250. உயர்த்தும் சுறுசுறுப்பு

 

 

உயர்த்தும் சுறுசுறுப்பு

 

புன்னகைத்து நாட்கள் பிறக்கிறது.
என்ன விதத்திலும் கூட்டலாகிறது
முன்னணிக்கு வரும் ஆட்டமானது
வன்னகைக்கு நிறமூட்டல் – அது
பின்னணிக்குத் தள்ளலுன் திறமை.

அன்றுதல்(சினத்தல்) அன்றே தவிர்த்து
நின்றாடும் பொழுதுகளைச் சிரித்துச்
சென்றோட, திண்டாடாது நன்றாட
வென்றாடிக் கொண்டாட வென்று
அன்றாடம் சுயநம்பிக்கையோடு கட!

நிறைந்த கடமை இறைந்திடினும்
அறைந்திட வராது தனிமையும்.
குறைந்த பொழுது ஓய்ந்திடவும்
நிறைந்த சுறுசுறுப்பு உடலிலும்
உறைந்திடா துயர்ச்சி தரும்.

பூக்களின் மீது தேனான வின்பம்
பாக்களிற் போர்த்தும் சந்தங்களாகும்.
ஆக்கமாகும் வார்த்தை யமுதம்
தேக்கமாதல் அலுப்பற்ற ஆனந்தம்!
நோக்கம் நிறைவேறு மானந்தம்!

அமைதியும் ஆனந்தமும் ததும்பும்
சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
அமைந்த சுறுசுறுப்பான மனம்
அமைத்திடுமிதைச் செப்பமாக.
எமை உயர்திடுமது களிப்புடன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-10-2012.

(2-10-2012 செவ்வாய்க்கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் மாலை (19.00-20.00)கவிதை நேரத்தில் என்னால் இக்கவிதை வாசிக்கப் பட்டது.)

                                   

 

                                               

 

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  அக் 06, 2012 @ 06:14:24

  அமைதியும் ஆனந்தமும் ததும்பும்
  சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
  அமைந்த சுறுசுறுப்பான மனம்
  அமைத்திடுமிதைச் செப்பமாக.
  எமை உயர்திடுமது களிப்புடன்.//

  உண்மை உண்மை!
  சுறு சுறுப்பான மனம் பெற்றுத் தரும் உயர்வான ஆனந்தமான வாழ்க்கையை .

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 06, 2012 @ 09:58:41

   ”…உண்மை உண்மை!
   சுறு சுறுப்பான மனம் பெற்றுத் தரும் உயர்வான ஆனந்தமான வாழ்க்கையை…. .”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி முதல் அன்புறவாக கருத்துத் தந்துள்ளீர்கள்.
   ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  அக் 06, 2012 @ 07:11:06

  நல்ல கருத்துள்ள வரிகள்…

  மிகவும் பிடித்தவை :

  /// அன்றுதல்(சினத்தல்) அன்றே தவிர்த்து
  நின்றாடும் பொழுதுகளைச் சிரித்துச்
  சென்றோட, திண்டாடாது நன்றாட
  வென்றாடிக் கொண்டாட வென்று
  அன்றாடம் சுயநம்பிக்கையோடு கட!///

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 06, 2012 @ 10:00:17

   ”..நல்ல கருத்துள்ள வரிகள்…

   மிகவும் பிடித்தவை …”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா அன்பான கருத்துத் தந்துள்ளீர்கள்.
   ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்.

   மறுமொழி

 3. Vetha.Elangathilakam.
  அக் 06, 2012 @ 08:22:27

  அன்பு தோழி likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள் (FB)
  அன்பு தோழி:-
  அருமையாக உள்ளது ….
  அமைதியும் ஆனந்தமும் ததும்பும்
  சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
  Vetha ELangathilakam:-
  Mikka nanry.God bless you all….

  Umah Thevi likes this..in வித்யாசாகர் – FB
  கவிதைச் சங்கமம் and Neelamegam Tom like this..
  கவிதைச் சங்கமம்:-
  அருமை தோழி.
  Vetha ELangathilakam:-
  Mikka nanry.

  Sundrakumar Kanagasundram,Works at Retired!!!/ Melur Raja, Chennai, Tamil Nadu/ Kanagasundram Sundrakumar
  Works at Alpha Flight Services/ Alagu Raja, Rajapalayam likes this..in NINAIVE ORU SANGEETHAMநினைவே ஒரு சங்கீதம்
  ..
  ..
  ..

  மறுமொழி

 4. குட்டன்
  அக் 06, 2012 @ 13:48:11

  அருமை.புதிய சொல்-அன்றுதல்-தெரிந்துகொண்டேன்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 06, 2012 @ 20:01:23

   ”..அருமை.புதிய சொல்-அன்றுதல்-தெரிந்துகொண்டேன்…”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ramani
  அக் 06, 2012 @ 13:48:14

  அருமை அருமை
  ஒருமுறை சந்த நயத்தோடும்
  மறுமுறை பொருள் நயத்தோடும்
  படித்து மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 07, 2012 @ 14:53:41

   ”…அருமை அருமை
   ஒருமுறை சந்த நயத்தோடும்
   மறுமுறை பொருள் நயத்தோடும்
   படித்து மகிழ்ந்தேன்
   பகிர்வுக்கு நன்றி…”’

   மிக்க மிக்க மகிழ்வும் நன்றியும் தங்கள் கருதிடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  அக் 06, 2012 @ 13:49:14

  அமைதியும் ஆனந்தமும் ததும்பும்
  சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
  அமைந்த சுறுசுறுப்பான மனம்
  அமைத்திடுமிதைச் செப்பமாக.
  எமை உயர்திடுமது களிப்புடன்…
  அற்புதமான வரிகள் சகோ.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 07, 2012 @ 14:55:01

   …ஆனந்தமும் ததும்பும்
   சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
   அமைந்த சுறுசுறுப்பான மனம்
   அமைத்திடுமிதைச் செப்பமாக.
   எமை உயர்திடுமது களிப்புடன்…
   அற்புதமான வரிகள் சகோ…”’

   மிக்க மகிழ்வும் நன்றியும் சசி உமது கருதிடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. Vetha.Elangathilakam.
  அக் 07, 2012 @ 06:43:45

  Murali Dharan likes this.in கவிதை முகம்.
  Murali Dharan :-
  கவிதை நன்று.

  மறுமொழி

 8. Madhu Mathi
  அக் 07, 2012 @ 11:57:45

  கவிதை மிகவும் நன்றாக இருந்தது.எதுகையில் மட்டுமல்ல,சந்தமும் மிக அழகாக வருமாறு படைத்தது மிக அருமை.

  மறுமொழி

 9. Vetha.Elangathilakam.
  அக் 07, 2012 @ 14:56:16

  ”…எதுகையில் மட்டுமல்ல,சந்தமும் மிக அழகாக வருமாறு படைத்தது மிக அருமை…”

  மிக்க மகிழ்வும் நன்றியும் மதுமதி தங்கள் வருகை, கருதிடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 10. AROUNA SELVAME
  அக் 07, 2012 @ 16:39:34

  சுறுசுறுப்பு வந்தவுடன் சுற்றம் உயர்த்தும்
  விறுவிறுப்பு பாடல் விருந்து!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 07, 2012 @ 18:37:58

   ”…சுறுசுறுப்பு வந்தவுடன் சுற்றம் உயர்த்தும்
   விறுவிறுப்பு பாடல் விருந்து!…”

   மிக மகிழ்வும், நன்றியும் அருணா செல்வம் உமது கருத்திற்கு..
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. பழனிவேல்
  அக் 08, 2012 @ 10:00:16

  “எதுகை கொண்ட பாடல்
  எமை கவர்ந்து கொண்ட பாடல்”

  அழகு…
  தலைப்பு “உயர்த்தும் சுறுசுறுப்பு” மிக அழகு.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 08, 2012 @ 20:14:48

   ”…“எதுகை கொண்ட பாடல்
   எமை கவர்ந்து கொண்ட பாடல்”

   அழகு…
   தலைப்பு “உயர்த்தும் சுறுசுறுப்பு” மிக அழகு…..”

   மிக மகிழ்வும், நன்றியும் பழனிவேல் உமது கருத்திற்கு..
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 12. கவிஞா் கி. பாரதிதாசன்
  அக் 08, 2012 @ 20:32:15

  வணக்கம்

  புன்னகை பூத்தே நாள்கள்
  பொலிவுடன் பிறக்கும் என்றே
  இன்னகைத் தமிழைக் கணடே
  எழுதினேன் விருத்தம்! வேதா
  பொன்னகை தட்டில் வைத்தே
  போற்றியே கொடுத்தால் கூட
  உன்னடை தமிழுக் கீடே?
  உள்மகிழ்ந் துரைத்தேன் வாழ்த்து!

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 08, 2012 @ 21:48:59

   தங்கள் தமிழுக்கு முன்னே நான் எம்மாத்திரம்! அன்புறவே.
   ஆயினும் அன்பான கருத்திற்கு மிக மகிழ்வும், நன்றியும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: