2. உணர்வுப் பல்லக்கு.

உணர்வுப் பல்லக்கு.

சில்லெனும் தென்றலாய் விரிந்திடுமுணர்வது.
அல்லும் பகலு மிதயத்தி லூர்ந்து
முல்லை மலராய்ச் சுகந்த மெழுப்புது!
தொல்லை யற்ற உலகிற் கழைக்குது!

பல்லக்கி லேறி யூர்வலம் வருவதாய்
உல்லாச வுணர்வைச் சிந்தையில் தெளிக்கிறான்.
செல்லக் கண்ணன் படுத்தும் பாட்டைச்
சொல்லவும் முடியுமோ! சொர்க்கமிதோ!

பழகு தமிழ்ப் பயிலரங்குப் படியின்
அழகு ”ங்கா… ம்மா”…அம் மொழியோ!
குழந்தை மொழியழகு கூறியும் முடியுமோ!
பழந்தமிழ் நூல் போன்றது பசுஞ்சிரிப்பு.

தெரிந்த சைகைகள் அரங்கேறிடும்.
ஈரமாக உயிர் போகு மழுகை.
ஓரமானால் துயில் – ஓயாதழுகை
வாயாரக் கதை வயிறு நிறைந்ததும்.

கை பிடித்தாலோ நெஞ்சு நிமிர்த்தி
பைய என்னை ஏந்திடு வென்று
மையல் செய்வதில் மாயக் கண்ணன்!
கையிலேந்தினாற் கொண்டாட்டம்! கொண்டாட்டம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2012.

(அம்- அழகு)

                                             

 

37 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 03, 2012 @ 23:06:17

  படத்துடன் கவிதையைப் படிக்க
  உணர்வுப் பல்லக்கின் அழகை முழுமையாக
  உணர முடிந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. N.Rathna Vel
  ஜூலை 04, 2012 @ 00:16:43

  மழலைக்கு வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. Venkat
  ஜூலை 04, 2012 @ 00:52:15

  படமும் படத்திற்கேற்ற கவிதையும் அழகு….

  மறுமொழி

 4. athisaya
  ஜூலை 04, 2012 @ 02:02:01

  தெரிந்த சைகைகள் அரங்கேறிடும்.
  ஈரமாக உயிர் போகு மழுகை.
  ஓரமானால் துயில் – ஓயாதழுகை
  வாயாரக் கதை வயிறு நிறைந்ததும்/////really awesome

  மறுமொழி

 5. பழனிவேல்
  ஜூலை 04, 2012 @ 04:11:31

  “பழகு தமிழ்ப் பயிலரங்குப் படியின்
  அழகு ”ங்கா… ம்மா”…அம் மொழியோ!
  குழந்தை மொழியழகு கூறியும் முடியுமோ!”

  அழகு…
  புகைப்படம்
  கவிதை
  குழந்தை
  அனைத்தும் மிக அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 07, 2012 @ 09:09:42

   சகோதரா பழனிவேல் இது கூகிள் படமல்ல வெற்றியும்.
   நானும் கணவரும் வெற்றியுடன்.
   மிக நன்றி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறைக.

   மறுமொழி

 6. மகேந்திரன்
  ஜூலை 04, 2012 @ 05:35:27

  குழலிசையும் யாழிசையும்
  உந்தன் முன் நிற்குமோ
  அதன் சங்கதிகளுக்காய்
  உன்னிடம் ஸ்வரங்களை
  தானம் பெறுமோ….

  மழலைக்கு ஈடு இணை ஏது
  பல்லக்கு ஏறும் உணர்வுகள் தான் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 07, 2012 @ 18:53:11

   ”..மழலைக்கு ஈடு இணை ஏது
   பல்லக்கு ஏறும் உணர்வுகள் தான் சகோதரி…”
   அருமை உமது கருத்து மகேந்திரன்.
   மிக்க நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கோமதிஅரசு
  ஜூலை 04, 2012 @ 05:54:53

  பேரக்குழந்தை மாயக் கண்ணன் செய்யும் குறும்பு முதலில் நம் மனதை அவன் வசம் இழுத்துக் கொள்வதுதான்.
  அவன் வசம் சென்ற மனம் வேறு எதையும் நாடாது.
  மழலை மொழி மயக்கும்,
  மயக்கத்தில் எழுதிய கவிதை அழகு. பேரனின் சிரிப்பு அழகு.
  வாழ்த்துக்கள்.
  பேரன் வெற்றி வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 8. niranjanaa
  ஜூலை 04, 2012 @ 08:09:16

  படத்தையும் கவிதையையும் படிக்கறப்ப மழலையின் சிறப்பை ரசிக்க முடிஞ்சதுக்கா. நாமளும் இப்படிக் குழந்தையாய்ட்டா எப்படி இருக்கும்… ஏன்தான் வளர்ந்தோமோன்னுகூட மனசுல ஒரு எண்ணம் தோணிச்சு. சூப்பர் பா.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 07, 2012 @ 19:29:39

   நிரஞ்சனாவின் கருத்திடலிற்கு மிக நன்றி.
   குழந்தையாக உள்ளவங்க பெரிதாக வர ஆசைப்பட, பொரியவர்கள் குழந்தையாகிட ஆசைப்படுகிறார்கள்.
   மாற்றங்களிற்கு ஆசைப்படும் உலகு தான் இது.

   மறுமொழி

 9. abdulkadersyedali
  ஜூலை 04, 2012 @ 11:36:26

  அழகு
  குழந்தையும் கவிதையும்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 04, 2012 @ 12:31:08

  மறுமொழி

 11. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 04, 2012 @ 12:32:14

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  ஜூலை 05, 2012 @ 00:59:31

  புகைப்படமும் கவிதையும் மனதை கொள்ளை கொள்கிறது.

  மறுமொழி

 13. Mageswari Periasamy
  ஜூலை 05, 2012 @ 01:33:24

  “மேலே பூச்சரமாக மலர்ந்து இருக்கும், எல்லா பாராட்டு வார்த்தைகளையும், நானும் வழிமொழிகிறேன் சகோதரி. அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன்”.

  மறுமொழி

 14. ரெவெரி
  ஜூலை 05, 2012 @ 14:46:26

  மழலையும்…கவிதையும்… அழகு…
  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 15. SUJATHA
  ஜூலை 05, 2012 @ 19:53:01

  மழலையின் செல்லச்சிரிப்பும், கதையும் பேரன் பேர்த்தியை கட்டிப்போட்டுவிட்டன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது கவிநயத்தில் வெளிப்பட்டுள்ளது.

  மறுமொழி

 16. நுண்மதி
  ஜூலை 06, 2012 @ 18:25:11

  உங்களுடனான உணர்வுப் பல்லக்கில் நானும் பயணித்ததுபோல் புல்லரித்துப் போகிறேன் தோழி… உங்களின் உணர்வுகளும் அதன் சொல்லாடலும் அருமை… வெகு நாட்களுக்குப் பின் செய்யுள் போன்ற நடையில் எளிய தமிழைப் படிக்கிறேன்… பகிர்வுக்கு நன்றிகள் பல தோழி…

  – நுண்மதி.

  மறுமொழி

 17. கோவை கவி
  ஜூலை 07, 2012 @ 11:09:04

  Shaminy Shundaralingam -Pædagogmedhjælper at Nordstjernen
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா-IT Support at Al Hokair Group
  Naguleswarar Satha-Christian College Kopay
  Sathi K Sathiya-Toronto, Ontario likes in FB

  Vetha.ELangathilakam:-
  Sathi K sathiya’s photo > I edited Thank you so much. (This is a group photo Kanna, Ranji, You,my self )….canada Sathi granpa’s மடியில் வெற்றி….பக்கத்திவ் கண்ணா grandpa…..
  Anand Maheswaran ;.
  மாவடுக்கண்ணல்லவோ…… மைனாவின் மொழியல்லவோ ……………
  Logan Chellam-IT Support Technician at Lægården idrætsefterskole also likes this.
  Ganesalingam Arumugam likes this..in கனவு விழிகள்- FB
  Yashotha Kanth, Vishnu Rajan and Jesu Thasan like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்-FB
  Arul Mozhi likes this..in kavithai sangamam 2.0- FB
  Yuvaraj Jayakumar likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam
  ..
  ..
  ..

  மறுமொழி

 18. வே.நடனசபாபதி
  ஜூலை 07, 2012 @ 11:24:05

  //கை பிடித்தாலோ நெஞ்சு நிமிர்த்தி
  பைய என்னை ஏந்திடு வென்று
  மையல் செய்வதில் மாயக் கண்ணன்!
  கையிலேந்தினாற் கொண்டாட்டம்! கொண்டாட்டம்//

  அனுபவித்து உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். உங்களது களிப்பில் நானும் கலந்துகொள்கிறேன். கவிதைக்கு சரியான தலைப்பு! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 10, 2012 @ 16:36:39

   //கை பிடித்தாலோ நெஞ்சு நிமிர்த்தி
   பைய என்னை ஏந்திடு வென்று
   மையல் செய்வதில் மாயக் கண்ணன்!
   கையிலேந்தினாற் கொண்டாட்டம்! கொண்டாட்டம்//

   கணவர் போனாலும் இதே நிலை தான், நான் போனாலும் அப்படியே. இருவரும் தனித் தனியே தான் பேரனைப் பார்க்கப் போவோம். வந்து இதே கதை தான்.
   மிக்க நன்றி சகோதரா கருத்திற்கு.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 19. கீதமஞ்சரி
  ஜூலை 09, 2012 @ 23:44:44

  தொட்டிலில் குழந்தை ஒன்றுமறியாப் பிள்ளையென , உணர்வுப் பல்லக்கில் நம்மை ஏற்றிவிட்டு! தாலாட்டும் வரிகளினும் தம் பெயரனைக் கொண்டாடும் வரிகளில் பெருமிதம் துலங்குகிறது. தங்கள் கவிதைக்கு வாழ்த்தும், கவிதை நாயகனுக்கு ஆசியும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: