4. பயணம் மலேசியா .3

 

4. பயணம்   மலேசியா .3

புச்சோங் (Puchong )பயணமானோம். போக்கு வரவு நெரிசல் இல்லாததால் 1 மணி நேரத்தில் சாந்தி வீடு சென்றோம். (நடுவில் வாகனம் ஓடியபடி சாந்தி தன் வீட்டிற்குத் தகவல் கொடுத்தார். உணவு சமைத்துள்ளதாகத் தாயார் கூறினார்கள்.)

அங்கு உணவருந்தினோம்.  ஆறதலாக இருந்து பேசி இரவு போல நாம் தங்கும் வாடி வீட்டிற்கு சாந்தியும், மகன் திலீபனும்  மறுபடியும் எம்மை அழைத்துப் போனார்கள். அரை மணி நேர ஓட்டம் தான்.

சீனாக்காரனின் வாடிவீடு. 101 லேக் வியூ ஹோட்டல். ஒரு நாளிற்கு 90 றிங்ஙெட். இதை 2ஆல் பெருக்கினால் டென்மார்க் 180 குறோணர்கள். சாந்தி தான் இவற்றை ஒழுங்கு செய்திருந்தார். முதலில் 3 நாட்களிற்குப் பதிவு செய்தோம்.

சாந்தியினது வரிசை வீடுகள் (ரெறாஸ கவுஸ்). 25 வருடமாக வாழ்கிறார்களாம். மேலே 3 படுக்கை அறைகள் கீழே இருக்கையறை, குசினி, குளியலறை. முன்னாலே மூடிய விறாந்தை (அல்லது போஃட்டிக்கோ) உள்ளது.

இரவு அறையில் நல்ல குளியல் எடுத்தோம். சுடுநீரும் உண்டு. இது தானே 25 வருடமாகப் பழகியது. ஆயினும் நான் குளிர் நீரிலேயே குளித்தேன். கணவர் சுடுநீரில் குளித்தாராம். குளிருட்டியை எமக்குப் பிடித்தமான அளவில் வைத்து நன்றாகத் தூங்கினோம்.

காலையில் எலாம் அடிக்கவோ, வேலைச் சிந்தனையோ இன்றி ஆறுதலாக எழுந்து மறுபடி குளித்து வெளிக்கிட்டு அருகிலிருந்த Pelita உணவகத்திற்கு சென்றோம் காலையுணவிற்கு.

(இறுதியாகப் அங்கிருந்து டென்மார்க் வரப் பயணப் படும் போது, பயணக்கட்டுரைக்கு உதவுமே என்று அவசரத்தில் காரில் இருந்தபடியே நான் தட்டிய படம் இது.)

இந்த உணவகம் மலேசியா முழுக்க சங்கிலி போல உள்ளது. மலேயாக்காரன், சீனாக்காரனுக்குச் சொந்தமானது. இந்தியா, பங்களாதேஷ் வாலிபர்கள் வேலை செய்கிறார்கள். 

மசாலா தோசை ,ரவா தோசை எனப் பலவாறான தோசைகள், (உழுந்துத் தோசையை நினைக்கக் கூடாது) பரோட்டா என காலை, மாலையுணவாகவும்,  பகலில் சோறு, கடலுணவு வித விதமாகவும், (ஹலோ!..ஹலோ! நான் தாவர பட்சணி! கன்னா பின்னாவெனக் கற்பனை ஓட்ட வேண்டாம்), நூடில்ஸ் எல்லா நேரமும் என்றிருந்தது.

ஆனால்!…ஆனால்!…ஐய்யோ!……..

தேனீருக்கு டின்பாலோ அல்லது மாவோ தான் கரைக்கிறார்களாம். சப்பென்று போய்விட்டது. பசும்பால் தேனீருக்கு விசேட கடைக்குச் செல்ல வேண்டுமாம். இந்தக் கடையில் அங்கு நின்ற நாட்களில் பலவகையாக உணவுகளை ருசித்துப் பார்த்தோம்.

அருகிலேயே பெரிய ஷொப்பிங் மால் உள்ளது (101   shoping mall  ).

அங்கு சுற்றிப் பார்த்து   (3 அடுக்கு  வியாபார நிலையம் சினிமா தொடங்கி அத்தனையும் உண்டு.)மொபைல் சிம் காட்  எல்லாம் வாங்கி, பகல் இரவு உணவும் முடித்து  அறைக்குத் திரும்பினோம்.  அன்றைய பொழுது அப்படியே போனது. வெயிலும், வியர்வையும். காலையும் மாலையும் குளிப்பது தான்.

அடுத்த அங்கத்தில் 4ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-7-2012.

                                 

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 18, 2012 @ 23:32:35

  படங்கள் மிகத் துல்லியம்
  விளக்கிச் செல்லும் விதமும் அருமை
  நேரடியாகப் பார்ப்பதைப் போன்றிருந்தது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்
  (அடைப்புக் குறிப்புகள் கூடுதல் சுவாரஸ்யம்)

  மறுமொழி

 2. athisaya
  ஜூலை 19, 2012 @ 01:41:33

  தொடருங்கள்.வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஜூலை 19, 2012 @ 02:10:57

  உங்கள் மலேசியா பயணம் இனிமையாக இருக்கிறது.
  தொடர்ந்து வருகிறேன்..

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 19, 2012 @ 02:23:11

  இனிய பயண அனுபவம்… படங்கள் எல்லாமே அருமை…

  பகிர்வுக்கு நன்றி…
  தொடருங்கள்…வாழ்த்துக்கள்…

  பாடல் வரிகள் ரசிக்க : “உன்னை அறிந்தால்… (பகுதி 1)”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2012 @ 07:11:13

   சகோதரா மிக நன்றி தங்கள் ஆதரவிற்கு – கருத்து, வருகைக்கு. இறையாசி கிட்டட்டும்.
   தங்களிற்குக் கருத்து இட்டுள்ளேன்
   மிக நன்றி அழைப்பிற்கு.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 19, 2012 @ 07:15:44

  நீலா தீராத விளையாட்டுப் பூனை likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙ – FB

  Vetha ELangathilakam:-
  Thank you. God bless you..

  Sham Masud, Jesu Thasan, Yashotha Kanth, Vishnu Rajan likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் – FB

  Vetha ELangathilakam:-
  Thank you Sham!…God bless you….
  Vishnu Rajan:-
  நல்ல பகிர்வு அன்பு சகோதரி ..
  .Yashotha Kanth:-
  நல்ல பகிர்வு அன்பு சகோதரி …
  Vetha ELangathilakam:-
  Thank you Vishnu and Yashotha. God bless you all…
  Sunda Kumar likes this in FACE MUseum.

  மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  ஜூலை 20, 2012 @ 02:24:44

  புகைப்படங்களும் அருமை. விளக்கமும் அருமை. தொடர்கின்றேன்.

  மறுமொழி

 7. rathnavelnatarajan
  ஜூலை 22, 2012 @ 13:12:42

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. சக்தி சக்திதாசன்
  ஜூலை 24, 2012 @ 09:48:30

  அன்பினிய சகோதரி வேதா,
  பயணத்துடன் எம்மையும் இணைத்துச் செல்வது போன்ற உணர்வினை அளிக்கும் வகையில் மிகவும் அருமையாக கட்டுரை வரைந்துள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: