4. பயணம் மலேசியா -7

google photo.

 

4. பயணம் மலேசியா – 7

கடந்த அங்கத்தில் சைபர் யெயா குளம் பற்றிக் கூறினேன், புத்ரா ஜெயாவில் புத்ரா ஜெயா குளம் என்றும் கூறப்படுவது.

(சகோதரி மகேஸ்வரி பெரியசாமி புத்ரா ஜெயா என்ற உச்சரிப்பைக் கூறியிருந்தார்)

உண்மையில் சைபர் ஜெயா எனும் ஒரு பட்டினமே அங்கு உள்ளது. (செபங், செலங்கூர் மாவட்டத்தில்). இது மலேசியாவின் சிலிக்கோன் பள்ளத் தாக்கு(silicon vally of Malaysia    ) என்று அழைக்கப் படுகிறது. 750 சதுர கிலோ மீட்டர்(300 சதுர மைல்) இதன் அளவு.  மல்டி மீடியா சுப்பர் கொறிடோர் (multy   media super corridor  –   MSC ) என்று அழைக்கப்படுகிறது. இனி இங்கு வருவோம்.

மலேசிய அரச மாளிகை பார்த்த பின்பு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தேவை வந்தது. சுற்றிச் சுற்றி கோலாலம்பூர் சிட்டி சென்ரருக்கு வந்தோம். சுற்றிச் சுற்றி வரும் போது

my photo.

ஒவ்வொரு வட்டமாக பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை நெருங்கினோம்.

my photo.

வானம் மிகத் தெளிவாகவும், எமது இலங்கைக் காலநிலை போல  வெயிலும் இருந்தது.

நெருங்க நெருங்க 3 கட்டத்தில் இரட்டைக் கோபுரத்தை வாகனத்தில் இருந்தபடி படம் எடுத்தேன்.

my photo.

பாருங்கள்.

கடந்த தடவை இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள புல்வெளியில் நின்று பார்த்தோம். அது தான் காதல் காட்சிகள்  சினிமாவில் எடுக்கும் புல்வெளி.

இந்த முறை இரட்டைக் கோபுரத்தின் அடிப்பாகத்தில்.

our photo.

6 மாடிக்கட்டிடம். சூரியா கேஎல்சிசி பல் பொருள் அங்காடி உள்ளது.

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் நிற்கிறோம் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. நானும், மகளும் – துணைவரும் உள்ளே புகுந்ததும் சாலையில் (hall) படங்கள் எடுத்தோம்.

our photo.

our photo.

என் கணவர் மறுத்தார். உள்ளே கந்தோர் வாசலில் ” இங்கே திரும்புங்கோ!” என்று ஒரு படம் தட்டினேன்.

my photo.

இங்கு தான் அதிகாலை 3 மணிக்கே தூங்காமல் வந்திருந்து. நாளும் 150 நுழைவு அனுமதிச் சீட்டு (டிக்கட்ஸ்) இலவசமாக தருவினமாம், நாளும் 1700 பேர் உள் நுழைய அனுமதி உண்டாம் – இரட்டைக் கோபுரம் மேலே ஏறிப் பார்க்க.

ஆனால் 9 மணியளவில்தான் மேலே ஏற முடியுமாம்.

1998ல் சீசர் பெல்லி எனும் கட்டிடக் கலைஞனால் இது கட்டி முடிக்கப்பட்டதாம். துருப்பிடிக்காத உருக்கும் கண்ணாடியும் கொண்டு கட்டப்பட்டதாம்.

இதை நேரில் பார்க்க அழகாக, அருமையாக உள்ளது. ஏதோ இந்திர லோகம் போல தோன்றுகிறது கட்டிட தோற்றம்.

88 மாடிகள் கொண்டது இரட்டைக் கோபுரம். 42வது மாடியில் (170வது மீட்டரில்) இரு கோபுரத்தையும் இணைக்கும் ஆகாயப் பாலம் உள்ளது. (     )

இனி சூரியா சொப்பிங் சென்ரர் பற்றிப் பார்ப்போம். இதற்கு கூகிள் படங்களே தரப்போகிறேன்.

google photo.

முதலே கூறியது போல 6 மாடிக்கட்டிடம். 3 பெரிய அங்காடிகள் உள்ளதாம்.

google photo.

அருகருகே  மீன்களின் காட்சியகம், (எல்லாம் நடக்கும் தூரங்களிலேயே உள்ளதாம்).
3வது மாடியில் கலையரங்கு , சினிமா தியேட்டர் 12 திரைகளுடன், 2400 இருக்கைகளுடன் உள்ளதாம்.

goole photo.

கீழே வாகனத் தரிப்பிடமும் உள்ளதாம்.
அடித்தளம் 2வது தட்டில் உணவகம். இங்குதான் சென்று சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடிய சுற்றிப் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகினோம்.

அங்கம் 8ல் மிகுதியைப் பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-8-2012.

                          

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஆக 18, 2012 @ 23:28:16

  இரட்டைக் கோபுரம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது
  படங்களும் விளக்கங்களும் மிக மிக அருமை
  தங்கள் பதிவு சிங்கப்பூர் செல்பவர்களுக்கு
  நல்ல வழிகாட்டியாக இருக்கிறது
  .மிக்க நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 19, 2012 @ 19:39:37

   ”…இரட்டைக் கோபுரம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது
   படங்களும் விளக்கங்களும் மிக மிக அருமை…”’

   இதை விட அழகான படங்கள் கூகிளில் உண்டு. பெட்றொனாஸ் ரவர் என்று போட்டால் நிறையப் பார்க்க முடியும்
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 19, 2012 @ 01:27:50

  படங்கள் வியக்க வைக்கிறது… விளக்கங்கள் அருமை… தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 19, 2012 @ 19:41:25

   ”…படங்கள் வியக்க வைக்கிறது… விளக்கங்கள் அருமை…”
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. கோமதி அரசு
  ஆக 19, 2012 @ 12:10:10

  இரட்டை கோபுரத்தின் அழகை உங்கள் படங்கள் மூலம் பார்த்தேன்.
  அருமை.
  ஆகாய பாலம் வியக்க வைக்கிறது.
  நன்றி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 19, 2012 @ 19:43:30

   ”..இரட்டை கோபுரத்தின் அழகை உங்கள் படங்கள் மூலம் பார்த்தேன்.
   அருமை.
   ஆகாய பாலம் வியக்க வைக்கிறது….”
   கூகிளில் இன்னும் நிறையப் படங்கள் காணலாம் சகோதரி.
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும், நன்றியும்
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. arounaselvameA
  ஆக 19, 2012 @ 21:27:02

  உங்களின் மகிழ்ச்சியை எங்களுக்கும்
  பகிர்ந்திருக்கிறீர்கள்.
  நன்றிங்க கோவைக்கவி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 20, 2012 @ 21:14:02

   ”…உங்களின் மகிழ்ச்சியை எங்களுக்கும்
   பகிர்ந்திருக்கிறீர்கள்.
   நன்றிங்க …”
   மிக்க நன்றி அருண செல்வம் உங்கள்கருத்திற்கு.
   மிக மகிழ்ந்தேன்..
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. வே.நடனசபாபதி
  ஆக 20, 2012 @ 02:02:09

  படங்களும் அருமை. விளக்கமும் அருமை. தொடர்கிறேன்.

  மறுமொழி

  • jaghamani
   ஆக 20, 2012 @ 12:50:21

   Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

   மறுமொழி

   • Vetha.Elangathilakam.
    ஆக 20, 2012 @ 21:33:04

    மிக்க நன்றி சகோதரி இதைத் தெரியப் படுத்தியதற்கு.
    அங்கு சென்று பார்த்து கருத்திட்டுள்ளேன்- நன்றியிட்டுள்ளேன்.
    தங்களிற்கு மிகுந்த நன்றி.
    ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

  • Vetha.Elangathilakam.
   ஆக 20, 2012 @ 21:30:14

   மிக்க நன்றி சகோதரா. திரு.நடன சபாபதிக்கு.
   உங்கள் கருத்திற்கு. மிக மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2012 @ 06:52:50

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா..
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. Kavialagan
  ஆக 20, 2012 @ 15:16:17

  Padankal kalako kalakkendu kalakkuthu

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 20, 2012 @ 21:18:11

   சகோதரா கவி அழகன் படங்களோடு கொடுப்பது ஒரு நிறைவு தானே.
   மிக்க நன்றி
   உமது கருத்திற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. T.N.MURALIDHARAN
  ஆக 22, 2012 @ 04:12:46

  இப்படி மலேசியா பாக்கிற ஆசைய தூண்டிவிட்டா நாங்க என்ன பண்றதாம்?

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   ஆக 22, 2012 @ 07:37:00

   முடிந்த நேரத்தில் பார்க்க வேண்டியது தான்.
   மிக்க நன்றி சகோதரா கருத்திற்கு. மகிழ்ந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Tharsini Kanagasabai
  ஆக 27, 2012 @ 03:45:23

  மலேசியா பயணம் படித்தேன் ரசித்தேன்….மலேசியாவிற்கு தங்களுடன் பயணித்த பிரமை…
  கண்கவர் படங்கள்…நன்றி அக்கா

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2012 @ 06:55:12

   ”…மலேசியா பயணம் படித்தேன் ரசித்தேன்….மலேசியாவிற்கு தங்களுடன் பயணித்த பிரமை…கண்கவர் படங்கள்…நன்றி அக்கா…”
   உமது கருத்திற்கு மிக்க நன்றி தர்சினி. மகிழ்ந்தேன்.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 30, 2012 @ 19:24:39

  Vmc Sundar likes this..in kavithai sangamam 2.0 – FB
  Sankara Subra Manian likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam -FB

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: