35. வெற்றி மடந்தை.

photo-A.vikatan, Thank you.

 

வெற்றி மடந்தை.

 

பெண்:-
அறுகம் புல்லு வரப்பிலே
மறுகி மறுகி நடப்பவரே
அறுத்தெடுத்த  வல்லாரையை
இறுகக் கட்டித் தாருமய்யா.

பொழுது சாய முன்னாலே
அழுது பிள்ளை வரமுதலே
உழுது நீரும் வாருமய்யா
தொழுது சமையல் முடிக்கிறேன்.

சீவல் பாக்கு முடிந்துதய்யா
ஆவல் மீறுது வெத்திலைக்காய்
சீவல் கொஞ்சம் தாருமய்யா
சிவக்க வெத்திலை போடணுமே!

ஆண்:-
சற்றே வாவேன் மரநிழலில்!
சாவகாசமாய் இருப்போமே!
சுருக்குப் பையின் சீவலை
சுருக்கா உனக்குத் தருவேனே.

வெற்றி மடந்தையாய் நெஞ்சிலே
வெற்றிடம் நிரப்பும் பெண்ணே!
வெத்திலை மாயத்தால் சிவக்கும்
வெற்றி முகம் காண வா!

ஆறுதல் வார்த்தை பேசி
மாறுதல் சிறிது தா!
பீறுதலாகும் உற்சாகமெனக்கு
ஊறுதடி அன்பு உன்மீது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-8-2012.

 

 

                                        

 

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  ஆக 22, 2012 @ 22:07:56

  Aha! arumaiyana Kiramathu padal ponru ullathu.
  Vasikkum pothu kaadchikal virikinrana kankalil.

  Valthukkal

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 24, 2012 @ 20:07:52

   ”…Aha! arumaiyana Kiramathu padal ponru ullathu.
   Vasikkum pothu kaadchikal virikinrana kankalil…”
   o.k …good!….அப்படித்தான் காட்சி விரிய வேண்டும். மகிழ்ச்சி.
   கருத்திடலிற்கு மிக்க நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 23, 2012 @ 01:20:05

  /// வெற்றி மடந்தையாய் நெஞ்சிலே
  வெற்றிடம் நிரப்பும் பெண்ணே!
  வெத்திலை மாயத்தால் சிவக்கும்
  வெற்றி முகம் காண வா! ///

  அருமை… ரசித்தேன்… வாழ்த்துக்கள்… நன்றி…

  மறுமொழி

 3. ramani
  ஆக 23, 2012 @ 01:42:44

  கிராமீய மணத்தோடு
  இலக்கண இலக்கியச் செறிவோடு
  கவிதை புனையும் திறன்
  நிச்சயம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை
  கலை மகளின் ஆசி தங்களுக்கு
  அருளப்பட்டிருக்கிறது.தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 09:07:38

   ”…கிராமீய மணத்தோடு
   இலக்கண இலக்கியச் செறிவோடு
   கவிதை புனையும் திறன்
   நிச்சயம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை
   கலை மகளின் ஆசி தங்களுக்கு
   அருளப்பட்டிருக்கிறது.தொடர வாழ்த்துக்கள்…”

   மிக்க நன்றி சகோதரா, தங்கள் கருத்து மகிழ்வு தந்தது.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. athisaya
  ஆக 23, 2012 @ 03:05:36

  நல்லதோர் கிராமியப் பின்னணியின் சாயலோடு அருமையாக உள்ளது சொந்தமே!ரசித்தேன்..வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 09:28:38

   ”..நல்லதோர் கிராமியப் பின்னணியின் சாயலோடு அருமையாக உள்ளது சொந்தமே!ரசித்தேன்..”
   மிக நன்றி மகிழ்ந்தேன் அதிசயா..
   ஆண்டவன் அருள் நிறையட்டும் சகோதரி..

   மறுமொழி

 5. பழனிவேல்
  ஆக 23, 2012 @ 03:23:02

  “ஆறுதல் வார்த்தை பேசி
  மாறுதல் சிறிது தா!”

  ஆஹா… அழகு… அழகு…
  மிகவும் இயல்பான பாடல்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 09:32:33

   ”…“ஆறுதல் வார்த்தை பேசி
   மாறுதல் சிறிது தா!”

   ஆஹா… அழகு… அழகு…
   மிகவும் இயல்பான பாடல்…”
   மிக இயல்பாக வரவேணும் என்றே முயற்சித்தேன்.
   சரி வந்துள்ளது போல தெரிகிறது.
   கிராமியப் பாடல்கள் எழுதிப் பழக்கமில்லைத் தான்.
   மிக நன்றி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  ஆக 23, 2012 @ 06:38:09

  மிக மிக ரசிக்கும் படியாக அமைந்த வரிகள் அத்தனையும் முத்து.

  மறுமொழி

 7. abdulkadersyedali
  ஆக 23, 2012 @ 07:37:02

  ம்ம்ம் அருமை சகோ

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  ஆக 23, 2012 @ 17:46:39

  “..சீவல் பாக்கு முடிந்துதய்யா
  ஆவல் மீறுது வெத்திலைக்காய்
  சீவல் கொஞ்சம் தாருமய்யா//”
  கிராமிய மொழி வழக்கில்
  அருமையான வரிகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 09:37:39

   ”..“..சீவல் பாக்கு முடிந்துதய்யா
   ஆவல் மீறுது வெத்திலைக்காய்
   சீவல் கொஞ்சம் தாருமய்யா//”
   கிராமிய மொழி வழக்கில்
   அருமையான வரிகள்…”

   முயற்சித்தேன் ஐயா. சரியாகியுள்ளது போலத் தெரிகிறது.
   மகிழ்ச்சியே. தங்கள் கருத்துத் தெளிவு தருகிறது.
   மிக மிக நன்றி.
   ஆண்டவனருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. sujatha
  ஆக 24, 2012 @ 07:26:39

  கிராமிய நாணல், அன்பு, பரிமாற்றங்களின் வாழ்க்கையில் வசந்தம்
  சுகமான இன்பம்….அருமை வாழ்த்துக்கள்!!!!!!

  மறுமொழி

 10. Vanampaadi Ravi
  ஆக 24, 2012 @ 14:29:40

  நல்ல கவிதை இன்னும் ஓசையோடு மெருகூட்டலாம்.

  ________________________________

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 25, 2012 @ 09:42:27

   ”..நல்ல கவிதை இன்னும் ஓசையோடு மெருகூட்டலாம்…”
   மிக்க நன்றி கருத்திற்கு. போகப் போக முயற்சிக்கலாம்.
   இப்படி எழுதிப் பழக்கமில்லைத் தானே
   – அதாவது கிராமியப் பாடல்.
   அவர்களோடு இன்னும் பழகினால் நிறைய வரும்.
   நன்றி…நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. ANGELIN
  ஆக 25, 2012 @ 20:48:47

  அழகான கிராமிய மணம் கமழும் பாடல்

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2012 @ 06:57:18

   ”…அழகான கிராமிய மணம் கமழும் பாடல்!…”’

   உமது கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.. மகிழ்ந்தேன்.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. Tharsini Kanagasabai
  ஆக 27, 2012 @ 03:48:50

  கிராமிய மணம்கமிழம் அழகிய கவிதை ஒவ்வொரு வரிகளும் அழகாக உள்ளது..அழகிய கவியை தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  மறுமொழி

 13. வேல்முருகன்
  ஆக 28, 2012 @ 14:14:21

  காதலென்பது
  கனிய கனிய பேசுவது – இந்த (பாட்டில்)
  கழயினில் அது விளையுது

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 29, 2012 @ 07:00:30

   ”..காதலென்பது
   கனிய கனிய பேசுவது – இந்த (பாட்டில்)
   கழயினில் அது விளையுது!…”’

   மிக்க மகிழ்ச்சி சகோதரா. தங்கள் வரவு, கருத்திடலிற்கும்.
   ஆண்டவன் ஆசி றிறையட்டும

   மறுமொழி

 14. கோவை கவி
  ஆக 30, 2012 @ 19:38:03

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam -FB
  Vmc Sundar likes this..in kavithai sangamam 2.0 – FB.
  சில்லறைக் கவிதைகள் likes this..in கவித்தென்றல் -FB.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: