245. வையகம் எமக்காக.

 

வையகம் எமக்காக.

 

விரிந்த மலர்களின் சுகந்தமும்
சரிந்த நதிகளும் ரசிக்கவே.
பூமியில் நான் பிறந்தேனா!
பூமி எனக்காய்ப் பிறந்ததோ!

குயிலின் இனிய குரலில்
மயிலின் அழகிய ஆடலில்,
கடலின் அலைகள், காற்றின்
பாடலில் தெய்வம் வாழ்கிறது.

பொழியும் மழையின் இதமும்
விழியில் தவழும் நிலவும்
மொழியின் இனிய தழுவலும்
அழியாத இயற்கைக் கிரீடங்கள்.

இத்தனை இதமாம் நந்தவனத்தில்
வார்த்தையின் வீரிய விரிசலில்
அர்த்தங்களில் மூர்க்கம் விரித்து
தர்க்கங்கள் எதிர்வாதங்கள் ஏன்!

கீர்த்தியுடை பாதை விலகாது
நேர்த்தியுடன் முரண்பாடின்றி
அருத்தமுடை உலகப்பூங்காவில்
சொர்க்கமுடை மார்க்கம் தேடலாமே!

வையகம் எமக்காக. நன்கு
கையகப்படுத்தி வாழ்ந்தால்
பையப் பையவே சிகரம் தொடலாம்!
மையப் புள்ளியாய் உயரலாம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-8-2012.

30/10/2012-T

 

                               
 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 29, 2012 @ 01:23:27

  அருமையான கவிதை… வாழ்த்துக்கள்… தொடருங்கள்… நன்றி…

  மறுமொழி

 2. ramani
  ஆக 29, 2012 @ 01:32:53

  சிறப்பாக வாழுவதற்குஎல்லாம் இங்கிருக்கிறது
  அருளப்பட்டிருக்கிறது.உணர்ந்து ரசிக்கவும் மகிழவும்
  மனம்தான் வேண்டும் எனச் சொல்லிப்போகும் கவிதை
  அருமையிலும் அருமை .வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கோவை கவி
  ஆக 29, 2012 @ 19:30:38

  ”…சிறப்பாக வாழுவதற்குஎல்லாம் இங்கிருக்கிறது
  அருளப்பட்டிருக்கிறது.உணர்ந்து ரசிக்கவும் மகிழவும்
  மனம்தான் வேண்டும் எனச் சொல்லிப்போகும் கவிதை
  அருமையிலும் அருமை ..”

  மிக்க நன்றி சகோதரா தங்கள் வரிகளிற்கு.
  தெய்வக் கிருபை நிறையட்டும்.

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  ஆக 30, 2012 @ 00:04:36

  கவிதை அழகு.இயற்கையை இனிமை கெடாது ரசிப்போம்

  மறுமொழி

 5. sujatha
  ஆக 30, 2012 @ 10:48:14

  பொழியும் மழையின் இதமும்
  விழியில் தவழும் நிலவும்
  மொழியின் இனிய தழுவலும்
  அழியாத இயற்கைக் கிரீடங்கள்.

  பிடித்த வரிகள்…..அருமை….வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 30, 2012 @ 18:15:15

   //..பொழியும் மழையின் இதமும்
   விழியில் தவழும் நிலவும்
   மொழியின் இனிய தழுவலும்
   அழியாத இயற்கைக் கிரீடங்கள்…//

   ”பிடித்த வரிகள்.”

   மிக்க நன்றி சுஜாதா உமது கருத்திற்கு. மகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  செப் 01, 2012 @ 02:22:29

  // வையகம் எமக்காக. நன்கு
  கையகப்படுத்தி வாழ்ந்தால்
  பையப் பையவே சிகரம் தொடலாம்!
  மையப் புள்ளியாய் உயரலாம்!//

  உண்மைதான். நல்ல கருத்துள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 01, 2012 @ 06:55:25

   ”..// வையகம் எமக்காக. நன்கு
   கையகப்படுத்தி வாழ்ந்தால்
   பையப் பையவே சிகரம் தொடலாம்!
   மையப் புள்ளியாய் உயரலாம்!//

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்திற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. ranjani135
  செப் 01, 2012 @ 02:47:17

  உங்களின் ‘வையகம் எமக்காக’ படித்தவுடன் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக…’ என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
  மிகவும் அழகாக இறைவனின் படைப்பைப் பாராட்டி இருக்கிறீர்கள்.
  வாழ்த்துகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 01, 2012 @ 07:00:52

   //…உங்களின் ‘வையகம் எமக்காக’ படித்தவுடன் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக…’ என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
   மிகவும் அழகாக இறைவனின் படைப்பைப் பாராட்டி இருக்கிறீர்கள்.//

   ஆமாம் சகோதரி .
   பாடலில் பிறந்த கவிதை என்று கூறலாம் போல உள்ளது.
   மிக நன்றி உங்கள் உடன் வரவு, கருத்திற்கும்.மிக மகிழ்ந்தேன்.
   (பலருக்கு கருத்திட்டு நான் களைப்படைவதும் உண்டு.
   எந்தவிதப் பிரதிபலிப்பும் இருப்பதில்லை.)
   நிச்சயமாக மீண்டும் சந்திப்போம்
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

   • ranjani135
    செப் 01, 2012 @ 07:14:58

    வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் எத்தனை தூரத்தில் இருப்பவர்களையும் பக்கத்தில் கொண்டு வந்து விடுகிறதே! உங்கள் நாடு வருவது கடினம்; உங்கள் வலைத்தளத்திற்கு நொடியில் வந்து விடலாமே!
    உங்கள் இறையாசிக்கு நன்றி சகோதரி!

 8. கோவை கவி
  செப் 01, 2012 @ 08:36:06

  Umah Thevi and Gunavathi Pachayapan like this..in வித்யாசாகர் – FB
  சில்லறைக் கவிதைகள் likes this..in கவித்தென்றல் – FB.
  Malar Chelvem, SMK Convent Taiping// Mageswari Periasamy, Kampong Selayang, Kuala Lumpur, Malaysia likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam – FB
  ….
  Ahila Puhal likes this..in கவிதை முகம் – FB
  You, Sujatha Anton and ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா like this..

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா ‎”விரிந்த மலர்களின் சுகந்தமும்
  சரிந்த நதிகளும் ரசிக்கவே.
  பூமியில் நான் பிறந்தேனா!
  பூமி எனக்காய்ப் பிறந்ததோ!”

  எழில் நிறைந்த இயற்கையின் ஏற்பாடுகள் எல்லாம் எமக்காகத்தான்! பழைய பாட்டு பொருள் என்றாலும் மிகவும் புதுமையாக.. இனிமையாக சொல்லப்படுகிறது!! வாழ்த்துக்கள் அம்மா!!ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  http://youtu.be/j8oCtAIyrikUlagam Piranthathu Enakkaga.
  Vetha ELangathilakam:-
  பாடலில் பிறந்த கவிதை எனலாம் போல உள்ளதே……..
  மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 9. abdulkadersyedali
  செப் 01, 2012 @ 18:00:06

  இனிமைத் தமிழில்
  இயற்கை கொஞ்சும் அழகிய கவிதை

  மறுமொழி

 10. பழனிவேல்
  செப் 05, 2012 @ 03:51:36

  “பூமியில் நான் பிறந்தேனா!
  பூமி எனக்காய்ப் பிறந்ததோ!”

  ஆரோக்கியமான சிந்தனை..
  அழகு….

  வையகம் எ(உ)மக்காக. நன்கு
  கையகப்படுத்தி வாழ்ந்தால்
  பையப் பையவே சிகரம் தொடலாம்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 05, 2012 @ 16:51:03

   “பூமியில் நான் பிறந்தேனா!
   பூமி எனக்காய்ப் பிறந்ததோ!”

   ஆரோக்கியமான சிந்தனை..
   அழகு….

   வையகம் எ(உ)மக்காக. நன்கு
   கையகப்படுத்தி வாழ்ந்தால்
   பையப் பையவே சிகரம் தொடலாம்

   மிக்க நன்றி சகோதரா தங்கள் பகிர்விற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: