248. நம்ப நட

 

 

நம்ப நட

 

மெல்ல நகர்ந்து இணைந்து
நல்ல விதமாய்ப் பிணைந்து
வல்ல கதைகள் பின்னியது
வல்லமையோ! நட்பு முரண்படவோ!

இச்சை மனதில் பச்சையான
கூச்சம் விலகியதோ! மிச்சமான
மெச்சிடும் குணம் மாறியதோ!
எச்சமாய் புகுந்தது எதுவோ!

மௌனமாயிருந்தவளிடம்
கௌசலம்(திறமை, சூழ்ச்சி) இன்று புகுந்ததோ!
பவ்வியம்(தாழ்மை, அடக்கம், பணிவு)மறந்து, எழுந்ததோ
அவ்வியம்!(அழுக்காறு, வஞ்சனை) எதற்கோ மாறிட்டான்.

காதலவனுக்கு புகழ் – பெயரில்!
காதல் அவனுக்கு – எழுத்தில்!
காதலை வெறுப்ப தெப்படி!
காதல் தானே வாழ்வுப் படி!

காதலை விலக்கி ஒதுக்கி
மோதுவதேன் கடமை கடவுளென்று!
கோதுகிறதோ மறைவாக ஆதிக்கம்!
கூதல் அதிகாரம் ஆட்டுகிறதோ!

ஆண் தானே! ஆதிக்கம்
நாண் என ஆதியிலூட்டியதே!
தூண் போலத்தானிருப்பான்.
தூ! இது மாறாத நோய்!

யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
யாரை நம்பி நடப்பது!
யாண்டும் நம்ப நடக்கும்
யாத்திரையே சிறப்பு! சிறப்பு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-9-2012.

 

                                              

 

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  செப் 28, 2012 @ 08:09:23

  “யாண்டும் நம்ப நடக்கும்
  யாத்திரையே சிறப்பு”
  இதை அனைவரும் கடைப்பிடித்து
  வாழ்ந்தால் உலகே சொர்கமாகும்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 29, 2012 @ 09:31:19

   ”..“யாண்டும் நம்ப நடக்கும்
   யாத்திரையே சிறப்பு”
   இதை அனைவரும் கடைப்பிடித்து
   வாழ்ந்தால் உலகே சொர்க்கமாகும்…..”

   மிக்க நன்றியும், மகிழ்வும் ஐயா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 28, 2012 @ 09:01:42

  சிறப்பு – கவிதை மிகவும் சிறப்பு சகோதரி…

  நன்றி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. sasikala
  செப் 28, 2012 @ 09:58:10

  யாசிப்பு அன்பெனினும் வேண்டாம் . அற்புதமான வரிகள் சகோ.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 29, 2012 @ 09:33:23

   ”…யாசிப்பு அன்பெனினும் வேண்டாம் . அற்புதமான வரிகள் சகோ….”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சசி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. rathnavelnatarajan
  செப் 28, 2012 @ 10:45:05

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. பழனிவேல்
  செப் 28, 2012 @ 13:00:13

  “காதலை வெறுப்ப தெப்படி!
  காதல் தானே வாழ்வுப் படி!”

  “யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!”

  அழகான ஆளுமை வரிகள்…
  அழகு …
  (புகைப்படம் ஏதும் இல்லையே?)

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   செப் 29, 2012 @ 09:36:29

   ”…“காதலை வெறுப்ப தெப்படி!
   காதல் தானே வாழ்வுப் படி!”

   “யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!”

   அழகான ஆளுமை வரிகள்…
   அழகு …
   (புகைப்படம் ஏதும் இல்லையே?)….”

   ஆம் சில பிரச்சனை புகைப்படம் போட முடியவில்லை.
   கருத்திற்கு நன்றி. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. Vetha.Elangathilakam.
  செப் 28, 2012 @ 17:02:59

  Sundrakumar Kanagasundram, Melur Raja and Kanagasundram Sundrakumar like this…in NINAIVE ORU SANGEETHAMநினைவே ஒரு சங்கீதம்.

  Mari Muthu C and அன்பு தோழி like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  அன்பு தோழி:-
  யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
  யாரை நம்பி நடப்பது!
  யாண்டும் நம்ப நடக்கும்
  யாத்திரையே சிறப்பு! சிறப்பு! சிறப்பிலும் சிறப்பு
  Vetha ELangathilakam:-
  Anpu nanry…

  Abira Raj..,/Chandran Tharmadevi../Poet Rajendra, London, United Kingdom likes this in கனவு விழிகள்.

  Abira Raj:-
  யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
  யாரை நம்பி நடப்பது!
  யாண்டும் நம்ப நடக்கும்
  யாத்திரையே சிறப்பு! சிறப்பு!////// நம்ப நட நம்பு நடவாதே அழகிய வரிகள் கொண்ட கவிதை அக்கா வாழ்த்துக்கள்
  Vetha ELangathilakam:-
  Mikka nanry. God bless you all…

  Melur Raja, Chennai, Tamil Nadu /Sham Masud, கிளார்க் at Bank /Shahulhamid Hamid, Jamal Mohamed College likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  Pushpalatha Kanthasamy likes this.-FB

  Churchill Fernando likes this..in Kavithai sangamam என்கிற kavithai club.
  Murali Dharan likes this..in கவிதை முகம்.
  Viduthalai R. Regina, Anand Maheswaran likes this..in Tamilsk velfærds forening, AATO.

  Manchula Gobi Manchula likes this..in கவிதை முகம்.
  Neelamegam Tom likes this..in ˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙.

  ..
  ..

  மறுமொழி

 7. Ambaladiyal
  செப் 28, 2012 @ 18:57:39

  நல்லன சொல்லிச் செல்லும் கவிதை அருமை !…
  மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு

  மறுமொழி

 8. Mrs.Mano Saminathan
  செப் 29, 2012 @ 05:26:10

  //யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
  யாரை நம்பி நடப்பது!
  யாண்டும் நம்ப நடக்கும்
  யாத்திரையே சிறப்பு! சிறப்பு!//
  அருமையான வரிகள் வேதா!!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 05, 2012 @ 07:39:04

   ”…//யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
   யாரை நம்பி நடப்பது!
   யாண்டும் நம்ப நடக்கும்
   யாத்திரையே சிறப்பு! சிறப்பு!//
   அருமையான வரிகள் வேதா!!….”’

   மிக்க நன்றி சகோதரிதங்கள் இனிய கருத்திற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 9. கீதமஞ்சரி
  செப் 30, 2012 @ 06:37:05

  தன்னம்பிக்கையோடு நடைபோட வைக்கும் அருமையான கவி வரிகள். இன்று உங்கள் தயவால் பல புதிய தமிழ் சொற்கள் கற்றுக்கொண்டேன். நன்றியும் பாராட்டும் தோழி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 05, 2012 @ 07:40:25

   ”…தன்னம்பிக்கையோடு நடைபோட வைக்கும் அருமையான கவி வரிகள். இன்று உங்கள் தயவால் பல புதிய தமிழ் சொற்கள் கற்றுக்கொண்டேன். நன்றியும் பாராட்டும் தோழி….”

   மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய கருத்திற்கு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 10. குட்டன்
  அக் 01, 2012 @ 14:49:20

  சிறப்பாக வந்திருக்கிறது

  மறுமொழி

 11. Vetha.Elangathilakam.
  அக் 05, 2012 @ 07:36:47

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா “நம்ப நட… நம்பி நடவாதே!!” என்ற ஒரு முதுமொழியை தலைப்பாகக்கொண்டு கவிதை பயணிக்கிறது!! கரையைத்தோடும் நதியைப்போல பலவிடயங்களையும் தொட்டுச்செல்கிறது!! அற்புதம்!! வாழ்த்துக்கள்!!
  Tuesday at 11:15am

  மறுமொழி

 12. கோவை கவி
  செப் 27, 2017 @ 09:20:07

  Sujatha Anton நம்ப நடப்பது யாரைத்தான்?? இன்னும் கேட்கின்றொம். கவிநயம் அருமை…
  28 September 2012 at 21:17 ·
  Vetha:- ThaNK YOU sUJATHA.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: