244. வேலி.

 

வேலி.

(துறுகல் – பாறை, குன்று, கால்வாய் அடைக்கும் கல்)

 

வேலி போட்டுத் தடுத்தாலும்
வேகம் மீறி இயங்கும்
காற்றுக்கென்ன வேலி!
மனஆற்றலும் காணாது வேலி.
ஆற்றுக் கென்ன வேலி!
ஊற்றுக்கென்ன துறுகல்!

எல்லையற்ற உலகில்
எண்ணிறைந்த வேலி!
ஓசைக்கெது வேலி!
ஆசைக்குப் பயம் வேலி.
விழுமிய வாழ்விற்கு ஒழுக்கம்
வித்தகத் தமிழுக்கேது வேலி!

வேலி போட்டு வாழ்ந்தும்
வெளியே வருவோர் பலரே.
ஓலை வேலியுள்ளேயங்கே
ஒடுங்கி வாழ்ந்தோம் நாம்.
மனவேலி போடாது வாழும்
மக்கட் கூட்டத்தோடிங்கு

இணைந்து வாழவியலாது
இருளில் வாழுமொரு கூட்டம்
இரும்பு வேலிக்குள்ளும்
இறுகிடும் நிலையுமுண்டு
உலகப் பெருவெளியில்
சட்டக்காவல் வேலியுள்ளே.

தாலியையும் மனிதரே ஒரு
வேலியாக்கினார் பெண்ணுக்கு.
காலி ஆணுக்கெது வேலி!
கேலியன்றோ இவ்வஞ்சகம்!
நிறை மனக் கட்டுப்பாடே
நிறைந்த வேலியுலகில்.

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-4-1999.
(ரி.ஆர்.ரி தமிழ்ஒளி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கவிதை.)

14-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில் (19.00-20.00)மறுபடியும் என்னால் வாசிக்கப் பட்டது.

 

                                            
 

Advertisements

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  ஆக 01, 2012 @ 21:20:42

  Veliyapattri virivaana kavi varikal ella idamum thoddu selukinrana. Valthukal

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 16:44:58

   எல்லா இடமும் தொட்டுச் செல்கிறது வேலி என்று கருத்திட்ட கவி அழகனுக்கு மிக்க நன்றியும், கருத்திடலிற்கு மகிழ்வும் கூறுகிறேன்.
   அத்துடன் இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. வெங்கட்
  ஆக 02, 2012 @ 02:15:31

  நல்ல பகிர்வு….

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 02, 2012 @ 03:16:40

  /// நிறை மனக் கட்டுப்பாடே
  நிறைந்த வேலியுலகில்.///

  அருமை… நன்றி சகோ…
  தொலைக் காட்சியில் (1999 !) ஒளிபரப்பானதற்க்கு வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 16:51:14

   மிக மிக நன்றியும், மகிழ்வும் சகோதரா தனபாலனே தங்கள கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஆக 02, 2012 @ 03:20:50

  மனவேலி பற்றிய அழகானக் கவிதை. வேலியின் பயனறிந்தோர் மறுப்பின்றி ஏற்பர். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 16:52:59

   ”…மனவேலி பற்றிய அழகானக் கவிதை. வேலியின் பயனறிந்தோர் மறுப்பின்றி ஏற்பர்…”
   மிக மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ஸாதிகா
  ஆக 02, 2012 @ 04:10:40

  அழகிய படங்களுடன் அருமையான கவிதை.வேலியை சும்மா பிய்த்து மேய்ந்து இருக்கீங்க:)

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 16:55:52

   ”…அழகிய படங்களுடன் அருமையான கவிதை.வேலியை சும்மா பிய்த்து மேய்ந்து இருக்கீங்க…”’
   மிக மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  ஆக 02, 2012 @ 06:18:33

  இணைந்து வாழவியலாது
  இருளில் வாழுமொரு கூட்டம்.

  உண்மை தான் சகோ விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்கள்
  விட்டுப் பிரிய சம்மதப்படுகிறார்கள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 17:00:41

   ”…உண்மை தான் சகோ விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்கள்
   விட்டுப் பிரிய சம்மதப்படுகிறார்கள்…”

   திருமணப் பிரிவிற்கு இக் கருத்துப் பொருந்தவே பொருந்தாது சசி. காரணம் கொடுமை செய்பவனுடன் விட்டுக் கொடுத்து வாழ முடியாது சகோதரி.
   கருத்திடலிற்கு நன்றியும், மகிழ்வும்.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. b.ganesh
  ஆக 02, 2012 @ 06:25:47

  மனவேலியை மனதில் பதியும் வண்ணம் எடுத்தியம்பியது உங்களின் பா. நீங்கள் எழுப்பிய கேள்வி மிகச் சரியே… வேலிகள் பெண்களுக்கேயன்றி ஆண்களுக்கல்ல… மனதில் வேலியிடல் மிக அவசியம் என்றே நானும் கருதுகிறேன். சிந்தனையைத் தூண்டிய கவிதை. நன்று.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 17:03:29

   ”…மனவேலியை மனதில் பதியும் வண்ணம் எடுத்தியம்பியது உங்களின் பா.
   நீங்கள் எழுப்பிய கேள்வி மிகச் சரியே… வேலிகள் பெண்களுக்கேயன்றி ஆண்களுக்கல்ல…
   மனதில் வேலியிடல் மிக அவசியம் என்றே நானும் கருதுகிறேன். சிந்தனையைத் தூண்டிய கவிதை…”

   கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும் அடைந்தேன்
   தெய்வக் கிருபை நிறையட்டும் சகோதரா.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  ஆக 02, 2012 @ 08:23:26

  அழகான சொல்லாற்றல் சகோதரி..
  வேலிகள் போட்டு தடுக்கமுடியாதவை
  எவ்வளவோ இருக்கின்றன உலகில்..
  அதையும் சொல்லி..
  நிறைவான வேலியது
  நிறைமனக் கட்டுப்பாடே எனச் சொல்லிய விதம்
  மிக அருமை..

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 17:06:25

   ”’..அழகான சொல்லாற்றல் சகோதரி..
   வேலிகள் போட்டு தடுக்கமுடியாதவை
   எவ்வளவோ இருக்கின்றன உலகில்..
   அதையும் சொல்லி..
   நிறைவான வேலியது
   நிறைமனக் கட்டுப்பாடே எனச் சொல்லிய விதம்…”

   மிக மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. பழனிவேல்
  ஆக 02, 2012 @ 08:30:32

  “தாலியையும் மனிதரே ஒரு
  வேலியாக்கினார் பெண்ணுக்கு.
  காலி ஆணுக்கெது வேலி!
  கேலியன்றோ இவ்வஞ்சகம்!”

  அழகாய் சொன்னீர்கள்…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 17:08:53

   ”…காலி ஆணுக்கெது வேலி!
   கேலியன்றோ இவ்வஞ்சகம்!”
   பலருக்கு மிகக் கோபம் வரும் வரிகள் இது.
   மிக மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. AROUNA SELVAME
  ஆக 02, 2012 @ 09:44:23

  விழுமிய வாழ்விற்கு ஒழுக்கம்
  வித்தகத் தமிழுக்கேது வேலி!

  ஆமாம்… அழகாக சொன்னீர்கள்.

  கற்பதும் கற்றதும் கற்றதை மற்றோர்க்குக்
  கற்பனை வேலியின்றிக் காட்டினீர்! – நற்சுவையாய்
  நற்பலம் நல்கிட, அற்புதம் மின்னிட
  சொற்பதம் கொண்ட சுவை!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 02, 2012 @ 17:11:01

   அருமைக் கவி வரிகளில் கருத்திட்டீர்.
   மிக மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. Sundra Kumar
  ஆக 02, 2012 @ 16:27:51

  SUPER,SUPER.I like all.Thank you.

  மறுமொழி

 12. Vetha.Elangathilakam.
  ஆக 02, 2012 @ 16:30:11

  Ganesalingam Arumugam likes this..in கனவு விழிகள் – FB
  Sundra Kumar and அல்லைப்பிட்டி மக்கள், அன்பு தோழி like this…(FB)

  மறுமொழி

 13. SUJATHA
  ஆக 02, 2012 @ 21:58:29

  தாலியையும் மனிதரே ஒரு
  வேலியாக்கினார் பெண்ணுக்கு.
  காலி ஆணுக்கெது வேலி!
  கேலியன்றோ இவ்வஞ்சகம்!
  நிறை மனக் கட்டுப்பாடே
  நிறைந்த வேலியுலகில்.

  அருமை….மனிதன் தனக்கே போட்டுக்கொண்டான். வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 14. ramani
  ஆக 03, 2012 @ 01:18:14

  வல்லவன் கையில் புல்லும் ஆய்தமெனபர்
  வேலி கிடைத்தால் கேட்கவாவேண்டும்
  வேலி பல்வேறு பொருள்களில்
  அர்த்தப்படுத்தபட்டது மனம் கவர்ந்தது
  மனம் தொட்ட பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: