241. புத்தம் புது உலகம் வேண்டும்.

 

புத்தம் புது உலகம் வேண்டும்.

 

 

புத்தம் புது உலகம் வேண்டும்.
நித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்
சித்தம் குளம்பிய பல மனிதருக்கு
உத்தம வாழ்வு சுகப்பட வேண்டும்.

 

பகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,
பாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,
பிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.
சுயநல நோக்குகள் மறைய வேண்டும்.

 

பங்கமுடை பாழான மனித நோக்கு
சிங்கம் சிறு மிருக நோக்கு
எங்கும் இல்லா மனிதம் வேண்டும்.
ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்.

 

பகட்டு கௌரவம், போலி வாழ்வை
திகட்டாது அணைக்கும் பொய்யான சென்மங்கள்
திருவுளம் மாறப் பாதைகள் பல
திறந்திட வழியொன்று வேண்டும்.

 

பணத் தீயில் குளிர் காயும்
மனம் மதிக்கா மனித உயிரைக்
கனம் பண்ணா தொதுக்க வேண்டும்.
பிணமாகப் பிறர் மதிக்க வேண்டும்.

 

தேனிதழ்ச் செவ்வாய் மங்கையரை
திருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.
திருமணம் என்பது தீப்பந்தமானால்
ஒருமனதாக நீர் விட வேண்டும்.

 

மறுமண சுகந்தம் நுகரா மாதரும்
மறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.
மனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்
மறுக்காதேற்கும் புத்துலகாக வேண்டும்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2002

(12-2-2002ல: ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் ஒலி பரப்பானது.)

 

                                 

 

 

 

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Venkat
  ஜூன் 22, 2012 @ 01:45:44

  //பகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,
  பாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,
  பிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.
  சுயநல நோக்குகள் மறைய வேண்டும்.//

  சீரிய சிந்தனை…. வாழ்த்துகள்….

  மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  ஜூன் 22, 2012 @ 01:46:40

  // ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்//

  அந்த நாள் வர அனைவரும் பிரார்த்திப்போம். நல்ல கருத்தோடு கூடிய கவிதை.

  மறுமொழி

 3. தனபாலன்
  ஜூன் 22, 2012 @ 02:34:16

  மறுமொழி

 4. பழனிவேல்
  ஜூன் 22, 2012 @ 04:28:45

  “புத்தம் புது உலகம் வேண்டும்.
  நித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்
  பிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.
  சுயநல நோக்குகள் மறைய வேண்டும்.
  எங்கும் இல்லா மனிதம் வேண்டும்.
  ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்.”

  ஆம், இவ்வுலகம்
  மனிதம் கொன்று
  மனிதன் வாழும்
  பிணக் கூடமாக மாறிவிட்டது.
  கண்டிப்பாக,
  புத்தம் புது உலகம் வேண்டும். அதில்
  நித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்.

  மறுமொழி

 5. athisaya
  ஜூன் 22, 2012 @ 04:32:23

  தேனிதழ்ச் செவ்வாய் மங்கையரை
  திருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.
  திருமணம் என்பது தீப்பந்தமானால்
  ஒருமனதாக நீர் விட வேண்டும்ஃஃஃஃ
  ஆக்கபூர்வமான சிந்தனைகள்..கூடவே புரட்சியும்..வாழ்த்துக்கள் சொந்தமே

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 23, 2012 @ 12:03:08

   ஓ! மிக நல்லது புரட்சிக் கருத்து பிடிக்குதா! பலருக்குப் பிடிக்காது அதே குட்டையில் ஊறிடவே பிடிக்கும். சொன்னாலே கோபப் பட்டு எம்மைத் தப்பாகப் பார்ப்பார்கள்.
   உமது கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ஸாதிகா
  ஜூன் 22, 2012 @ 05:19:09

  ஆஹா..என்ன அற்புதமான சிந்தனை.உங்கள் கற்பனை ஈடேறினால் எவ்வளவு நலவாக இருக்கும்!!

  மறுமொழி

 7. AROUNA SELVAME
  ஜூன் 22, 2012 @ 12:11:56

  அருமையான கவிதை.

  மறுமொழி

 8. ரெவெரி
  ஜூன் 22, 2012 @ 12:25:22

  ஆக்கபூர்வமான சிந்தனை…வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 22, 2012 @ 18:22:49

  – பாரதி தாசன்> Erode Sathishkumar Ramasamy, Service Engineer at JANAKSONS OVERSEAS,
  – Nelai Selvin, Anna University of Technology,Coimbatore.. likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)
  – Arunakirivasan Ihaparan Thalapathy likes this…in கவித்தென்றல் (FB)

  மறுமொழி

 10. Ahil
  ஜூன் 23, 2012 @ 05:40:04

  //மறுமண சுகந்தம் நுகரா மாதரும்
  மறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.
  மனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்
  மறுக்காதேற்கும் புத்துலகாக வேண்டும்.///

  வேதா, உண்மையிலேயே இதற்காகவே புத்தம் புது உலகு வேண்டும்….அருமையான கவிதை…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2012 @ 07:13:34

   பல புதிய சிந்தனை பலருக்குப் பிடிப்பதில்லை அகில்.
   ஆதிகாலக் கொள்கைகளை இறுகப் பிடிக்கிறார்கள் சில விடயங்களில்.
   மறுமண விடயத்தில்…பலர் மாறிவிட நினைப்பதில்லை.
   காலம் தான் அவர்களை மாற்ற வேண்டும்.
   தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. N.Rathna Vel
  ஜூன் 23, 2012 @ 11:50:33

  அழகு கவிதை. அழகு தமிழ்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 12. SUJATHA
  ஜூன் 24, 2012 @ 06:06:09

  அருமை!!!! கெளரவத்திற்காக வாழும் மனிதன் தனது உண்மைகளை வெளிப்படுத்தாது போலி வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எடுத்துக்கூறியமை அருமை… அதைவிட புகைப்படங்களும் அருமை…அருமை….

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 24, 2012 @ 07:22:15

  இன்னும் ஊர் போலவே படிப்பு, பணம் என்பதில் போலி எண்ணங்களுடன் சிலர் வாழ்கிறார்கள். அதன் தாக்கமே வரிகள் எழுவது.
  மிக்க நன்றியும், மகிழ்வும் சுஜாதா கருத்திற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: