45. தேனீ

 

 

தேனீ

சுறுசுறுப்பிற்குத் தேனீ
விறுவிறுக்கக் கொட்டுவாய் நீ.
அறுங்கோண வாழிடம்
நறுந்தேன் பிறக்குமிடம்.

இல்லம் தேனடையுள்ளும்
நல்ல கட்டுப்பாடும்,
வல்ல கூட்டு முயற்சியும்,
அல்லலில்லா நிர்வாகமும்.

புழுப் பருவம் லாவா.
குழுவிற்பெரிது ராணித்தேனீ.
புணர்தலொருமுறை. – நாளும்
1500 – 3000 முட்டைகளிடும்.

பறந்து புணர்ந்த பின்
சிறகுதிரும் ஆணிற்கு.
இறுதியிலிறக்கும். – சாவிற்கு
திறப்பு புணர்தல்! வியப்பு!

சோம்பேறித் தேனீ ஆண்.
சேகரிக்கார் தேன்.
கொடுக்கு இல்லாதவர்.
பேரின ஈ வகையார்.

உணவிருக்குமிடத்தை,
திசையை, ஆபத்தை
அசையும் நடன மூலம்
இசைந்து பரிமாறுவர்.

மலைத் தேனீ
கொம்புத் தேனீ
அடுக்குத் தேனீ
கொசுத் தேனீ

மேற்கு, கிழக்குலகத்
தேனீக்கள் பலவகை.
தேன் கூடுகளென்றும்
பெண் இராச்சியமாம்.

மணிக்கு 40 கி.மீட்டராம்
பறக்கும் வேகம்.
மலட்டுத் தேனீக்கள்
வேலைக்காரத் தேனீக்கள்.

முப்பத்தைந்து மில்லியனாண்டுக்கும்
முன்னிருந்தே வாழ்பவையாம்.
தேன் கரடிக்குப் பிரியம்.
தேன் தேன் தித்திக்கும் தேன்.

உடலிலிருந்து வெளியாகும்
மெழுகே தேன் கூடாகிறது.
தேனியின் திசையறி கருவி
மாநிலத்தினொளி சூரியனாம்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-8-2012.

                                            

24 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Kavialagan
    ஆக 15, 2012 @ 21:25:43

    Then suvai koddum kavi varikal

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 16, 2012 @ 16:20:56

      ”…Then suvai koddum kavi varikal…’
      இப்பெல்லாம் ஈபாட்டிலேயே கருத்திடுபடுகிறது போல.
      அது தான் தமிங்கிலிசில் வருகிறதோ!
      மிக்க நன்றி கவி அழகன்.
      இறையாசி கிட்டட்டும்.

      மறுமொழி

  2. sravani
    ஆக 16, 2012 @ 00:19:51

    உங்கள் தேனீப் பாடல் எங்களுக்கும் தித்திக்கும் !

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 16, 2012 @ 17:04:26

      ”…உங்கள் தேனீப் பாடல் எங்களுக்கும் தித்திக்கும் !…”
      தேனீப் பாடல் என்று கூற முடியாது.
      தகவற் தொகுப்புத் தான்.
      கவிதை போல எழுதியுள்ளேன்.
      நன்றி சகோதரி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  3. ramani
    ஆக 16, 2012 @ 01:46:19

    பழகும் விதத்தில் பழகிப்பார்த்தால்
    விலங்கு கூட நண்பனே என்பதுபோல்
    சொல்லும் விதத்தில் சொல்பவர்கள் சொன்னால்
    பறவையின் குறிப்புகள்கூட
    அருமையான ரசிக்கும் கவிதையாகிப்
    போவது அதிசயமே!
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 16, 2012 @ 17:15:14

      இது தகவற் திரட்டுத் தான்
      கவிதையாகச் சொல்ல முயற்சித்தேன்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
      ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    ஆக 16, 2012 @ 02:10:17

    கவிதை மூலம் பல தகவல்களை சொன்னது சிறப்பு… நன்றி சகோ… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  5. sasikala
    ஆக 16, 2012 @ 05:16:58

    முப்பத்தைந்து மில்லியனாண்டுக்கும்
    முன்னிருந்தே வாழ்பவையாம்.
    தெரியாத தகவல்களையும் தங்கள் வரிகள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றிங்க.

    மறுமொழி

  6. abdulkadersyedali
    ஆக 16, 2012 @ 08:28:11

    தேனாய் தேனீ பாடல்

    மறுமொழி

  7. பழனிவேல்
    ஆக 16, 2012 @ 11:04:10

    “இல்லம் தேனடையுள்ளும்
    நல்ல கட்டுப்பாடும்,
    வல்ல கூட்டு முயற்சியும்,
    அல்லலில்லா நிர்வாகமும்.”

    அழகிய வரிகள்…
    ஆளுமையான வரிகள்…
    அழகு படைப்பு.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 16, 2012 @ 20:04:04

      ”…அழகிய வரிகள்…
      ஆளுமையான வரிகள்…
      அழகு படைப்பு…”
      மிக்க மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா உமது கருத்திடலிற்கு.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  8. chezhiyan
    ஆக 16, 2012 @ 14:37:15

    அருமை , என் தளத்திற்கும் வாருங்கள்

    மறுமொழி

  9. Vetha.Elangathilakam.
    ஆக 17, 2012 @ 06:17:41

    Jaya Nallapan likes this..in fb.
    ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and Pushpalatha Kanthasamy like this..in fb.
    Friend Request SentBa Singaravelu Dft,Film Video Editor at Doordarshan/Raja Nilavu Rasikan
    Planet earth at CEO & Founder likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன் fb.
    Ganesalingam Arumugam likes this.in கனவு விழிகள் fb.

    ..
    ….

    மறுமொழி

  10. athisaya
    ஆக 18, 2012 @ 05:56:07

    தித்திக்குதே தித்திக்குதே!வாழ்த்துக்கள் சொந்தமே!

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      ஆக 18, 2012 @ 07:34:03

      ”…தித்திக்குதே தித்திக்குதே!வாழ்த்துக்கள் சொந்தமே!…”’
      இத்திக்கிற்கு வந்து கருத்திடலிற்குமிக்க நன்றி அதிசயா.
      ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  11. Vetha.Elangathilakam.
    ஆக 18, 2012 @ 16:30:47

    Arul Mozhi :- in FB kavithai sangamam 2.0
    உணவிருக்குமிடத்தை,
    திசையை, ஆபத்தை
    அசையும் நடன மூலம்
    இசைந்து பரிமாறுவர்.///நன்று.
    Vetha ELangathilakam:-
    மிக்க நன்றி அருள் மொழி கருத்திடலிற்கு.
    ஆண்டவன் அருள் நிறையட்டும்…

    மறுமொழி

  12. ANGELIN
    ஆக 25, 2012 @ 20:54:52

    சுறு சுறு தேனீக்கள் பற்றிய பாடல் அவற்றி வாழ்கை முழுதுமே கவிதையாய் அழகா சொல்லியிருக்கீங்க ..ஆனா பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டு சேர்த்த தேனை மனிதன் புகை போட்டு எடுக்கின்றாரே

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 29, 2012 @ 06:50:13

      ”…ஆனா பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டு சேர்த்த தேனை மனிதன் புகை போட்டு எடுக்கின்றாரே…”’
      ஆம்! சகோதரி சரியாகச் சொன்னீர்கள்.
      மனிதன் தான் சுயநலம் கொண்டவனல்லவோ!
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
      இறையாசி கிட்டட்டும்.

      மறுமொழி

  13. சக்தி சக்திதாசன்
    ஆக 27, 2012 @ 13:17:06

    அன்பினிய சகோதரி வேதா,
    தேனியின் சரிதத்தை
    தேன் சொட்டும் கவிதையாய்
    தித்திக்கும் வகை சொன்ன‌
    தீந்தமிழ் சகோதரியின் புகழ்
    திக்கெட்டும் எட்டட்டும்
    அன்புடன்
    சக்தி

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 29, 2012 @ 06:51:36

      ”..தேனியின் சரிதத்தை
      தேன் சொட்டும் கவிதையாய்
      தித்திக்கும் வகை சொன்ன‌
      தீந்தமிழ் சகோதரி…”

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா..
      இறையாசி கிட்டட்டும்.

      மறுமொழி

  14. கோவை கவி
    மார்ச் 04, 2016 @ 14:02:56

    Subajini Sriranjan :- தேனியை பற்றி அழகான வரிகளில் பா
    Unlike · Reply · 1 · February 28 at 8:31pm

    Vetha Langathilakam :- கருத்திட்ட அன்புள்ளங்களே நன்றியுடன் மகிழ்வும் தெரிவிக்கிறேன்..
    ஆம் தேனி பற்றி வாசித்ததும் ஆச்சரியமாக இருந்தது.
    அனைவருக்கும் பகிர்ந்தேன்.

    Nadaraj Maiyan:- தேனியின் வாழ்வை தேனாய் தந்து திகைப்படைய வைத்துள்ளீர்கள் நன்று
    Unlike · Reply · 1 · February 28 at 8:50pm

    Vetha Langathilakam :- கருத்திட்ட அன்புள்ளங்களே நன்றியுடன் மகிழ்வும் தெரிவிக்கிறேன்..
    ஆம் தேனி பற்றி வாசித்ததும் ஆச்சரியமாக இருந்தது.
    அனைவருக்கும் பகிர்ந்தேன்.

    Velavan Athavan :- தேனீயின் பா, தெவிட்டாத அருட் பா, தேனுண்டு திளைத்தேன் அக்கா நீங்க தந்த தேனீக்களின் வாழ்வியல் பா – மிக மிக அருமை சகோதரி
    Unlike · Reply · 1 · February 28 at 8:54pm

    Vetha Langathilakam :- கருத்திட்ட அன்புள்ளங்களே நன்றியுடன் மகிழ்வும் தெரிவிக்கிறேன்..
    ஆம் தேனி பற்றி வாசித்ததும் ஆச்சரியமாக இருந்தது.
    அனைவருக்கும் பகிர்ந்தேன்.

    மறுமொழி

Vetha.Elangathilakam. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி