30. பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

எப்படி வெளியே பிள்ளைகள் காயப்படுகிறார்கள்!

பாலர் பாடசாலையில்  வெளியே உலா செல்லும் நாட்களில் தெருக்களைக் கடக்கும் போது, சன நெரிசலிற் புகும் போது, குழுநிலையில் சிறுவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கோர்த்து, சோடி சோடியாக இடையில் பெரியவர்களுடனும் நடக்க வேண்டும்.

எல்லோரும் சோடி சோடியாகக் கை பிடித்து நிற்க இறுதியாக 3 வயதுடைய ஒரு ஆசியப் பெண் குழந்தையும், ஒரு டெனிஸ் ஆண் குழந்தையும் எஞ்சி நின்றனர்.
”கையைக் கோர்த்திடு” என்றேன்…பெண் குழந்தையிடம்.
மாட்டேன் என்று மறுத்தாள்.
” இப்படி உலாப் போகும் போது சிறு பிள்ளைகள் கை பிடிக்க வேணும் என்ற வழக்கத்தை மறந்து விட்டாயா?..” என்றேன்.
”நான் ஆண் பிள்ளைகள் கையைப் பிடிக்க மாட்டேன்!”…என்று அடம் பிடித்தாள்.
” ஏன்” என்ற போதும் (இக் கேள்வியை மிக மன நோவுடனேயே நான் கேட்டேன்)
”மாட்டேன்…மாட்டேன்”… என்றாள்.
பின்பு நானும் சேர்ந்து அவளோடு கை பிடித்து நடந்தோம்.
எமது வற்புறுத்தலால் அவளது கண்கள் கலங்கி விட்டன. அழுதாள். அவளது நிலைமை எனக்கு விளங்கியது.

பின்னொரு தடவை – வேறொரு நாள் சைக்கிளோடி விளையாடிய போது, ஒரு ஆபிரிக்க ஆண்பிள்ளை 4 வயதுடையவன் எனக்கு பெண் பிள்ளையோடு சைக்கிளில் இரட்டையாக, சமமாக உட்கார முடியாது என்றான்.
”ஏன்” என்றேன்.

” ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்., பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்.” என்று அடித்துக் கூறினான்.
”..யார் கூறியது?…” என்றேன்.
”…அம்மா..கூறினார் ” என்றான். (நானும் ஒரு ஆசியப் பெண் ஆனாலும், ஐரோப்பியக் கலாச்சாரப் பாலர் பாடசாலை ஆசிரியையாகப் பயிற்றப் பட்டு ஐரோப்பியரோடு வேலை செய்தவள். புலம் பெயர்ந்த பிள்ளைகள் நிலை இது.)

இது தான் கலாச்சார இடிபாடு.

வீட்டில் கூறும் பிற நாட்டுக் கலாச்சாரப் புத்திமதிகள் பிள்ளைகளிடம் வேலை செய்கிறது. ஆனால் அது இங்கு (ஐரோப்பியக் கலாச்சாரத்தில்) வெளியில் எடுபடாது.

ஆணும் பெண்ணும் கலந்து பழகி விளையாட வேண்டும். அவர்கள் கலந்து பழகி விளையாட நாமோ தடை செய்வதில்லை, ஊக்குவிக்கிறோம். இது எமது தொழில்.

புலம் பெயர்ந்த பிள்ளைகளிற்கு கூறும் புத்திமதியின் விதம் பிழையானது என்பது எனது கருத்து ஆணும் பெண்ணும் சேர்வதே கூடாது என்று கூறி  சேரும் ஆவலைப் பெற்றோர் மறைமுகமாகத் தூண்டுகின்றனரோ என்று தோன்றுகிறது.
நன்கு விளக்கமாக இது கூறப் படல் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளிற்கு உங்கள் முழு அன்பை, ஆதரவைக் கொடுப்பதே.

எப்படி வெளியே அடிபடுகிறார்கள் பார்த்தீர்களா?

கிளப், பாடசாலை, ஓய்வு நேரப் பாடசாலைகளில் இதை விட நிலைமைகள் வேறு. டிஸ்கோ, சேர்ந்து பயணங்கள் போய் இரவு தங்குதல் என்று பல. இதில் பயணத்திற்குக் கொண்டு போகும் பொருட்களின் நினைவுப் பட்டியலில் கருத்தடை உறையும் ஒரு பொருளாகப் பாடசாலையால் எழுதப் பட்டிருக்கும்!

இவைகளைப் புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள் பார்த்தீர்களா!

எவ்விடயமானாலும் பக்குவமாகக் கூறிட வேண்டும்!

கவனியுங்கள்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2004.

(இது இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா”  நிகழ்வில் 5-9-2004 ல் எழுதி வாசிக்கப்பட்டது.)

(ஒரு மழை நாளில் சைக்கிளோடும் விளையாட்டு…)

 

                                    

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. N.Rathna Vel
  ஜூன் 30, 2012 @ 09:48:27

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. athisaya
  ஜூன் 30, 2012 @ 09:56:10

  கோவைக்கவிக்கு அதிசயாவின் வாழ்த்துக்கள்.!

  மறுமொழி

 3. padaipali
  ஜூன் 30, 2012 @ 10:12:50

  நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. b.ganesh
  ஜூன் 30, 2012 @ 10:34:21

  ஆண்களைப் போலவே பெண்களும் சகஜீவிகள், நட்புகள் என்கிற புரிந்துணர்தல் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லித் தரப்பட வேண்டும். அருமையான கருத்தைக் கூறிய விழிப்புணர்வுப் பதிவு சகோதரி. உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2012 @ 14:35:02

   உண்மை அத்தனையும் சிறுவயதிலிருந்து சொல்லிப் பழக்கினால் வாழ்வு எத்னை இன்பமாக இருக்கும்.
   எல்லோருமே பிழை விடுகிறோம்.
   நாம் விழித்துத் திருந்த வேண்டும்.
   சகோதரா தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 30, 2012 @ 11:37:29

  Yashotha Kanth likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்- FB.

  Shaminy Shundaralingam – Pædagogmedhjælper at Nordstjernen- FB
  முனைவென்றி நா சுரேஷ்குமார் – Software Engineer at Lorven Technologies inc
  Anand Maheswaran, Viduthalai R. Regina – PhD student at Aarhus University
  Sundrakumar Kanagasundram – Works at Retired..likes this in FB
  ..
  ..
  ..
  ….

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 30, 2012 @ 12:05:24

  <அருமையாச் சொன்னீங்க சகோதரி ! நல்ல பகிர்வுக்கு நன்றி !

  சமீபத்திய என் பதிவு :
  “மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் என்ன ?”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 01, 2012 @ 12:36:42

   மிக நன்றி சகோதரா. தங்கள் கருத்திடலிற்கு.
   தங்கள் வலைக்கு வந்து கருத்திட்டுள்ளேன்.
   மிக நன்றி இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. angelin
  ஜூன் 30, 2012 @ 12:12:51

  வேதா அக்கா ..முதலில் நெடு நாள் உங்க பக்கம் வரவில்லை மன்னியுங்க .
  இந்த பதிவு மிக அருமையான ஆக்கம் .
  பிள்ளைகள் பூவிலும் மென்மையானவர்கள். நீங்கள் கூறியிருக்குமொவ்வொரு விடயமும் கவனத்தில் கொள்ள வேண்டியது
  குறிப்பாக வெளிநாட்டில் வேர் விட்டு வளந்திருக்கும் குழந்தைகள் நிலை
  கவனமுடன் கையாளப்பட வேண்டியதே.
  இங்கே ஆறாம் வகுப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு வருட இறுதியில் ஆசிரியர்கள் தயார் படுதுகிறார்கள். ஏனெனில் ஏழாம் வகுப்பு உயர்நிலை செல்லும்போது அவர்கள் எதையும் சமாளிக்கும் வல்லமை பெற வேணும் என்பதற்காய்.
  அடக்கி வைக்க வைக்கத் தான் குழந்தை மனது காட்டாறு வெள்ளமாய்த் தடைகளை உடைத்துப் பாயும்.
  பாரட்டுகள்.
  அருமையான பதிவு

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 01, 2012 @ 12:48:02

   மிக நன்றி ஏஞ்சலின் தங்கள் நீண்ட கருத்திற்கு.
   யோசித்தேன் தான் காணூமே என்று.
   நானென்ன செய்ய முடியும்.
   இப்படிப் பலர்.
   காத்திருப்போம்
   காலம் கனியுமென.
   இறையாசி றிறையட்டும் சகோதரி.

   மறுமொழி

 8. M.Kalidoss
  ஜூன் 30, 2012 @ 13:57:47

  அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டிய பகிர்வு .பதிவு .வாழ்த்துக்கள் .

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 30, 2012 @ 14:20:39

  மு. சுவாமிநாதன். likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam – (FB.)

  மு. சுவாமிநாதன்.:-
  நன்று!
  .Vetha ELangathilakam:-
  நன்றி சகோதரனே .இறையருள் நிறையட்டும்.

  மறுமொழி

 10. ஸாதிகா
  ஜூலை 01, 2012 @ 04:03:38

  அருமையாகவும் அழுத்தமாகவும் சொல்லிவிட்டீர்கள் சகோ.

  மறுமொழி

 11. SUJATHA
  ஜூலை 01, 2012 @ 06:30:58

  அறிவுரைகளுடன் எடுத்துக்கூறியமை அடுத்த சந்ததிக்கு வழிகாட்டல். அருமை…

  மறுமொழி

 12. கலைநிலா
  ஜூலை 01, 2012 @ 09:19:29

  படமும் வரிகளும் அருமை

  மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூலை 02, 2012 @ 15:36:43

  “புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள்”

  சரியாக சொன்னீர்கள்…

  குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
  அதை முதலில் நாம் தான் உணரவேண்டும்.
  பிஞ்சு மனங்கள் நல்ல விதைகளை விதைப்போம்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: