3. குழந்தை மனிதனாகும் எத்தனம்!

 

 

குழந்தை மனிதனாகும் எத்தனம்!

அசையும் பதுமையாய்க் கிடந்தார்.
தசையும் வைத்தது வளர்ந்தார்.
வசைத்து(வளைத்து)முழங்காலைக் கைகளால்
வசதியாய்த் தொடுகிறார்! – கைகளை
வசமாயதில் ஆறப்போடுகிறார்.

கைகள் இரண்டும் பிணைந்ததைப்
பைய அசைத்துப் பார்க்கிறார்.
மைகரம்!(பிரமிப்பு)…எப்படிப் பிணைந்தது!
இப்படி ஏனிது பிணைந்தது!
பிணைப்பையழகாய் ரசிக்கிறார்!

விரல்கள் பத்தும் பின்னுவது
தரமானவொரு ஆட்டமாகிறது.
விரல்களிணைப்பு விலகினால்
திரண்டு மறுபடி இணையுமோ!
பிணைந்தபடியே ஆய்வு! வியப்பு!

எப்படி! தனியொரு விரலைச்
சூப்புவது! வாயினுள் திணிப்பது!
முப்பொழுதும் பிரம்மப் பிரயத்தனம்!
செப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது
அப்படியே விரல்கள் வாயினுள்!

வலைப் பந்தை இலக்காக முயன்று
வலையுள்ளிடும் முயற்சி போன்றது.
எந்த உதவியுமின்றிக் குழந்தையின்
சுதந்திர இச்சைத் தேடல்!
நானே மனிதனாகும் ஆய்வு!

இன்று பத்து விரல்களையும்
உண்பது போன்று வாயினுள்
என்னமாய்மென்று சூப்புகிறார்!
மென்னும் சுவையிசை கூட்டி
சின்ன ராகமொன்றும் இசைக்கிறார்!

இம்மாநிலத்தில் குழந்தையெழுந்திட
தம்மைத் தாமே உருவாக்கிட,
மேம்பட எத்தனை பாடுபடுகிறார்!
சும்மாவல்ல! சுயேச்சையான
செம்மை முயற்சி! முயற்சி!

குழந்தையின் விடாமுயற்சியின்
கழஞ்சு அளவில் பெரியவர்கள்
வழக்கமாகக் கொண்டு பழகினால்
வழக்கற்றுப் போகுமே நோய்கள்!
முழவு கொட்டுமே ஆரோக்கியம்!

 
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-8-2012.

(our photoes.)

(7-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில்(19.00-20.00) இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                                

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sujatha
  ஆக 07, 2012 @ 22:12:50

  புகைப்படங்களுடன் பேரனின் குறும்புத்தனங்கள் அருமை!!! மகிழ்ந்து சிரிக்கின்றன பேரன் பேர்த்தியின் மனங்கள்!!!!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 17:00:59

   ஓம் சுஜாதா. இப்போ ரெம்ப மோசம், கீழே போட்டால் அழுவார் நிமிர்த்தித் தூக்கட்டாம். தூக்கு தூக்கு என்று….இப்படித்தானே பிள்ளைகள்.
   மிக்க நன்றியும், மகிழ்வும் கருத்திடலிற்கு சுஜாதா..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. ramani
  ஆக 07, 2012 @ 23:00:12

  குழந்தையின் விடாமுயற்சியின்
  கழஞ்சு அளவில் பெரியவர்கள்
  வழக்கமாகக் கொண்டு பழகினால்
  வழக்கற்றுப் போகுமே நோய்கள்!
  முழவு கொட்டுமே ஆரோக்கியம்!//

  பரிபூரண்க் கவிதையை ரசித்த விதமும்
  அதை அழகு கவிதையாய் கொடுத்த பாங்கும்
  மனத்தை கொள்ளை கொள்ளுகிறது
  மன்ம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 17:33:08

   ”…பரிபூரண்க் கவிதையை ரசித்த விதமும்
   அதை அழகு கவிதையாய் கொடுத்த பாங்கும்
   மனத்தை கொள்ளை கொள்ளுகிறது…”
   மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   உங்களிற்கு பதிலிடும் போது
   முழவு- முரசு என்றும்,
   கழஞ்சு – ஓர் எடை அளவு என்றும், (தங்கம் அளக்கும் அளவு என்றும் கூறலாம்)
   இக் கருத்துகளைப் பதிவிட விரும்புகிறேன் தெரியாதவர்களிற்கு உதவும். மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா கருத்திற்கு.இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 08, 2012 @ 00:36:19

  அழகாக ரசித்து எழுதி உள்ளீர்கள்… பாராட்டுக்கள்…
  குழந்தைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்… அதுவும் இந்தக்கால குழந்தைகளிடம் நிறைய… நிறைய…

  நன்றி சகோதரி…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 18:32:53

   ”…அழகாக ரசித்து எழுதி உள்ளீர்கள்… பாராட்டுக்கள்…
   குழந்தைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்… அதுவும் இந்தக்கால குழந்தைகளிடம் நிறைய… நிறைய…”
   மிக மிக உண்மை நீங்கள் சொன்னது.
   தங்கள் கருத்திற்கு மிக நன்றியும், மகிழ்ச்சியும்.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. athisaya
  ஆக 08, 2012 @ 01:15:46

  ஆஹா….அருமையாக குழந்தையின் அத்தனை அசைவுகளும் வார்த்தைக்கோலங்களாக.வாழ்த்துக்கள் சொந்தமே!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:19:11

   அதிசயா! என்ன உங்களைக் காணக் கிடைக்குதில்லையே! ரெம்ப பிஸியோ!
   வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கோமதி அரசு
  ஆக 08, 2012 @ 01:59:48

  குழந்தையின் விடாமுயற்சியின்
  கழஞ்சு அளவில் பெரியவர்கள்
  வழக்கமாகக் கொண்டு பழகினால்
  வழக்கற்றுப் போகுமே நோய்கள்!
  முழவு கொட்டுமே ஆரோக்கியம்!//

  பேரனின் அசைவுகளை ரசித்து கவிதை ஆக்கிய விதம் அருமை.
  அதிலும் படிப்பினை தரும் கருத்தைக் கூறியது அருமை.
  ஆரோக்கியத்திற்கு அருமையான குறிப்பு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:21:22

   ”..படிப்பினை தரும் கருத்தைக் கூறியது அருமை.
   ஆரோக்கியத்திற்கு அருமையான குறிப்பு…”
   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. seenu
  ஆக 08, 2012 @ 03:02:58

  குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அருமையாக படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் வார்த்தைகளால் சிறை பிடித்திருப்பது அருமை

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:32:46

   ”…குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அருமையாக படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் வார்த்தைகளால் சிறை பிடித்திருப்பது…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு.
   இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. sravani
  ஆக 08, 2012 @ 03:12:59

  பாடலும் பொருத்தமான படங்களும்
  கருத்தும் மிக அருமை.!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:34:34

   ”…பாடலும் பொருத்தமான படங்களும்
   கருத்தும் மிக அருமை.!…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்துப் பதிவிற்கு.
   இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. b.ganesh
  ஆக 08, 2012 @ 04:38:32

  மழலையின் படங்கள் பார்க்க அழகு. உங்களின் தமிழோ படிக்கப் படிக்கத் திகட்டாதது. உண்மையில் கவிதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுந்த எண்ணம் என்னவெனில்: இப்படியொரு பாட்டி நமக்குக் கிடைக்காமல் போய் விட்டாரே… என்பதே.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:36:23

   ”…கவிதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுந்த எண்ணம் என்னவெனில்: இப்படியொரு பாட்டி நமக்குக் கிடைக்காமல் போய் விட்டாரே…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு.
   இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. sasikala
  ஆக 08, 2012 @ 06:57:45

  மழலையின் வரிகளும் பேரனின் அசைவுகளை ரசித்து கவியாக்கிய விதமும் கண்டு மகிழ்ந்தேன்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 19:37:32

   ”…மழலையின் வரிகளும் பேரனின் அசைவுகளை ரசித்து கவியாக்கிய விதமும் கண்டு மகிழ்ந்தேன்….”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்துப் பதிவிற்கு.
   இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. பழனிவேல்
  ஆக 08, 2012 @ 09:52:59

  “எப்படி! தனியொரு விரலைச்
  சூப்புவது! வாயினுள் திணிப்பது!
  முப்பொழுதும் பிரம்மப் பிரயத்தனம்!
  செப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது
  அப்படியே விரல்கள் வாயினுள்!”

  குழந்தையுடன் கூடி தாங்களும் குழந்தையாகிவிட்டீர்கள்.

  அழகு…
  கவிதையும் காட்சிப் படங்களும் மிக அருமை.

  ஒரு சிறு ஐயம்?
  கவிதைக்கு பின் புகைப்படம் எடுத்தீரோ?
  அல்லது
  புகைப்படம் கண்டு கவிதை படைத்தீரோ?

  இரு கவிதையும் மிக அழகு.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 08, 2012 @ 17:19:01

   சகோதரா பழனி! நல்ல கேள்வி.
   பேரன் நல்ல சிரிப்பு பல்லுத் தெரியாமல் சிரிப்பார். மருமகள் சாந்திக்குக் கூறினேன் இந்தச் சிரிப்பு எனக்கு வேணும் படம் எடுத்துத் தாங்கோ என்று. ” மன்மதச் சிரிப்படா பெட்டைகள் சுருண்டு விழுவாளுகள்”… என்பேன்.
   பின்பு முழங்காலில் கை வைத்துச் சிரிப்பார் இப்படி ஒவ்வொரு முன்னேற்றமும் வர, நான் நினைத்தேன் நான் தான் படம் எடுக்க வேண்டும் என்று. ஒன்றொன்றாக எடுக்கத் தொடங்கினேன்.
   சாந்திக்கும் (மருமகள்) கூறினேன் கவிதை எழுதப் போகிறேன் என்று. படங்களைச் சேர்த்த பின்பே. கவிதை எழுதினேன்.
   எனது கணவருக்கும் எனக்கும் அவரைப் பற்றிய அசைவுகளை அலசுவதே வேலை.
   கவிதை எழுதிட்டேன், இன்று போடப் போகிறேன் என டெய்லி சொல்லுவேன்.
   ஏதாவது கருத்தில் தடுமாற்றமானால் வாசித்துக் காட்டி இது எப்படித் தொனிக்குது என்று கருத்துக் கேட்பேன் சொல்லுவார். மாற்றுவேன்.
   மிக்க நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   ஆண்டன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. Vetha.Elangathilakam.
  ஆக 08, 2012 @ 18:19:14

  Yashotha Kanth likes this…in ஒன்றே குலம் ஒருவனே தேவன் -FB

  Naguleswarar Satha:-(in FB)
  Azaku thamil Thavazkirathu.. His movements which we can see from the photos. Lovely.
  .Vetha ELangathilakam:-
  Thanks satha…my brother .Thank you so much….God bless you alllllll…….

  அன்பு தோழி and K.s. Senba like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்-FB

  Lavi Langa;- (On her FB wall)
  I had tears in my eyes reading. Vethri is a very lucky boy to have a grandma like you, who is not afraid to show the love and attention. Beautiful poem Amma! Xxx .
  Vetha ELangathilakam:-
  அது ஆனந்தக் கண்ணீரம்மா!….இறையாசி கிட்டட்டும். இருவருக்கும் அம்மா!. Thanksdaaaaa….!!!….

  Waheed Ur Rahman likes this..in kavithai sangamam 2.0 – FB

  Arul Mozhi:-
  வலைப் பந்தை இலக்காக முயன்று
  வலையுள்ளிடும் முயற்சி போன்றது.
  எந்த உதவியுமின்றிக் குழந்தையின்
  சுதந்திர இச்சைத் தேடல்!
  நானே மனிதனாகும் ஆய்வு!///அற்புதம் அற்புதம்.
  Vetha ELangathilakam:-
  Mikka nanry Arul Mozhi. God bless you all.
  And Thank you Mr.Waheed Ur Rahman……

  மறுமொழி

 12. Vetha.Elangathilakam.
  ஆக 08, 2012 @ 18:27:06

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and Ganesalingam Arumugam Rueben Guru like this..

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
  ‎”எப்படி! தனியொரு விரலைச்
  சூப்புவது! வாயினுள் திணிப்பது!
  முப்பொழுதும் பிரம்மப் பிரயத்தனம்!
  செப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது
  அப்படியே விரல்கள் வாயினுள்!….”

  அம்மாவின் கவிதைகளில் எனக்கு எப்போதுமே ஒருவித மயக்கம் உண்டு!! தங்களின் கவிதைகள்… எனது விமர்சன அளவு கோல்களுக்கு அப்பாற்பட்டது!! தங்களின் அற்புதமான கவிதைகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு!!

  Vetha ELangathilakam :-
  சகோதரா மனம் நெகிழ வைத்தது உங்கள் வரிகள் .
  மிக்க மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி நிறையட்டும். (வலையில் ஒட்டுகிறேன்)…

  மறுமொழி

 13. மகேந்திரன்
  ஆக 10, 2012 @ 02:26:06

  மழலையின் செய்கைக்கு
  அழகாய் ஒரு கவிதை சகோதரி..
  விரல்களை வாயில் இட்டு
  பனிமலர்க் கண்களை அகல விரித்து
  மருட்கையுடன் பார்க்கும் பார்வையில் இருக்கும்
  அழகு வேறு எதிலும் இல்லை…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 12, 2012 @ 11:38:10

   ஆமாம் சகோதரா. தாங்களும் ரசித்துள்ளீர்கள்.
   யார் தான் குழந்தையை ரசிக்காதார்!.
   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 14. Mano Saminathan
  ஆக 10, 2012 @ 14:49:55

  மழலையின் சின்னஞ்சிறு அசைவுகளை ரசித்து அருமையான கவிதையாக்கி விட்டீர்கள் வேதா! தலைப்பு மிக அழகு!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: