18. சிட்டுக் குருவி.

 

சிட்டுக் குருவி.

 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
பட்டுப் போகிறாயாம் நீ.
விட்டுப் போன பங்குனி 20து
பட்டான உன் தினமாம்.

உயர் மாடி வீடுமொரு
துயர் உன்னழிவிற்காம்.
பயிர்ப் பூச்சிகொல்லியுமுன்
உயிரெடுக்கும் ஆபத்தாம்.

ஆர்வமாய்க் குஞ்சுகளிற்கூட்டுவாயாம்
பீர்க்கங்காய் பாகல் புடலைப்புழு.
நிர்மூலமாகும் வீட்டுத் தோட்டங்களால்
நிலைதடுமாறுதாம் குஞ்சுகள் வளர்ச்சி.

இரண்டாயிரத்துப் பத்திலிருந்துன்னினம்
வரண்டிடக் கூடாதென்று தினம்
பெருக்கிட வுன்னினத்தை யென்றாம்
பெரும் விழிப்பணர்வுப் போராட்டமாம்.

சின்னச் சிட்டுக் குருவியே
சிறப்பாய் வாழ உனக்கு
சிறு அட்டைப் பெட்டிச்
சிறு குடிமனை ஆக்குவேன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-7-2012

 

                                
 

Next Newer Entries