34. சுமையில்லா இன்னலோ!

 

சுமையில்லா இன்னலோ!

 

சேலைத் தாமரை பார்வை
நூலைக் கதிராயெறிந்து
காலை மாலையின்றி எழுதுகிறதே
ஓலை காதல் காதலென்று.

தினம் தினம் தீ மூட்டிக்
கனன்றென்னைக் கவிழ்க்கும்
கதிர் – காதல் தீயென்ன
கலவரமா! கும்மாளமா! சொல்!

தயங்கள் இடம் மாறி
இமை மூடா நினைவூறி
எமைத் தாக்கும் மின்னலோ!
சுமையில்லா இன்னலோ!

குருதி நாளங்கள் குதித்து
அருவியாயோட, தினம்
மருவும் எண்ணங்கள் புது
உரு தரும் உடலிற்கு.

சிறகு விரிக்கு முணர்வு
பிறகு பிறகென்று பொறுக்காது,
துறவு கொள்ள எண்ணாது
உறவு உறவென்று தேடும்.

பார்வை பார்த்துக் கலக்குது
தீண்டத் தீண்ட மலருது.
இளமைப் புதையல் ஆய்ந்திட
உளமிணைத்துத் துள்ளுது.

பையப்பைய எனை மறக்க
மையல் தீர மடி சாய
கையைக் கொடு! அருகிரு!
வை கை! கைவை!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-8-2012.

 

                               
 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. arounaselvameA
  ஆக 12, 2012 @ 21:46:22

  சிறகு விரிக்கு முணர்வு
  பிறகு பிறகென்று பொறுக்காது,
  துறவு கொள்ள எண்ணாது
  உறவு உறவென்று தேடும்.

  அருமையான இன்னல்கள் தான் கோவைக்கவி அவர்களே!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 13, 2012 @ 19:18:29

   என்ன தலைப்பை வைக்கலாம் என்று 4-3 தலைப்பை எழுதிப் பார்த்து இறுதியில் இதைத் தெரிவு செய்தேன்.
   மிக்க நன்றி சகோதரா தங்கள் முதல் கருத்திற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. sravani
  ஆக 13, 2012 @ 04:37:28

  காதல் ரசம் சொட்டுகிறது கவியில் .
  ம்ம்ம்… இளமை திரும்புகிறதோ ?

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 13, 2012 @ 19:26:21

   ”…காதல் ரசம் சொட்டுகிறது கவியில் .
   ம்ம்ம்… இளமை திரும்புகிறதோ ?…”

   என்னங்க இப்புடிக் கேட்டுப்புட்டீங்க!
   மனசிலே இன்னும் 16 நினைப்புத் தாங்க.
   வாலி சார் 90லும் காதல் சொட்ட எழுதுகிறாரே!
   ஒரு கவிஞன் எதையும் எழுதும் நிலையில் இருக்க வேண்டாமோ!
   மிக்க நன்றி மகிழ்ச்சியுடன் ஸ்ரவாணி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஆக 13, 2012 @ 05:27:48

  காதல் கவிதை அருமை.

  மறுமொழி

 4. abdulkadersyedali
  ஆக 13, 2012 @ 05:59:21

  இன்னல்கள்
  அது சொல்லும் வரிகள்
  இதமாக வருடுகிறது மனதை அருமை சகோ

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 13, 2012 @ 06:52:34

  அழகான கவிதைக்கு அழகு சேர்க்கும் படங்கள்…
  அருமை… நன்றி சகோதரி…
  தொடருங்கள்… வாழ்த்துக்கள்…

  அப்படிச் சொல்லுங்க…! (இது என் தளத்தில் !)

  மறுமொழி

 6. sasikala
  ஆக 13, 2012 @ 07:01:36

  உணர்வுகள் இப்படித்தான் அதை மறைக்க போர்வையில்லை.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 16, 2012 @ 05:20:52

   ”…உணர்வுகள் இப்படித்தான் அதை மறைக்க போர்வையில்லை….”
   சரியாகச் சொல்லப்பட்டது சசி.
   உமது கருத்திற்கு மிக மிக நன்றி.
   மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. பழனிவேல்
  ஆக 13, 2012 @ 14:11:04

  “இதயங்கள் இடம் மாறி
  இமை மூடா நினைவூறி
  எமைத் தாக்கும் மின்னலோ!

  குருதி நாளங்கள் குதித்து
  அருவியாயோட,

  சிறகு விரிக்கு முணர்வு
  பிறகு பிறகென்று பொறுக்காது,
  துறவு கொள்ள எண்ணாது
  உறவு உறவென்று தேடும்.”

  ஐயோ! என்ன ஒரு காதல்…
  ஓவ்வொரு வரிகளும் காதல் கானம்.

  யாவரும் காதலியுங்கள்…
  யாவரையும் காதலியுங்கள்…
  காதல் சுகமானது …

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 16, 2012 @ 05:22:52

   ”…யாவரும் காதலியுங்கள்…
   யாவரையும் காதலியுங்கள்…
   காதல் சுகமானது …”
   ஆகா பழனிவேல்! அருமை ரசனை வெளியானது.
   சரியாகச் சொல்லப்பட்டது.
   உமது கருத்திற்கு மிக மிக நன்றி.
   மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Vetha.Elangathilakam.
  ஆக 13, 2012 @ 18:29:29

  Jesu Thasan likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.- FB
  Lavi Langa and Pushpalatha Kanthasamy like this..in FB.
  Ganesalingam Arumugam likes this..in கனவு விழிகள்….FB
  Waheed Ur Rahman likes this..in Kavithai sangamam என்கிற kavithai club…FB
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in கவிதை முகம்/வித்யாசாகர்/˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙/FB
  Umah Thevi, and Gunavathi Pachayapan like this..in வித்யாசாகர்…FB

  மறுமொழி

 9. மகேந்திரன்
  ஆக 14, 2012 @ 02:20:20

  உங்க கவிதையை படிச்சிகிட்டே இருக்கலாம் சகோதரி.
  தேனமுது மொழிகள்.
  அழகிய நடை…

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஆக 14, 2012 @ 04:03:08

  அச்சோ… என்ன அழகான காதல் கவிதை. சிறகு விரிக்காது காத்திருக்கின்றனவோ காதல் பறவைகள் தங்கள் கவியில் மெய்மறந்து. மையல் கொண்ட மயில்களோடு, தையல் என் மனதையும் கொள்ளை கொண்ட கவிதை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 16, 2012 @ 05:25:54

   ”…அச்சோ… என்ன அழகான காதல் கவிதை. சிறகு விரிக்காது காத்திருக்கின்றனவோ காதல் பறவைகள் தங்கள் கவியில் மெய்மறந்து. மையல் கொண்ட மயில்களோடு, தையல் என் மனதையும் கொள்ளை கொண்ட கவிதை..”’
   மிக நன்றி சகோதரி கீதமஞ்சரி.
   தங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி.
   மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: