தைகளின் சிரிப்புக்கான
  புதுவகையான சிந்தனையை சொல்லிச் செல்லும் பதிவு
  அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 19, 2012 @ 19:12:47

   ”…குறிப்பாக குழந்தைகளின் சிரிப்புக்கான
   புதுவகையான சிந்தனையை சொல்லிச் செல்லும் பதிவு…”

   இது புதுச் சிந்தனை என்கிறீர்களா? இதை விடக்காரணம் வேறு எதுவாக இருக்கும்!…சரி…
   தங்கள் கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்..

   மறுமொழி

 8. ரெவெரி
  ஜூன் 19, 2012 @ 18:17:05

  நலமா சகோதரி?

  சிரிப்பு அழகிய மருந்து…சிறந்த ஆக்கம் சகோதரி…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 19, 2012 @ 19:48:16

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in FB.
  Nelai Selvin likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்- (FB)

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஜூன் 20, 2012 @ 02:35:14

  அழகான படங்களும், அற்புதமான கருத்தும். குழந்தையின் தனிமைப் பயத்தைப் போக்கி, எப்போதும் நான் உன் அருகிலேயே இருக்கிறேன் என்னும் நம்பிக்கையை ஊட்டும் அதிசயம் சிரிப்பும், புன்னகையும், தொடு உணர்வும். அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். மனம் தொட்டப் பதிவு தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 20, 2012 @ 07:02:03

   குழந்தையோடு அத்தனையும் எமது தொடர்பே அதன் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பது தானே மிகப் பிரதானம்.
   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி தங்கள் கருத்திற்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. SUJATHA
  ஜூன் 20, 2012 @ 05:42:12

  குழந்தையின் புன்னகையில் பெற்றவர்கள் உள்ளம் குளிர்கின்றது. ஒரு புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள். அருமை. வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

 12. sasikala
  ஜூன் 20, 2012 @ 09:36:53

  பொன்னகை இல்லாவிட்டாலும் புன்னகை போதுமே அழகா சொல்லிடிங்க .

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: