247. பரிசுகள்.

 

பரிசுகள்.

 

இன்னும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தகவல் இப்போது தான் தெரிந்தது. இதன்படி 28-7-2012ல்

Sun shine blogger award.   

http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html Sl. No. 61

 

11-8-2012ல் லிப்ஸ்ரர் பரிசும்     http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html Sl.No. 53.

திரு.வை.கோபாலகிருஷ்ணன் சாரால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இத்தடன் 6 பரிசுகள் இயைணத்தளத்தில் கிடைத்துள்ளது.

 

அடுத்து

டென்மார்க் வாழ் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய வெள்ளிவிழா கலை மாலையும் முத்தமிழ் அரங்கும் நிகழ்ச்சி கடந்த 22.09.2012 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் வெற்றிகரமாக நடந்தேறியது.

டென்மார்க் மண்ணில் நின்று 25 வருடங்கள் கலைத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு. வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனி மத்தீசன் …பரிசளித்தார்….

http://www.alaikal.com/news/?p=113106#more-113106   

முதலாக 35 கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  அதில் நானும் ஒருவளாக…

கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு புகைப்படங்கள். http://www.alaikal.com/news/?p=113783#more-113783

 

வெள்ளிவிழாக் கலைமாலையிரவில் என்னால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை.

கம்பன் ஒரு இலக்கியப் பந்தல் போட்டதை எங்கோ வாசித்த நினைவு அது இப்படிப் போகிறது:-…

”…சோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு வீதியுண்டாச்சுதடி
   வீதி நடுவொரு மேடையிருந்ததடி, மேடையிலேறினேனடி
   மேடையங்கொரு….” 

என்று இப்படியே தொடர்கிறது.

அப்படியொரு இலக்கியப் பந்தல் ஒன்று நான் போட்டு, அதில் நின்று சிறு கவிதை ஒன்று தருகிறேன்.

”…டென்மார்க் நாடொன்று கண்டோமதிலொரு வாழ்க்கையுண்டாச்சுதடி!
   மொழியைப் படித்த வீதியிலொரு கூடம் தெரிந்ததடி!
   கூடத்தினுள்ளே கூடிப் படித்து மேடையிலேறினேனடி!
     ” பெட்டகோ” (pædagog) மேடையிலேறினேனடி
   வாழும் நாட்டில் இழந்த மேடையை  இங்கு பெற்றேனடி….”

இனி.

வெள்ளி விழா…ஓகோ வெள்ளிவிழா!

உள்ளிப் பூடாய் நாளும்
அள்ளித் தமிழை (தமிழரை) அணைப்போரும்,
தள்ளி – தனியே வாழ்வோரும்
பள்ளி கொண்டே தமிழோடு
புள்ளி சேர்த்து உயர்வோருமாக
கொள்ளை விதமான தமிழருக்கின்று
வெள்ளிவிழா ஓகோ! வெள்ளி விழா!

அறிவைத் தேடி ஓடினால்
குறைவா யெண்ணு முலகில்
முறையாய் நூல்கள் செய்தால்
நிறைவாய் ஆதரிக்கா உலகில்
நிறைவாய் மனம் சோர்ந்;தே
திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.
வேதாவின் வலையென்று கூகிளில்
தேடுங்கள்! கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் என்று தேடுங்கள்.

சமுதாயப் பள்ளங்களை யாராலும்
முழுதாக நிரவ முடியாது.
மனித சரித்திரம் சாதனையுடையதானால்
வனிதமது ஆவணப் படுத்துதல்.
கணிதமான இவ் விழாவும்
ஆவணமாகட்டும் சாதனையில்.
வாரிசுகளிதை அறியட்டும்.
பூரிக்கட்டும் முன்னவரெம் நகர்வால்.

ஒழுங்குகள் மதில்களாக இருக்கட்டும்.
பழுதற்ற பண்பாடுகள் தழும்பி
மொழியோடு யுத்தமிடாது
மொழிச் சுளற்சியில் அரசாளட்டும்.
இன்னும் வளரும் தமிழ்.
இன்னும் புதுமைகள் காணும்.
பெற்றோர், உற்றோர் கைகொடுப்பில்
அற்புதமாய்த் தமிழ் முன்னேறும்.

கலைகளையேற்றுக் கருத்து வீசாஉலகில்
நிலையாலுயர்ந்தெமைக் கௌரவித்தற்கு
மலைபோல் மனது வேண்டும்.
அலைகள் வலைப்பணியது பாராட்டுடைத்து.
அலைகளின் சேவை மகத்தானது.
விலையற்றது, விமரிசனத்திற்கு அப்பாற்;பட்டது.
மாலையிடுகிறோம் மனதால் மகிழ்ந்து.
மூலை முடுக்கெல்லாம் அலைகள் புகுந்து வளம் படுத்தட்டும்.

வாழ்க! வளர்க!
அலைகளென்றால் கே.எஸ் துரை.
கே.எஸ்.துரையென்றால் அலைகள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

25-9-2012.

 

                            
 

Advertisements

33 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. T.N.MURALIDHARAN
    செப் 26, 2012 @ 00:22:52

    விருதுக்கு வாழ்த்துக்கள்.வெளி நாட்டில் கவிதை பாடி அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்.தொடர்க மேடம்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 27, 2012 @ 20:39:45

      ”..விருதுக்கு வாழ்த்துக்கள்.வெளி நாட்டில் கவிதை பாடி அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்.தொடர்க மேடம்…”

      மிக நன்றி முரளி கருத்திடலிற்கு.
      ஆண்டன் ஆசி நிறையட்டும்.

      மறுமொழி

  2. வே.நடனசபாபதி
    செப் 26, 2012 @ 02:33:33

    விருதுகள் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் பல விருதுகள் பெற்று உயர விழைகின்றேன்.

    மறுமொழி

  3. abdulkadersyedali
    செப் 26, 2012 @ 04:18:37

    விருத்துக்கு வாழ்த்துக்கள் சகோ
    கவிதை அருமை
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    செப் 26, 2012 @ 06:28:46

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  5. ramani
    செப் 26, 2012 @ 06:53:31

    விருதுகள் நிச்சயம் பெருமை கொண்டிருக்கும்
    படைப்புகளும் விருதுகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 28, 2012 @ 20:47:32

      ”..விருதுகள் நிச்சயம் பெருமை கொண்டிருக்கும்
      படைப்புகளும் விருதுகளும் தொடர
      மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..”

      மிக்க நன்றி சகோதரா.
      ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

      மறுமொழி

  6. rathnavelnatarajan
    செப் 26, 2012 @ 11:04:25

    வாழ்த்துகள்.

    மறுமொழி

  7. maathevi
    செப் 26, 2012 @ 12:01:06

    வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்.

    மறுமொழி

  8. குட்டன்
    செப் 26, 2012 @ 13:01:06

    பெற்ற விருதுகளுக்கும்,இனி வரப்போகும் மற்ற விருதுகளுக்கும் வாழ்த்துகள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 28, 2012 @ 20:59:24

      ”..பெற்ற விருதுகளுக்கும்,இனி வரப்போகும் மற்ற விருதுகளுக்கும் வாழ்த்துகள்…”

      மிக்க நன்றி சகோதரா
      தெய்வக் கிருபை நிறையட்டும்.

      மறுமொழி

  9. பழனிவேல்
    செப் 26, 2012 @ 13:40:08

    “ஒழுங்குகள் மதில்களாக இருக்கட்டும்.
    பழுதற்ற பண்பாடுகள் தழும்பி
    மொழியோடு யுத்தமிடாது
    மொழிச் சுளற்சியில் அரசாளட்டும்.
    இன்னும் வளரும் தமிழ்.
    இன்னும் புதுமைகள் காணும்.”

    மனம் குளிர்ந்தேன்.

    வாழ்க வளமுடன்…
    வளர்க நலமுடன்…
    வெல்க புகழுடன்…

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 28, 2012 @ 21:01:10

      ”..மனம் குளிர்ந்தேன்.

      வாழ்க வளமுடன்…
      வளர்க நலமுடன்…
      வெல்க புகழுடன்…”

      மிக்க நன்றி பழனி.
      தெய்வக் கிருபை நிறையட்டும்.

      மறுமொழி

  10. Vetha.Elangathilakam.
    செப் 26, 2012 @ 15:44:58

    Sundrakumar Kanagasundram, Melur Raja and Kanagasundram Sundrakumar like this…in NINAIVE ORU SANGEETHAMநினைவே ஒரு சங்கீதம்.

    Umah Thevi and Gunavathi Pachayapan like this..in வித்யாசாகர்.
    Umah Thevi :-
    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சகோதரி!
    Vetha ELangathilakam:-
    Mikka nanry Umah,,God bless you…

    Churchill Fernando likes this..in Kavithai sangamam என்கிற kavithai club.

    கிரி ஷாந் likes this.in FB.
    கிரி ஷாந்:-
    வாழ்த்துக்கள் !
    Vetha ELangathilakam:-
    Nanry கிரி ஷாந்!….

    Murali Dharan likes this..in கவிதை முகம்.
    அன்பு தோழி, and Mageswari Periasamy likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam.
    கவிதைச் சங்கமம் likes this..(FB)

    மறுமொழி

  11. angelin
    செப் 26, 2012 @ 17:39:03

    அக்கா !! விருதுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள் ..இன்னமும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துகிறேன் …

    //திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.//

    இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் அகவையில் அடியெடுத்து தேன்தமிழ் கவிதை மழையை பொழியவும் வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 28, 2012 @ 21:02:48

      ”…//திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.//

      இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் அகவையில் அடியெடுத்து தேன்தமிழ் கவிதை மழையை பொழியவும் வாழ்த்துக்கள்..”

      மிக்க நன்றி சகோதரி..
      தெய்வக் கிருபை நிறையட்டும்.

      மறுமொழி

  12. malathi
    செப் 27, 2012 @ 08:39:34

    விருதுகள் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    மறுமொழி

  13. Dr.M.K.Muruganandan
    செப் 27, 2012 @ 17:01:45

    அனைத்து விருதுகளுக்கும் இனிப் பெறப்போகும் விருதுகளுக்குமாக வாழ்த்துகிறேன்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 29, 2012 @ 07:44:55

      ”..அனைத்து விருதுகளுக்கும் இனிப் பெறப்போகும் விருதுகளுக்குமாக வாழ்த்துகிறேன்…”

      மிக்க நன்றி ஐயா
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  14. கோமதிஅரசு
    செப் 28, 2012 @ 16:09:14

    விருதுகள் பெற்றைமைக்கு வாழ்த்துக்கள்.
    திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.//
    இரண்டு வயது முடிந்து மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் உங்கள் வலைத்தளம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    மேலும் பலவிருதுகள் உங்களை வந்து அடைய வாழ்த்த்துக்கள்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 29, 2012 @ 07:46:07

      ”..விருதுகள் பெற்றைமைக்கு வாழ்த்துக்கள்.
      திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.//
      இரண்டு வயது முடிந்து மூன்றாம் ஆண்டு அடி எடுத்து ….”

      மிக்க நன்றி சகோதரி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  15. Mageswari Periasamy
    செப் 28, 2012 @ 17:12:56

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. தங்களின் இந்த பெருமைக்கு இறைவனின் ஆசியும், தமிழ்மொழியின்பால் தாங்கள் வைத்துள்ள பற்றுதலும் தான் காரணம். மேன்மேலும் நிறைய விருதுகள் தங்கள் கரங்களில் தவழ ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும்.

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 29, 2012 @ 07:47:04

      ”..மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. தங்களின் இந்த பெருமைக்கு இறைவனின் ஆசியும், தமிழ்மொழியின்பால் தாங்கள் வைத்துள்ள பற்றுதலும் தான் காரணம். மேன்மேலும் நிறைய விருதுகள் ….”

      மிக்க நன்றி சகோதரி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  16. kowsy
    செப் 28, 2012 @ 19:01:22

    விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் . தொடரும் நாள்கள் விருதுகள் தொடரட்டும். வளரும் நினைவுகள் கவிதைகளால் நிறையட்டும் . வாழ்த்துகள்

    மறுமொழி

    • Vetha.Elangathilakam.
      செப் 29, 2012 @ 07:48:29

      ”..விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் . தொடரும் நாள்கள் விருதுகள் தொடரட்டும். வளரும் நினைவுகள் கவிதைகளால் நிறையட்டும் . வாழ்த்துகள்…”’

      மிக்க நன்றி கௌசி.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  17. Vetha.Elangathilakam.
    செப் 29, 2012 @ 19:01:37

    Aarhus Tamizhar Ondrium Aato likes this..
    ஓகூஸ் மண்ணில் தமிழ் வளர்க்கும் கவியரசி வேதா அம்மா அவர்களுக்கு ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்! புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு உங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் மெருகுடனே தொடரட்டும்!

    Vetha ELangathilakam:-
    மிக்க நன்றியும், மகிழ்வும். இறையாசி தங்களிற்குத் துணை வரட்டும்….

    மறுமொழி

  18. கீதமஞ்சரி
    செப் 30, 2012 @ 06:35:16

    இனிய விருதுகளுக்கும் விருந்தெனப் பகிர்ந்த கவியினிமைக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தோழி.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: