4. பயணக் கட்டுரைகள்.(மலேசியா) – 1

 

4. பயணம் மலேசியா) – 1

கடந்த  வருட 2011 இறுதியில் …
ஓ!..மனம் நிறைந்த மகிழ்ச்சி!…அன்றாட வழமை வேலைகள், குளிர்…அனைத்திலுமிருந்து விடுதலை.
18 நாட்கள் பயணம் வெளிநாட்டில்.
முன்னரும் மலேசியா போயிருந்தோம். ஆயினும் ஆனந்தம்!….ஆனந்தமே!……

பயணம் புது சக்தி தரும்.
நயனம் நிறை மாறுகாட்சிகள்
சயனமற்ற பல புரிதல்கள்
வயன(ண)மான(விதமான) அனுபவங்கள்!
சுயமாயுன்னைப் புதுப்பிக்கலாம்!

அதிகாலை 6.15க்கு பயணப் பெட்டியை உருட்டியபடி சென்று நகரப் பேருந்தில் ஏறினோம்.

15 நிமிடங்களில் அது நமது ஓகுஸ் நகரப் பிரதான பேருந்து நிலையத்தை  அடைந்தது. 

அங்கிருந்து 7.15க்கு டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகனுக்குச் செல்லும் பேருந்தில் ஏறினோம். 

6, 7 நிமிடத்தில் அது டென்மார்க் கடல் வழி துறைமுகத்திற்குச் சென்றது.

அங்கு பேருந்தும் நாமும் பெரிய கடவைப் படகின் (பெஃறியின்) வயிற்றினுள் புகுந்தோம். பேருந்திலிருந்து இறங்கி படிகளால் ஏறி கப்பலினுள் சென்றோம்.
 

இது ஒன்றரை மணி நேர கடவைக் கப்பல் பயணம்.

உள்ளே அன்றாடம் வேலைக்குப் போய் வரும் மக்களே பாதிக்கு மேல் காணப்பட்டனர். காலையுணவை உணவகத்தில் வாங்கி உண்பவரும், தம் உணவுப் பொதியை உண்பவருமாகப் பலர். கணனி விளையாட்டு ஒரு புறம், தொலைக் காட்சி, செய்திகள் கவனிப்போர் என்று பல ரகம்.

உள்ளே சுற்றிப் பார்த்து நாம் நேரத்தைக் கழி(ளி)த்தோம்.

மறுபடியும் ஒன்றரை மணி நேர பேருந்துப் பயணத்தில் தலைநகர் காஸ்ருப் விமான நிலையம் அடைந்தோம்.

விமான நிலைய உணவகத்தில் எமது பொதியுணவை உண்டோம்.

பேருந்து ஓடும் திட்டப்படி வேறு வசதியில்லாததால் முற்பகல் 11 மணிக்கு வர வேண்டியிருந்தது.

ஆறுதலாக இருந்து பிள்ளைகளுக்கும் தொலை பேசி எடுத்துவிட்டு நமது பெட்டிகளை ஒப்படைத்து (அப்பாடா! இனி தூக்கிச் சுமக்க வேண்டிய தேவை இல்லை. அவை மலேசியாவில் கிடைக்கும்)

பயண அனுமதித் தணிக்கைகள் முடித்து உள்ளே சென்றோம்.

2.00 மணிக்கு எமரேட்ஸ் விமானம் எங்களைச் சுமந்து சென்றது.


நெருக்கமான இருக்கைகள் கொண்ட, கால்களை வசதியாக நீட்ட முடியாத பயணம். வானொலியில் தமிழ் இசை என்பதின் கீழ் தமிழ் பாடல்கள் காது ஒலிபெருக்கி மூலம் கேட்டபடி, பன்மொழித் தொலைக்காட்சிகளையும் பார்த்தபடி பயணம் நடந்தது. 6 மணி நேரத்தில் டுபாய் விமான நிலையத்தில் இறங்கினோம்.

தொடருவேன் அடுத்த 2ம் அங்கத்தில்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-7-2012.

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 08, 2012 @ 15:35:13

  நல்லதொரு இனிய அனுபவங்கள் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜூலை 08, 2012 @ 16:27:25

  மலேசிய பயணத்திற்கு நானும் ரெடி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 08, 2012 @ 19:35:47

   முரளிதரனும் ரெடியா!
   ஓ.கே மகிழ்வாகக் கொண்டு செல்ல என்னால் முடிந்தளவு முயற்சிப்பேன்.
   மிக்க நன்றி.
   தெய்வ அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. shadiqah
  ஜூலை 08, 2012 @ 16:31:50

  hai,sister.malaysiavai suRRi katta pooRiingkaLaa.waan ready.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 15, 2012 @ 14:40:02

   ஆமாம்! sathika! பார்த்ததை சொல்லப் போகிறேன் பிழைகளும் வரலாம், நல்ல தகவலும் வரலாம். முயற்சி பண்ணுகிறேன். Gods grace ஏற்கெனவே 3 பயணங்கள் எழுதிய அனுபவத்தில்.

   மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 08, 2012 @ 18:58:44

  Vishnu Rajan and Sundra Kumar like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB)

  Vishnu Rajan:-
  நல்ல கட்டுரை சகோதரி ..அருமை …
  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி விஷ்ணு. இறையாசி நிறையட்டும்….
  Vetha ELangathilakam:-
  Thank you Sundra Kumar. God bless you.
  Yashotha Kanth:-
  அருமை அக்கா.
  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி sis.

  Sundrakumar Kanagasundram like this..in FB
  Mari Muthu C likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள் – FB
  Umah Thevi likes this..in வித்யாசாகர்.
  Pavitra Priya, Jeya Letchumi – Singapore, Singapore likes this in அம்மாவின் அன்பு (Mother’s Love)- FB
  Arul Mozhi likes this..in kavithai sangamam 2.0 – FB
  Malar Chelvem – SMK Convent Taiping likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam (FB)
  Rueben Guru likes this..in கனவு விழிகள் (FB)

  மறுமொழி

 5. விச்சு
  ஜூலை 09, 2012 @ 00:02:15

  பயணமும் அழகான புகைப்படங்களும் நேரில் சென்று பார்த்ததுபோல் உணர்வு. தொடருங்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 09, 2012 @ 20:59:58

   அப்படி ஒரு உணர்வு வரவேண்டும் அதுவே சுவையூட்டும்.
   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. Mageswari Periasamy
  ஜூலை 09, 2012 @ 02:39:03

  வணக்கம் சகோதரி. எங்கள் நாட்டிற்கு வருகை புரிந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள நானும் ஆவலோடு உள்ளேன். ஜமாய்யுங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 09, 2012 @ 21:02:32

   மிக்க நன்றி சகோதரி. நன்கு கவனித்துத் தவறுகள் ஏற்படின் திருத்தித் தர வேண்டும்.
   கருத்திடலிற்கு மிக நன்றி
   தெய்வத் திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. sasikala
  ஜூலை 09, 2012 @ 08:31:50

  எங்களையும் உடன் அழைத்துச்சென்ற அனுபவம் கிட்டியது.

  மறுமொழி

 8. ramani
  ஜூலை 09, 2012 @ 09:37:31

  படங்களுடன் பதிவு மிக மிக அருமையாகத்
  துவங்கியுள்ளது.நாங்களும் உங்களுடன்
  பயணப்பட தயாராகிவிட்டோம்
  பயணம் இனிது சிறக்க நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. வே.நடனசபாபதி
  ஜூலை 09, 2012 @ 12:04:25

  உங்களோடு நானும் பயணிக்கிறேன். படங்கள் அருமை.

  மறுமொழி

 10. ரெவெரி
  ஜூலை 09, 2012 @ 14:52:46

  கோலா…கெண்டிங் போனோம் போன தடவை…இனிய அனுபவங்கள்… தொடருங்கள்…வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 11. SUJATHA
  ஜூலை 09, 2012 @ 20:00:55

  சுவாராஸ்யமான பயணமும், படங்களும் அருமை….வாசித்து மகிழ்ந்தோம்.

  மறுமொழி

 12. கீதமஞ்சரி
  ஜூலை 09, 2012 @ 23:46:30

  பகிரும் பயண அனுபவங்களைச் சுவைக்க நானும் தயார். தொடரும் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன் தோழி.

  மறுமொழி

 13. மகேந்திரன்
  ஜூலை 10, 2012 @ 14:50:43

  மலேசியா நான் பார்க்க விரும்பும்
  ஓர் நாடு சகோதரி…
  தங்களின் பதிவு மூலம் பார்க்கும்
  பெருமை எனக்கு…

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூலை 10, 2012 @ 16:44:02

  நான் பார்க்காது தவறியதெல்லாம் அட்வைஸ் ஆக எழுதுவேன். வாசித்தறியுங்கள் மகேந்திரன்.
  கருத்திடலிற்கு நன்றி.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 15. rathnavelnatarajan
  ஜூலை 13, 2012 @ 07:23:51

  Happy journey

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: