4.பயணம் மலேசியா 10.

 

4.பயணம் மலேசியா 10.

பத்து மலைக்கோவிலில் இருந்து சுமார் மாலை ஏழு மணியளவில் வீடு திரும்ப ஆயத்தமானோம்.

கடந்த முறை மலாக்கா செல்ல ஆசைப்பட்டும் அது நடக்க வில்லை. யோகூர் சென்றோம்.
இந்த முறை மலாக்கா செல்ல வாடகை வாகனத்திற்கு 400 றிங்ஙெட் எடுத்தனர். அடுத்த நாள் காலை 9 மணிக்கு பயணப்பட்டோம். வழியில் முதலில் ஒரு உல்லாசப் பயணத் தகவல் நிலையத்தில்

சில புத்தகங்கள் தகவல்கள் எடுத்துக் கொண்டு போனோம்.
நெடுஞ்சாலை வீதி மருங்கிலும் பாம் தோட்டங்கள்,

பார்வைக்கு தென்னைத் தோட்டங்கள், அல்லது பேரீச்சம் மரங்கள் போல  பசுமையாக இருந்தன. படத்தில் இதைக் காண்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் அழகுக்கு அழகான மரங்கள் நட்டு

பாதை, கடையோரங்கள் எல்லாம் அழகு படுத்தி வைக்கிறார்கள் மாதிரிக்கு இதைப் பாருங்கள். (பின்னும் வரும்) மருமகள் சாந்தி கூட ” அன்ரி இப்படி அழகு படுத்துவது இங்கு விசேடம் படம் எடுங்கள்!”  என்றார்.
முதலில் பகல் ஒன்று முப்பது போல அபஃமோசா றிசோட் (Afamosa  resort    ) எனும் பறவைகள் விலங்குகள் காப்பகம் அல்லது வன விலங்குப் பூங்காவிற்குச் சென்றோம்.

520 கெக்ரார் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.  பல விதமான் உல்லாச பொழுது போக்குகள் உண்டு. ( கவ்போய் உலகம், ( cow boy world ) தண்ணீர் உலகம் ( water world   ) போன்று.
நிறைய உல்லாசப் பயணிகள் வாகனம் வாகனமாக வந்து இறங்கிப் போய் வந்த வண்ணமே இருந்தனர்.
குறிக்கப் பட்ட நேரத்திற்கு சாரதியும், உதவியாளரும் வர கம்பிகளால் திறந்த கூடாக

அடைத்த லொறியில் எங்களை (சுமார் 15 – 20 பேர்) ஏற்றிக் கொண்டு மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி வாகனம் ஓடியது. சுமத்திராப் புலி,

யானை, வரிக்குதிரை,

ஆபிரிக்கப் பறவைகள், பாம்பு, காண்டா மிருகம், பசு, ஆடு, மான்,

பன்றி, பிளமிங்கோ, மந்திகள்  என்று 1000 மிருகங்கள் 159 ஏக்கரில்  உள்ளன. 

வாகனம் ஓட ஓடப்  புகைப் படங்களும் எடுத்தோம். பாருங்கள்.
பகலுணவு அங்கேயே வாங்கும் வசதி இருந்தது. வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிடும் போது ஆபிரிக்கப் பறவைகள் கிட்டக் கிட்ட வந்து பழகின.

இவை முடிய மலாக்கா சென்ரர் அதாவது நடுப்பகுதிக்கு வந்தோம்.
மலாக்கா ஆசியாவின் பழைய பட்டினம். சுமத்திரா,மலேசியாவின் இடையே ஒரு போத்தலின் கழுத்துப் போன்ற மலாக்கா ஜலசந்தி மிகவும் பெயர் பெற்ற துறைமுகம். பங்களா தேஷ் – யாவாக் கடலின் ஜலசந்தி இது.

1511ல் மலாக்கா சுல்தானை வென்று போர்த்துக்கீசிய துறைமுகமாக இருந்தது. த போட்ரா டி சன்ரியாகோ (The porte de Santiago) என்று அழைக்கப் பட்டது. மிளகு, ஏலம், கறுவா கராம்பு போன்று வாசனைச் திரவியச் சரக்குகளை ஏற்றி  இறக்க போர்த்துகீசம், கோவா, சீனா போன்ற இடங்களிற்கு கப்பல் வழிப்பாதைக்கு உதவியாக இருந்தது.

1641ல்டச்சுக்காரர் வசமானது. பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரிட்டசார் வசமானது.  பின்பு நெப்போலியன் பிரான்ஸ், பின்னர் சிங்கப்பூரைக் கண்ட சேர் ஸ்ரம்பேஃட் றபெஃல்ஸ் (Sir Stamford Raffels) மலாக்கா வந்தார். 1810ல் த சேவைவிங் கேட் ஒப்ஃ அபாஃமோசா போர்த்துக்கிஸ் போட் இன் மலாக்காவை( The surviving gate of the Afmosa Portuguese port in Malacca)    ) அழியாது மிச்சப் படுத்தினாராம்.

அங்கம் 11 ல் மிகுதியைப் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-9-2012.


 

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  செப் 21, 2012 @ 22:01:39

  சுவையான பதிவு.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 22, 2012 @ 02:19:14

  அட்டகாசமான படங்கள்… தொடர்கிறேன் சகோ… நன்றி…

  மறுமொழி

 3. கவிஞா் கி பாரதிதாசன்
  செப் 22, 2012 @ 07:50:43

  வணக்கம்

  வேதா பார்த்துக் களித்திட்ட
  வியப்பை எல்லாம் பதிவாக்கிச்
  சாதா போன்றே இருந்தஎனைச்
  சற்றே உசுப்பி விடுகின்றார்!
  போதா என்றே புலிப்படங்கள்
  போட்டே உணா்வை ஊட்டுகிறார்!
  மாதா மாரி நபியன்னை
  மனம்போல் வாழ்வை வழங்குகவே!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  செப் 22, 2012 @ 11:40:29

  நேரில் சென்று பார்ப்பதுபோல் உணர்ந்தேன் அழகிய புகைப்படங்களோடு கூடிய தங்களின் பதிவை படித்ததும். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. பிரபுவின்
  செப் 22, 2012 @ 11:57:19

  அருமையான பதிவு.நன்றி.

  மறுமொழி

 6. Vetha.Elangathilakam.
  செப் 22, 2012 @ 12:38:25

  IN FB:-
  Abira Raj likes this..in கனவு விழிகள்.
  அன்பு தோழி likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  Sundrakumar Kanagasundram and Kanagasundram Sundrakumar like this…in NINAIVE ORU SANGEETHAMநினைவே ஒரு சங்கீதம்.
  Arun Vetrivel,Works at WCPM LTD/ Kanniah Gopalakrishnan, Secretary at Gulf Contracting Co. W.L.L likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
  மகிழினி காந்தன் and Sujatha Anton like this..in FB.
  கவிதைச் சங்கமம் likes this..
  ….
  ..

  மறுமொழி

 7. sujatha
  செப் 22, 2012 @ 14:07:11

  கட்டுரையும்,புகைப்படங்களும் உல்லாசத்தை வரவழைக்கின்றது. அருமை…கட்டுரை தொடரட்டும்….

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 27, 2012 @ 18:29:54

   ”..கட்டுரையும்,புகைப்படங்களும் உல்லாசத்தை வரவழைக்கின்றது. அருமை…கட்டுரை தொடரட்டும்…”

   பயணமே உல்லாசமாக இருந்தது.
   அது படத்தில் தெரிகிறது போலும்.
   மிக்க நன்றி கருத்து,ப் பதிவிற்கு.
   இறையருள் நிறையட்டும்..

   மறுமொழி

 8. குட்டன்
  செப் 24, 2012 @ 15:08:20

  படங்கள் என்னை மலேசியாவுக்கே அழைத்துச் சென்று விட்டன!

  மறுமொழி

 9. Vetha.Elangathilakam.
  செப் 27, 2012 @ 18:31:44

  ”..படங்கள் என்னை மலேசியாவுக்கே அழைத்துச் சென்று விட்டன!..”

  மிக நல்லதல்லவோ!. மகிழ்ச்சி!.
  மிக்க நன்றி கருத்துப் பதிவிற்கு.
  இறையருள் நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: