4. பயணம் மலேசியா – 4

Goal of 750 Posts Completed. Congratulations! —Wordpress.com

 

4. பயணம் மலேசியா – 4

எமது பயணத் திகதிகளை இங்கு நான் குறிப்பிடவில்லை மகனின் திருமணத்திற்கு 5 நாட்களின் முன்னர் பரிசம் போட்டனர்.

பரிசம் என்றாலே என்னவென்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் அப்படி நாம் செய்வதில்லை.

எல்லாவற்றையும் எமக்காகவும் செய்யுங்கள் நாம் வருகிறோம் என்றே நேரத்துடன் அங்கு சென்றோம்.

சுமார் 40, 50 மக்கள் சாந்தியின் உறவினர்கள் கூடி பரிசம் போடப்பட்டது.

சினிமாவில் வருவது போல ஆனால் கோயில் குருக்கள் (ஐயர்) வந்து இன்னாருக்கு இன்னாரை மணமுடித்து வைக்கிறோம் என்று கூறி, பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி, சேலை மாலை என்று தட்டுகள் மாற்றி,

(கிட்டத்தட்ட தெத்தம் பண்ணுவது போலக் கொஞ்சம்) அவர்கள் பெண்ணை எமக்குத் தருவது போலவும், பின்னர் சாந்தி சேலை மாற்றி வந்து வீட்டிற்கு விளக்கேற்றினார்.

ஐயரிடம் கேட்டேன் இது ஏன் செய்வதென்று. வீட்டிற்கு விளக்கேற்றுவதே இதன் முக்கிய கருத்து என்றார்.

இரவுணவு, படங்கள், வீடியோவென கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கல்யாண வீடாகவே இருந்தது – நடந்தது. (என்ன! மாப்பிள்ளைப் பகுதியில் நாமிருவருமே. வேலை, லீவு என்பதால் மற்றவர்கள் இனித்தான் வருவார்கள்.)
இரவு பரிசம் முடிய கூடி இருந்து கதைத்து, வந்த விருந்தினர்கள் யாவரும் செல்ல இரவு ஒரு மணி போல எம் அறைக்குச் சென்று, நல்ல நித்திரை கொண்டோம்.

இது எமது அறை யன்னலூடான காட்சி. கண்ணுக்கு அழகாக உள்ளது. (மழை பெய்ய புழுத்த நாற்றம், சாக்கடை நாற்றம்)

அடுத்த நாள் – காலை ஒன்பதரை, பத்து மணி போல சாந்தியும், திலீபனும் சாந்தியின் நீல நிறக் காரில் வந்து எங்களைத் தங்கள் வீட்டுக்குக் கிட்ட உள்ள டே ரு டே (day to day    ) எனும் உணவகத்திற்கு காலையுணவிற்காக அழைத்துச் சென்றனர்.

இங்கு தான் பசும்பால் கலந்த தேனீர் கிடைக்கும். சாந்தியின் அப்பா, அம்மா சாந்தியின் தங்கை பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உணவுண்டோம்.

அப்பம் காலையுணவாக எடுத்தோம். நாம் தேங்காய்ப் பாலை அப்பத்தின் மேல் விட்டு சூட்டில் உறைய வைத்து (சுட்டு) உண்போம். இவர்கள் தேங்காய்ப் பாலை வேறாக, குட்டித் டம்ளரில் வைத்தனர். ஆனால் சும்மாவே அப்பம் சாப்பிட மிகச் சுவையாக இருந்தது.

தேனீரும் ம்..ம்….மிக மிக சுவை. ( ஐ லவ் பால் தேனீர் – என் உயிர்)
சாந்தியின் தங்கை மகள் அப்பத்தை தேங்காய்ப் பாலில் குளிப்பாட்டிச் சாப்பிட்டார்.
என் கணவர் அப்பத்திற்குக் கட்டைச் சம்பல் கேட்டார். (மிளகாய் அரைத்து, உப்பு, புளி வெங்காயம், மாசி கலப்பது). உடனே முதலாளி போய்க் கொண்டு வந்தார்.

இதற்கிடையில் நாம் வெளி நாட்டுக்காரர் என்று ஓரே கலகலப்பாக்கி விட்டனர். முதலாளி தன் மனைவியைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு சாந்தி வீடு அப்படி இப்படி என்று நாட்கள் செல்ல மகளும் துணைவரும் இலண்டனில் இருந்து வந்தனர். எமக்கு அடுத்தடுத்த அறையையே அவர்களிற்கும்
பதிவு பண்ணியிருந்தனர். திருமணம் முடியும் வரை வெளியே உலாத்துவதைத் தவிர்த்திருந்தோம்.

மகளுடன் மசாஜ், முக அழகு, காலழகு செய்ய என்று இடம் தேடித் திரிய எம்மோடு எமது துணைகளும் வந்து அந்தப் பெரிய மாலில் செய்தோம், சுற்றினோம்.

அங்கேயே உணவு என்று நன்றாகவே பொழுதைக் கழி(ளி)க்கலாம்.

அவ்வளவு அழகு, நவீனம்.

மிகுதியை அங்கம் 4ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2012.

                                                

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. N.Rathna Vel
  ஜூலை 27, 2012 @ 00:24:13

  மணமக்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள்.
  நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. அழகாக படங்களுடன் தொகுத்திருக்கிறீர்கள்.
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 06:48:29

   வெற்றியின் அப்பா அம்மா திருமணம் தானிது.
   மிக நன்றி ஐயா தங்கள் கருத்துக் பதிவிற்கு .
   மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. ramani
  ஜூலை 27, 2012 @ 00:43:12

  படங்களும் நிகழ்வு குறித்த விளகங்களும்
  நிகழ்வினை நேரடியாகப் பார்ப்பதை போன்ற
  உணர்வினை ஏற்படுத்துப் போகின்றன
  750 வது பதிவு என்பது ஒரு அசுரச் சாதனையே
  தங்களது தரமான பதிவுகள் இன்னும் பல்லாயிரமாய்
  பெருகிவளர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 06:50:28

   ”…படங்களும் நிகழ்வு குறித்த விளகங்களும்
   நிகழ்வினை நேரடியாகப் பார்ப்பதை போன்ற
   உணர்வினை ஏற்படுத்துப் போகின்றன..”…
   மிக நன்றி சகோதரா ரமணி, தங்கள் கருத்துப் பதிவிற்கு .
   மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 27, 2012 @ 03:57:31

  மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்…
  750 வது பதிவு – மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 05:27:23

   சகோதரா மிக மிக நன்றி தங்கள் வருகை, கருத்திற்கு.
   தவறாது எல்லாப் பதிவுகளுக்கும் (இதற்குக் கருத்திடக் கூடாது, இதற்குக் கருத்திடலாம் என்று பேதமின்றிக்) கருத்திடுகிறிர்கள்.
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும் சகோதரா.

   மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 27, 2012 @ 05:22:21

  Ganesalingam Arumugam, ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in கனவு விழிகள் – FB
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
  தங்கள் பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் அம்மா!!
  Vetha ELangathilakam:-
  Nanry. …

  Umah Thevi likes this..in வித்யாசாகர் – FB
  Hani Maas, Zahira National Collage, Nelai Selvin, Anna University of Technology,Coimbatore likes this in முப்பொழுதும் உன் நினைவுகள் – FB
  Abira Raj like this..in கனவு விழிகள் FB

  மறுமொழி

 5. வே.நடனசபாபதி
  ஜூலை 27, 2012 @ 07:20:30

  750 பதிவுகளை வெற்றிகரமாக இட்டதற்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிவைப்படித்தபோது, நானும் மலேசியாவில் இருப்பதுபோல் உணர்ந்தேன்.

  தொடருங்கள். தொடர்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 19:45:49

   ”..பதிவைப்படித்தபோது, நானும் மலேசியாவில் இருப்பதுபோல் உணர்ந்தேன்….”
   மிக்க மகிழ்ச்சி கூட வருவதற்கு.
   கருத்திற்கும் நன்றி.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 6. Mageswari Periasamy
  ஜூலை 27, 2012 @ 07:22:28

  வணக்கம் சகோதரி, நலமா? நிச்சயம் நலமாகத் தான் இருப்பீர்கள். ஏனெனில் மலேசியக் காற்றும், அப்பமும், பசும் பால் தேனீரும் சும்மா ஆளை சுண்டியிழுக்குமே. அங்குல அங்குலமாக ஆனந்தமாக அனுபவித்திருப்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது உங்கள் கட்டுரையில். மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சுற்றுலா.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 19:50:57

   மிக்க நன்றி சகோதரி. தவறுகள் ஏற்பட்டால் நிச்சயம் திருத்த உதவ வேண்டும்.
   கருத்திடலிற்கு நன்றி…..நன்றி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  ஜூலை 27, 2012 @ 08:04:07

  புதிதாய் இணைந்த
  புது மணத் தம்பதியினருக்கு
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 19:54:05

   மகேந்திரன்! அவர்களிற்கு ஒரு குட்டிச் செல்வனும் இருக்கிறார். அவர் தான் எங்கள் வெற்றி.
   கருத்திடலிற்கு மிக நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  ஜூலை 27, 2012 @ 13:06:40

  750 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி,…

  புது மணத்தம்பதியினருக்கு
  வாழ்த்துக்கள்…தொடருங்கள்…

  மறுமொழி

 9. T.N.MURALIDHARAN
  ஜூலை 27, 2012 @ 14:19:09

  அபாரம்! 750 பதிவுகள் மிகப் பெரிய சாதனை வாழ்த்துக்கள்.புகைப்படங்கள் அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 27, 2012 @ 20:03:03

   மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் முரளி.
   புகைப்படங்கள் எமது வேலை தான். நானும் ஒரு புகைப்படப் பைத்தியம் தான்.
   குழுவாக – சாப்பிடும் படத்தில் உள்ள அப்பத்தையே நெருக்கமான படமாக்கினேன்.
   தனிய மகளும், மகனும் இருப்பது, மகள் தந்த புகைப்படம்,
   அத்துடன் டே ரு டே படமும் அவ தந்தா.(யு.கேயில் வசிக்கிறா)

   மறுமொழி

 10. SUJATHA
  ஜூலை 28, 2012 @ 03:50:09

  மலேசியப்பயணமும், கல்யாணவைபவமும், குதூகலிக்கும் குடும்பமுமாய் தொடர்ந்த பயணத்தை வாசித்து மகிந்தோம். அதைவிட புகைப்படங்கள் இன்னும் சுவாரஸ்யமாக பயணத்தை உற்சாகமூட்டியுள்ளன.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 28, 2012 @ 05:55:37

   சுஜாதா நாம் பேசாத செய்திகளை பயணக் கதை தரும். வாசித்து அறியலாம். மிக்க மகிழ்ச்சி. நிறைய புகைப்படங்கள் உண்டு நான் மட்டுப்படுத்தியே போடுகிறேன்.
   கருத்திடலிற்கு நன்றி.
   ஆண்டவன் ஆசி றிறையட்டும்.

   மறுமொழி

 11. amudhavan
  ஜூலை 29, 2012 @ 07:42:00

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் அனுபவங்களைப் பகிரும்விதம் சொந்தங்களிடம் பேசுவதுபோல் மிக இயல்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 29, 2012 @ 08:42:33

   ”..மணமக்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் அனுபவங்களைப் பகிரும்விதம் சொந்தங்களிடம் பேசுவதுபோல் மிக இயல்பாக உள்ளது..”
   மிக மகிழ்ச்சி சகோதரா. மிக மிக நன்றி தங்கள் வருகை கருத்திடலிற்கு. ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: