36. மறந்திடு! மாறிடு!

                                   நன்றி தேவி வார இதழ்.

 

மறந்திடு! மாறிடு!

 

வா வா என்கிறான்.
தா காதலென்கிறான்.
சா வராதோவென்கிறான்.
பா பாவாக வரைகிறான்.

பொல்லாக் காதலனவனோ!
தோல்வியைத்தான் கண்டானோ!
கல்லான காதலுக்காய்த் தினம்
நல்லாக ஏங்குகிறான் ஏங்குகிறான்!

ண்ணிறைந்த ஏக்கம் விலக்கி
எண்ணக் கிளையில் காதல்
வண்ண இலைகள், மலர்கள்
தண்மையாய் (குளிர்மையாய்) விரியவில்லையாம்.

டகுத் துறைக்குக் காதல்
படகு வரவில்லையாம், அதனால்
தடங்கல் சயனத்திற்கென்று
கடலாக ஏக்கம், தாக்கம்!

பாவை தனைத் தேடாளோவெனப்
பாகாய் உருகி மாய்கிறான்.
பாவாணர் பரம்பரையாய்ப்
பாங்காய்ப் பா வரைகிறான்.

லக்கணம் மாறிய காதல்
பிலாக்கணம் பாடுது நோதலால்.
துலக்கமாகிறது சலனக் கூதல்.
கலக்க வலி வரியினோதல்.

றக்கலாம் இதனையவன்!
சிறக்கலாம் புதுப் பாதையிலிவன்!
மானில வாழ்வொருமுறைதான்!
தேனிலவாக்கலாம் மாறியிவன்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2012.

 

                                   

 
 

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  செப் 06, 2012 @ 22:38:15

  Kavithai rasithu padithen
  Thamilai rusithu kudithen

  மறுமொழி

 2. வெங்கட்
  செப் 07, 2012 @ 02:34:02

  நல்ல கவிதை. ஏற்ற படங்களும் தான்…..

  மறுமொழி

 3. கோவை கவி
  செப் 07, 2012 @ 06:21:17

  சகோ ,
  இனிமேல் நான் மின்னஞ்சலிலேயே
  பின்னூட்டம் இடுகிறேன் .
  கடவுச்சொல் கொடுத்தும் கூட தவறு என்றால்
  என்ன செய்வது ?
  பேசாமல் மாடரஷன் இன்றி விமர்சனம் தரும் முறை வந்தால்
  நன்றாக இருக்கும் சகோ .

  மறந்திடு கவிதைக்கான கமன்ட் ;-

  அழகுக் கவிதை !
  மிகச் சிறப்பு !

  nandri !

  -sravani.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  செப் 07, 2012 @ 07:07:34

  ரசிக்க வைக்கும் வரிகள்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. kuttan
  செப் 07, 2012 @ 07:24:50

  சிறப்பான கவிதை

  மறுமொழி

 6. b.ganesh
  செப் 07, 2012 @ 07:45:58

  மேலே நீங்கள் வைத்திருக்கும படமே மனதை மயக்கிடுச்சு, கவிதையும் வழக்கம் போல் வெகு அருமை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 08, 2012 @ 14:14:30

   ”…மேலே நீங்கள் வைத்திருக்கும படமே மனதை மயக்கிடுச்சு, கவிதையும் வழக்கம் போல் வெகு அருமை…”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. arounaselvame
  செப் 07, 2012 @ 13:49:01

  மறக்கலாம் இதனையவன்!
  சிறக்கலாம் புதுப் பாதையிலிவன்!
  மானில வாழ்வொருமுறைதான்!
  தேனிலவாக்கலாம் மாறியிவன்!

  ரொம்ப கஷ்டம் கோவைக் கவி அவர்களே.

  கவிஞரே… உங்கள் வலைக்குள் பாலோவர்ஸ் ஆகவும் முடியவில்லை. வலைக்குள் வந்து கருத்திட்டாலும் உடனடியாக வெளியாகமல் அப்படியே நின்றும் விடுகிறது. இது எனக்கு மட்டுமா…? அதனாலே வந்து படித்தவிட்டு மட்டும் செல்கிறேன். மன்னிக்கவும்.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 08, 2012 @ 21:02:37

   ”…கவிஞரே… உங்கள் வலைக்குள் பாலோவர்ஸ் ஆகவும் முடியவில்லை. வலைக்குள் வந்து கருத்திட்டாலும் உடனடியாக வெளியாகமல் அப்படியே நின்றும் விடுகிறது. இது எனக்கு மட்டுமா…? அதனாலே வந்து படித்தவிட்டு மட்டும் செல்கிறேன். மன்னிக்கவும்…

   ஸ்ரவாணிக்கும் பிரச்சனையாம். ஏவிஜி அன்ரிவைரஸ் போட்ட பின்பு இப்படியோ என்றும் தெரியவில்லை.
   கடந்த யூலையுடன் 2 வருடமாகிறது. வலை திறந்து.
   இப்போது தான் இப்படி முறைப்பாடுகள் வருகிறது.
   Email ல்- தங்கள் கருத்து காத்திருந்தது.
   நான் ஓ.கே போட இங்கு வந்தது.எனக்கேதும் புரியவில்லை.
   தொழில் நுட்பமும் அவ்வளவு தெரியாது.

   தங்கள் கருத்திற்கு நன்றி.
   வந்து கருத்திட முடியாததற்கு மன வருத்தம் தான்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Vanampaadi Ravi
  செப் 07, 2012 @ 14:50:52

  Nothing to read.

  ________________________________

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  செப் 07, 2012 @ 17:05:31

  நல்ல கவிதை
  “மானில வாழ்வொருமுறைதான்!
  தேனிலவாக்கலாம் மாறியிவன்..”
  சிறப்பான இறுதி வரிகள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 08, 2012 @ 21:07:22

   ”..நல்ல கவிதை
   “மானில வாழ்வொருமுறைதான்!
   தேனிலவாக்கலாம் மாறியிவன்..”
   சிறப்பான இறுதி வரிகள்…”

   மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. ramani
  செப் 07, 2012 @ 21:57:49

  ஓவியமும் அதற்கு விளக்கமாக தாங்கள்
  படைத்துள்ள காவியமும் அருமை
  வார்த்தைகள் மிக இயல்பாக
  தன்னை தகவமைத்துக் கொள்ளுவதே
  தங்கள் படைப்புகளில் சிறப்பு
  இக்கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 08, 2012 @ 21:11:12

   ..வார்த்தைகள் மிக இயல்பாக
   தன்னை தகவமைத்துக் கொள்ளுவதே
   தங்கள் படைப்புகளில் சிறப்பு
   இக்கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல..”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திடலிற்கு.
   மகிழ்ந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. sujatha
  செப் 08, 2012 @ 05:11:05

  காதல் ரசனையும், பாவனையும் கவிநயத்தில் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன.
  வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

 12. kowsy
  செப் 08, 2012 @ 21:18:26

  படமும் கவியும் அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்

  மறுமொழி

 13. பழனிவேல்
  செப் 10, 2012 @ 14:44:13

  “பொல்லாக் காதலனவனோ!
  தோல்வியைத்தான் கண்டானோ!
  கல்லான காதலுக்காய்த் தினம்
  நல்லாக ஏங்குகிறான் ஏங்குகிறான்!”

  காதோடு காதல் பேசி – என்னைக்
  கவர்ந்த கவிதை.
  அழகு

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 16, 2012 @ 18:50:02

   ”…காதோடு காதல் பேசி – என்னைக்
   கவர்ந்த கவிதை.
   அழகு…”

   சகோதரா பழனி! ஒரு நண்பரின் கவிதை எப்போ பார்த்தாலும் காதல் தோல்வி ஒப்பாரி தான். நான் களைத்துப் போய் இக்கவிதையை எழுதினேன் .அவருக்குத் தெரியாது அவருக்காக நான் எழுதியது என்று.
   சரி மிக்க நன்றி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 14. கோவை கவி
  செப் 16, 2012 @ 19:00:54

  IN FB:-
  Abira Raj likes this..in கனவு விழிகள்.
  Rajiv Kumar, Anbarasan Sankaran Works at SAUDI ARAMCO COMPANY, SAUDI ARABIA…likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam.
  Umah Thevi, ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and Jasmin Mariya Jenat like this..in வித்யாசாகர்.
  ..

  மறுமொழி

 15. கீதமஞ்சரி
  செப் 17, 2012 @ 10:35:15

  வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம்தான். ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை என்பதை இன்றைய இளைஞர்கட்குப் புரியவைக்கும் விதத்தில் அழகாய் எடுத்துரைக்கும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 16. Vetha.Elangathilakam.
  செப் 26, 2012 @ 19:59:00

  ”…வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம்தான். ஆனால் அதுவே வாழ்க்கை இல்லை என்பதை இன்றைய இளைஞர்கட்குப் புரியவைக்கும் விதத்தில் அழகாய் எடுத்துரைக்கும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி….”

  மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் தோழி.
  ஆண்டவன் அருள் நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: