26. உணர்வு மொழி.

 

உணர்வு மொழி.

 

அன்பு மொழி ஆசை மொழி
பண்பு மொழி பாச மொழி
கனிவு மொழி காதல் மொழி
கருத்து மொழியென ஏராளமேராளம்.

உயிர் மெய்யா யுயர்வாய்ப் பயிரிட்டு
உயிர்பித்தே உயிர் மூச்சான மொழி
வல்லினம், மெல்லினம்,இடையினமாய் வளர்ந்த
தனம்! தகவுடைய இனத்தின் வேர்!

தன் மொழி அழகிய மலர்!
இன் மொழி இனிக்கும் பழம்!
அமுதெனப் படைக்கும் வாக்கிய வாளிப்பு
ஆக்காதோ வரலாறு கோலோச்சுமணைப்பு!

மொழி யூர்வலத்தில் பொழியுமத னிதத்தில்
விழி பூரித்திடும், குளிர்ச் சாரலாகும்.
புழியான துன்ப மொழிகளைத் தூரவாக்கினால்
மொழித் தேரழகில் விழிகளகல விரியும்.

உடை, உணவு உரித்தான பழக்கங்கள்
உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!
மொழியெம் விழி! கற்பது இனத்திற்கு மொளி!
அழியாமற் பாதுகாத்தல் இழிவல்ல! உயர்வே!

மொழித் தித்திப்புக் குமிழ்கள் அழகாய்
வழிந்து சந்து பொந்துகளிலும் புகுந்து
அழகிய பந்துகளா யுருண்டு தவழட்டும்.
அமிழ்தெனத் தேனாய் எப்போது மினிக்கட்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-4-2009.

இது பதிவுகள்.கொம் ல் 26-4-2009லும் பிரசுரமானது.

 

                                 

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 31, 2012 @ 01:10:10

  மொழித் தித்திப்புக் குமிழ்கள் அழகாய்
  வழிந்து சந்து பொந்துகளிலும் புகுந்து
  அழகிய பந்துகளா யுருண்டு தவழட்டும்.
  அமிழ்தெனத் தேனாய் எப்போது மினிக்கட்டும்.//

  தங்கள் ஆசையை தங்கள் படைப்புகளில்
  தொடர்ந்து நிறைவேற்றிவருவது
  தங்கள் ரசிகர்களாகிய எங்களுக்கு
  அதிக மகிழ்வளிக்கிறது
  மனம் தொட்ட படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஜூலை 31, 2012 @ 19:35:26

   ”…தங்கள் ஆசையை தங்கள் படைப்புகளில்
   தொடர்ந்து நிறைவேற்றிவருவது
   தங்கள் ரசிகர்களாகிய எங்களுக்கு
   அதிக மகிழ்வளிக்கிறது…”
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் கருத்திற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. Kavialagan
  ஜூலை 31, 2012 @ 01:12:11

  Moliyin sirappu kavithaiyil vaarppu
  Inathin perumai kavi varikalil arumai

  மறுமொழி

 3. b.ganesh
  ஜூலை 31, 2012 @ 06:00:38

  வேரான மொழியைக் காத்திடு… மொழி எம் விழி. -அருமையாகச் சொன்னீர்கள். மொழியை அழகாகக் கையாண்டு நீங்கள் வடிக்கும் கவிதைகளும் அப்படித்தான் தேனாய் இருக்கின்ற்ன. நல்லதொரு பகிர்வு. நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஜூலை 31, 2012 @ 20:57:36

   ”…வேரான மொழியைக் காத்திடு… மொழி எம் விழி. -அருமையாகச் சொன்னீர்கள். மொழியை அழகாகக் கையாண்டு நீங்கள் வடிக்கும் …”
   மிக நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு. தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 4. sasikala
  ஜூலை 31, 2012 @ 07:09:07

  உடை, உணவு உரித்தான பழக்கங்கள்
  உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!
  என் உணர்வும் அதுவே சகோ வணங்குகிறேன்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஜூலை 31, 2012 @ 20:59:31

   ”…உடை, உணவு உரித்தான பழக்கங்கள்
   உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!
   என் உணர்வும் அதுவே…”
   மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி உமது கருத்துப் பதிவிற்கு. தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 31, 2012 @ 07:29:21

  மொழியின் சிறப்பை போற்றும் உன்னத வரிகள்…
  வாழ்த்துக்கள்… நன்றி சகோதரி…

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்… (பகுதி 2)

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 01, 2012 @ 15:54:26

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் கருத்திடலிற்கு. உங்கள் இடுகையும் பார்த்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 31, 2012 @ 07:31:54

  சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும்.

  உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது…..

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி சகோதரி…

  மறுமொழி

 7. மகேந்திரன்
  ஜூலை 31, 2012 @ 08:45:15

  சிந்திக்கத் தித்திக்கும்
  திகட்டாமல் தாளமிடும்
  சகலமும் ஒடுங்கி
  நெஞ்சுக்குள் விளையாடும்
  என்னுயிர்த் தமிழ்
  தண்தமிழ் தாய்த்தமிழ்
  தேன்தமிழே …

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 01, 2012 @ 16:03:25

   ”…தண்தமிழ் தாய்த்தமிழ்
   தேன்தமிழே …”’
   ஓம் சகோதரா. எனது வலையில் தமிழ் மொழி என்று தலைப்பிட்டே (பாமாலிகை- தமிழ்மொழி) 26 கவிதைகள் உண்டு சகோதரா.
   மிக்க நன்றி தங்கள் கவித்துவ வரிகளிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. abdulkadersyedali
  ஜூலை 31, 2012 @ 10:07:55

  தாய்த் தமிழில்
  தேன் சுவை

  அருமை அருமை சகோ

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 01, 2012 @ 16:08:48

   ”..தாய்த் தமிழில்
   தேன் சுவை..”
   ஆமாம் சகோதரா. அதிலொரு சந்தேகமுமே இல்லை. தமிழ் மொழி பற்றியே தனிக் கவிதை வரிகள் என் வலையில் உண்டு. (பாமாலிகை- தமிழ்மொழி என்று.).
   மிக்க நன்றியும், மகிழ்வும் தங்கள் கருத்திடலிற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 9. விச்சு
  ஜூலை 31, 2012 @ 11:54:06

  தமிழ்மொழியின் பெருமிதம் சந்தோசப்படவைக்கிறது…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 01, 2012 @ 16:10:46

   ”…தமிழ்மொழியின் பெருமிதம் சந்தோசப்படவைக்கிறது…”
   ஆமாம் சகோதரா. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றியும், மகிழ்வும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூலை 31, 2012 @ 14:00:53

  “அன்பு மொழி
  ஆசை மொழி
  பண்பு மொழி
  பாச மொழி
  கனிவு மொழி
  காதல் மொழி”

  இவை போதும்
  ஒரு மொழின் உணர்வாய்
  என் மொழின் உயர்வாய்…

  அழகு
  தமிழும்-தங்கள் கவியும் அழகு.

  மறுமொழி

 11. Vetha.Elangathilakam.
  ஜூலை 31, 2012 @ 18:23:36

  Sham Masud likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன் – FB
  Ganesalingam Arumugam, Govt’ Victoria College / Chulipuram
  Nesamalar Malar, Shah Alam, Malaysia
  Abira Raj likes this in கனவு விழிகள் – FB
  ம. வேணுதன் likes this..in FB
  வசந்தா சந்திரன் likes this..in Pillayar Kovil – Herning, Denmark – FB
  ..

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  ஜூலை 31, 2012 @ 23:35:47

  தமிழின் இனிமை கவிதையில் கண்டேன்.

  இனிமைத் தமிழ் மொழி நமது
  நமக்கின்பம் தரும்படி வாய்த்த நல்அமுது

  மறுமொழி

 13. வே.நடனசபாபதி
  ஆக 02, 2012 @ 02:33:18

  // உடை, உணவு உரித்தான பழக்கங்கள்
  உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!//
  தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

  மறுமொழி

 14. SUJATHA
  ஆக 02, 2012 @ 22:02:34

  தன் மொழி அழகிய மலர்!
  இன் மொழி இனிக்கும் பழம்!
  அமுதெனப் படைக்கும் வாக்கிய வாளிப்பு
  ஆக்காதோ வரலாறு கோலோச்சுமணைப்பு!

  மொழியினை அழகு தமிழில் பொழிந்துள்ளமை அருமை!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: