242. சடங்குகள். (முதலாவது நூலில் வெளியான கவிதை)

 

சடங்குகள்.

கோத்திரம் தளிர்க்கச் செய்யும் கிரியை
சாத்திர விதிப்படி செய்யும் கிரியை.
மாத்திட முடியாத மதமுறையென்று
ஏத்தியே நாமுமெடுக்கும் சடங்குகள்.

ழுவாத வகையிலிவை வழக்கங்கள்.
பழுதாக வகையில்லையிவை நலங்கள்.
முழுதாகக் கூறினாலிவை யாவும்
எழுதாத சட்டங்களெனவாகும்.

ட்ட நின்று வேடிக்கை பார்த்துத்
திட்டமின்றிப் பல கதைகள் கூறி
சட்டம் சடங்கு எதற்கென்று
மட்டம் தட்டும் மனிதருமுண்டு.

னாவசிய ஆடம்பரச் சடங்குகள்
பணவீக்கம் பறைசாற்றும்  சடங்குகள்
வழக்கங்கள் குளம்பிய சடங்குகள்
புலம்பெயர்ந்த நம் சடங்குகள்.

லைமுறைப் பாரம்பரிய சடங்குகள்
இளைய தலைமுறைக்கு அனாவசிய சடங்குகள்.
கலாச்சார நெரிசலிலிது கலக்க வெளிப்பாடு.
காலப் போக்கிலே மாறியும் மறையலாம்.

டங்குகள் சமூகத்தின் கலாச்சாரத் தூண்கள்.
சடங்குச் சம்பிரதாயம் பேணற்குரியது.
சடங்குகள் மனிதனின் காவலரண்கள்.
சடங்குகளின் புனிதம் வாழ்விற்குத் திண்மை.

டங்குகள் காலப்போக்கிலொரு
படங்காக வீசப்படலாம். பல
மடங்காக ஒரு வேளை பேணப்படலாம்.
முடங்குதலும், விளங்குதலும் தலைமுறைப் பாரம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-5-1999

(ரி.ஆர்.ரி) தமிழ் ஒளித் தொலைக்காட்சிக் கவிதை பாடுவோமில் 9-5-1999ல் ஒளிபரப்பானது)

                                 
 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 15, 2012 @ 09:33:31

  பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை… வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 15, 2012 @ 09:56:15

  Thaya Sinnathurai likes this..in Pillayar Kovil – Herning, Denmark- FB
  Sundra Kumar likes this.in ஒன்றே குலம் ஒருவனே தேவன்- FB

  Ganesalingam Arumugam, Jayathas Thas and Fatima Begum likes this..in கனவு விழிகள்- FB

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
  சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு மார்க்கங்கள் இருக்கின்றன இறைவனை அடைவதற்கு என்று படித்த் ஞாபகம்!! அதாவது இந்து மதத்திலுள்ள கிரிகை முறைகளை நாம் நன்றாக பின்பற்றி வந்தாலே போதும்!! அற்புதம் அம்மா!! வாழ்த்துக்கள்!·
  Vetha ELangathilakam:-
  பாதிக்கு மேலே அதைக் கைவிடுவதிலேயே தானே இங்குள்ளோர் உள்ளோம். அவை எவ்வளவு நன்மை செய்தன என்பதை நாம் அனுபவித்து அறிந்தோம்.. மிக்க நன்றி சகோதரா….

  மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  ஜூலை 15, 2012 @ 10:44:58

  சடங்குகள் சமூகத்தின் கலாச்சாரத் தூண்கள்தான். ஆனால் அதை வணிக ரீதியாக சிலர் மாற்ற முயற்சிக்கும்போது, நீங்கள் சொல்வதுபோல் காலப் போக்கிலே மாறியும் மறையலாம். கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  ஜூலை 15, 2012 @ 12:06:54

  சடங்குகள் சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை என்று ஒரு சிலர் கூறலாம்.அர்த்தமற்றவை சில சிமயங்களில் மகிழ்ச்சியை தருவதுண்டு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 15, 2012 @ 12:20:32

   நிசம் சகோதரா .சிலவேளை இக் கால இளையருக்கும் அப்படித் தோன்றலாம் எமக்கும் தான்.
   மாற்றங்களை எல்லோரும் விரும்புவர். அது வரம்பினுள் இருந்தாலும், இல்லூவிடிலும்.
   மிக்க நன்றி தங்கள் கருத்திடலிற்கும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. Venkat
  ஜூலை 15, 2012 @ 13:53:54

  நல்ல பகிர்வு.

  மறுமொழி

 6. athisaya
  ஜூலை 16, 2012 @ 08:21:45

  பாரம்பரியங்கள், கிரியையும் முற்றிலும் தவறு என்பதற்கில்லை…!அதிலும் எத்தனையோ அர்த்தங்கள் நிச்சயமாக உண்டு. பகிர்விற்கு மிகவே நன்றி.வாழ்த்துக்கள் சொந்தமே!

  மறுமொழி

 7. SUJATHA
  ஜூலை 16, 2012 @ 21:15:50

  சடங்குகள் சமூகத்தின் கலாச்சார சின்னங்கள்.இவை ஆடம்பர சடங்குகளாக மாறி பணவீக்கத்தை மாற்றும் சடங்குகளாக மாறுமாயின் இவை கலாச்சார சடங்குகள் அல்ல. உண்மை கவிதையில் வெளிப்படுத்தியமை அருமை…..

  மறுமொழி

 8. பழனிவேல்
  ஜூலை 17, 2012 @ 10:15:16

  “தலைமுறைப் பாரம்பரிய சடங்குகள்
  இளைய தலைமுறைக்கு அனாவசிய சடங்குகள்.”

  உண்மை…இன்றைய தலைமுறையில்

  “பல விழாக்களை இன்று ஒரு
  சடங்காய் மாற்றினோம்.
  பல சடங்குகளை பெரும்
  விழாவாய் போற்றுகிறோம்.”

  அழகாய் சொன்னீர்கள்…

  மறுமொழி

 9. மகேந்திரன்
  ஜூலை 18, 2012 @ 02:10:02

  தலைமுறையின் பாரம்
  என்று சொன்னது நிதர்சனமான உண்மை சகோதரி…
  அடுத்த தலைமுறையினர் கொண்டுசெல்வது என்பது
  அவரவர்களின் நிலைகளைப் பொறுத்தது…
  சிரமேற்கொண்டு பேணிக்காக்கவும் படலாம்
  இல்லையேல் சிதறுண்டும் போகலாம்…
  பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடையம்..

  மறுமொழி

 10. திருமதி.மனோ சாமிநாதன்
  ஜூலை 18, 2012 @ 18:30:41

  அருமையான கருத்துக்கள்!!

  மறுமொழி

 11. கோமதிஅரசு
  ஜூலை 19, 2012 @ 16:05:41

  சடங்குகள் சமூகத்தின் கலாச்சாரத் தூண்கள்.
  சடங்குச் சம்பிரதாயம் பேணற்குரியது.
  சடங்குகள் மனிதனின் காவலரண்கள்.
  சடங்குகளின் புனிதம் வாழ்விற்குத் திண்மை.//
  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
  சடங்குகளின் காரணத்தை புரிந்து கொள்ளாமல் அது வெறும் விழாவாக ஆடம்பரமாய் மாறி போவது தான் கொடுமை.
  சடங்களின் புனிதம் காக்கப்படவேண்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2012 @ 12:36:52

   மக்கள் நிறைய மாறி அனைத்தையும் மாற்றுகிறார்கள்.
   அதுவே மக்களிற்குக் குளப்பமாக உள்ளது. நீங்கள் கூறுவதும் சரியே.
   மிக நன்றி சகோதரி. தங்கள் வரிக்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: