35. கவிதை பாருங்கள்

 

வட்டமிடுகிறதோ மனதில் வேற்றுமை!
அட்டையாய் உறிஞ்சுதோ ஆற்றாமை!
ஒட்டகத் தலையோ பொறாமை!
அட்டமத்துச் சனி போலிவை

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-9-2012.

 

 

 

Advertisements

4. பயணம் மலேசியா. 8

 

4. பயணம் மலேசியா.  8

 

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் அமைந்த சூர்யா பல் பொருள் அங்காடியில் (கீழே) சாப்பிட்ட பின்பு நாம் கோலாலம்பூர் மினேறா தொலைத் தொடர்புக் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.

இவைகள் கிட்டக் கிட்ட உள்ள இடங்கள் தான்.

கே. ஏல் கோபுரம் என்று கூறப்படும்  மினேறா (Menara) கோலாலம்பூர் கோபுரம். மலேசியா நாட்டின் அடையாளச் சின்னமும் தான்.

இது புக்கிட் நனாஸ் ( Bukit Nanas   ) பைன் அப்பிள் மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 1991ல் 3 பிரிவுகளாகக் கட்ட ஆரம்பித்தனர். 421 மீட்டர் உயரம். (1,381 அடி).  1995ல் முழுவதும் கட்டி முடிக்கப் பட்டதாம். 1996ல் உத்தியோக பூர்வமாகத் திறக்கப் பட்டதாம்.

இந்த விவரங்கள் படத்துடன் ஒரு அறையில் விளக்கமாக எழுதப்பட்டு வாசிக்கும் வசதியுடன் உள்ளது. மகளும் துணைவரும் பார்க்கும் போது 2 படங்கள் எடுத்தேன், பாருங்கள். 

மண் கிளறிக் கிண்டியெடுத்ததிலிருந்குக் சகல வேலைகளும் விவரமாகத் தந்துள்ளனர் படங்களுடன்.

உலகிலேயே 7வது உயரத் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையமாகக் கணக்கிடப் பட்டுள்ளது மினேறா கோலாலம்பூர் கோபுரம். உச்சியில் சுளரும் உணவகம் உள்ளது.

google photo.

அங்கு செல்ல உயர்த்தி (லிப்ட்) உள்ளது. 54 செக்கன்டில் மேலே போகலாமாம். கீழே வர 52 செக்கன்ட் எடுக்குமாம். அனுமதிக் கட்டணத்துடன் செல்ல முடியும்.

நேரப் பற்றாக் குறையால் நாம் மேலே ஏறவில்லை. மேலே ஏறினால் கவனிக்கும் (கிரகிக்கும்) தளம் (observation    ) இந்தப் படத்தில் உள்ளது தான்.

( இது கூகிள் படம்.)

இங்கு செல்பவர்கள் மேலேயும் ஏறிப் பார்க்க வேண்டும், தொலை நோக்குப் பிரமாண்டமான மலேசியக் காட்சியாகும். –  இது  இரவுக் காட்சியாக கூகிள் படம் இறுதிப் படமாகப் போடுகிறேன்.

இதன் படிக்கட்டுகளில் (2058 படிகளாம்) மேலேறிச் செல்வதற்கு வருடா வருடம் போட்டி நடத்துவார்களாம். இசுலாமிய ரம்ளான் மாதப் பிறைகள் காணும் (காணோக்கி) வானோக்கியாகவும் இக் கோபுரம் பயன் படுகிறதாம்.
இதன் சமீபமாகவே பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமும் உள்ளது. விண்வெளியை அடையாளப் படுத்தும் சின்னமாக இது பெட்ரோனாஸ் கோபுரத்துடன் போட்டி போடுகிறதாம்.

இக்கோபுர தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நினைவுப் பொருட் கடைகள்,

நிர்வாகக் கந்தோர், இஸ்லாம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பழைய வீடுகள்,

கட்டிடங்கள் என்று மாதிரியாக காட்சிக்கு உள்ளது.

(ஓலை வீடு, தட்டி வீடுகளான பழைய பாணிகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.)

146 மீட்டர் நீளமான பாதசாரிகள் நடந்து பார்க்க உள்ள இடத்திலே இவைகள் உள்ளன.

அழகான தாமரை உருவில் நீர் பொங்குவது என்று உள்ளன.

அழுகு தான். படங்களைப் பாருங்கள்.

(முடிந்தளவு படங்கள் எடுத்தேன். கீழிருக்கும் கூகிள் படத்தில் பெட்ரோனாஸ் கோபுரமும், மினேறா கோபுரமும் ஒருங்கு சேரத் தெரிகிறது. இரவுக்காட்சி.))

மிகுதியை அங்கம் 9ல் காணுவோம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-9-2012.

 


 

Next Newer Entries