37. மீன் விழி நீந்தி…

நன்றி:- கல்கி.

 

மீன் விழி நீந்தி…

 

ஆண்:-

மீன்விழி நீந்தி மகிழ்வினில் ஆடும்
குளிர் நீரோடையோ!
உன் மேனியென்ன பனிமலர்
அமைத்த பஞ்சணையோ!…. ……  (மீன் விழி)

காமன் அமைத்த பூந்தோட்டமோ! நம்
காதல் ஊஞ்சல் மேடையோ!
காலம் இதுவே அருகில் வர
கோபம் ஏனோ கோமளமே!……………(மீன் விழி)

பாதம் நோகுமோ பாவையே வா!
பேதமின்றிப் பிரியாது பழகுவோம்!
பூவினும் மெல்லிய இதழ்த் தேனை
பூரித்து அருந்துவோம் பூமகளே!……(மீன் விழி)

பூக்கள் தூவும் வரவேற்புக் கவிதை!
பூமி வரையும் வாழ்த்துக் கவிதை
தீர்க்கட்டும் எம் காதல் நோயை!
பார்க்கட்டும் உலகு நம் காதலை!…(மீன்விழி)

பெண்:-

ன்னவா உன் மார்பென்ன
சின்னச் சிங்கார மஞ்சமோ!
மன்மதனின் பாணமேந்தும் சித்திரப்
பொன்னுடல் மேடையோ!……………..(மீன்விழி)

வாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்
சேருங்கள் என்று காத்திருந்தேன்.
கோருவது தினம் இதுவே கோதையின்
கோமள ராஜனே வருக!………………….(மீன்விழி)

ற்பக தருவாய், காமதேனுவாய்க் காதல்
காலமெல்லாம் பயன் தரட்டும்.!
மலர்களும் மாலைகளும் மஞ்சத்தில் நிதம்
மணக்கட்டும் கல்யாணிராகம் மயக்கட்டும்!……(மீன்விழி)

ன்மதலோக மாயவன் கணைகள்
மென்மையாகப் பாயட்டும்!
மாலையென்ன காலையென்ன மன்மத
மாயங்கள் செய்யட்டும் நாளும்!………..(.மீன்விழி)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2012.

 

                             

                                                                                                   http://youtu.be/d4WAXasFE_E

பாடலில் பிறந்த கவிதையெனலாம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – தென்றலில ஆடும்.)

 

                           

 

 

46 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. arounaselvame
  செப் 18, 2012 @ 22:02:11

  பெண்ணை குளிர் நீரோடையோ… என்றும்
  ஆணைச் சித்திர பொன்னுடல் மேடையோ….என்றும் இயைபாகப் பாடியிருப்பது அருமை.
  கவிதையும் நன்றாக உள்ளது கோவைகவி அவர்களே.

  மறுமொழி

 2. மகேந்திரன்
  செப் 18, 2012 @ 22:14:03

  தேனும் தினைமாவும்
  கலந்து கொடுத்த
  காதல்மொழி பேசும்
  கவிதை இனிது…..

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 23, 2012 @ 19:17:55

   ”….தேனும் தினைமாவும்
   கலந்து கொடுத்த
   காதல்மொழி பேசும்
   கவிதை இனிது…..”
   மிக்க நன்றி மகேந்திரன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. drpkandaswamyphd
  செப் 18, 2012 @ 22:16:49

  கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

  மறுமொழி

 4. drpkandaswamyphd
  செப் 18, 2012 @ 22:18:11

  அப்பாடீஈஈஈஈஈஈஈஈஈஈஈ, கமென்ட் போடறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சுங்க

  மறுமொழி

 5. drpkandaswamyphd
  செப் 18, 2012 @ 22:19:19

  பரவாயில்லீங்க, ஒரு கமென்ட் போட்டதுக்கப்புறம் அடுத்த கமென்ட் போட சுளுவாயிருக்கு.

  மறுமொழி

 6. ramani
  செப் 18, 2012 @ 23:40:17

  அற்புதமான கவிதை
  மெல்லிய காதல் உணர்வுகளை
  வார்த்தை ரதத்தில் ஏற்றி எங்கள்
  உள்ளமெல்லாம் வலம் வர வைத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  படமும் அதற்கான கவிதையும் அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 23, 2012 @ 19:22:41

   ”…அற்புதமான கவிதை
   மெல்லிய காதல் உணர்வுகளை
   வார்த்தை ரதத்தில் ஏற்றி எங்கள்
   உள்ளமெல்லாம் வலம் வர வைத்தமைக்கு….”’

   மிக்க நன்றி சகோ.ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. T.N.MURALIDHARAN
  செப் 19, 2012 @ 01:17:30

  பாடல் வடிவில் கவிதை நன்று. படங்கள் அருமை.

  மறுமொழி

 8. abdulkadersyedali
  செப் 19, 2012 @ 05:50:21

  ம்ம்ம் …அருமை சகோ

  மறுமொழி

 9. sasikala
  செப் 19, 2012 @ 06:27:15

  காலையென்ன மாலையென்ன தொடரட்டும் கவிக்கனைகள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  செப் 19, 2012 @ 07:01:58

  Abira Raj likes this..in கனவு விழிகள்.
  Gunavathi Pachayapan likes this..in வித்யாசாகர்.
  Mageswari Periasamy likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam
  Mohan Kumar likes this.in கவிதை முகம்.
  Mohan Kumar:-
  great ….
  Vetha ELangathilakam:-
  Thanks…..God bless you..

  மறுமொழி

 11. mohan.p
  செப் 19, 2012 @ 07:45:43

  அருமையாக இருந்தது கவிதை மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 23, 2012 @ 20:32:06

   ”..அருமையாக இருந்தது கவிதை மிக்க நன்றி சகோ..”

   மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.
   நிச்சயம் வருகிறேன் தங்கள் வலைக்கு.

   மறுமொழி

 12. மஞ்சுபாஷிணி
  செப் 19, 2012 @ 10:27:16

  ஆஹா வேதாம்மா,

  காதல் கவிதை இசை அமைத்து பாடும்படி அமைந்த பாடல் வரிகள் சிறப்பு….

  பெண்களின் உடல் எத்தனை மிருதுவானது என்று பனிமலர் என்று சொன்னது மிக அழகு…

  காதல் என்றும் தீராத ஒரு அட்சயப்பாத்திரம் என்பதை மிக அழகிய வரியால் கற்பகத்தருவாய், காமதேனுவாய் என்று சித்தரித்த விதம் அருமை வேதாம்மா…

  காதலைச்சொல்லும் அழகிய கவிதை வரிகள் சிறப்பு… ரசித்தேன்..

  அன்பு நன்றிகள் வேதாம்மா கவிதை பகிர்வுக்கு….

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 24, 2012 @ 20:23:38

   அன்பின் மஞ்சும்மா! தங்கள் விரிவான கருத்திடலிற்கு மிக நன்றி. பதிலிடவே நேரமின்றி உள்ளது.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 13. Vathiri C Raveendran
  செப் 19, 2012 @ 16:28:25

  காதல் ரசம் மிக்க கருத்தான கவி
  தொடர்க வாழ்த்துகள்.

  மறுமொழி

 14. VAI. GOPALAKRISHNAN
  செப் 20, 2012 @ 08:11:31

  வ்ணக்கம். கவிதை மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  //வாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்
  சேருங்கள் என்று காத்திருந்தேன்.
  கோருவது தினம் இதுவே கோதையின்
  கோமள ராஜனே வருக!………………….(மீன்விழி)//

  மிகவும் ரஸித்தேன். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  தங்களின் 65 க்கு என் அன்பான வாழ்த்துகள்.
  நான் தங்களை எட்டிப்பிடிக்க இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகும்.
  அன்புடன்,
  வை. கோபாலகிருஷ்ணன் [VGK]

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 24, 2012 @ 20:32:30

   ”…வ்ணக்கம். கவிதை மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

   //வாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்
   சேருங்கள் என்று காத்திருந்தேன்.
   கோருவது தினம் இதுவே கோதையின்
   கோமள ராஜனே வருக!………………….(மீன்விழி)//

   மிகவும் ரஸித்தேன். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…”

   மிக்க நன்றி ஐயா! மகிழ்ந்தேன்
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 15. malathi
  செப் 20, 2012 @ 09:52:02

  மிகவும் சிறப்பான பாடல் உள்ளம் கவரும் சிறப்பான இசை பாராட்டுகளும் நன்றியும் …

  மறுமொழி

 16. maathevi
  செப் 20, 2012 @ 12:08:38

  காதல் சொட்டும் கவிதை. அருமை.

  மறுமொழி

 17. கலைநிலா
  செப் 20, 2012 @ 14:55:02

  காமன் அமைத்த பூந்தோட்டமோ! நம்
  காதல் ஊஞ்சல் மேடையோ!

  மறுமொழி

 18. திண்டுக்கல் தனபாலன்
  செப் 20, 2012 @ 16:54:17

  மிகவும் அருமையான கவிதை… வாழ்த்துக்கள் சகோ…

  மறுமொழி

 19. Mrs.Mano Saminathan
  செப் 20, 2012 @ 18:37:43

  அருமையான கவிதை!
  இனிய வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 20. Mageswari Periasamy
  செப் 21, 2012 @ 06:36:35

  சகோதரி, கவிதை பிரமாதம். சங்ககாலத்து சரித்திரக்கவிதை படித்தது போல் திருப்தியாக இருக்கு.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 24, 2012 @ 20:40:21

   ”…சகோதரி, கவிதை பிரமாதம். சங்ககாலத்து சரித்திரக்கவிதை படித்தது போல் திருப்தியாக இருக்கு…”

   மிக்க நன்றி சகோதரி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 21. பழனிவேல்
  செப் 21, 2012 @ 11:42:11

  “வாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்
  சேருங்கள் என்று காத்திருந்தேன்.
  கோருவது தினம் இதுவே கோதையின்
  கோமள ராஜனே வருக!”

  கவிதையும், காதலும் மிக அழகு…
  அதிலும் தங்கள் காதல் ரசனை மிக மிக அழகு…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 24, 2012 @ 20:41:49

   ”..கவிதையும், காதலும் மிக அழகு…
   அதிலும் தங்கள் காதல் ரசனை மிக மிக அழகு…”

   மிக்க நன்றி சகோதரா.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 22. கவிஞா் கி பாரதிதாசன்
  செப் 22, 2012 @ 08:33:41

  வணக்கம்

  நீரோடை மீன்அழகை கண்கள் காட்ட
  நினைவோடை என்னாகும? காதல் செஞ்சச்
  சீரோடைப் பயணத்தை அழகாய்ப் பாடிச்
  சிறப்பாடை தமிழுக்குத் தந்தீா் வாழ்க!
  மார்போடை மஞ்சத்துள் மனங்கள் கொஞ்ச
  மதுவோடை பாய்ந்துவரும்! உயிர்கள் சொக்கும்!
  பாரோடை அத்தனையும் விஞ்சும்! நம்மின்
  பசுந்தமிழின் பாட்டோடை! நீந்து! நீந்து!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  மறுமொழி

 23. Vetha.Elangathilakam.
  செப் 25, 2012 @ 15:37:51

  மகேந்திரன் பன்னீர்செல்வம், Sara La, Mohan Kumar-Anna University like this..in கவிதை முகம்.
  Mohan Kumar:-
  great ….
  Vetha ELangathilakam:-
  Thanks…..God bless you..
  Mohan Kumar :-
  Neenga varnicha lines yenakku romba pudichurukku unmayaa pennai ipadium varnikalama nu achariya patten..

  கவிதைச் சங்கமம் likes this..

  மறுமொழி

 24. கீதமஞ்சரி
  செப் 30, 2012 @ 06:33:33

  மெட்டமைத்துப் பாடத் தோன்றும் அழகான வரிகள். காதல் காணா உள்ளத்திலும் காதலூறச் செய்யும் கவின் வரிகள். மனமெங்கும் புதுவெள்ளம் பாயச்செய்த அற்புதக் கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 04, 2012 @ 07:54:59

   ”…மனமெங்கும் புதுவெள்ளம் பாயச்செய்த அற்புதக் கவிதைக்குப் பாராட்டுகள் தோழி…”

   மிக்க நன்றி சகோதரி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: