4. பயணம் – மலேசியா. 6

google photo
Seri  Wawasan cable suspension bridge.

4. பயணம் – மலேசியா. 6

கடந்த அங்கத்தில் இஸ்லாமிய கோவிலுக்கு முன் மகளவையும் நாங்களும் படம் எடுத்தது பார்த்தீர்கள். அதன் அடுத்த தோற்றம் சிறிது தூரமாக உள்ள கூகிள் படம் பாருங்கள்!

google photo

இதில் இந்தப் பெண்மணி நடக்கும் பாதை வழியாக இப்படியே கீழே நடந்து சென்று வாகனங்கள் நிறுத்திய இடத்தினூடாக

வலது புறப் படிகளில் இறங்கினால்  சைபர் யெயா (ciber jeya lake) குளம் வரும்.
இதில் படகுச் சவாரி செய்யலாம். ஆனால் பயணம் 45 நிமிடங்களுக்கு மேல் வருமாம். சாரதி எங்களிற்கு அங்கு செலவழிக்கத் தந்தது ஒரு மணி நேரமே. மதிலோடு ஓரமாகப் போய்ப் பார்த்து படங்களை எடுத்தோம்.


இங்கு 9 பாலங்கள் இருந்ததாக வாசித்தேன். இதில் குளத்தினூடாக சிறீ வாவாசன் கேபிள் சஸ்பென்சன் பாலம்(Seri Wawasan cable  suspensan bridge  )தூரத்தில் காணத் கூடியதாக இருந்தது.

பார்க்க மிக வித்தியாசமாக அழகாகவும் தெரிந்தது. (உண்மையில் இதெல்லாம் பாலத்தினூடாகச் சென்று கிட்டப் பார்த்து ரசிக்க வேண்டியது. ஒரு முழு நாளை அங்கு நாம் கழி(ளி)த்திருக்கலாம்)

இப்பாலம் – பயணிக்கும் ஒரு கப்பலின் தோற்றம் போலத் தெரியும்.

google.photo.

நடை பாதை, சைக்கிள் பாதையென 3 ஒழுங்கைகள் கொண்டதாம். 2003ல் கட்டி முடிக்கப்பட்டதாம். நீளம் 0.15 மைல்கள்.  கேபிள்களினால் உருவாக்கப்பட்டது. மிக மிக அழகு. நிச்சயம் நீங்கள் கூகிள் படத்தில் ஆங்கிலத்தில் பாலப் பெயரை அழுத்திப் பாருங்கள் அற்புதம்!அசந்து விடுவீர்கள்! மயில் போலவும் தோன்றும்! (நானே அசந்து விட்டேனே!) இதுவும் நிச்சயம் இந்திய சினிமாவில் காதல் காட்சியில் வந்த பாலம் தான்.

மறுபடியும் படிகளால் ஏறி

மேலே போய் புட்ற யெயா சதுக்கத்தில் நின்று (எதைப் படம் எடுப்பது எதை விடுவது என்று புரியாத தடுமாற்றம்.

அழகு! அற்புதம் தான்! அனைத்தும்)சுற்றிப் பார்த்து விட்டு அடுத்தாக

மலேசிய அரச மாளிகையை (இஸ்ரானா நிகர       )ஒரு பார்வை பார்க்கலாம் என்று புறப்பட்டோம். முதற் தடவை போன போது நாங்கள் பார்த்திட்டோம். மகளவை பார்க்கட்டும் என்று சேர்ந்து சென்றோம்.

உள்ளே போக முடியாது. வாயில் காவலர், தூரத்து மாளிகை, சுற்றி வர புல்வெளி பூங்கா நீரூற்று என்று பார்க்க முடியும். எக்கச்சக்க உல்லாசாப் பயணிகள் பெரிய பேருந்துகளில் வந்து இறங்கி படமெடுத்த படியுள்ளனர்.

 

நாமும் அதையே செய்தோம்.
காவலர் வெள்ளையும், பிரித்தானிய காவலரின் உடை மாதிரியும் அணிந்துள்ளனர். கடமை கால்நடையாகவும், குதிரையிலும்.

அரசமைப்பு இராசாக்களின் கீழ் உள்ளது. யோகூர், கெடா, கெலந்தீன், நிகிறி, பகாங் (இந்த மாநிலத்தில் எனது அப்பப்பா- முருகேசு.சுவாமிநாதர்  ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கி ஆசிரியராக இருந்து அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து 1908ம் வருடம் இலங்கை திரும்பியவர்.இப்போது அது பெரிய ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது.) பெறாக், பேலிஸ், செலங்கூர், செம்பிலான், ரெறெங்கனு என்று 9 பிரிவாகவும்,

4 சுதந்திர நிர்வாகமாக

– மலாக்கா, பினாங், போர்ணியோவின் பகுதி சபா, சரவாக் என்றும், 

5 வருடத்திற்கொருமுறை பிரதம மந்திரியைத் தெரிவு செய்கிறார்கள். அரசனே பிரதானமாகவும் பிரதம மந்திரியுடன் சேர்ந்து மந்திரி சபையை அமைக்கிறார்.

மிகுதியை அங்கம் 7ல் பார்ப்போம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2012.

புட்ற யெயா சதுக்கம்

                                 

 
 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  ஆக 10, 2012 @ 23:18:22

  மலேசியாவை பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது படங்களும் கட்டுரையும்.

  மறுமொழி

 2. Kavialagan
  ஆக 10, 2012 @ 23:20:59

  Alakiya malasiya payanam

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 11, 2012 @ 00:42:04

  அழகிய படங்களும் விளக்கமும்…
  வாழ்த்துக்கள்… நன்றி சகோதரி…

  மறுமொழி

 4. drpkandaswamyphd
  ஆக 11, 2012 @ 01:04:28

  நல்ல படங்கள்.

  மறுமொழி

 5. வே.நடனசபாபதி
  ஆக 11, 2012 @ 02:33:33

  படங்களும் விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி!

  மறுமொழி

 6. கோமதிஅரசு
  ஆக 11, 2012 @ 05:49:24

  மலேசியாவை உங்களுடன் நாங்களும் நன்றாக சுற்றிப்பார்த்து கொண்டு இருக்கிறோம்..
  நன்றி.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 11, 2012 @ 06:54:21

  மகேந்திரன் பன்னீர்செல்வம் and மகிழினி காந்தன் like this..in fb

  மகிழினி காந்தன்:-
  நேரில் சென்று பார்ப்பது போல் மகிழ்வு..
  Vetha ELangathilakam:-
  மிக்க மகிழ்ச்சி மகிழினி.
  கருத்திடலிற்கு நன்றி.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்….

  Abira Raj, Kahunthan Thangarajah.., Ganesalingam Arumugam, Govt’ Victoria College / Chulipuram likes this in fb- கனவு விழிகள்.
  Sham Masud,கிளார்க் at Bank/Anbalagan Devaraj,JCI at Motivational Trainer/Raja Nilavu Rasikan,Skt gandhi high school/ Vishnu Rajan../ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா,IT Support at Al Hokair Group/Yashotha Kanth,Nurse at Nursing likes this in FB- ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
  Yashotha Kanth:-
  அக்கா படமும் …விவரங்களும் அருமை நேரில் பார்த்ததுபோல உள்ளது
  Vetha ELangathilakam:-
  மிக்க மகிழ்ச்சி sis…God bless you…
  கருத்திடலிற்கு நன்றி.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்……..

  ..
  ..

  மறுமொழி

 8. sravani
  ஆக 11, 2012 @ 07:30:39

  படங்கள் அழகாக வந்துள்ளன.
  கட்டுரையும் சிறப்பு.

  மறுமொழி

 9. b.ganesh
  ஆக 11, 2012 @ 07:36:45

  அழகழகான படங்கள் மனதைக் கவர்கின்றன, மலேசியப் பெயர்கள் தான் உச்சரிக்க தடுமாற்றம் தருகின்றன். இனிய பயண அனுபவத்தில் நானும தொடர்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 12, 2012 @ 07:53:06

   ”..அழகழகான படங்கள் மனதைக் கவர்கின்றன, மலேசியப் பெயர்கள் தான் உச்சரிக்க தடுமாற்றம் தருகின்றன். இனிய பயண அனுபவத்தில் நானும தொடர்கிறேன்…”’
   மிக்க மகிழ்ச்சி சகோதரா. வாருங்கள்! …தொடர்வோம்!….
   தங்கள் வரிகளிற்கு மிக மிக நன்றியும், மகிழ்வும்.
   ஆண்டவனருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. வடுவூர் குமர்
  ஆக 11, 2012 @ 08:30:06

  மேற்கு மலேசியா இப்படி பல் கட்டிடம், இடங்கள் என்று அசத்தினால் கிழக்கு மலேசியா இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 12, 2012 @ 07:57:56

   ஆம் நாம் மலாக்கா செல்ல, மகளும் துணைவரும் கிழக்கே சென்றனர். அங்கு தேயிலைத் தோட்டங்கள் காடுகள் தான். மிக அழகு. மகள் புகைப்படங்கள் காட்டினார்.
   தங்கள் வரவிற்கும், கருத்திற்கும்,
   மிக நன்றியும், மகிழ்வும்.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 11. sasikala
  ஆக 11, 2012 @ 09:25:15

  படங்கள் ஒவ்வொன்றும் அருமை குறிப்பாக கப்பல் போன்ற பாலம் மிகவும் கவர்ந்தது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 12, 2012 @ 08:00:03

   சசி இந்தப் பாலப் பெயரை கூகிள் படப் பகுதியில் இட்டுப் பாருங்கள் வியப்போ! வியப்பு!!!!…
   மிக நன்றியும், மகிழ்வும் சசி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 12. malathi
  ஆக 11, 2012 @ 09:30:28

  கண்ணைக் கவரும் அழகிய காட்சிகள் நேரில் கண்ட்தைபோல சிறந்த படங்களை
  காட்சிப் படுத்தியமைக்கும் பதிவு செய்தமைக்கும் பாராட்டுகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 12, 2012 @ 08:06:47

   மிக நன்றி சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.
   மகிழ்வும் கூட.
   எங்கே தங்களைக் காணவே கிடைப்பது அருமையாக உள்ளது.
   மிக பிஸியோ!
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 13. பிரபுவின்
  ஆக 12, 2012 @ 12:51:47

  ம்மலேசியா கொள்ளை அழகு.நானும் ஒரு முறை சென்றிருக்கிறேன்.மிகவும் சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 14. Mageswari Periasamy
  ஆக 12, 2012 @ 17:05:27

  வாழ்த்துக்கள் சகோதரி. நிறையவே மகிழ்ந்து அனுபவித்துள்ளீர்கள். படங்கள் உண்மையிலேயே அருமைதான். இடங்களின் பெயர்கள் தான் எழுத்து பிழையாக இருக்கின்றதே தவிர, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. படிப்பவர்கள் புரியும் படி இனிமையாக விவரித்துள்ளீர்கள். என் மனதார வாழ்த்துக்கள். தாங்கள் சென்ற இடத்தின் பெயர் புத்ரா ஜெயா. மலேசிய நாட்டின் அரசாங்க அலுவலகம் ஒன்று சேர அமைந்துள்ள இடம். பிரதம மந்திரியின் ஆட்சி மாளிகையும் அங்குதான் அமைந்துள்ளது.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 18, 2012 @ 19:23:31

   மிக்க மிக்க நன்றி சகோதரி திருத்தத்திற்கு. பெர்டனா என்பது (பச்சைக் கட்டடம்) பிரதம மந்திரியின் இடம் என்று எழுதிய ஞாபகம்.
   மிக மகிழ்ச்சி. ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: