243. இல்லறம்..நல்லறம்..

 

 

இல்லறம்..நல்லறம்..

(நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு)

 

நாற்பொருள் கண்டோம் எம்
ஏற்புடை இல்லறம் நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்றோம்.
சுற்றமுடன் நிறைவாய்க் கழித்தோம்.
 
ன்ப இளமையில் தோன்றியது
அன்பு நாற்றை ஊன்றியது.
பண்புடை 45 வருடங்களிது.
நன்றென நிறையும் மகிழ்விது.

தோள்சாயுமுன் ஆழ்ந்த அன்பு.
நாள்தோறும் தோழனாய் நட்பு.
வாள் போலவும் கோபக் கொதிப்பு.
ஆள்கின்றுவோர் அரசனாய் நினைப்பு.

நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.

தொல்லையெனப் புத்தகங்கள் வாசியாமை வெறுக்கும்.
தொல்லைகள் அனைத்தும் பேசாமை வெறுக்கும்.
நல்லதும் அதிகம் பேசாமை கசக்கும்.
பொல்லாத புகை ஊதுவதும் வெறுக்கும்.

ன்னோடு பயண உல்லாசம் பிடிக்கும்.
உன்னுடைய நிர்வாகத் திறமை பிடிக்கும்.
என்னைப் பிள்ளையாய்ப் பாதுகாப்பாய் நன்றி.
நன்னயமான உன் அன்புக்கு நன்றி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
21-7-2012.

 

 

                        

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. விச்சு
  ஜூலை 21, 2012 @ 02:30:55

  குறைந்து வரும் இளமைக்கு நன்றி. என்ன பெருந்தன்மை. இயற்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2012 @ 08:24:23

   சகோதரா நாம் எத்தனை வீரம் பேசினாலும் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த வரிகள் அது.
   இதைக் கணவரோடும் சொல்லிச் சிரித்தேன் விச்சு இப்படி எழுதியுள்ளார் என்று. அவரும் தலையாட்டிச் சிரித்தார்.
   மிக்க நன்றி மனம் திறந்து எழுதியதற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. விச்சு
  ஜூலை 21, 2012 @ 02:32:10

  அனைத்து வரிகளுமே அருமை… யதார்த்தமானது,, வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஜூலை 21, 2012 @ 05:18:53

  இன்ப இளமையில் தோன்றியது
  அன்பு நாற்றை ஊன்றியது.
  பண்புடை 45 வருடங்களிது.
  நன்றென நிறையும் மகிழ்விது.//

  அன்பின் ஆழத்தை சொல்லும் கவிதை அருமை.
  45 வது திருமண நாளுக்கு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2012 @ 08:20:20

   சகோதரி உங்களுக்குக் கருத்திட முடியவில்லையே எனும் ஆங்கம் தான்.
   விரைவில் புதுக் கணனி வாங்கி சந்திப்பேன்.
   தங்கள் வாழ்த்து வரிகளிற்கு மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. sasikala
  ஜூலை 21, 2012 @ 07:05:13

  உன்னோடு பயண உல்லாசம் பிடிக்கும்.
  உன்னுடைய நிர்வாகத் திறமை பிடிக்கும்.
  என்னைப் பிள்ளையாய்ப் பாதுகாப்பாய் நன்றி.
  நன்னயமான உன் அன்புக்கு நன்றி.
  அனைத்து வரிகளுமே அற்புதம் .

  திருமண நாள் வாழ்த்துக்கள் கூற வயதின்றி வணங்குகிறேன் வாழ்த்துங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2012 @ 08:16:07

   சசி உமது கருத்து வரிகளை வாசிக்கக் கண்களில் நீர் பனித்தது. ஏனோ தெரியவில்லை. அது ஆனந்தக் கண்ணீhரகவும், இவ்வுலக நடைமுறைகளையும் எண்ணியதாகவும் இருக்கலாம்.
   சகல நலங்களும் பெற்று உலகில் நீடூழி வாழ்க என வாழ்த்துடன், கவியுலகில் கொடி கட்டிப் பறக்க இறையாசி கிட்டட்டும் சகோதரி. கருத்திற்கு மிக்க மிக்க நன்றியடா.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 21, 2012 @ 07:40:19

  வாழ்த்துக்கள் சகோதரி !

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 21, 2012 @ 08:44:39

  Viduthalai R. Regina likes this..in Tamilsk velfærds forening, AATO-( FB)

  Viduthalai R. Regina :-
  வாழ்த்துக்கள்
  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி சகோதரா… இறையாசி நிறையட்டும்…
  Yashoth Kanth> Jesu Thasan likes this in…ஒன்றே குலம் ஒருவனே தேவன் (FB).
  Nayaki Krishna likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam (FB)
  Sundra Kumar likes this..

  Sundra Kumar:-
  Therintha vidayam.Meendum meendum therivatharku (padikka( aarvam.THANK YOU.Manmathakalaiyum solli therivathilai?hahahahaha. LikeUnlike · 1.Vetha ELangathilakam:-
  Nanry..

  மறுமொழி

 7. மகேந்திரன்
  ஜூலை 21, 2012 @ 08:49:22

  மனம் வென்ற மன்னவருடன்

  மகிழ்சோலை புகுந்து

  மாபெரும் இல்வாழ்வில்

  மாமாங்கம் படைத்திட்ட சகோதரி
  இன்னுமோர் யுகம் கடந்து

  இல்லறம் போற்றிடவே

  இச்சகோதரனின் இனிய வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 21, 2012 @ 11:12:26

   வாவ்! கவி மன்னனின் வாழ்த்து. மகிழ்ச்சி
   நன்றி மன்னா… (இது பகிடியல்ல ..அருமைக் கவி படைப்பீர்! இது பொருந்தும். நானும் ரசிப்பேன்.)
   இறையாசி நிறையட்டும்….

   மறுமொழி

 8. SUJATHA
  ஜூலை 21, 2012 @ 13:58:06

  நாற்பொருள் கண்டோம் எம்
  ஏற்புடை இல்லறம் நல்லறம்.
  குற்றம் குறையையும் ஏற்றோம்.
  சுற்றமுடன் நிறைவாய்க் கழித்தோம்!!!!!!
  அருமை…..நிறைந்த வாழ்விற்கும் சுதந்திர நன்றி!!!!! வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 9. சத்ரியன்
  ஜூலை 21, 2012 @ 15:11:18

  நல்வாழ்த்துகள். அனுபவ வாழ்வை அற்புதமாக கவிதையாக்கி இருக்கின்றீர்கள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 21, 2012 @ 15:36:43

  Vishnu Rajan, Yashotha Kanth and 2 others like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  Vishnu Rajan ‎// தோள்சாயுமுன் ஆழ்ந்த அன்பு.
  நாள்தோறும் தோழனாய் நட்பு.
  வாள் போலவும் கோபக் கொதிப்பு.
  ஆள்கின்றுவோர் அரசனாய் நினைப்பு.

  … நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
  குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
  குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
  நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.// அற்புத கவிதை சகோ .. அருமை …
  Vetha ELangathilakam:-
  ஓ!..வாசித்தீரா!…மிக்க நன்றி விஷ்ணு கருதிடலிற்கு. மிக மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் நிறையட்டும்….
  .Yashotha Kanth:-
  நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
  குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
  குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
  நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.// அற்புத கவிதை சகோ .. அருமை ..///
  Vetha ELangathilakam:-
  ஓ!..மிக்க நன்றி யஷோ கருத்திடலிற்கு. மிக்க மகிழ்வும் கூட. தெய்வக் கிருபை நிறையட்டும்….

  மறுமொழி

 11. T.N.MURALIDHARAN
  ஜூலை 22, 2012 @ 11:09:47

  //நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
  குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
  குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
  நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.//

  வித்தியாசமான வரிகள். அருமை.

  மறுமொழி

 12. AROUNA SELVAME
  ஜூலை 22, 2012 @ 13:01:36

  கோவை கவி அவர்களே. உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 22, 2012 @ 13:43:40

   அருணா செல்வம் சகல துறைகளிலும் முன்னேறி பேரும் புகழுடன் வாழ இறையருள் கிட்டட்டும்.
   எழுத்துலகில் கொடிகட்டிப் பறக்க நல்வாழ்த்து.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூலை 24, 2012 @ 04:14:03

  “நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
  குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
  குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
  நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.”

  அனுபவ வாழ்கையை அழகாய் வரிகளாய் சொன்னீர்கள்….

  வாழ்க வளமுடன்…
  வளர்க நலமுடன்…
  வெல்க புகழுடன்…

  மறுமொழி

 14. சக்தி சக்திதாசன்
  ஜூலை 24, 2012 @ 09:45:29

  அன்பினிய சகோதரி வேதா,
  இல்லறத்தின் நல்லறத்தை சொல்லறம் கொண்டு விளக்கி அருமையான கவிதை படைத்தீர்கள். வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 15. கீதமஞ்சரி
  ஆக 02, 2012 @ 03:18:35

  தாமதமாய் வந்தாலும் தவறாமல் என் வாழ்த்து தங்களைச் சேரும். தங்களைப் போன்றவர்களின் மனமொன்றிய வாழ்க்கை சட்டென்று முகஞ்சுருங்கி விலகும் இளந்தலைமுறையினருக்குப் பாடம். நல்ல கவிதை. கவிதையினூடே கணவருக்கான கரிசனம் கண்டு மனம் நெகிழ்கிறது. வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 05, 2012 @ 16:58:56

   ”,,தாமதமாய் வந்தாலும் தவறாமல் என் வாழ்த்து தங்களைச் சேரும். தங்களைப் போன்றவர்களின் மனமொன்றிய வாழ்க்கை சட்டென்று முகஞ்சுருங்கி விலகும் இளந்தலைமுறையினருக்குப் பாடம். நல்ல கவிதை. கவிதையினூடே கணவருக்கான கரிசனம் கண்டு மனம் நெகிழ்கிறது. வாழ்த்துக்கள் தோழி…”

   மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி தங்கள் வாழ்த்திற்கும், வரிகளிற்கும்.
   ஆண்டன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: