246. படிப் படியாய்….

படிப் படியாய்….

ம்மா அப்பாவோடணைந்தபடி
அகரம் கூறியது மழலைப்படி.
ஆசிரியர் உறவுமிணைந்தபடி
ஆரம்பமானது வளர்ச்சிப் படி.

ச்சை மண்ணில் எழுதியபடி
இச்சையாய்த்  திருக்குறள் மனனப்படி.
மிச்சம் வளரும் முயற்சிப்படி
உச்சம் ஏறும் சவாற்படி.

ருணையாய்ப் பாசுரங்கள் ஒதியபடி
கடவுள் வணக்கம் நியமப்படி
கலகலத்த உறவோடாடியபடி
கண்ணியமாய் வளர்ந்தோமுன்னதப்படி.

ள்ளிப் படிப்பு கடமைப்படி
பல சூதுவாது கலந்தபடி
பெரியோர் வழி காட்டற்படி
படித்துச் சமாளித்தது வெற்றிப்படி.

நேர்மைப்படி நேரப்படி
நெடும் பாதையிவை கடந்தபடி
நம்பிக்கையோடு துணிவுப்படி
ஏற்றியபடியிவை ஏணிப்படி.

லையோடு கவிதைப்படி
உணர்வோடு ஊடகப்படி
ஊடாடியது உற்சாகப்படி
கூடுகிறோமின்று இணையப்படி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-9-2012.

*

 

 

***************************************************

 

29 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. மகேந்திரன்
    செப் 15, 2012 @ 22:12:09

    அமர்ந்தபடி
    நீங்கள் எழுதியதையெல்லாம்
    படித்தபடி
    என்னில் ஏற்றிக்கொண்டேன்
    உள்ளபடி….

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 17, 2012 @ 07:16:23

      சகோதரா தங்களுக்கு விடுமுறை. ஆனால்
      பலரிற்கு நான் கருத்திட்டும் அவர்களை இங்கு காணோம்!!!!
      இது சிறிது ஆச்சரியம் தான் !!!
      ஆனால் எனக்குக் களைப்பாக உள்ளது…..
      என்ன மந்திரம் செய்யலாம்!!!!!

      மகி! உங்கள் வரவு கருத்திற்கு மிக மிக நன்றி…
      ஆண்டவனருள் நிறையட்டும்.

      மறுமொழி

  2. abdulkadersyedali
    செப் 16, 2012 @ 06:24:08

    ம்ம்ம் ….அருமை கவிதாயினி

    மறுமொழி

  3. கோவை கவி
    செப் 16, 2012 @ 06:53:36

    After 10th- 14th holiday in Germany-Now this one. படிப் படியாய்….
    (Duseldorf-Erklence-Haiden(L)burg- Bad marienburg and Frankfurt)

    மறுமொழி

  4. Dr.M.K.Muruganandan
    செப் 16, 2012 @ 16:57:23

    மொழியழகுக் கவிதைப் படி
    வாழ்வில் என்றும் வளர்ச்சிப்படி
    படைப்புலகில் உங்களுக்கென்றும் ஏற்றப்படி.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 17, 2012 @ 21:05:34

      ”…மொழியழகுக் கவிதைப் படி
      வாழ்வில் என்றும் வளர்ச்சிப்படி
      படைப்புலகில் உங்களுக்கென்றும் ஏற்றப்படி…”

      மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திடலிற்கு.
      மிக மகிழ்ச்சியும் கூட.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  5. sujatha
    செப் 16, 2012 @ 19:30:56

    கல்விப்படிப்பு படிப்படியான முன்னேற்றங்கள். கவிநயத்தில் படிப்படியாய் உரைத்த அழகு அருமை….

    மறுமொழி

  6. கோவை கவி
    செப் 16, 2012 @ 21:19:31

    Sujatha Anton, ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா, Grastley Jeya, வசந்தா சந்திரன்
    J/union college tellippalai likes this in fb.
    Mari Muthu C and Dinesh Babu like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்- FB
    மு. சுவாமிநாதன். likes this..
    மு. சுவாமிநாதன்:-
    நன்று!
    Vetha ELangathilakam:-
    mikka nanry.
    Gunavathi Pachayapan likes this..in வித்யாசாகர்.

    ..

    மறுமொழி

  7. கீதமஞ்சரி
    செப் 17, 2012 @ 10:28:52

    படிப்படியாய் வளர்ந்துவிட்ட வாழ்க்கைப்படியின் ஒவ்வொரு படியிலும் மீண்டும் நின்று நிதானிக்கவைத்த அழகு வரிகள். தங்கள் கவித்திறன் கண்டு களித்தேன். பாராட்டுகள். தங்கள் வலைப்பூவுக்கு வருகை தரக்கூடாது என்ற எண்ணமில்லை. சற்றே தாமதமாயிற்று. அவ்வளவுதான். தங்கள் அன்பான அழைப்புக்கு மிகவும் நன்றி.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 17, 2012 @ 21:07:26

      ”…படிப்படியாய் வளர்ந்துவிட்ட வாழ்க்கைப்படியின் ஒவ்வொரு படியிலும் மீண்டும் நின்று நிதானிக்கவைத்த அழகு வரிகள். தங்கள் கவித்திறன் கண்டு களித்தேன். பாராட்டுகள்…”’

      மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திடலிற்கு.
      மிக மகிழ்ச்சியும் கூட.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  8. திண்டுக்கல் தனபாலன்
    செப் 17, 2012 @ 11:32:20

    ‘படி’ப்’படி’யாய் வெற்றிப் படிகள்… வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  9. kowsy
    செப் 17, 2012 @ 20:08:43

    அனைத்துப் படிகளும் அற்புதம். அதை அடுக்கிச் சொல்லிய விதமும் அற்புதம் . தொடருங்கள். வாழ்த்துகள்

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 17, 2012 @ 21:09:55

      ”..அனைத்துப் படிகளும் அற்புதம். அதை அடுக்கிச் சொல்லிய விதமும் அற்புதம் . தொடருங்கள்…”

      மிக்க நன்றி தங்கள் கருத்திடலிற்கு.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  10. வே.நடனசபாபதி
    செப் 18, 2012 @ 01:49:33

    எப்படி உங்களால் இப்படி எழுதமுடிகிறது? வியக்கிறேன்! வாழ்த்துக்கிறேன்!!

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 18, 2012 @ 06:46:14

      இக்கவிதை குழந்தைப் பிள்ளைக் கவிதை மாதிரியிருக்கிறது என்று ஒதுக்கி வைத்திருந்தேன்.
      ஆயினும் என் எழுத்துத் தானே வாசிக்கட்டும் எல்லோரும் என்று துணிந்து போட்டேன்.

      தங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  11. Mageswari Periasamy
    செப் 18, 2012 @ 04:09:04

    ஒவ்வொரு படியாக நீங்கள் கடக்கையில்,
    படிப்படியாக ஏறுகிறீர்கள் என் மதிப்பின் சிகரத்தில்..
    நுனிப்புல் மேய்வது போல்,
    தமிழைக் குதறிக்கொண்டிருக்கும்,
    இன்றைய காலக்கட்டத்தில்,
    தமிழ் படியில் ஏறுவது சுகமாகத்தான் இருக்கிறது.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 18, 2012 @ 06:51:06

      ”..ஒவ்வொரு படியாக நீங்கள் கடக்கையில்,
      படிப்படியாக ஏறுகிறீர்கள் என் மதிப்பின் சிகரத்தில்..
      நுனிப்புல் மேய்வது போல்,
      தமிழைக் குதறிக்கொண்டிருக்கும்,
      இன்றைய காலக்கட்டத்தில்,
      தமிழ் படியில் ஏறுவது சுகமாகத்தான்…..”

      மிக மிக நன்றி சகோதரி கருத்திற்கு.
      உங்களைப் போல இன்னோரு மலேசியச் சகோதரரும் பயணக்கதையில் கருத்திட்டுள்ளார் பார்க்கச் சந்தோசமாக இருந்தது. பயணம் சென்றதால் பதில் எழுதவில்லை விரைவில் எழுதுவேன்.
      உங்கள் கருத்திற்கு மகிழ்வும் நன்றியும்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  12. பழனிவேல்
    செப் 21, 2012 @ 12:04:27

    தங்கள் கவிதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
    காரணம், தங்கள் படி கவிதை எனக்கு பாவேந்தரின் வரிகளை கண் முன் கொண்டுவந்து விட்டது.

    கவிதை படி – கோவைகவி
    கவிதை படி.

    அழகு…

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 26, 2012 @ 19:15:48

      ”..தங்கள் கவிதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
      காரணம், தங்கள் படி கவிதை எனக்கு பாவேந்தரின் வரிகளை கண் முன் கொண்டுவந்து விட்டது.

      கவிதை படி – கோவைகவி
      கவிதை படி….”

      மிக்க நன்றி சகோதரா.
      மகிழ்வுமடைந்தேன் கருத்திற்கு.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  13. வேல்முருகன்
    செப் 21, 2012 @ 12:12:43

    படித் “தேன்”

    மறுமொழி

  14. குட்டன்
    செப் 21, 2012 @ 14:56:48

    இப்படி வெற்றிப்படி பற்றிப் படிக்கக் கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்?

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 30, 2012 @ 07:56:02

      ”…இப்படி வெற்றிப்படி பற்றிப் படிக்கக் கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்?…”

      மிக்க நன்றி சகோதரா. இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  15. கவிஞர் த.ரூபன்
    ஜூன் 07, 2017 @ 00:14:50

    வணக்கம்
    ஒவ்வொரு படிகளையும் கடந்ததுதான் வாழ்க்கை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  16. கோவை கவி
    அக் 11, 2019 @ 10:18:05

    11-10-2019:-
    Punitha Ganesh :- பல படிகள் உயர்த்தட்டும்

    Vetha Langathilakam :- Makilchchy Anpu sis

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி