4. பயணம் மலேசியா. 8

 

4. பயணம் மலேசியா.  8

 

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் அமைந்த சூர்யா பல் பொருள் அங்காடியில் (கீழே) சாப்பிட்ட பின்பு நாம் கோலாலம்பூர் மினேறா தொலைத் தொடர்புக் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.

இவைகள் கிட்டக் கிட்ட உள்ள இடங்கள் தான்.

கே. ஏல் கோபுரம் என்று கூறப்படும்  மினேறா (Menara) கோலாலம்பூர் கோபுரம். மலேசியா நாட்டின் அடையாளச் சின்னமும் தான்.

இது புக்கிட் நனாஸ் ( Bukit Nanas   ) பைன் அப்பிள் மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 1991ல் 3 பிரிவுகளாகக் கட்ட ஆரம்பித்தனர். 421 மீட்டர் உயரம். (1,381 அடி).  1995ல் முழுவதும் கட்டி முடிக்கப் பட்டதாம். 1996ல் உத்தியோக பூர்வமாகத் திறக்கப் பட்டதாம்.

இந்த விவரங்கள் படத்துடன் ஒரு அறையில் விளக்கமாக எழுதப்பட்டு வாசிக்கும் வசதியுடன் உள்ளது. மகளும் துணைவரும் பார்க்கும் போது 2 படங்கள் எடுத்தேன், பாருங்கள். 

மண் கிளறிக் கிண்டியெடுத்ததிலிருந்குக் சகல வேலைகளும் விவரமாகத் தந்துள்ளனர் படங்களுடன்.

உலகிலேயே 7வது உயரத் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையமாகக் கணக்கிடப் பட்டுள்ளது மினேறா கோலாலம்பூர் கோபுரம். உச்சியில் சுளரும் உணவகம் உள்ளது.

google photo.

அங்கு செல்ல உயர்த்தி (லிப்ட்) உள்ளது. 54 செக்கன்டில் மேலே போகலாமாம். கீழே வர 52 செக்கன்ட் எடுக்குமாம். அனுமதிக் கட்டணத்துடன் செல்ல முடியும்.

நேரப் பற்றாக் குறையால் நாம் மேலே ஏறவில்லை. மேலே ஏறினால் கவனிக்கும் (கிரகிக்கும்) தளம் (observation    ) இந்தப் படத்தில் உள்ளது தான்.

( இது கூகிள் படம்.)

இங்கு செல்பவர்கள் மேலேயும் ஏறிப் பார்க்க வேண்டும், தொலை நோக்குப் பிரமாண்டமான மலேசியக் காட்சியாகும். –  இது  இரவுக் காட்சியாக கூகிள் படம் இறுதிப் படமாகப் போடுகிறேன்.

இதன் படிக்கட்டுகளில் (2058 படிகளாம்) மேலேறிச் செல்வதற்கு வருடா வருடம் போட்டி நடத்துவார்களாம். இசுலாமிய ரம்ளான் மாதப் பிறைகள் காணும் (காணோக்கி) வானோக்கியாகவும் இக் கோபுரம் பயன் படுகிறதாம்.
இதன் சமீபமாகவே பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமும் உள்ளது. விண்வெளியை அடையாளப் படுத்தும் சின்னமாக இது பெட்ரோனாஸ் கோபுரத்துடன் போட்டி போடுகிறதாம்.

இக்கோபுர தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நினைவுப் பொருட் கடைகள்,

நிர்வாகக் கந்தோர், இஸ்லாம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பழைய வீடுகள்,

கட்டிடங்கள் என்று மாதிரியாக காட்சிக்கு உள்ளது.

(ஓலை வீடு, தட்டி வீடுகளான பழைய பாணிகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.)

146 மீட்டர் நீளமான பாதசாரிகள் நடந்து பார்க்க உள்ள இடத்திலே இவைகள் உள்ளன.

அழகான தாமரை உருவில் நீர் பொங்குவது என்று உள்ளன.

அழுகு தான். படங்களைப் பாருங்கள்.

(முடிந்தளவு படங்கள் எடுத்தேன். கீழிருக்கும் கூகிள் படத்தில் பெட்ரோனாஸ் கோபுரமும், மினேறா கோபுரமும் ஒருங்கு சேரத் தெரிகிறது. இரவுக்காட்சி.))

மிகுதியை அங்கம் 9ல் காணுவோம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-9-2012.

 


 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  செப் 01, 2012 @ 22:23:55

  கட்டுரையை ரசித்தேன்.

  கோவைக்கவி என்ற பெயரின் காரணம் தெரிந்து கொள்ளலாமா?

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 02, 2012 @ 08:12:39

   மிக்க நன்றி ஐயா கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   எனது பிறந்த ஊர் கோப்பாய்.
   இதைக் கோவை பதி என்றும் அழைப்பர்.
   இதனால் கோவை கவி என்று 2 வருடங்களிற்கு முன்னிருந்து
   பெயரிட்டேன்.

   மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  செப் 02, 2012 @ 02:15:46

  அருமையான படங்களுடன், அழகான விளக்கங்கள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  செப் 02, 2012 @ 04:07:37

  மலேசியா… படங்கள் அருமை… ரொம்ப நன்றிங்க…

  மறுமொழி

 4. சத்ரியன்
  செப் 02, 2012 @ 04:19:48

  மலைகளின் அரசி மலேசியாவை அழகுற எழுதி வருவது சிறப்பாக இருக்கிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 02, 2012 @ 11:55:03

   மலைகளின் அரசி – ஏதும் எழுத்துப் பிழையோ!
   புரியவில்லை சகோதரா.
   எது எப்படியாயினும் கருத்திடலிற்கு நன்றி.
   ஆண்டவனருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. Ahil
  செப் 02, 2012 @ 07:50:37

  படங்களும் அழகு…வேதாவும் அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 02, 2012 @ 11:59:07

   ”..படங்களும் அழகு…வேதாவும் அழகு…”
   ,இது தான் பகிடி என்பது.
   காலையிலிருந்து அலைந்து களைத்துப் போயுள்ளேன் .
   முகத்தில் அப்படியே எழுதி ஒட்டியிருக்கு…
   சரி அது போகட்டும். தங்கள் வரவிற்கு, வரிக்கு மிக
   மிக நன்றி.
   ‘தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

   • Ahila Puhal
    செப் 03, 2012 @ 07:32:10

    களைப்பு உங்களுக்கு மட்டும் தானே தெரியும். எங்களுக்கு நீங்கள் அழகாத்தான் தெரியிரீங்க….

  • கோவை கவி
   செப் 03, 2012 @ 17:17:18

   ha!…ha!…..

   மறுமொழி

 6. sujatha
  செப் 02, 2012 @ 19:59:05

  படங்களுடன் கூடிய பயணமும் நினைவுகளும் அருமை….

  மறுமொழி

 7. கோவை கவி
  செப் 02, 2012 @ 20:54:28

  மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சுஜா கருத்திடலிற்கு.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

  மறுமொழி

 8. ramani
  செப் 03, 2012 @ 03:19:50

  அருமையான படங்களுடன் தாங்கள்
  தருகிற விவரங்களும் அந்த இடம் குறித்த
  முழுமையான அறிதலுக்கு மிகவும் உதவுகிறது
  பயனுள்ள மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 03, 2012 @ 17:22:56

   ”..அருமையான படங்களுடன் தாங்கள்
   தருகிற விவரங்களும் அந்த இடம் குறித்த
   முழுமையான அறிதலுக்கு மிகவும் உதவுகிறது…”

   மிக மகிழ்ச்சி சகோதரா. அத்துடன் கருத்துப் பதிவிற்கும் மிக நன்றி.
   ஆண்டன் ஆசி றிறையட்டும்.

   மறுமொழி

 9. Kavialagan
  செப் 03, 2012 @ 04:10:50

  Rammiyamana idankal
  Kollai alaku

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 03, 2012 @ 17:26:19

   Ipad லேயா இக் கருத்து எழுதப்படுகிறது.?
   தங்கிலீசு ரெம்பக் கஷ்டமப்பா வாசிக்க
   கருத்துப் பதிவிற்கு மிக நன்றி கவி அழகன்..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. kuttan
  செப் 03, 2012 @ 05:47:28

  அழகான படங்களுடன்,சிறப்பான பகிர்வு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: