18. சிட்டுக் குருவி.

 

சிட்டுக் குருவி.

 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
பட்டுப் போகிறாயாம் நீ.
விட்டுப் போன பங்குனி 20து
பட்டான உன் தினமாம்.

உயர் மாடி வீடுமொரு
துயர் உன்னழிவிற்காம்.
பயிர்ப் பூச்சிகொல்லியுமுன்
உயிரெடுக்கும் ஆபத்தாம்.

ஆர்வமாய்க் குஞ்சுகளிற்கூட்டுவாயாம்
பீர்க்கங்காய் பாகல் புடலைப்புழு.
நிர்மூலமாகும் வீட்டுத் தோட்டங்களால்
நிலைதடுமாறுதாம் குஞ்சுகள் வளர்ச்சி.

இரண்டாயிரத்துப் பத்திலிருந்துன்னினம்
வரண்டிடக் கூடாதென்று தினம்
பெருக்கிட வுன்னினத்தை யென்றாம்
பெரும் விழிப்பணர்வுப் போராட்டமாம்.

சின்னச் சிட்டுக் குருவியே
சிறப்பாய் வாழ உனக்கு
சிறு அட்டைப் பெட்டிச்
சிறு குடிமனை ஆக்குவேன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-7-2012

 

                                
 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 02, 2012 @ 00:51:05

  கவிதை அருமை !

  எப்போது அங்கங்கே மொபைல் டவர் வந்ததோ, அப்போதிலிருந்து சிட்டுக்குருவியை பார்க்கவே இல்லை. உங்கள் ஊரில் உண்டா சகோதரி ?

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2012 @ 18:11:39

   சகோதரா நல்ல கேள்வி கேட்டீர்கள். குளிர் தேசமிது (டென்மார்க்)இப்போது 3 மாதம் மட்டும் வெயில் வருகிறது, அதாவது சம்மர் (கோடை) இதில் சிட்டுக்குருவியைக் காண்பது …தெரியவில்லை சகோதரர
   கண்டது போல ஒரு நினைவு.
   உங்கள் கருத்திடலிற்கு மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. N.Rathna Vel
  ஜூலை 02, 2012 @ 01:02:59

  அழகு கவிதை.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள் அம்மா.

  மறுமொழி

 3. மணிக்கன்னையன்
  ஜூலை 02, 2012 @ 02:51:07

  அருகிவரும் சிட்டுக்குருவியின்பால்
  பெருகிவரும் பாசக்கவியின்பால்
  உருகிவரும் என்வாழ்த்து…..

  மறுமொழி

 4. ஸாதிகா
  ஜூலை 02, 2012 @ 03:41:35

  சிட்டுக்குருவி பற்றிய சிட்டான பாட்ல்கள்.அழிந்து வரும் ஒரு அப்பாவி இனத்துக்கான ஆறுதலான பாடல்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2012 @ 18:32:58

   சகோதரி ஸாதிகா நிறையப் பேர் சிட்டுக்குருவி பற்றி முன்பு எழுதியவர்கள் தானே. அதனால் சிறுவர் வரிகளாக எழுதினேன் தங்கள் கருத்திற்கு நன்றி.
   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. athisaya
  ஜூலை 02, 2012 @ 08:21:48

  அழகிய ஆறுதல்..வாழ்த்துக்கள் சொந்தமே

  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  மறுமொழி

 6. கலைநிலா
  ஜூலை 02, 2012 @ 10:51:19

  சின்னச் சிட்டுக் குருவியே
  சிறப்பாய் வாழ உனக்கு
  சிறு அட்டைப் பெட்டிச்
  சிறு குடிமனை ஆக்குவேன்.

  மறுமொழி

 7. ரெவெரி
  ஜூலை 02, 2012 @ 14:28:26

  கவிதை அழகு சகோதரி…

  எங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி அடிக்கடி வரும்…என்ன எச்சங்கள் மூலம் புல்வெளியில் களை வருவதால் அவ்வப்போது கோபமும் வருவதுண்டு…

  சில நாட்களாய் ஜன்னல் வழியே அழகிய சிகப்பு ராபின் சத்தம் கேட்டு கண் விழிப்பதால் சுகம்…அவ்வப்போது மான் குடும்பங்கள் வீட்டைக்கடப்பதும் நல்ல ரசிக்கும்படியான அனுபவம்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2012 @ 19:18:46

   ”..என்ன எச்சங்கள் மூலம் புல்வெளியில் களை வருவதால் அவ்வப்போது கோபமும் வருவதுண்டு…”
   இதைத் தங்கள் ஆக்கத்தில் தாங்கள் குறிப்பிட்டது எனக்கு நினைவு வருகிறது.
   மிக்க நன்றி ரெவெரி கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள்கிட்டட்டும்.

   மறுமொழி

 8. பழனிவேல்
  ஜூலை 02, 2012 @ 15:35:42

  “புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள்”

  சரியாக சொன்னீர்கள்…

  குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
  அதை முதலில் நாம் தான் உணரவேண்டும்.
  பிஞ்சு மனங்கள் நல்ல விதைகளை விதைப்போம்…

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜூலை 02, 2012 @ 15:48:09

  “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
  செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
  மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
  மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
  சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே”

  தங்கள் பாடல் இந்த பாடலை அசைபோட வைத்துவிட்டன.
  அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2012 @ 19:29:38

   ஆகா மிக்க நல்லது உம்மைப் பாட்டுப் பாட வைத்ததற்கு. மகிழ்வாக உள்ளது.
   கருத்திடலிற்கு மிக்க நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 10. Dr.M.K.Muruganandan
  ஜூலை 02, 2012 @ 16:00:39

  உயர் மாடி வீடு, பூச்சிகொல்லி,
  எத்தனை இடையூறுகள்
  இந்தச் சின்னஞ்சிறு குருவிக்கு
  மெத்த ஆதரவு கொடுக்கும்
  உங்கள் பா அருமை.

  மறுமொழி

 11. angelin
  ஜூலை 02, 2012 @ 16:23:41

  அப்பாவி சிட்டுகுருவிகளுக்கு பொருத்தமான கவிதை .
  பாவம் அவை எங்க வீடுகிட்டியும் வரும் .எங்க வீட்டில் ஊரில் கூடு கட்டும் அம்மா அவற்றுக்கெனவே fan சுழல விட மாட்டாங்க
  அவை குஞ்சு பொரித்து குடும்பம் வெளியேறும் வரை மின்விசிறிக்கு தடா .
  அழகிய குருவிகள் அழிந்து போகாமல் காக்கணும்

  மறுமொழி

 12. கோமதிஅரசு
  ஜூலை 03, 2012 @ 05:24:54

  சின்னச் சிட்டுக் குருவியே
  சிறப்பாய் வாழ உனக்கு
  சிறு அட்டைப் பெட்டிச்
  சிறு குடிமனை ஆக்குவேன்.//

  சிட்டுக்குருவிக்கு வீடு அருமை.
  அருமையான பாடல் சிட்டுக் குருவிக்கு,
  வாழ்க சிட்டு குருவி இனம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2012 @ 19:45:55

   சகோதரி தாங்களும் சிட்டுக்குருவி ஆக்கம் முன்பு போட்டதாக நினைவு வருகிறது.
   நீண்ட நாட்களின் பின்பு வந்துள்ளீர்கள்.
   கருத்திற்கு மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 13. padaipali
  ஜூலை 03, 2012 @ 06:52:39

  அருமைத் தோழி,சிட்டுக்குருவி கவிதையும்..சிட்டுக்குருவி வீடும்..

  மறுமொழி

 14. SUJATHA
  ஜூலை 03, 2012 @ 15:22:56

  சிட்டுக்குருவிக்கு ஒரு தினம் கவியில் வெளிப்படுத்தி அது கூடுகட்டி வாழும் வாழ்க்கை ஒரு காலம். அருமை. கவியில் வெளிப்பட்டுள்ளது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: