4. பயணம் (மலேசியா). 2

our photo.

 

4. பயணம் (மலேசியா). 2

டுபாய் தேசிய விமான நிலையத்தில் இறங்கினோம்.

மாபெரும் விமான நிலையம். 8200 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் பரந்துள்ளதாம். உத்தியோக பூர்வமாக 1960ல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதாம். மத்திய கிழக்கில் முதன் முதலாகத்திறக்கப் பட்ட விமான நிலையம் இதுவாம்
வருடத்திற்கு சுமார் 40 மில்லியன் பிரயாணிகள் பயணிக்கிறார்களாம். இது கூடிக் கொண்டே வருகிறதாம்.
ரேமினல் 3 –  2008 ல் திறக்கப்பட்டதாம்.

google photo.

இது உலகிலேயே மிகப் பெரிய கட்டடம் எனப்படுகிறது.
மத்திய கிழக்கில் இது மிகவும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகிறது. 130க்கம் மேலான விமானப்பயணங்களும் 220க்கும் மேலாக கால அட்டவணைப்படி சேரும் இடங்களாகவும் உள்ளது.

பிரயாண நெரிசலில், பரபரப்பில் 13வது இடத்தை உலகில் பெற்றது 2011ல்.

our photo.

4 மணி நேரம் நாம் அங்கு தங்கினோம்.

நிறைய தமிழர் ஆணும் பெண்ணுமாக விமான நிலையத்தில் வேலை புரிகின்றனர். எங்களைக் கண்டவுடனேயே தமிழா என்று கேட்டுப் பேசுகின்றனர். பெண்கள் குங்குமப் பொட்டோ, ஒட்டுப் பொட்டுடன் இலட்சுமிகரமாக விமான நிலைய உடையுடன் பணி புரிகிறார்கள். தமிழரைக் காண்பது அந்த அரேபிய விமான நிலையத்தில் மிகவும் சர்வசாதாரணமான காட்சியாக இருந்தது.

our photo. 
25 வருடத்திற்கும் மேலாக இப்படிக் காட்சியை நாம் காணவில்லையே! மகிழ்வாக இருந்தது.

our photo.

அழகு படுத்த செயற்கையாக பூந்தோட்டம் நீரூற்று செய்து வைத்துள்ளனர். மிக அழகாக, ஆடம்பரமாகவே விமான நிலையம் இருந்தது. என் கணவர் ”எண்ணெய்க் காசுகளைப் பிறகென்ன செய்வது! இப்படிக் கொட்ட வேண்டியது தானே!”…என்றார்.

our photo.

அதிகாலை 3 மணிக்கு விமானம் மலேசியாவிற்குப் புறப்பட்டது. பகல் 1.50க்கு கோலாலம்பூர் விமான நிலையம் சென்று சேர்ந்தது. இறங்கியதும் பயணப் பெட்டியைத் தானே தேடுவோம். எங்கு பெட்டிகளை எடுப்பது என்பதை அறிய முடியவில்லை. விசாரித்த போது ஒரு கோச் வண்டியில் ஏறி அடுத்த ரேமினலுக்குச் சென்று அங்குதான் பெட்டிகள் எடுக்க வேண்டுமாம். இது புது விதமாக எமக்கு இருந்தது. சுமார் ஒரு 5 ,10 நிமிட ஓட்டம். இறங்கினோம். இங்குதான் பாஸ்போட், மலேசியா அல்லாதவர் நிரப்பி வைத்த பத்திரம் முதலியவற்றைக் கொடுத்தோம். எதுவித தடைகளுமின்றி எமது பெருவிரல் அடையாளத்தை எடுத்த பின்பு மறு புறம் சென்றோம். காத்திருந்து உருளும் பட்டியலில் எமது பெட்டிகளை எடுத்தோம்.
மகனும்,மருமகளும் எம்மைக் கூட்டிச் செல்ல வந்திருந்தனர். ”…என்னப்பா இறங்கியவுடன் செக்கிங் பெட்டி என்றில்லாது குளம்பி – குட்டி ரெயின் ஏறியல்லவா இங்கு வந்தோம்!..” என்றோம். ”..அன்ரி உங்களுக்கு இதைக் கூற மறந்து விட்டேன்¨ என்றார் சாந்தி.
அங்கு இன்னொரு விமான நிலையமும் உண்டாம் அதில் இப்படியல்ல என்றார் சாந்தி. ”..சரி உடனே மகள் லாவண்யாவிற்கு இதைக் கூற வேண்டும் இல்லாவிடில் அவர்கள் வரும் போது எம்மைப் போன்று குளம்பி விடுவார்கள்..” என்றேன். கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புச்சோங் எனும் இடம் ஒருமணி நேரப் பயணம். சாந்தியின் வீடு. அங்கு பயணமானோம்.

அங்கம் 3ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-7-2012.

our photo.

 

                                      

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 11, 2012 @ 23:43:43

  படங்களும் தங்கள் விளக்கப் பதிவும்
  நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
  உணர்வைஏற்படுத்திப்போகின்றன
  தொடர்ந்து பயணிக்கிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2012 @ 06:56:21

   மிக நன்றி உடன் கருத்திடலிற்கு.
   கூகிள்க்கு – சென்று படங்கள், தகவல்கள் இன்னும் பெறலாம் கண்கொள்ளாக் காட்சியாகப் படங்கள் உள்ளது.
   நான் ஒரே ஒரு படம் கூகிளில் எடுத்தேன் மிகுதியாவும் நாம் எடுத்தது. (அவ்வளவு நன்றாக வராதது, அது வேறு விடயம்.).
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 12, 2012 @ 01:31:26

  இனிய அனுபவங்கள்… பகிர்வுக்கு நன்றி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. jaghamani
  ஜூலை 12, 2012 @ 01:59:54

  மகிழ்வான பயணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
  அருமையான படங்கள் !

  மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  ஜூலை 12, 2012 @ 02:10:48

  உங்கள் செலவில் துபாய் (டுபாய்) விமான நிலையத்தை பார்த்துவிட்டேன்! புகைப்படங்களும் விளக்கங்களும் அருமை.தொடர்கிறேன்.

  மறுமொழி

 5. Viduthalai R. Regina
  ஜூலை 12, 2012 @ 06:54:16

  //தமிழரைக் காண்பது அந்த அரேபிய விமான நிலையத்தில் மிகவும் சர்வசாதாரணமான காட்சியாக இருந்தது.//
  நான் சென்ற மே மாதம் பஃகரின் வழியாக சென்னை சென்றேன். அங்கும் அதே கதைதான், எங்கு பார்த்தாலும் தமிழர்கள். எங்கள் விமானம் ஒரு நாள் தாமதப்பட்டதால் அங்கு ஒரு விடுதியில் ஒரு நாள் தங்க நேர்ந்தது. ஊருக்குள் சென்று பார்த்தால், தோட்டவேலை முதல் பாலம் கட்டும் வரை எல்லா இடத்திலும் தமிழர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2012 @ 07:02:13

   ”…தோட்டவேலை முதல் பாலம் கட்டும் வரை எல்லா இடத்திலும் தமிழர்கள்…”
   உண்மையில் மனம் மிக சந்தோசமாக இருந்தது அப்படி தமிழரைப் பார்க்க. இப்படி வேலைகளால் எத்தனை ஆபத்தைத் தமிழர் சந்திக்கிறார்கள் இது வேற விடயம். மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. Dhavappudhalvan
  ஜூலை 12, 2012 @ 07:41:53

  அழகு தான் துபாய் பற்றிய செய்திகளும், படங்களும். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. விச்சு
  ஜூலை 12, 2012 @ 09:09:15

  பயணமும் படங்களும் அருமை. புகைப்படம் எடுத்த கைகளுக்கு தங்க வளையல். சார் எடுத்து கொடுப்பாங்க.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2012 @ 17:11:44

   உங்கள் நகைச்சுவைப் பதில் சிரிப்பு வந்திட்டுது. கணவருக்கும் சொல்லி இருவரும் சிரித்தோம்.
   மிக்க நன்றி சகோரா விச்சு. (உங்களிலும் நான் வயது மூத்தவள்தான் உரிமையோடு பெயர் கூறுகிறேன்.)
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  ஜூலை 12, 2012 @ 15:23:36

  தொடர்ந்து பயணிக்கிறோம்…வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 12, 2012 @ 17:22:07

  You and கோப்பாய் குட்டி திவியன் like this..in FB

  Sathi K Sathiya:-
  beautiful.
  Vetha ELangathilakam :-
  Thivyan Thank you. and
  from canada! (Sathi. K. Sathiya) Thank you…..
  Umah Thevi and Dhavappudhalvan Badrinarayanan A M like this..in வித்யாசாகர்
  Vetha:- Thank you Umah and sakothara….God bless you two
  Yashotha Kanth and Vishnu Rajan like this..

  Vishnu Rajan:-
  நல்ல கட்டுரை சகோ .. அருமை ..
  Yashotha Kanth :-
  அருமை அக்கா7·
  Vetha ELangathilakam:-
  நன்றி விஷ்ணு, யசோ. இறையாசி நிறையட்டும்…..
  Mageswari Periasamy likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam – FB.
  Mari Muthu C and Hani Maas like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்- FB

  Mari Muthu C:-
  விமான நிலையம் புகைப்படங்கள் அருமை.
  Vetha ELangathilakam:-
  Thank you Mr Mari Muthu and Mr. Hani Maas…..God bless you all.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஜூலை 13, 2012 @ 02:05:07

  விமான நிலையத்தில் உண்டாகும் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு, மற்றவருக்கு உதவும் வகையில் பதிவிட்டிருப்பது சிறப்பு.. படங்கள் அழகு. தொடரும் பயணப் பகிர்வுக்கு நன்றி தோழி.

  மறுமொழி

 11. கோமதிஅரசு
  ஜூலை 13, 2012 @ 11:45:33

  அருமையான பயணக் கட்டுரை.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  மறுமொழி

 12. SUJATHA
  ஜூலை 15, 2012 @ 09:39:25

  பயணக்கட்டுரை, தொடர்பயணம். புகைப்படங்கள் அருமை…..

  மறுமொழி

 13. SHAN NALLIAH GANDHIYIST
  ஆக 04, 2012 @ 06:49:57

  GREAT…WRITE MORE..!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: