251. பண்போலை பறக்கிறது!

 

பண்போலை பறக்கிறது!

 

கனிவு மனம் பிளவை வெறுக்கும்.
குனிவு ஏற்படும் குணத்தை வெறுக்கும்.
இனியவுலகை வனிகை (பூந்தோட்டம்) ஆக்கல்
மேனிலை (மேல் நன்மை) செய்யும் புனிதன் கடன்.

துனிப்புடை (வெறுப்புடை)செயலாலுலகை வேனிலாக்கி
இனிமையைக் குழியுள் புதைப்பாருமுளர்.
தானிதைச் செய்தல் சரியோ தவறென
நுனித்தலுமின்றி (கருதுதலுமின்றி) மன மிறுகுகிறார்.

அனித்திய வாழ்வில் அறிந்தும் அறியாமலும்
மனிதனை மனிதன் தனித் தீவாக்குகிறான்.
கூனிக்குணத்தார் கூட்டுறவிலும் நன்றென
மனிதனும் தானாகத் தனித்தீவாகுகிறான்.

பனிக்கட்டி இதயச் செயலாலிவன்
கூனிடான், படலை பூட்டு முறவிற்கு.
வானிலும் நட்சத்திரமாகான் உறவைத் துண்டித்தலால்.
இனிமையைத் தானே முரண்பாடாக்குகிறான்.

பாசவோலை பெரிதெனும் இறுமாப்பு நிழலாக
காசோலை, புகழோசை, நிசவோலை யென்று
பாட்டோலை வாசிக்கிறான் பரிதாபமாயிவன்.
பண்போலை காற்றில் பறக்கிறது!…பறக்கிறது!….

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2012.

வேனில் -வெப்பம்
கூனிக்குணத்தார் – கூனியின் குணமுடையோர்.
அனித்தியம் – பொய், நிலையில்லாதது.

(25-9-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் செவ்வாய்க்கிழமை மாலை (19.00-20.00) கவிதை நேரத்தில் இக்கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                                         

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  அக் 09, 2012 @ 01:08:50

  பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. abdulkadersyedali
  அக் 09, 2012 @ 04:39:39

  ரெம்ப அருமை சகோ

  மறுமொழி

 3. sasikala
  அக் 09, 2012 @ 10:32:26

  அனித்திய வாழ்வில் அறிந்தும் அறியாமலும்
  மனிதனை மனிதன் தனித் தீவாக்குகிறான்.
  உண்மையை உணர்த்தும் வரிகள்.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 10, 2012 @ 07:02:38

   ”..அனித்திய வாழ்வில் அறிந்தும் அறியாமலும்
   மனிதனை மனிதன் தனித் தீவாக்குகிறான்.
   உண்மையை உணர்த்தும் வரிகள்…”

   மிக்க நன்றி சசி..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  அக் 09, 2012 @ 10:34:15

  // அனித்திய வாழ்வில் அறிந்தும் அறியாமலும்
  மனிதனை மனிதன் தனித் தீவாக்குகிறான்.//
  நான் இரசித்த வரிகள் இவை. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் கவிதை முழக்கம்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 09, 2012 @ 11:47:44

  ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. Vetha.Elangathilakam.
  அக் 10, 2012 @ 06:41:56

  In FB:-

  Ambiga Ganesh likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  Seen by 4Sundrakumar Kanagasundram and Kanagasundram Sundrakumar like this…in நெஞ்சம் மறப்பதில்லைNENJAM MARAPPATHILLAI.
  .Sundrakumar Kanagasundram:-
  nice
  Kanagasundram Sundrakumar:-
  nice
  about an hour ago · Like · 2..
  Ramanujam Pollachi likes this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  மறுமொழி

 7. AROUNA SELVAME
  அக் 11, 2012 @ 11:26:06

  அருமையான கவிதை கோவைக்கவி…
  நன்றி.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 11, 2012 @ 20:59:42

   ”..அருமையான கவிதை கோவைக்கவி…
   நன்றி….”

   மிக்க நன்றியும், மகிழ்வும் அருணா செல்வம் தங்கள் கருத்திடலிற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. சி வா
  ஜூன் 08, 2014 @ 10:45:02

  அருமை அம்மா…

  வாயின்றித் திணறுகிறேன்..

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 08, 2015 @ 22:31:27

  மிக்க நன்றியும், மகிழ்வும் Siva.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: